E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
குண்டு வெடித்தால் ஓட்டு கிடைக்குமா: காங்கிரசுக்கு பா.ஜ., கடும் கண்டனம்
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

17 ஏப்
2013
23:46

"பெங்களூருவில் குண்டுவெடித்தது பயங்கரவாத சம்பவமாக இருந்தால், அது கர்நாடக சட்டசபைத் தேர்தலில், பா.ஜ.,வுக்கு சாதகமான சூழ்நிலையை ஏற்படுத்தும்' என காங்கிரஸ் தெரிவித்துள்ள கருத்துக்கு, எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

கருத்து பதிவு:



பெங்களூரில், குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்த, சில மணி நேரங்களில், காங்கிரஸ் செய்தி தொடர்பாளர்களில் ஒருவரான, ஷகீல் அகமது, சமூக வலை தளமான,"டுவிட்டர்'ரில், கருத்து ஒன்றை பதிவு செய்தார்.அதில்," பெங்களூரில் நடைபெற்றுள்ள குண்டுவெடிப்பு, பயங்கரவாத தாக்குதல் சம்பவமாக இருந்தால், அது, விரைவில் நடக்கவுள்ள, கர்நாடக மாநில சட்டசபைத் தேர்தலில், பா.ஜ.,வுக்கு, சாதகமான சூழ்நிலையை ஏற்படுத்தும்' என தெரிவித்து இருந்தார்.இந்த தகவல் வெளியானதும், டில்லியில், பா.ஜ., செய்தித் தொடர்பாளர், ஷாநவாஸ் உசேன், நிருபர்களை சந்தித்து, கடும் கண்டனத்தை பதிவு செய்தார்.

கருத்து வேறுபாடு:



அவர் கூறியதாவது:மே, 5ம் தேதி, கர்நாடக மாநில சட்டசபைத் தேர்தல் நடக்க உள்ளது. இந்த சூழ்நிலையில், வெடிகுண்டு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இது, ஒரு பயங்கரவாத சம்பவம். இதில், அரசியல் ரீதியிலான கருத்து வேறுபாடுகள், இருக்கவே கூடாது.ஆனால், இந்த வெடிகுண்டு சம்பவத்தையும், அரசியல் ஆக்கியுள்ளது காங்கிரஸ். இது, துரதிருஷ்டவசமானது. குண்டுவெடிப்புக்கும், ஓட்டுக்கும், என்ன சம்பந்தம் உள்ளது என, புரியவில்லை. அப்படியானால், இதற்கு முன் நடந்த, குண்டுவெடிப்பு சம்பவங்களின் மூலம், காங்கிரஸ் அடைந்த பலன்கள் என்னென்ன என்பதையும், அந்த கட்சி விளக்க வேண்டும். பயங்கரவாதத்தையும், அரசியலையும் கலக்கிறது காங்கிரஸ். பிரதமர் மன்மோகன் சிங்கும், காங்கிரஸ் தலைவர் சோனியா வும், இதுகுறித்து விளக்கம் அளிக்க வேண்டும். ஷகீல் அகமது மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு ஷா நவாஸ் உசேன் கூறினார்.

ஒருமித்த கருத்து:



மத்திய உள்துறை இணை அமைச்சர் ஆர்.பி.என்.சிங் கூறுகையில், ""காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை, பயங்கரவாத நடவடிக்கைகளை, முற்றிலுமாக எதிர்க்கிறது. இதுபோன்ற தீவிரவாத சம்பவங்களின்போது, அரசியல் வேறுபாடுகளை கடந்து, அனைத்து கட்சிகளும், ஒரு அணியில் இருக்க வேண்டும்,'' என்று கூறினார். இதற்கிடையே, "ஷகீல் அகமது தெரிவித்துள்ளது, அவரது சொந்த கருத்து' என, காங்கிரஸ் கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

- நமது டில்லி நிருபர் -


தொடர்புடைய செய்திகள்:


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (35)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
TamilArasan - Nellai,இந்தியா
18-ஏப்-201317:48:38 IST Report Abuse
TamilArasan காங்கிரசின் தரம் தாழ்ந்த அரசியலில் இதும் ஒன்று, ஏன் என்றால் மும்பை தாக்குதல் பின்பு காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் இது இந்து தீவிரவாதிகள் கை வரிசை என்று வாய் கூசாமல் ஒரு பொய் கூறினார் - பின்பு உயி‌ருடன் பிடி பட்ட ஒரே தீவிரவாதி காசபின் பெற்றோர் மற்றும் உறவினர் காசாப் எங்கள் மகன் எங்கள் உறவினன் எங்கள் கிராமத்தை சார்ந்தவன் என்று பாகிஸ்தானில் இருந்து செய்தி வந்த பின்பு இந்து தீவிரவாதிகள் என்று பொய் கூற்றை நிறுத்தினர்...நம் நாட்டின் சாப கேடு காங்கிரஸ்...
Rate this:
5 members
0 members
27 members
Share this comment
Cancel
Abu Faheem - Riyadh,சவுதி அரேபியா
18-ஏப்-201317:13:51 IST Report Abuse
Abu Faheem இந்த சாநவாஸ் ஹுசைன் பா ஜா கா வின் அடிவருடி, இவனுக்கு இவனை போன்று முஸ்லிம் பெயர்களில் அக்கட்சியில் இருக்கும் அனைவருக்கும் பா ஜ க மேலிடம் கோடி கோடியாக பணம் குடுத்து தனது புகழ் பாட வைக்கின்றனர். இதன் மூலம் அப்பாவி முஸ்லிம்களின் ஓட்டை பெற வேசமிடுகின்றனர்.
Rate this:
37 members
0 members
16 members
Share this comment
Cancel
யதார்தவாதி வெகுஜன விரோதி - சிராப்பள்ளி,இந்தியா
18-ஏப்-201314:39:58 IST Report Abuse
யதார்தவாதி வெகுஜன விரோதி உள்துறை அமைச்சர் ஷிண்டே, உளவுத்துறையின் எச்சரிக்கையை மாநில அரசு புறக்கணித்தது என்று அறிக்கை விட்ட பின்பு உங்களின் சண்டையை வைத்துகொள்ளலாம். அதுவரையில் பொறுமையாக இருக்கவும்.
Rate this:
1 members
1 members
8 members
Share this comment
Cancel
Sri Gugan - Vandavasi,இந்தியா
18-ஏப்-201314:37:15 IST Report Abuse
Sri Gugan இந்தமாதிரியான செய்தி தொடர்பாளர் ஒருவரை பெற்றதற்கு காங்கிரஸ் வெட்கப்பட வேண்டும். முதலில் அவசர கொடுக்காக ஜெய்ராம் ரமேஷ், அடுத்தது குர்ஷித் பிறகு திக்விஜய், சமீப காலமாக பேணிபிரசாத், ஷகீல் அகமது என்ன ஆச்சு இத்தாலி மருமகள் கட்சிக்கு தோல்வி பயம் ஆட்கொண்டுவிட்டதா?
Rate this:
8 members
0 members
31 members
Share this comment
Cancel
Mohamed Nawaz - Sakaka,சவுதி அரேபியா
18-ஏப்-201312:52:07 IST Report Abuse
Mohamed Nawaz இரண்டு சமுதாய மக்களிடையே பிளவு ஏற்படுத்தி அதில் ஒரு சமூகத்தின் மீது குற்றம் சுமத்தினால் மற்ற சமூகம் அவர்களுக்கு எதிராகதானே நடக்கும்...
Rate this:
8 members
0 members
14 members
Share this comment
Cancel
kochadaiyan - ,இந்தியா
18-ஏப்-201312:21:16 IST Report Abuse
kochadaiyan பாஜகவுக்கு நன்றாகவே தெரியும் அவர்கள் எப்படியும் அங்கே மண்ணைத்தான் கவ்வுவார்கள் என்று. தோல்விக்கு பயந்து கூட மோடியும் எங்கே தான் சென்ற ஹிமாச்சல் மாதிரி நிலைமை ஆகிவிடுமோ என்ற எண்ணத்தில் அவரும் அந்த பக்கம் வராமலேயே துண்டை காணோம் துணியை காணோம் என்ன தான் பிரதமர் வேட்பாளர் என்று எத்தனை முறை கர்நாடக பாஜகர்கள் கூவியும் கூட அடக்கியே வாசித்து கொண்டு இருக்கிறார். காங்கரஸின் சந்தேகத்தை மறுப்பதற்கு இல்லை.
Rate this:
38 members
0 members
21 members
Share this comment
Cancel
Mohandhas - singapore,சிங்கப்பூர்
18-ஏப்-201311:29:00 IST Report Abuse
Mohandhas உண்மையிலேயே இங்கு குண்டு வைத்தது அரசியல் லாபத்துக்காக தான்,, தீவிரவாதிகள் இதில் தொடர்பில்லை என்றால்.... தொடர்புல்ல அரசியல் கட்சி நபரை எந்த கால அவகாசமும் கொடுக்காமல் தூக்கில் போட வேண்டும்..
Rate this:
3 members
1 members
15 members
Share this comment
Cancel
premnath - thanjavur,இந்தியா
18-ஏப்-201311:23:10 IST Report Abuse
premnath கர்நாடகத்தில் திடீர் குண்டுவெடிப்பு எதற்கு ???? யாருக்கு ஆதாயம் ????? புத்தி உள்ளவன் யோசிப்பான் ? தப்பு செய்தவன் முஸ்லிம் ஹிந்து கிறிஸ்டின் யாரா இருந்தாலும் அவனுக்கு மரண தண்டனை தான் சரி.. ஆனா இவனுங்க வெற்றி பெற ஏன் அப்பாவி மக்களை கொல்லனும்... ???? உண்மைய யாராலும் மறைக்க முடியாது ....... சத்தியம் வெல்லும் அசத்தியம் அழியும் .....
Rate this:
2 members
0 members
18 members
Share this comment
Cancel
JEYAKUMAR - madurai,இந்தியா
18-ஏப்-201311:20:31 IST Report Abuse
JEYAKUMAR அவரது சொந்த கருத்து அவர் வீட்டு கழிப்பறையில் தான் சொல்ல வேண்டுமே தவிர, ஒரு உயந்த பதவியில் இருந்துகொண்டு, சமுக வலைத்தளத்தில் பதியக்கூடாது. இந்த காங்கிரஸில் எல்லாருமே இப்படிதான் உள்ளார்கள்
Rate this:
8 members
0 members
18 members
Share this comment
Cancel
Thangairaja - tcmtnland,இந்தியா
18-ஏப்-201310:52:22 IST Report Abuse
Thangairaja பதில் சொல்லலைனா எம்பி சீட்டு கெடைக்காதே .......
Rate this:
0 members
0 members
9 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.