Government hikes dearness allowance by 8% | மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 80 சதவீதமானது| Dinamalar

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 80 சதவீதமானது

Updated : ஏப் 18, 2013 | Added : ஏப் 18, 2013 | கருத்துகள் (8)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Government hikes dearness allowance by 8%

புதுடில்லி: மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி, 80 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கு, அடிப்படை சம்பளத்தில் கணக்கிட்டு வழங்கப்படும் அகவிலைப்படி, தற்போது, 72 சதவீதமாக உள்ளது. ஆறு மாதத்திற்கு ஒரு முறை வழங்கப்படும் இந்த அகவிலைப்படி, ஜனவரி, 1ம் தேதி முதல் உயர்த்தப்பட வேண்டும். இதற்கான அறிவிப்பு எப்போது வரும் என, ஊழியர்கள் காத்திருந்தனர். இந்நிலையில், நேற்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடந்தது. இதில், மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை, 72 சதவீதத்துடன், 8 சதவீதம் உயர்த்தி, 80 சதவீதமாக வழங்க, ஒப்புதல் அளிக்கப்பட்டது. இது, ஜனவரி 1ம் தேதி முதல், கணக்கிட்டு வழங்கப்படும். இதனால், மத்திய அரசுக்கு நடப்பு நிதியாண்டில், 10 ஆயிரத்து, 67 கோடி ரூபாய் கூடுதல் செலவு ஏற்படும். இந்த உயர்வின் மூலம், 50 லட்சம் ஊழியர்களும், 30 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயன் அடைவர். அகவிலைப்படி உயர்வு, 50 சதவீதத்தை தாண்டும்போது, 50 சதவீத அகவிலைப்படியை அடிப்படை சம்பளத்துடன் சேர்க்க வேண்டும் என்பது நடைமுறை. இதற்காக, ஏழாவது சம்பள கமிஷன் அமைக்க வேண்டும். இவற்றுடன், நேற்று மத்திய அமைச்சரவை கூட்டத்தில், எச்.எம்.டி., நிறுவனத்தை புனரமைக்க, 1,083 கோடி ரூபாய் ஒதுக்க முடிவு செய்ய பட்டது. மேலும், பீகார் மாநிலத்தில் பின்தங்கிய பகுதிகளை மேம்படுத்துவதற்கான சலுகை திட்டத்திற்கு, 12ஆயிரம் கோடி ரூபாய் சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்ய பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு அனுமதி அளித்தது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Prabhakaran Shenoy - CHENNAI,இந்தியா
22-ஏப்-201307:30:27 IST Report Abuse
Prabhakaran Shenoy அகவிலை படிக்கு வருமான வரி விலக்கு கொடுக்கும் கட்சிக்கே எமது வாக்கு.
Rate this:
Share this comment
Cancel
Krish - delhi,இந்தியா
20-ஏப்-201307:47:31 IST Report Abuse
Krish இந்தியாவில் நாற்பது கோடி மக்கள் இன்னும் நாள் ஒன்றுக்கு 65 ருபாய் கூட சம்பளம் கிடைக்காத நிலையில் வறுமையில் வாடுகிரார்கலாம் ... அக விலை படி, புற விலை படி இதெல்லாம் அவர்களுக்கும் பொருந்துமா?
Rate this:
Share this comment
Cancel
Krish - delhi,இந்தியா
20-ஏப்-201307:44:51 IST Report Abuse
Krish அக விலை படியை அரசு நிர்ணயித்து விட்டது.. இப்போது '' புற விலை படியை'' அரசு ஊழியர்கள் அவர்களே நிர்ணயிப்பார்கள்..
Rate this:
Share this comment
Cancel
rudramoorthy - madurai,இந்தியா
19-ஏப்-201306:37:02 IST Report Abuse
rudramoorthy அகவிலை மக்களுக்கு...அகவிலைப் படி ஏற்கனவே சம்பளத்துடன் கிம்பளமும் வாங்கி கொழுத்துப் போயுள்ள அரசு ஊழியர்களுக்கு......நல்லாஇருங்கடா.....
Rate this:
Share this comment
Cancel
19-ஏப்-201306:22:55 IST Report Abuse
அறிவாலயம் c / o போயஸ் வெறுமனே இருப்பவனுக்கு அகவிலைப் படி அவனுக்கு படியளக்கும் வரிகொடுப்பவனுக்கோ செருப்படி
Rate this:
Share this comment
Cancel
Sekar Sekaran - Jurong-West,சிங்கப்பூர்
19-ஏப்-201305:00:07 IST Report Abuse
Sekar Sekaran இந்த ஏழைன்னு ஒரு கோஷ்டி இருக்கின்றதே...அவர்களுக்கு அரசாங்கம் என்ன செய்யப்போகிறதாய் உத்தேசம்..இந்த ஊதிய உயர்வு இவர்கள் விஷயத்தில் அவசியம்தானா? இந்த கஸ்டம்ஸ் என்று சொல்லுகின்றார்களே...அவர்கள் மத்திய அரசு ஊழியர்கள்தானே? சில வியாபாரிகள் இந்த சென்னை துறைமுகத்திற்கு பொருட்களை அனுப்ப பயப்படுவது ஏன் என்று தெரியுமா? லஞ்சம் என்றால்..உச்சத்தில் உள்ள லஞ்சம் இங்கேதான் என்கிறார்கள் அவர்கள்..ஒரு நாளைக்கு ஒவ்வொருத்தர் பாக்கட்டையும் ஒரு "எல்" நிரப்புகின்றதாம்..இவர்களுக்கு இந்த ஊதிய உயர்வு ரொம்போ முக்கியம் பாருங்கள்..இது ஒரே ஓர் உதாரணம்தான். உலகத்திலேயே அதிக லஞ்சம் பெறுகின்ற ஊழியர்களுக்கு மீண்டும் மீண்டும் ஊதிய உயர்வு..அதிசயமான நாடு..பாருக்குல்லேயே நம்ம நாடுதானுங்க...
Rate this:
Share this comment
Cancel
Vettri - Coimbatore,இந்தியா
19-ஏப்-201301:20:36 IST Report Abuse
Vettri அரசு ஊழியர்களுக்கு எவ்வளவு தான் வாரி வழங்கினாலும் கை நீட்டுவது மட்டும் குறையவே இல்லையே.
Rate this:
Share this comment
Cancel
தமிழ் சிங்கம் - chennai,இந்தியா
19-ஏப்-201301:11:25 IST Report Abuse
தமிழ் சிங்கம் அகவிலை படியை நூறு சதவிதமாக உயர்த்தி அடிப்படை சம்பளத்துடன் சேர்த்தால், அரசு ஊழியர்கள் சந்தோஷபடுவார்கள். இல்லையெனில் ஏழாவது சம்பள கமிசனை உடனடியாக அமைக்க வேண்டும். இல்லையெனில் இந்தியா காணாதவகையில் போராட்டம் எழும்முன்னர், இதை அரசே செய்துவிடுவது நல்லது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை