E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
காற்றாலை மின் உற்பத்தி அதிகரிப்பு : இரவு நேரத்தில் மின்தடைநேரம் குறைப்பு
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

17 ஏப்
2013
00:03

மேட்டூர் :கடந்த சில நாட்களாக, இரவில், காற்று பலமாக வீசுவதால், காற்றாலைகளில், மின் உற்பத்தி அதிகரித்துள்ளது. இதனால், மாலை, 6:00 மணிமுதல், இரவு, 10:00 மணிவரை, மின்தடை நேரம் குறைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள காற்றாலைகள் மூலம், 7,135 மெகாவாட் மின் உற்பத்தி செய்யலாம். இரு வாரங்களுக்கு முன் வரை, காற்றாலை மின் உற்பத்தி குறைவாக இருந்ததால், தமிழகத்தில், மின்தடை நேரம் அதிகரிக்கப்பட்டது.கடந்த, இருவாரங்களாக, அவ்வப்போது, தென்மேற்கு பருவகாற்று பலமாக வீசுகிறது. குறிப்பாக, மாலை முதல், நள்ளிரவு வரை, காற்று பலமாக வீசுவதால், காற்றாலைகளில் மின் உற்பத்தி அதிகரித்துள்ளது.நேற்று முன்தினம் இரவு, 7:00 மணிக்கு, காற்றாலை மின் உற்பத்தி, 2,342 மெகாவாட் ஆக அதிகரித்தது.நேற்று நள்ளிரவு, காற்றாலை மின் உற்பத்தி, 1,812 மெகாவாட் ஆகவும், நேற்று காலை, 773 மெகாவாட் ஆகவும், இருந்தது.காற்றாலை மின் உற்பத்தி கைகொடுத்ததால், நேற்று முன்தினம் மாலை மற்றும் நள்ளிரவில், பெரும்பாலான இடங்களில் மின்தடை செய்யப்படவில்லை. நேற்று காலை, காற்றாலை மின் உற்பத்தி, 773 மெகாவாட் ஆக குறைந்ததாலும், 9,621 மெகாவாட் மின்சாரம் மட்டுமே வினியோகம் செய்ததாலும், மின் பற்றாக்குறை, 1,517 மெகாவாட் ஆக இருந்தது.

கடந்த சில நாட்களாக, காற்றாலை மின் உற்பத்தி கைகொடுப்பதால், மாநிலத்தின் பெரும்பாலான இடங்களில், மாலை 6;00 மணி முதல்,இரவு 10:00 வரை,மின்தடை செய்யப்படவில்லை. காற்றாலைகளில், மின் உற்பத்தி அதிகரிக்கும் பட்சத்தில், மின்தடை நேரம் குறைய வாய்ப்புள்ளது.


தொடர்புடைய செய்திகள்:


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (4)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Indian - Chennai,இந்தியா
17-ஏப்-201315:08:23 IST Report Abuse
Indian எப்படியெல்லாம் எழுதினாலும் தமிழ் நாட்டில் மின்னுர்ப்பதி இப்பொழுது முழுமையாக இருக்காது, தமிழ் நாட்டில் திமுக, அதிமுக மறைமுக கூட்டணி உருவாகி உள்ளது என்பதே உண்மை, இப்பொழுது தமிழ் நாடு பலியாகிறது, பிறகு இந்த இருவரும் சேர்ந்து இந்தியாவை பலியாக்க போகிறார்கள். அதிமுக தொடர்ந்து தன்னுடைய கூட்டணியில் உள்ளவர்களை வலுகட்டாயமாக வெளியற்றுவது அதனாலேயே நடக்கிறது (தேமுதிக , கம்யூனிஸ்ட் தண்டிக்க படுவது, போலீஸ் கேஸ் போடுவதும் அதனாலேயே நடக்கிறது). ஜெயலலிதாவை, அல்லது கருணாநிதியை பிரதமராக்க இருவருக்குள் ஒரு உள்ஒப்பந்தம் நடந்திருக்கலாம்.
Rate this:
4 members
0 members
7 members
Share this comment
Cancel
ashok - madurai,இந்தியா
17-ஏப்-201311:56:00 IST Report Abuse
ashok ஆக காற்றை நம்பித்தான் கவர்மெண்ட்
Rate this:
0 members
1 members
8 members
Share this comment
Cancel
mirudan - kailaayam,இந்தியா
17-ஏப்-201310:43:58 IST Report Abuse
mirudan முதலில் காற்றாலை மின்சாரத்திற்கு பணத்தை கொடுங்கள்
Rate this:
1 members
0 members
10 members
Share this comment
Cancel
K.Balasubramanian - Reading RG5 1DG ,யுனைடெட் கிங்டம்
17-ஏப்-201307:40:16 IST Report Abuse
K.Balasubramanian காற்றும் கை கொடுக்கிறது
Rate this:
2 members
0 members
2 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.