E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
மீன்பிடி தடைகாலத்தை இரண்டு முறையாக மாற்றலாமா: மீனவர்கள் கருத்து
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

மாற்றம் செய்த நாள்

19 ஏப்
2013
00:19
பதிவு செய்த நாள்
ஏப் 18,2013 23:32

ராமநாதபுரம்: தமிழகத்தில் ஆண்டுதோறும், ஏப்.,15 முதல் மே 30 வரை மீன்பிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளதால், கடல்வளம் பாதுகாக்கப்படுவதுடன், தடைகாலம் முடிந்து மீன்பிடி தொழிலுக்கு செல்லும்போது, இரட்டிப்பு மீன்கள் கிடைப்பதால், ஆண்டிற்கு இரண்டு முறை தடைகாலம் விதித்தாலும் நல்லதே, என மீனவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
கடந்த 2001 முதல் தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்.,15 முதல் மே 30 வரை, விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. முன்பெல்லாம் இல்லாத தடை, 2001க்கு பின் விதிக்கப்பட்டுள்ளதால், உண்மையான நிலை என்ன, மீனவர்கள், கடல்சார் ஆராய்ச்சியாளர்கள் மீன்பிடி தடை குறித்து என்ன நினைக்கின்றனர் என்ற பெரும் விவாதமே ஏற்பட்டு, அவ்வப்போது இருதரப்பிலும் கலந்துரையாடல்களும் நடத்தியுள்ளனர். இதில், கடல் வளத்தை பாதுகாக்க வேண்டிய கடமை, மீனவர்களுக்கு மட்டுமின்றி, அனைவருக்கும் உள்ளது. நடைமுறையில், கடலில் மீன்பிடி தொழில் செய்வதில் பல்வேறு விதிமீறல்கள் நடப்பதால், அரியவகை உயிரினங்களும், அழிந்து வருவதாக கடல்சார் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வில் தெரியவந்தது. இதேநிலை நீடிக்கும்பட்சத்தில், வருங்காலத்தில் மீன்பாடு, வெகுவாக குறைந்துவிடும் என்பதோடு, கடலில் உள்ள அரியவகை உயிரினங்கள் இனப்பெருக்கம் செய்ய முடியாமல் போய்விடும். இன்று "டைனோசர்' போன்ற உயிரினங்களை, நாம் மியூசியத்தில் மட்டுமே பார்க்கும் நிலை உள்ளது போல், தற்போதுள்ள அரியவகை பவளப்பாறைகள், கடல்பசுக்கள், கடல் ஆமைகள், கடல்குதிரைகள் போன்றவைகளை எதிர்கால சந்ததியினர் மியூசியத்தில் மட்டுமே பார்க்கும் நிலை ஏற்படும் அபாயம் உள்ளது. இது ஒரு காரணமாகவும், கடல்வாழ் உயிரினங்கள் பொதுவாக கோடையில் தான், பெரும்பாலானவை இனப்பெருக்கத்தில் ஈடுபடுவதாலும், அதை பாதுகாக்க மீன்பிடி தடைகாலம் அவசியம் என்பது, நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

மீனவர்கள் கருத்து: முத்துகருப்பன் (நாட்டுப்படகு மீனவர், கிருஷ்ணாபுரம்): நான் 20 ஆண்டுகளாக நாட்டுப்படகில் மீன்பிடி தொழில் செய்கிறேன். நாட்டுபடகுகளில் 2 முதல் 4 குதிரைசக்தி திறன் கொண்ட இன்ஜின் பயன்படுத்தப்படுகிறது. மூன்று கடல் மைல்(ஒரு கடல் மைல் 1.6 கி.மீ.,) வரை சென்று மீன்பிடிக்கிறோம். முன்பு கிடைத்தது போல், தற்போது மீன்பாடு இல்லை. 45 நாட்கள் தடை காலம் கண்டிப்பாக தேவைப்படுகிறது. தற்போது, பலவகையான வலைகள் மூலம் மீன் பிடிப்பதால், சிலர், மீன் குஞ்சுகளையும் பிடிக்கின்றனர். இதனால், மீன் இனப்பெருக்கம் என்பது இல்லாமல் போய்விடும். தடைகாலத்திற்கு பின், கடலுக்கு செல்லும் விசைப்படகு மீனவர்களுக்கு, நல்ல மீன்பாடு கிடைக்கும். அப்போது, அவர்கள் நடுக்கடலில் வீசப்படும் வலைகளால், கரையையொட்டி அதிகமான மீன்கள் வருவதால், எங்களுக்கும் மீன்பாடு அதிகம் கிடைக்கிறது.
காளிமுத்து (கரைவலை மீனவர், சோகையன்தோப்பு): மீன்பிடி தடையால் கரைவலை மீனவர்களுக்கு, எவ்வித பாதிப்பும் இல்லை. கரைவலையில் பெரும்பாலும் சிறியவகை மீன்கள் மட்டுமே கிடைக்கின்றன. சில மாதங்களாக கரைவலையில், பெரியளவில் மீன்பாடு கிடைப்பதில்லை. இந்த காலத்தில் வியாபாரிகள் பலர் எங்களை தேடி வருகின்றனர். ஆனால் அந்தளவு மீன்பாடு இல்லை. 30 பேர் பணியாற்றும் கரைவலை தொழிலில் ஒருவருக்கு தினமும் 100 ரூபாய் தான் கிடைக்கிறது.

மண்டபம், மத்திய கடல்மீன் ஆராய்ச்சி மைய விஞ்ஞானி(பொறுப்பு) கோபக்குமார் கூறியதாவது: கடல்வாழ் உயிரினங்கள், ஆண்டு முழுவதும் இனப்பெருக்கம் செய்கின்றன. இதில் பெரும்பாலானவை, கோடையில் தான் இனப்பெருக்கம் செய்கின்றன. சிலவகை மீன்கள், குறுகிய காலத்தில் இனப்பெருக்கத்திற்கு தயாராகிவிடுகின்றன. சீலா மீன்கள் உட்பட சில வகை மீன்கள், 5 கிலோ எடை வரை வளர்ந்தபின்தான், இனப்பெருக்கத்திற்கு தயாராகின்றன. ஆனால், அதற்கு முன்பாகவே மீனவர்கள் பிடித்து விடுவதால், இனப்பெருக்கத்திற்கு சிக்கல் ஏற்படுகிறது. இதனால் தான் மீன்பிடி தடை காலம் கடைபிடிக்கப்படுகிறது. இதில், விசைப்படகுகளுக்கு உள்ள தடையை போல் நாட்டுப்படகு, கரை வலை போன்ற அனைத்து மீன்பிடிகளுக்கும் தடைவிதித்து, அவர்களது, வாழ்வாதாரத்திற்கு உதவித்தொகை வழங்கினால், கடல் வளம் இன்னும் பாதுகாக்கப்படும். இது குறித்து அரசுக்கு, நாங்கள் ஏற்கனவே பரிந்துரை செய்துள்ளோம். மேலும், தடைகாலம் முடிந்து மீன்பிடி தொழிலுக்கு செல்லும் போது, அதிகமான மீன்கள் கிடைப்பதால், தடையை ஆண்டிற்கு இரண்டு முறை அமல்படுத்தலாம், என மீனவர்கள் தெரிவித்துள்ளனர். எனவே, நவம்பர், டிசம்பரிலும் தடை விதிக்கலாமா என ஆலோசித்து வருகிறோம். இரண்டு முறை தடை அமல்படுத்தினால், கடல்வளம் மேலும் பாதுகாக்கப்படும், என்றார்.
ஏன் வந்தது; எப்போது வந்தது: ராமேஸ்வரத்தில் இருந்து கச்சத்தீவு வரை, இந்திய கடல் எல்லை 13 கடல் மைல். இங்குள்ள விசைப்படகு மீனவர்கள் இறால் வலை, தடை செய்யப்பட்ட இரட்டைமடி வலை ஆகிய இரண்டை மட்டுமே பயன்படுத்துகின்றனர். டிசம்பர் முதல் ஏப்ரல் 15 வரை பேசாளை, சீலா, சிரையா, கௌறு, பாரை உட்பட பெரிய வகை மீன்களை பிடிக்கின்றனர். 2001ம் ஆண்டு வரை 200 குதிரை சக்தி திறன் இன்ஜின்கள் கொண்ட படகுகளில், வாரத்திற்கு ஆறு நாட்கள் மீன்பிடித்து வந்தனர். இதில் இவர்களுக்கும், நாட்டுப்படகு மீனவர்களுக்கும் பிரச்னை ஏற்பட்டது. இதையடுத்து விசைப்படகு, நாட்டுப்படகு மீனவர்கள் வாரத்தில் தலா மூன்று நாட்கள் மீன்பிடிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டது. மீன்பிடி நாள் குறைக்கப்பட்டதை தொடர்ந்து, முன்பை விட மூன்று மடங்கு அதிக குதிரை சக்தி திறன் கொண்ட இன்ஜின்களை, விசைப்படகு மீனவர்கள் பயன்படுத்த துவங்கினர். மேலும், கடலில் வெகு ஆழம் வரை போகக்கூடிய வலைகளையும் பயன்படுத்த துவங்கினர். பாக் ஜலசந்தி, மன்னார் வளைகுடா கடலின் அடிப்பகுதி மண்ணையும் அள்ளி வரக்கூடிய வலைகளை, விசைப்படகு மீனவர்கள் பயன்படுத்தியதால், மீன் குஞ்சுகள், முட்டைகள் அழிந்தன. கடல் வளம் பாதிக்கப்பட்டது. எனவே, கடல்சார் விஞ்ஞானிகளின் ஆலோசனைபடி, ஏப்.,15 முதல் மே 30 வரை, மீன்கள் இனப்பெருக்கத்திற்காக, மீன்பிடி தடை காலம் 2001 முதல் அமுலுக்கு வந்தது.





Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
19-ஏப்-201313:06:09 IST Report Abuse
Nallavan Nallavan இந்தத் தடையே மீன்களின் இனப்பெருக்கத்தை ஊக்குவிக்கத்தான் ... அவற்றின் இனப்பெருக்க காலத்தில்தான் தடை ..... இதுதான் சரியான முறை .... அதை வருடத்திற்கு இரண்டு முறை என்று பிரித்தால் இனப்பெருக்க காலமும் மீன்பிடி காலத்தில் வரக்கூடும் ....
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
Cancel
Alagu Muthu - Tutico,இந்தியா
19-ஏப்-201305:58:17 IST Report Abuse
Alagu Muthu விசை படகை 50 கடல் மைல் தாண்டி எப்போதும் மீன் பிடிக்க சொல்லலாம் , இதனால் சிறு குஞ்சு களை பிடித்து கோழி தீவனம் ஆக்கி கடல் வளத்தை அழிப்பது குறையும்
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.