E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
பதிவு செய்த நாள் : ஏப்ரல் 17,2013,23:50 IST
கருத்துகள் (54)  கருத்தை பதிவு செய்ய
எழுத்தின் அளவு:

பா.ஜ., அலுவலகம் அருகில், பைக்கில் வைக்கப்பட்டிருந்த, சக்தி வாய்ந்த வெடிகுண்டு வெடித்ததில், எட்டு போலீசார், மாணவி உட்பட, 16 பேர் படுகாயமடைந்தனர். மூன்று கார்கள், மூன்று பைக்குகள், போலீஸ் வாகனம் எரிந்து நாசமானது. இந்த குண்டு வெடிப்பு, கர்நாடகாவில் நடைபெற உள்ள சட்டசபைத் தேர்தலைச் சீர்குலைப்பதற்கான சதியா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
பெங்களூரு, மல்லேஸ்வரம், 11வது கிராசில், பாரதிய ஜனதா அலுவலகம் உள்ளது; இப்பகுதியில், எப்போதும் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும். நேற்று சட்டசபை தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் என்பதால், பா.ஜ., அலுவலகத்தில் ஏராளமானோர் திரண்டிருந்தனர்.அந்த அலுவலகத்திலிருந்து, 100 மீட்டரில், கோவில் ஒன்று உள்ளது. அதன் அருகே, பா.ஜ., அலுவலக பாதுகாப்புக்காக, கர்நாடக மாநில ரிசர்வ் போலீசார், 20 பேர் வேனில் இருந்தனர்; வேன் அருகே, பைக்குகள், வேன்கள், கார்கள் நிறுத்தப்பட்டிருந்தன. நேற்று காலை, 10:20 மணியளவில், பயங்கர சத்தத்துடன், பைக் நிறுத்தப்பட்டிருந்த இடத்திலிருந்து குண்டு வெடித்தது. இதில், போலீஸ் வேனில் அமர்ந்திருந்த போலீசார் மீது, குண்டு துகள்கள் பட்டு, எட்டுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். மாருதி வேன்கள், இரண்டு கார்கள், பைக்குகள் கொழுந்து விட்டு எரிந்தன.குண்டு வெடித்தவுடன், அப்பகுதியிலிருந்த வீடுகளில் இருந்தவர்கள் அதிர்ச்சியடைந்து, வெளியே வந்து பார்த்த போது, கார்கள், வேன்கள் எரிந்து கொண்டிருந்ததை கண்டு அதிர்ந்தனர். சில வீடுகளின் சுவர்கள் விரிசல் ஏற்பட்டிருந்தது; கண்ணாடி ஜன்னல்கள் உடைந்திருந்தன.

ஊர்வலம்:

இந்த தகவல், பெங்களூருவில் காட்டுத்தீ போல் பரவியது. சட்டசபை தேர்தலில் வேட்பு மனு தாக்கலுக்கு நேற்று கடைசி நாள் என்பதால், பா.ஜ., உட்பட பல கட்சி வேட்பாளர்களும், ஊர்வலமாக மனு தாக்கல் செய்ய சென்ற வண்ணமாக இருந்தனர். அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.சம்பவ இடத்தை, நகர போலீஸ் கமிஷனர், ராகவேந்திரா அவுரத்கார்

ஆய்வு செய்தார். ""வெடித்த குண்டு எந்த வகையை சேர்ந்தது என்பது குறித்து ஆய்வு செய்யப்படுகிறது. தேர்தலில் பரபரப்பை ஏற்படுத்த குண்டுவெடிப்பு நடத்தப்பட்டதா என்பது விசாரணைக்கு பின் தெரியவரும்,'' என்றார்.

தமிழக பைக்:

முதல் கட்ட விசாரணையில், "குண்டு வைக்கப்பட்டிருந்த பைக், இன்ட் - சுசுகி வகையை சேர்ந்தது, வண்டி எண்: டி.என்., 22 ஆர் 3767' என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள இந்த பைக்கில், இருந்த குண்டு, அதிக சக்தி வாய்ந்ததாக கருதப்படுகிறது. ரிமோட் மூலம் வெடிக்க வைக்கப்பட்டுள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.அ ந்த பைக்கில், போலி நம்பர் பிளேட் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், ஆந்திராவிலிருந்து, அந்த பைக் திருடப்பட்டுள்ளதாகவும் பின்னர் தெரிவிக்கப்பட்டது.சம்பவ இடத்தில் இருந்து, உடைந்துபோன, "சிம்' கார்டு, வெடிகுண்டில் இருந்த, அமோனியம் நைட்ரேட், தாமிர ஒயர்கள் போன்றவற்றை போலீசார் கைப்பற்றியுள்ளனர். பா.ஜ., அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள, "சிசி டிவி' கேமரா மூலம், குண்டுவைத்தவர் பற்றிய விவரம் தெரிய வரும் என கூறப்படுகிறது.சம்பவ இடத்துக்கு வந்த முதல்வர், ஜெகதீஷ் ஷெட்டர், ""இச்சம்பவத்தின் பின்னணி என்ன, இதில் ஈடுபட்டவர்கள் யார் என்பது குறித்து போலீஸ் விசாரணையில் தெரிய வரும்,'' என்றார். அவருடன், போலீஸ் டி.ஜி.பி., வந்திருந்தார்.

என்.ஐ.ஏ., அதிகாரிகள்:

தேசிய பாதுகாப்பு படையினர், தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ.,) அதிகாரிகள் போன்றோர் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். மோப்ப நாய்களும் வரவழைக்கப்பட்டு, சுற்றியுள்ள பகுதியில், குண்டுகள் புதைக்கப்பட்டுள்ளதா என சோதனை நடத்தப்பட்டது.பெங்களூரு ரயில்வே ஸ்டேஷன், பஸ் ஸ்டாண்ட் உட்பட, நகரம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அது போல், தலைநகர் டில்லி, குஜராத்தின் முக்கிய நகரங்களிலும், மும்பையிலும் போலீஸ் பாதுகாப்பு

Advertisement

அதிகரிக்கப்பட்டது.

மூன்று ஆண்டுகளுக்கு பின் மீண்டும் பயங்கரம் :

கடந்த, 2010ம் ஆண்டு ஏப்ரல், 17ம் தேதி, பெங்களூரு சின்னசாமி மைதானத்தில், ஐ.பி.எல்., "ட்வென்டி - 20' கிரிக்கெட் போட்டி நடந்த போது, பயங்கர குண்டுவெடித்தது.விளையாட்டு துவங்கும் சிறிது நேரத்துக்கு முன்னதாக, மைதானத்தை சுற்றியுள்ள மூன்று இடங்களில் பயங்கர குண்டுகள் வெடித்தன. சக்தி குறைவான வெடிகுண்டு என்பதால், எவ்வித உயிர் சேதமும் ஏற்படவில்லை. இது தொடர்பாக, கேரள மக்கள் ஜனநாயக கட்சி தலைவர், மதானி கைது செய்யப்பட்டு, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ளார்.அந்த குண்டு வெடிப்பு சம்பவம் நடந்து, சரியாக மூன்று ஆண்டுகளுக்கு பின், பெங்களூரு, பா.ஜ., அலுவலகம் அருகே, நேற்று சக்தி வாய்ந்த குண்டு வெடித்துள்ளது.

குண்டுவெடிப்பு அதிர்வால் தூக்கி வீசப்பட்ட தோசைக்கல் :

குண்டு வெடிப்புஅதிர்வால், தோசைக்கல் தூக்கி வீசப்பட்டதால், பெண் பதட்டமடைந்தார். மல்லேஸ்வரத்தில் குண்டு வெடிப்பு நடந்த இடத்தின் அருகிலுள்ள வீட்டில் இருந்த இந்திரா பார்த்தசாரதி என்பவர் காயமடைந்தார். அவர் கூறியதாவது:வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது, திடீரென பயங்கர சத்தம் கேட்டது. அதை தொடர்ந்து, வீட்டினுள் புகையாக காணப்பட்டது. வெளியே வந்து பார்த்த போது, கார்களும், பைக்குகளும் எரிந்து கொண்டிருந்தன.என் வீட்டின் கண்ணாடி ஜன்னல்கள் உடைந்து, என் நெற்றில் பட்டு, ரத்தம் கொட்டியது. வெளியில் நான் பார்த்து கொண்டிருந்த போது, போலீஸ்காரர் ஒருவரை சிலர் தூக்கி சென்றனர். மேலும் சிலர் காயமடைந்து சத்தமிட்டு கொண்டிருந்தனர்.இவ்வாறு அவர் கூறினார்.குண்டு வெடித்த இடத்துக்கு அருகில் உள்ள வீட்டில் வசிக்கும், ஆசிரியை, லட்சுமி கூறியதாவது:சம்பவம் நடப்பதற்கு முன், வீட்டில் தோசை சுட்டு கொண்டிருந்தேன். திடீரென பயங்கர சத்தம் கேட்டது. அப்போது, தோசைக் கல் தூக்கி வீசப்பட்டது. அதிர்ச்சியடைந்து வெளியே ஓடி வந்தேன். என் வீட்டிலிருந்து, 70 அடி தூரத்தில் பைக், கார்கள் எரிந்து கொண்டிருந்தன. எங்கும் புகை மண்டலமாக காணப்பட்டது. என் வீட்டு கதவு, ஜன்னல்கள் உடைந்தன.இவ்வாறு அவர் கூறினார்.- நமது சிறப்பு நிருபர் -




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (54)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sowkath Ali - Chennai,இந்தியா
18-ஏப்-201321:01:51 IST Report Abuse
Sowkath Ali ஸ்ரீநாத், நீதான் அமெரிக்காவிலே இருக்கியே உனக்கு என்ன கவலை. இந்தியாவில் எங்கு குண்டு வெடிப்பு நடந்தாலும் முதலில் அரசியல்வாதிகள் அறிக்கை விடுவார்கள். ஒன்லி முஸ்லிம்களை நோக்கியே கை காட்டுவார்கள். புலனாய்வும் அப்படியே நடக்கும் - சில முஸ்லிம்கள் கைது செய்யப்படுவார்கள் - விசாரணை பல ஆண்டுகள் நடக்கும். அப்பாவிகள் இளைஞர்களாக உள்ளே சென்று வயோதிகர்களாக வெளியே வருவார்கள். ஆனால் குண்டு வைத்த rss காரன் சுதந்திரமாக அடுத்த குண்டை தயார் செய்வான். இந்தியாவில் மக்கள் அனைவரும் rss பயங்கரவாதிகளால் மூளை சலவை செய்யப்பட்டுள்ளனர். பாதிப்பு சிறுபான்மை முஸ்லிம்களுக்குத்தான். இந்த உண்மை என்றாவது ஒரு நாள் தெரியவரும் - மக்களும் உணர்வார்கள் - காலம் கடந்து கிடைக்கும் நீதி ஏற்பட்ட வடுக்களை ஆற்ற முடியாது. இப்போது யாரும் இந்த உண்மைகளை உணரமாட்டார்கள். காரணம் எவன் எக்கேடு கேட்டால் நமக்கு என்ன என்ற மனப்பான்மை மக்களிடையே.
Rate this:
6 members
0 members
4 members
Share this comment
Cancel
Padmavathi - Chennai,இந்தியா
18-ஏப்-201316:07:05 IST Report Abuse
Padmavathi இந்த குண்டு வைத்தவர்கள் தீவிரவாதிகளா? இல்லை அரசியல் வாதி (வியாதி) களா? இதை யார் செய்து இருந்தாலும் சரியான தண்டனை கொடுக்க வேண்டும்
Rate this:
0 members
0 members
12 members
Share this comment
சு கனகராஜ் - chennai -33,இந்தியா
18-ஏப்-201316:43:17 IST Report Abuse
சு கனகராஜ் தமிழகத்தின் பைக் என்று ஒரு குண்டை தூக்கி போடுகிறார்களே...
Rate this:
0 members
0 members
2 members
Share this comment
சத்தி.ம - Saththi.M - Barcelona,ஸ்பெயின்
18-ஏப்-201318:26:49 IST Report Abuse
சத்தி.ம - Saththi.M தீவிரவாதி கான்டாக்ட் நம்பர், RC புக்கு, லைசென்சு கார்டுயும், நம்பர் ப்லேட் கூட விட்டுட்டு போயிட்டானாம்...
Rate this:
0 members
0 members
2 members
Share this comment
villupuram jeevithan - villupuram,இந்தியா
18-ஏப்-201319:01:26 IST Report Abuse
villupuram jeevithanஅது ஆந்திராவில் வாங்கப்பட்ட பைக்....
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
Cancel
Murugan .sv - kumbakonam,இந்தியா
18-ஏப்-201312:52:55 IST Report Abuse
Murugan .sv தீவிரவாதிகள் கைது செய்ய பட்டனரா இல்லையா? உளவுத்துறையும் மாநில காவல் துறையும் உறங்கி கொண்டு இருக்கிறதா ?
Rate this:
2 members
1 members
18 members
Share this comment
சத்தி.ம - Saththi.M - Barcelona,ஸ்பெயின்
18-ஏப்-201318:28:12 IST Report Abuse
சத்தி.ம - Saththi.M வெச்சது காவி வேஷ்டிகலாம். தேர்தலுக்கு ஒரு அனுதாப அலை....
Rate this:
4 members
0 members
2 members
Share this comment
Cancel
jaffer1987 - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
18-ஏப்-201312:52:04 IST Report Abuse
jaffer1987 அண்ணன் ஆரூர் ரங் வாழும் போதும் அடுத்தவர்களை குறை சொல்லி , செத்த பின்பும் கெட்ட பேர் வாங்கும் உங்கள் போல அண்ணன் இருக்கும் வரை நாடு உருபடாது. என்ன ஏதுன்னே தெரியல. அதுக்குள்ள அவங்க இவங்க நு அது என்ன வாய இல்ல வாஷ் பேசினா?
Rate this:
21 members
0 members
13 members
Share this comment
இர்பான் கான் - nagappattinam dist,இந்தியா
18-ஏப்-201318:49:20 IST Report Abuse
இர்பான் கான் அண்ணன் ஆரூர் ரங் அவர்களக்கு இப்படி ஒரு செய்தி வந்தால் அவருக்குதான் தீபாவளி . அவர் மட்டும் இங்கேயே பிறந்தது போலவும் அவுங்க எல்லாம் வந்தேறிகள் என்றும் கூறும் அதிபுத்தி சளி அவர் . அவரின் எழுத்துகளின் காவி கவ்ச்சி இருக்கும்....
Rate this:
2 members
0 members
2 members
Share this comment
Cancel
Mohamed Nawaz - Sakaka,சவுதி அரேபியா
18-ஏப்-201312:47:07 IST Report Abuse
Mohamed Nawaz தீவிரவாதிகள் எங்கிருந்தும் வரவில்லை. இந்தியாவில்தான் இருக்கின்றனர், அரசியல்வாதிகள் என்னும் போர்வை போர்த்தியவர்களாக இருக்கின்றனர். அவர்களுக்கு தேவை பதவி. அதற்கு அவர்களது சொந்த சகோதரனோ அல்லது உற்ற நண்பனோ பலிகடாவாகினாலும் பரவாயில்லை. அவர்களிடம் கேட்டு கொள்வதெல்லாம், அட பாவிகளா ஏதாவது மக்களுக்கு நல்லதை செய்து பதவிக்கு வாங்களேன், எங்களை ( இதில் எந்த குறிப்பிட்ட மதமுமில்லை = மனிதர்கள் என்பதே நோக்கம் ) பிரித்து, எங்கள் சகோதரர்களை பாதிப்புக்கு ஆளாக்கி நீங்கள் சுகம் காண வேண்டுமா பதவி வெறி பிடித்த பிசாசுகளே? ஒற்றுமையான இந்தியா ஒன்றுபட்ட இந்தியா இதுவே எங்களுக்கு தேவை.....
Rate this:
43 members
0 members
33 members
Share this comment
gorgeous guy - Cork,அயர்லாந்து
18-ஏப்-201317:09:11 IST Report Abuse
gorgeous guyஅன்பரே, நான் ஒரு ஹிந்து. உம்மை போல எனக்கு பல நல்ல இஸ்லாமிய நண்பர்கள் என்றும் உண்டு. என் நண்பர்கள் என் வீட்டு அடுப்பங்கரை வரை வந்து வேண்டிய உணவை தாங்களே போட்டு உண்ணும் அளவிற்கு எங்களுள் நெருக்கம் உண்டு. அவ்வாறே நானும் அவர்கள் வீடுகளில் சகஜமாக சென்று, உண்டு, பழகி வருகிறேன். எங்கள் நட்பு என்றும் குறைந்ததில்லை. தன்னலம் பிடித்த அரசியல்வாதிகளும், மத வெறியர்களும் (ஹிந்து, முஸ்லிம், கிறிஸ்துவ பேதம் இதில் இல்லை. எம்மதமானாலும் மத அபிமானிகள் வேறு மத வெறியர்கள் வேறு. மத அபிமானிகள் மதத்தை அறிந்தவர்கள், நேசிப்பவர்கள், நன்னெறி உடையவர்கள். இவர்கள் எம்மதமானாலும் இவர்களால் மனிதனுக்கு என்றுமே தீங்கில்லை. ஆனால் மத வெறியனோ என்றுமே மனிதனின் நண்பனில்லை) எவ்வளவு முயன்றாலும் எங்களை, எங்கள் இந்தியர் என்ற ஒற்றுமையை என்றுமே இவர்களால் அழிக்க முடியாது. ஒன்று பட்ட இந்தியாவை நாங்கள் ஒன்று பட்டு மேன்மேலும் வளர்ப்போம் உம்மை போன்ற நல்ல உள்ளங்களின் ஒத்துழைப்போடு இது சத்தியம். இந்த உறுதி மொழியை நாட்டு பற்று மிக்க அணைத்து இந்தியரையும் கடை பிடிக்குமாறு என்னுடைய அன்பான வேண்டுகோள். பி.கு: நான் 80-90 ஆண்டுகளில் கலவர பூமியாய் திகழ்ந்த நாகூர், நாகப்பட்டினம் பகுதியை சேர்ந்தவன். எனவே எனக்கு ஹிந்து-முஸ்லிம் பிரச்சினையை பற்றி தெரியாது. எனவே தான் நான் இப்படி பேசுகிறேன் என தவறான எண்ணம் வேண்டாம். நன்றி...
Rate this:
3 members
0 members
10 members
Share this comment
Mohamed Nawaz - Sakaka,சவுதி அரேபியா
18-ஏப்-201320:37:25 IST Report Abuse
Mohamed Nawazநன்றி நண்பரே, நல்ல முறை சொல்லி பெரியப்பா சித்தப்பா மாமன் மச்சான் என்றும் உண்மையான பாசத்துடனும் ஒருவருக்கொருவர் உதவும் மன நிலையுடன் இருந்த நமது இந்தியா, தீபாவளிக்கு அவர்கள் வீட்டில் சிறப்பான உணவு உண்டு பக்ரித் நோன்பு, கிருஸ்துமஸ் விசேஷ நாட்களில் அன்பை பரிமாறி கொண்ட நாட்கள் இனியும் வருமா எமது பாரதத்தில், நாம் வழிபடும் முறை வேறு வேறாக இருந்தாலும் இறந்த பின் அடக்கம் செய்யும் இடமோ அல்லது எரிக்கும் இடமோ வேறாக இருந்தாலும் இறந்து போன நண்பனுக்காக அவனது இறுதி இடம் வரை கொண்டு சேர்த்த அந்த பண்பு மிகுந்த இந்தியா மீண்டும் மலருமா? படுபாவிகளால் பிரித்துவிடப்பட்ட உள்ளங்கள் ஒன்று சேருமா? ஆதங்கம் அன்பரே... அரசியல் ஆதாயங்கள் மட்டுமே இவர்களது குறி வேறொன்றுமல்ல. இப்படி ஒரு நல்ல கருத்தை பரிமாறி கொள்ள உதவிய தினமலருக்கு நன்றி.......
Rate this:
3 members
0 members
5 members
Share this comment
Cancel
N.Rajagopalan - Chennai,இந்தியா
18-ஏப்-201311:34:47 IST Report Abuse
N.Rajagopalan Whenever and wherever congress has ruled terrorists belonging to one community thrive and flourish. India can be peaceful only when congress is voted out
Rate this:
3 members
0 members
16 members
Share this comment
Cancel
Mohandhas - singapore,சிங்கப்பூர்
18-ஏப்-201311:19:49 IST Report Abuse
Mohandhas போலிஸ் விசாரணை தொடரும்,,,,
Rate this:
0 members
0 members
2 members
Share this comment
Cancel
mirudan - kailaayam,இந்தியா
18-ஏப்-201310:42:11 IST Report Abuse
mirudan மோடிக்கு சிறப்பான வாயுப்பு கிடைத்து இருக்கு. சுஷ்மா, அருண்ஜெட்லி போன்றவர்களை முதல்வராக அறிவித்து கர்நாடக தேர்தலை எதிர் கொள்ளலாம்.
Rate this:
9 members
0 members
6 members
Share this comment
Cancel
Thangairaja - tcmtnland,இந்தியா
18-ஏப்-201310:38:28 IST Report Abuse
Thangairaja ஜெயிக்கன்ம்னா இப்போதைக்கு வேற வழி இல்லே .......மத தீவிரவாதம் தான் ஒரே சைஸ். இதே டெக்னிக்கை வைத்து எத்தனை தேர்தலை ஜெயித்து விட்டோம்......வந்தா மலை,போனா.........யிரு அம்ப்ட்டு தான். நாட்டுப்பற்று மிக்க ஊடகங்களும் மக்களும் நினைத்தால் .....உண்மையான செய்திகளையே வெளியிடுவோம், உண்மைகளையே நம்ப்வோம் என்பதில் உறுதியாக இருந்தால் நம்நாடு தீவிரவாதத்திற்கு அன்னியமாகி போய் விடும்
Rate this:
10 members
0 members
46 members
Share this comment
சு கனகராஜ் - chennai -33,இந்தியா
18-ஏப்-201316:44:32 IST Report Abuse
சு கனகராஜ் தேர்தலுக்காக வெற்றி பெற என்ன வேண்டுமானாலும் செய்வார்கள் போல இருக்கே...
Rate this:
1 members
0 members
4 members
Share this comment
Cancel
p.mohamed rafik,kuruvadi - hafar al batin,இந்தியா
18-ஏப்-201310:04:09 IST Report Abuse
p.mohamed rafik,kuruvadi இதுவரை நடந்த குண்டுவெடிப்புகளில் அப்பாவிகளைதான் கைது செய்துள்ளார்கள் என்பது இதன் மூலம் தெரிய வருகின்றது. இனிமேலாவது cctv பதிவுகள் மூலம் உண்மையான குற்றவாளிகளை கண்டு பிடித்து இனி ஒரு குண்டுவெடிப்பு நடக்காமல் தடுக்க வேண்டும்.இது போன்ற குண்டு வெடிப்புகளாலும் இரு சமூகங்களுக்கிடையே வெறுப்பை வளர்த்து அதன் மூலம் ஓட்டை அறுவடை செய்யும் கட்சி எவ்வளவு பெரிய கட்சியாக இருந்தாலும் அதை பாரபட்சமற்ற விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்.
Rate this:
26 members
0 members
29 members
Share this comment
Mohamed Nawaz - Sakaka,சவுதி அரேபியா
18-ஏப்-201314:20:09 IST Report Abuse
Mohamed Nawazஹைதரபாத்தில் காமிராவை செயலிழக்க செய்தது யார்? திட்டமிட்டு அரசு என்திறாக்கள் செய்யும் செயலிது....
Rate this:
3 members
0 members
8 members
Share this comment
p.mohamed rafik,kuruvadi - hafar al batin,இந்தியா
19-ஏப்-201300:33:26 IST Report Abuse
p.mohamed rafik,kuruvadicctv யில் பதிவாகவில்லை என்றால் இது திட்டமிட்ட அரசியல் வெடிகுண்டு தான் என்பதை சொல்லித்தான் தெரியவேண்டுமா.....
Rate this:
1 members
0 members
1 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.