Advertisement
பெங்களூரூவில் பா.ஜ அலுவலகம் உள்ளிட்ட 2 இடங்களில் குண்டுவெடிப்பு : 30 பேர் காயம்
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

மாற்றம் செய்த நாள்

17 ஏப்
2013
17:25
பதிவு செய்த நாள்
ஏப் 17,2013 12:02

பெங்களூரூ : பெங்களூரூவில் மல்லேஸ்வரத்தை தொடர்ந்து, ஹிப்பல் என்ற இடத்தில் உள்ள மேம்பாலம் அருகிலும் குண்டுவெடிப்பு தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது. மல்லேஸ்வரத்தில் பா.ஜ. அலுவலகம் அருகே இன்று பைக்கில் வைக்கப்பட்டிருந்த ‌குண்டு வெடித்தது. மல்லேஸ்வரம் பா.ஜ., அலுவலகம் அருகே நடைபெற்ற தாக்குதலில் 8 போலீசார் உள்பட 16 பேர் காயமடைந்தனர். ஹிப்பல் மேம்பாலத்தில் நடைபெற்ற தாக்குதலில் 15 பேர் காயமடைந்துள்ளனர். கர்நாடகா தேர்தல் நடைபெற உள்ள சமயத்தில் அடுத்தடுத்து நடத்தப்பட்டிருக்கும் குண்டுவெடிப்பு தாக்குதல்கள் அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

கர்நாடக சட்டசபை தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் என்பதால் பா.ஜ., தலைவர்கள் பலர் வேட்புமனு தாக்கல் செய்ய புறப்பட்டுக் கொண்டிருந்தனர். கர்நாடகா மாநிலம், பெங்களூரூவையடுத்த, மல்லேஸ்வரம் பகுதியில் பா.ஜ., அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்திற்கு வெளியே இன்று காலை பயங்கர சத்தத்துடன் திடீரென சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. இதில் வெளியில் நிறுத்தப்பட்டிருந்த 3 கார்கள் தீப்பிடித்தன. காருக்கு அருகில் இருந்த பைக்கில் வெடிகுண்டு வெடித்தது தெரியவந்துள்ளது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்தில் பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசார் 8 பேரும், அந்த வழியாக வந்த மாணவி ஒருவரும் படுகாயமடைந்தனர்.

மோட்டார் சைக்கிளில் வைக்கப்பட்ட குண்டு : நடந்த இந்த சம்பவம் தொடர்பாக பெங்களூரூ போலீசார் கூறு‌கையில், மோட்டார் சைக்கிளில் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு தாக்குதல் தான். மர்ம நபர்கள், கார்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இடத்தில் வெடிகுண்டை வைத்துவிட்டு தப்பியிருக்கலாம் என போலீசார் கூறி உள்ளனர். முதலில் காரில் உள்ள காஸ் சிலிண்டர் வெடித்திருக்கலாம் என தகவல்கள் வெளியாயின. எனினும் வெடித்தது பைக் குண்டு என பா.ஜ., அலுவலக வாசலில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமிரா பதிவுகளைக் கொண்டு போலீசார் உறுதி செய்துள்ளனர்.

யாரை குறி வைத்து இந்த தாக்குதல் நடந்தது என்பது குறித்து முதல் கட்ட விசாரணை நடந்து வருகிறது. இதனால் பா.ஜ. அலுவலகத்தில் பரபரப்பு காணப்படுகிறது. சம்பவ இடத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் தடயவியல் நிபுணர்கள் சோதனை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே அடுத்த வாரம் பா.ஜ., முக்கிய தலைவர்களான சுஷ்மா சுவராஜ், அத்வானி, மோடி ஆகியோர் தேர்தல் பிரச்சாரத்திற்கு வர உள்ள நிலையில் பா.ஜ., அலுவலகம் அருகே குண்டுவெடித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆந்திர மாநிலம் ஐதராபாத்தில், கடந்த பிப்ரவரி மாதம் தில்சுக் நகர் பஸ் நிலையம் எதிரே, கோனார்க் மற்றும் வெங்கடாத்ரி எனஅடுத்தடுத்து நிகழ்ந்த மூன்று குண்டு வெடிப்புகளில், 20 பேர் பலியாயினர்; 80 பேர் காயம் அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது பெங்களூரூவில் குண்டுவெடிப்பு சம்பவம் ஏற்பட்டுள்ளது.

காங்கிரஸ் குற்றச்சாட்டு:


குண்டுவெடிப்பிற்கு அரசியல் ஆதாயமே காரணம் என காங்கிரஸ் தலைவர் ஷகீல் அகமது குற்றம்சாட்டி உள்ளார். அரசியல் ஆதாயம் பெறுவதற்காக பா.ஜ., வே இந்த குண்டுவெடிப்பை நிகழ்த்தி உள்ளதாக பெங்களூரூ குண்டுவெடிப்பு குறித்து காங்கிரஸ் தலைவர் பேசி உள்ளது புதிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் பாதுகாப்பு :


பெங்களூரூவில் ஒரே நாளில் நடைபெற்ற இரு குண்டுவெடிப்பு சம்பவங்களை தொடர்ந்து தமிழகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக காவல்துறை உயரதிகாரிகள் கூட்டம் இன்று நடந்தது. இதில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. மக்கள் கூடும் இடங்கள், கோயில்களுக்கு போலீஸ் பாதுகாப்பை அதிகரிப்பது குறித்து இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (80)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SUDARSAN - houston,யூ.எஸ்.ஏ
18-ஏப்-201321:30:54 IST Report Abuse
SUDARSAN வாயை திறந்து விட்டார் அனைத்தும் அறிந்த அதிமேதாவி சுசில் குமார் ஷிண்டே எங்கே காங்கிரசின் வண்டவாளம் வெளியில் வந்து விடுமோ என்ற கவலை
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
Javeed - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
18-ஏப்-201316:24:34 IST Report Abuse
Javeed கண் இருக்கும் குருடர்கள் இந்துகள், முஸ்லிம்களுக்கு எந்த லாபமும் இல்லை திவிரவததால்.
Rate this:
2 members
0 members
1 members
Share this comment
Cancel
MadhanS - Bangalore,இந்தியா
18-ஏப்-201312:06:18 IST Report Abuse
MadhanS ஹெப்பல் இடத்தில குண்டு வெடிப்பு வெறும் புரளியே.. ஒரு இடத்தில் மட்டும் தான் இருந்தது.. .
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
Cancel
Venkatesan Jayaraman - Dubai,இந்தியா
18-ஏப்-201309:19:59 IST Report Abuse
Venkatesan Jayaraman இதை தயவு செய்து அரசியல் ஆக்கிவிட வேண்டாம் செய்தது முஸ்லிம் ஆயினும் ஹிந்து ஆயினும் சும்மாவிட கூடாது
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
Cancel
vaaithaa vampan - mannargudi ,இந்தியா
18-ஏப்-201309:17:21 IST Report Abuse
vaaithaa vampan ஒன்னு மட்டும் நல்ல புரியுது இருபெரும் கட்சில் ஏதோ ஒன்றுக்கு 50 சதம் பங்கும், பொறம்போக்கு பன்னி தின்பதை திங்கும் தீவிரவாதிகளுக்கு 50 சதம் பங்கு உள்ளது என்பது தெள்ளதெளிவாகிறது.
Rate this:
0 members
0 members
21 members
Share this comment
Cancel
Ali Sinaa - chennai,இந்தியா
18-ஏப்-201307:47:55 IST Report Abuse
Ali Sinaa ஆப்கானிஸ்தான், இராக், அரபு நாடுகள், சோமாலிய கலாசாரம் இந்தியாவிலும் போற்றி வளர்க்க படுகிறது.
Rate this:
0 members
0 members
2 members
Share this comment
Cancel
SUDARSAN - houston,யூ.எஸ்.ஏ
18-ஏப்-201305:47:00 IST Report Abuse
SUDARSAN குண்டு வெடித்து விட்டது. மத்திய அமைச்சர் ( அந்த அதிமேதாவியின் பெயர் மறந்துவிட்டது) காவி தீவிரவாதம் என்று சொல்லி பாகிஸ்தானில் உள்ள தீவரவாத கும்பல்களிடமிருந்து சபாஸ் பெற்றவர் வாயை திறக்காத மர்மம் என்ன
Rate this:
4 members
0 members
24 members
Share this comment
S Rama(samy)murthy - karaikudi,இந்தியா
18-ஏப்-201311:29:44 IST Report Abuse
S Rama(samy)murthyமீண்டும் சத்ரபதி சிவாஜி குஜராத்தில் அவதரித்து விட்டார் . . சுப்பபையா ராமமூர்த்தி -காரைக்குடி...
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
kannan - Kanchipuram,இந்தியா
18-ஏப்-201302:07:18 IST Report Abuse
kannan நான் இந்தியன் இல்லை என்பதை நிரூபித்து விட்டார் இந்த அகமது ....நாட்டுப்பற்றைவிட இனபற்றுதான் இவர்களுக்கு முக்கியம் ,
Rate this:
6 members
0 members
25 members
Share this comment
Cancel
naushad - Nagapattinam,இந்தியா
18-ஏப்-201301:44:58 IST Report Abuse
naushad கருத்து., நான் சொன்னத தவறா புரிஞ்சிகிட்டீங்க பொழைக்க போறது ஒன்னும் தப்பில்லையே .அதே மாதிரி இன்று முஸ்லிமா இருக்கும் யாரும் வெளியருந்து வந்தவங்க இல்லை இந்துக்களா இருந்து பல தலைமுறைக்கு முன்பு இஸ்லாத்துக்கு மாறினவங்கதான்.அபி வரலாறு தெரிஞ்சுக்கவேண்டியது நீந்தன்ப்பு போய் நல்லா படி,
Rate this:
4 members
0 members
16 members
Share this comment
karuthu kannaairam - London,யுனைடெட் கிங்டம்
18-ஏப்-201318:55:02 IST Report Abuse
karuthu kannaairamஅது எங்களுக்கும் தெரியும் நௌசாத்.. ( ஹிந்து தான் இங்க முஸ்லிமா மாறி இருக்காங்கானு ) ஆனா ஈழ தமிழர்கள் அப்படி அல்ல.. அது அவர்களுடைய பூர்வ குடி.. அது தெரியாம உங்க இஷ்டதுக்கு கருத்து எழுதாதீங்க.. (நான் என்ன அதுல என்ன சொல்றேன்னு கூட புரியல.. reply வேற.. என்ன சொல்றது..)...
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
suman - Madurai,இந்தியா
18-ஏப்-201300:39:58 IST Report Abuse
suman புத்திசாலி காங்கிரசு கூட்டதினால்தான் இப்படி புரட்சியாக யோசிக்க முடியும்... அதனால்தான் இந்தியா வேகமாக முன்னேறுகிறது அப்போ அவங்க(காங்கிரசு) வீட்டில் வெடித்தால் அது காங்கிரசின் தந்திரமா? குண்டு வெடித்த அடுத்த நாளே அது காவி தீவிரவாதம் என்று சொல்லி பாகிஸ்தான் தீவிரவாதியின் பாராட்டுக்களை பெற்ற கட்சி ஆயிற்றே...
Rate this:
3 members
0 members
26 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.