Traffic jam in chennai | சென்னையில் மீண்டும் போக்குவரத்து நெரிசல்: திட்டமிடாத போலீசார் காரணமா?| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சென்னையில் மீண்டும் போக்குவரத்து நெரிசல்: திட்டமிடாத போலீசார் காரணமா?

Updated : ஏப் 19, 2013 | Added : ஏப் 17, 2013 | கருத்துகள் (15)
Advertisement
சென்னையில் மீண்டும் போக்குவரத்து நெரிசல்: திட்டமிடாத போலீசார் காரணமா?

சென்னை : சென்னை கிண்டியில் உள்ள சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை சிலைக்கு, அவரது பிறந்த நாளை ஒட்டி, முதல்வர் ஜெயலலிதா மரியாதை செலுத்தினார்.

கொங்கு பேரவை : இதன் பின், கொங்கு பேரவை அமைப்பினர், ஏராளமான வாகனங்களுடன், அப்பகுதியை முற்றுகையிட்டதால், சின்னமலையில் இருந்து, ஜி.எஸ். டி., சிமென்ட் சாலை வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால், அலுவலகம் செல்வோர் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.நேற்று காலை, கிண்டியில் அமைந்துள்ள, தீரன் சின்னமலை சிலைக்கு, முதல்வர் ஜெயலலிதா மரியாதை செலுத்த வந்திருந்தார். வெளி மாவட்டத்தில் இருந்து, வாகனங்களில் வந்த தீரன்சின்னமலை பேரவை, கொங்கு இளைஞர் பேரவை மற்றும் அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் காலை, 9:00 மணிக்கு கிண்டியில் திரண்டனர்.


பொது மக்கள் சிரமம்:

இதனால், சின்னமலையில் இருந்து, ஜி.எஸ்.டி., சிமென்ட் சாலை வரை, போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. கத்திப்பாரா மேம்பாலத்தில் வாகனங்கள் நகராமல் அப்படியே நின்றன. வெயில் தாக்கம் அதிகமாக இருந்ததால், இரு சக்கர வாகனம், ஆட்டோவில் சென்றவர்கள் அதிக சிரமத்திற்கு ஆளாகினர்.ஒரு வழியாக, பகல், 12:00 மணிக்கு பிறகு, போக்குவரத்து ஓரளவு சீரானது. போக்குவரத்து நெரிசலால், அலுவலகம் செல்லும் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.


திட்டமிடல் இல்லை:

முதல்வர் ஜெயலலிலதா, காலை, 10:05 மணிக்கு, கிண்டியில், உள்ள தீரன் சின்னமலை சிலையின் கீழே வைக்கப்பட்டிருந்த அவரது படத்துக்கு மலர் தூவி, மாலை அணிவித்து, 10 நிமிடத்தில் அங்கிருந்து புறப்பட்டார். அதன் பின், பல்வேறு அமைப்புகள் சார்பில், தீரன் சின்னமலை சிலைக்கு, மாலை அணிவிக்கப்பட்டது.


இடையூறு:

அவர்கள், சாலை ஓரங்களில் ஆங்காங்கே வாகனங்களை நிறுத்திவிட்டு, போக்குவரத்து இடையூ றாக நின்று இருந்தனர். இதுதவிர, முதல்வர் சென்ற சில நிமிடங்களிலேயே, பெரும்பாலான போலீசார் அங்கிருந்து மாயமாகி விட்டனர். சொற்ப எண்ணிக்கையிலான போலீசாரே நின்று கொண்டிருந்ததால், சிலைக்கு மாலை அணிவிக்க வந்தவர்களை கட்டுப்படுத்த முடியவில்லை. போதிய திட்டமிடல் இல்லாததால், போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nalam Virumbi - Chennai,இந்தியா
18-ஏப்-201317:26:04 IST Report Abuse
Nalam Virumbi ஊருக்கு மிக தூரத்தில், சிலைகள் ஊர் என்று ஒன்று அமைத்து நாகரின் எல்லாத் தலைவர்கள் சிலைகளையும் இடப்பெயர்ச்சி செய்து வீட்டு மேலும் நகரில் சிலைகள் சாலை ஒர வழிபாட்டு ஸ்தலங்கள் அமைக்க தடை செய்ய வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
vaaithaa vampan - mannargudi ,இந்தியா
18-ஏப்-201316:53:04 IST Report Abuse
vaaithaa vampan பேசாம ஒருகுறிப்பிட்ட இடத்தை ஒதுக்கி அங்கெ அனைவர் சிலையை வைத்துக்கொள்ள அனுமதிக்கலாம். இட வாடகை பராமரிப்பு செலவு மேற்ப்படி அமைப்புகளிடம் வசூலித்து கொள்ள வேண்டும். சிலை வைக்க அனுமதி கொடுக்கும் போதே பெரும் தொகை வைப்பு நிதியாக வசூலித்து கொள்ள வேண்டும். குறிப்பிட்ட கால வரையறைக்குல் பராமரிப்பு தொகை செலுத்தாத பச்சத்தில் சிலையை குண்டுகட்டாக கட்டி கடலில் போட்டுவிட வேண்டும். யாருக்கு யார்வேண்டும் என்றாலும் வைத்துக்கொள்ள அனுமதிக்கலாம். இப்பொழுதைய அரசின் விலையில்ல தாரக மந்திரத்தை இவ்விடத்தில் அனுமதிக்க கூடாது
Rate this:
Share this comment
Cancel
Karuppusamy Subbya - Chennai,இந்தியா
18-ஏப்-201316:14:48 IST Report Abuse
Karuppusamy Subbya என்ன கொடுமை சார். யாரு இவங்களை 10 மணிக்கு மாலை போட வர சொன்னா. எல்லோருமே சமம் தான். அது என்ன CM வந்தா மட்டும் அவளவு அலப்பரை. அதுவும் இந்த அல்லகைக்க தொந்தரவு தாங்கள
Rate this:
Share this comment
Cancel
Rangarajan Pg - CHENNAI,இந்தியா
18-ஏப்-201312:33:28 IST Report Abuse
Rangarajan Pg இந்த தீரன் சின்னமலை நம் நாட்டுக்கு என்ன செய்தார்? அவரது சிலையை கூட்டம் கூடும் இடத்தில வைக்காமல் வேறு ஏதாவது தனியாக இடம் ஏற்படுத்தி வைத்து கொள்ளலாமே. மரியாதை செய்வதற்கும் இடைஞ்சல் இருக்காது. பொது மக்களும் தங்கள் வேலைகளை பார்க்க போவார்கள். அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த வேறு நேரம் கிடைக்கவில்லையா இந்த முதல்வருக்கும் மற்ற கட்சியினருக்கும்?? பொது மக்களின் வேலைகள் மற்றும் மற்ற தேவைகள் மீது மற்ற கட்சியினருக்கு தான் அக்கறை இருக்க தேவை இல்லை. முதல்வருக்கும் கூடவா இருக்காது? இன்றைய காலகட்டத்தில் நேரத்தின் மதிப்பு பல மடங்கு கூடி விட்டது. ஆனால் இன்னமும் சிலைக்கு மரியாதை செய்கிறோம் அல்லது அவமரியாதை செய்கிறோம் பேர்வழி என்று சாலைகளை அடைத்து விழா நடத்துகிறார்களே, WILL THESE PEOPLE EVER GROW ??? LOW LIFE . நல்லவேளை பரமக்குடியில் நடந்தது போல சம்பவம் நடக்கவில்லை. இவர்கள் இறந்து போனவர்கள் சிலைக்கு மரியாதை செய்து விட்டு மக்களின் GENUINE தேவைகளை அவமரியாதை செய்கிறார்களே???
Rate this:
Share this comment
Karuppusamy Subbya - Chennai,இந்தியா
18-ஏப்-201316:25:22 IST Report Abuse
Karuppusamy Subbyaசரியாய் சொன்னிங்க...
Rate this:
Share this comment
Cancel
Vinoth - Chennai,இந்தியா
18-ஏப்-201310:25:07 IST Report Abuse
Vinoth காதலர் தினம், மே தினம், மகளிர் தினம் போல சிலைகளுக்கு மரியாதை தினம் என்று ஒரு தினம் இருந்தால் ரொம்ப நல்ல இருக்கும். அன்று நான் வெளியில் எங்கும் போகாமல் விட்டிலையே இருபேன். நேற்று நான் பல்லாவரத்தில் இருந்து நுங்கம்பாக்கம் ஆபீஸ் செல்ல இரண்டரை மணிநேரம் ஆனது. அந்த கொடுமை இனி வேண்டாம்.
Rate this:
Share this comment
Cancel
Krish - Madurai,இந்தியா
18-ஏப்-201310:12:12 IST Report Abuse
Krish சென்னையில் போக்குவரத்து நெரிசல் தவிர்க்கமுடியாதது. தினம்தோறும் மற்ற ஊர்களில் இருந்து வேலை வாய்ப்பு தேடி சென்னையில் குடியேறுவோர் எண்ணிக்கை அத்கமாகி விட்டது. பிறகு எப்படி போக்குவரத்து நெரிசல் இல்லாமல் இருக்கும்?
Rate this:
Share this comment
Cancel
நாஞ்சில் சுலைமான் - THUCKALAY,இந்தியா
18-ஏப்-201309:07:24 IST Report Abuse
நாஞ்சில் சுலைமான் // சென்னை கிண்டியில் உள்ள ”தந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை சிலைக்கு, அவரது பிறந்த நாளை ஒட்டி, முதல்வர் ஜெயலிதா மரியாதை செலுத்தினார். //......தீரன் சின்னமலையை தந்திர போராட்ட வீரர் ஆக்கி விட்டீர்களே..
Rate this:
Share this comment
Cancel
நாதன்.K.R.வாரியார் - சென்னை,இந்தியா
18-ஏப்-201308:59:57 IST Report Abuse
நாதன்.K.R.வாரியார் இதற்கெல்லாம் ஒரே தீர்வு தலைவர்கள் ஒன்று அதிகாலை 6 மணிக்கே சென்று மாலை அணிவிக்கலாம் அல்லது மதிய வேலையின் பொது 2-3 மணிக்குள் மரியாதை செலுத்தலாம். இந்த நேரங்களில் வாகன போக்குவரத்து மிகவும் குறைவாகவே இருக்கும். இதனால் பொதுமக்கள் சிரமப்படதேவை இல்லை. அணைத்து அரசியல் கட்சிகளும் இதை ஏற்க முன் வருவார்களா?
Rate this:
Share this comment
Cancel
நாதன்.K.R.வாரியார் - சென்னை,இந்தியா
18-ஏப்-201308:54:46 IST Report Abuse
நாதன்.K.R.வாரியார் ஜெகன் அவர்களே மஞ்சள் துண்டு வெளியில் செல்லும் போது இந்தளவு டிராபிக் கிடையாது. ஏனென்றால் அவர் எந்த பந்தாவும் இல்லாமல் சாதாரணமாக செல்லகூடியவர்.
Rate this:
Share this comment
Cancel
Robert Jayakumar - chennai,இந்தியா
18-ஏப்-201307:57:09 IST Report Abuse
Robert Jayakumar இது போன்ற விழாக்களால் பாதிக்கப்படுவது பொதுமக்களாகிய நாம் தான் நம் நகர்களில் உள்ள அனைத்து போக்குவரத்து சிக்நெல் உள்ள சிலைகளை மாற்றி அமைத்தால் மக்கள் அவர்களுடைய அன்றாட வாழ்வில் அவர்களுடைய பணிகளை செய்ய வசதியாயிருக்கும் . இப்ப இருக்கும் fuel விலையில் இரண்டு மணி நேரம் மூன்று மணி நேரம் போக்குவரத்து நெரிசலில் சிக்குவதால் நாட்டின் பொருளாதாரம் வீனடிக்கபடுகிறது . இந்த மாதிரி நிகழ்சிகளுக்கு செலவிடப்படும் funds மக்களின் நலத்திட்டங்களுக்கு ஒதுக்கலாம் .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை