Many Cut flower farmers eye african countries | ஆப்ரிக்க நாடுகளுக்கு இடம்பெயரும் ஓசூர் விவசாயிகள்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஆப்ரிக்க நாடுகளுக்கு இடம்பெயரும் ஓசூர் விவசாயிகள்

Added : ஏப் 18, 2013 | கருத்துகள் (51)
Advertisement
Many Cut flower farmers eye african countries

ஓசூர்: ஆப்ரிக்க நாடுகளில், குறைந்த விலைக்கு விவசாய நிலம் கிடைப்பதால், ஓசூர் மலர் பண்ணை விவசாயிகள், அங்கு இடம் பெயர்ந்து வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பகுதியில் ஆண்டு முழுவதும், 5 ஆயிரம் ஹெக்டேரில் ரோஜா, ஜெர்பரா, கார்னேஷன், ஆஸ்டர் உள்ளிட்ட, 25 வகை கொய்மலர்கள் உற்பத்தியாகின்றன. குறிப்பாக, 5,000 ஏக்கரில், திறந்தவெளி மற்றும் உயர் தொழில்நுட்ப பசுமை கிடங்கு முறையில், விவசாயிகள், ரோஜா சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர்.

தொழில்நுட்பம்: ஓசூர், பேரிகை, பாகலூர், பேளகொண்டப்பள்ளி, தளி, தேன்கனிக்கோட்டை மற்றும் கெலமங்கலம் பகுதியில், ஐம்பதுக்கும் மேற்பட்ட மலர் பண்ணைகளில், உயர் தொழில்நுட்பத்தில் உற்பத்தி யாகும் ரோஜா மலர்கள், ஐரோப்பா, அரேபியா மற்றும் அமெரிக்க நாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றன. பருவ மழை குறைந்துள்ளதால் இந்த பகுதிகளில், நிலத்தடி நீர்மட்டம் குறைந்து உள்ளது. ஆழ்துளை கிணறுகள் வறண்டதால், ரோஜா செடிகளுக்கு, சொட்டு நீர் பாசனம் செய்ய முடியவில்லை. சர்வதேச சந்தையில், ஓசூர் ரோஜாவுக்கு வரவேற்பு குறைந்தது. இந்நிலையில், எத்தியோப்பியா, கென்யா, கானா உள்ளிட்ட, ஆப்ரிக்கா நாடுகளில், மலர் சாகுபடிக்கு ஏற்ற சூழல், மிக குறைந்த விலைக்கு விவசாய நிலம், அதிகமான நீர் ஆதாரம், கட்டமைப்பு வசதி, குறைந்த ஊதியத்திற்கு கூலியாட்கள் கிடைப்பதால், அங்கு உலக தரம் வாய்ந்த ரோஜா மலர்களின் உற்பத்தி அதிகரித்துள்ளது.

உற்பத்தி செலவு: அந்நாடுகளில், ஒரு ரோஜா கொத்துக்கான உற்பத்தி செலவு, 1 ரூபாயில் அடங்கி விடுகிறது. அதனால், சர்வதேச சந்தையில், ஒரு ரோஜா, 5 ரூபாய்க்கு விற்றாலே, 4 ரூபாய் லாபம் கிடைக்கிறது. ஓசூர் பகுதியில், ஒரு ரோஜா கொத்து உற்பத்தி செய்ய, 3 ரூபாய் முதல் 4 ரூபாய் வரை செலவாகிறது. தற்போது ஓசூர் ரோஜா, 5 ரூபாய், 7 ரூபாய் வரை தான், விற்பனையாகிறது. இவற்றில் கிடைக்கும் லாபம் கூலியாட்கள், மின்சார கட்டணம், போக்குவரத்துக்கு செலவாகி விடுகிறது. அதனால், ஓசூர் மலர் பண்ணை விவசாயிகள், தற்போது ஆப்ரிக்கா நாடுகளில் மலர் பண்ணைகள் அமைத்து, ரோஜா சாகுபடி செய்ய ஆர்வமாகியுள்ளனர்.

ஓசூர் மலர் விவசாயிகள் கூறியதாவது; எத்தியோப்பியா, கென்யா, கானா உள்ளிட்ட, ஆப்ரிக்கா நாடுகளில் ஒரு ஏக்கர் நிலம், 3,000 ஆயிரம் ரூபாய் முதல் 5,000 ரூபாய் வரை கிடைக்கிறது. அரசே, புறம்போக்கு நிலத்தை, 99 ஆண்டு, குத்தகைக்கு தருகிறது.

மானிய உதவி: மலர் சாகுபடிக்கு தேவையான கட்டமைப்பு வசதி, மானிய உதவிகளை, வங்கிகள் செய்து கொடுக்கின்றன. தோட்டங்களில் வேலை செய்ய, நாளொன்றுக்கு, 25 ரூபாய் முதல் 50 ரூபாய்க்கு கூலி வேலைக்கு ஆட்கள் கிடைக்கின்றனர். அதனால், அந்நாடுகளில் பூக்கள் உற்பத்தி செலவு மிக குறைவு. அதனால், ஆப்ரிக்க நாடுகளில், ஓசூர் மலர் பண்ணை விவசாயிகள், விவசாய நிலங்களை விலைக்கு வாங்கி வருகின்றனர். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

உலக மலர் உற்பத்தியில் இந்திய ரோஜா 2 சதவீதம்: கடந்த காலத்தில் இந்தியாவில், கொய்மலர்கள் சாகுபடி அதிகளவு நடந்தது. பருவநிலை மாற்றம், உற்பத்தி செலவு அதிகரிப்பால், கொய்மலர் சாகுபடி குறைந்தது. கடந்த, 2006ம் ஆண்டு இந்தியாவில் இருந்து, 750 கோடி கொய்மலர்கள் ஏற்றுமதியாயின. கடந்த, 2011ம் ஆண்டு கொய்மலர்கள் ஏற்றுமதி, 286 கோடியாக வீழ்ச்சியடைந்தது. தற்போது, உலக ரோஜா ஏற்றுமதியில், இந்தியாவின் பங்களிப்பு, 2 சதவீதமாக உள்ளது. சீன ரோஜா வருகையால், இது மேலும் குறைய வாய்ப்புள்ளது. ரோஜா விவசாயத்தை மேம்படுத்தவும், கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி கொடுக்கவும் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்காததால், ரோஜா சாகுபடியில், இழப்பு ஏற்பட்டு வருவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (51)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Balaji Rbalaji - Erode,இந்தியா
19-ஏப்-201319:18:57 IST Report Abuse
Balaji Rbalaji எல்லாம் நமது சுயநலம்தான் காரணம்
Rate this:
Share this comment
Cancel
விருமாண்டி - மதுரை,இந்தியா
19-ஏப்-201318:23:51 IST Report Abuse
விருமாண்டி அம்பயர்@ ராஜா அவர்களே நீங்கள் தினமும் மதியம் என்ன உணவு எடுத்துக் கொள்கிறீர்கள் ..? சோற்றை உன்கிரார்களா ? இல்லை பீசா , பர்கர் போன்ற உணவா ..? இத்தனை நாள் உங்களை வளர்த்தது இந்த விவசாயிகள் தான்
Rate this:
Share this comment
Cancel
விருமாண்டி - மதுரை,இந்தியா
19-ஏப்-201318:19:12 IST Report Abuse
விருமாண்டி வெங்கட், வாய்தா வம்பன், பிரகாஷ் போன்ற கருத்துக்கள் அருமை
Rate this:
Share this comment
Cancel
karuvaayan - karimedu,இந்தியா
19-ஏப்-201318:17:53 IST Report Abuse
karuvaayan இலங்கை தமிழர்களுக்கும் நம் விவசாயிகளுக்கும் சம்பந்தம் இல்லை தான். ஆனால் இவர்களுக்கு போராடியது போல் நம் விவசாயிகளுக்கு போராடவில்லையே .. நம் தமிழ்நாட்டில் உள்ள அகதிகள் முகாமில் இலங்கை தமிழர்களும் நம் விவசாயிகள் கொடுத்த சோற்றை தான் உண்கிறார்கள். அவர்களும் குரல் கொடுக்க வில்லையே
Rate this:
Share this comment
Cancel
Rss - Mumbai,இந்தியா
19-ஏப்-201316:27:39 IST Report Abuse
Rss நமக்கு சோறு போட்டதை தவிர இவர்கள் வேரு எந்த தவறும் செய்யவில்லை .இலங்கை தமிழர்களை கவனித்தோம் ஏன் உயிரை கூட கொடுத்தோம் ..ஆனால் ஒரு ஈழ தமிழன் கூட நம் தமிழ் நாட்டுக்காக வரமாட்டன் .இவர்கள் சுயநலவாதிகள்
Rate this:
Share this comment
தமிழன் - சென்னை,இந்தியா
19-ஏப்-201318:59:52 IST Report Abuse
தமிழன்என்ன தல சொல்றீங்க? அதான், தீவிரவாதின்னு சொல்லி முகாம்ல போட்டு அடைச்சிடுரோமே? அப்பறம் எப்படி வருவான்?...
Rate this:
Share this comment
Pasupathi Subbian - trichi,இந்தியா
19-ஏப்-201320:09:38 IST Report Abuse
Pasupathi Subbianஈழத்தமிழன் விவரமெல்லாம் சும்மா ஓட்டுக்குத்தான் ....
Rate this:
Share this comment
Pasupathi Subbian - trichi,இந்தியா
19-ஏப்-201320:13:00 IST Report Abuse
Pasupathi Subbianஅங்கேயும் போய் கடன் கப்பு வாங்கி உழைக்காமல் வெட்டியாய் விருந்து சாப்பிட்டு அரசாங்கம் தள்ளுபடி கொடுக்க கொடிதூக்க கூடாது ....
Rate this:
Share this comment
Cancel
K.Balasubramanian - Reading RG5 1DG ,யுனைடெட் கிங்டம்
19-ஏப்-201315:48:56 IST Report Abuse
K.Balasubramanian கென்யா குடியேற்றத்தினை மதித்தால் நம்மவர்கள் அங்கு ஆர்வத்துடன் செல்ல வாய்ப்புகள் நல்லதுதான் .
Rate this:
Share this comment
Cancel
விருமாண்டி - மதுரை,இந்தியா
19-ஏப்-201314:33:34 IST Report Abuse
விருமாண்டி அப்போ ஒரு வேள உணவு கிடைக்காம விவசாயிகள் தற்கொலைன்னு பேப்பர்ல தினமும் செய்தி வருதே... அதுவும் உண்மை இல்லன்னு சொல்றிங்களா ????
Rate this:
Share this comment
Cancel
kumaresan.m - hochimin ,வியட்னாம்
19-ஏப்-201314:05:52 IST Report Abuse
kumaresan.m " ஒரு செய்தியை தினமலர் நிருபர் குறிப்பிட மறந்துள்ளார் அல்லது அரசுக்குக்கு எதிராக கருத்து சொல்ல விரும்பவில்லை போலும் "......மிக முக்கிய காரணம் விவசாயம் செய்ய தமிழ் நாட்டில் மின்சாரம் இல்லை என்பது தான் உண்மை "....மற்றும் தமிழ் நாட்டில் தண்ணீருக்கு பஞ்சம் என்று யார் சொல்வது? .....சந்து ,பொந்து ,மூலை,முடக்கு .....தெருவெல்லாம் அரசு தண்ணீர் கடை வைத்து விற்பனை அளவு நிர்ணயத்து ஏலம் போட்டு விற்று கொண்டு உள்ளது "....தமிழ்நாடு இப்படி இருந்தால் எப்படி விவசாயம் செய்ய முடியும் ? ......உயிர் வாழ வேண்டாமா ? எந்த ஒரு விவசாயிக்கும் மற்றும் மக்களுக்கும் சொந்த மண்ணை விட்டு வெளி நாடு சென்று சம்பாதிக்க எண்ணம் இல்லை எல்லாம் ஒரு ஜான் வயிற்றுக்காகத்தான் "அன்பர் சுதாகர் அவர்கள் விவசாயம் செய்து பார்த்தல் அதில் உள்ள வலியும் மற்றும் மன வேதனையும் புரியும் "...விவசாயம் என்பது மாதம் பிறந்தவுடன் சம்பளம் பெறும் வேலை இல்லை .....வெயில் ...மழை ..நேரம் ...காலம் ..இரவு ..பகல் ..என்று பாராமல் ஓயாத உழைப்பு ...வருடா வருடம் போட்ட பணத்தை எடுக்க முடியாமல் நஷ்டத்தில் நஷ்டம் ...குடும்ப செலவுகள் மற்றும் .....குடும்ப வறுமை .....இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம் "
Rate this:
Share this comment
Cancel
Tamilar Neethi - Chennai,இந்தியா
19-ஏப்-201313:24:20 IST Report Abuse
Tamilar Neethi நிலத்தை பண்படுத்தி, விளை நிலமாக்கி, உன்னத நிலைக்கு கொண்டுவந்த பின் , ஸ்ரீலங்கா போல, பர்மா போல விரட்டப்டுவார்கள் ??? அதான் இருக்கும் அரசியல் சூழலில் படித்த தமிழன், அமெரிக்க போன்ற வளர்த்த நாடுகளுக்கும் கூலி வேலை செய்வதற்கு துபாய், அரப் தேசத்திற்கும் , எடுபிடி வேலை செய்வதற்கு மலேசிய சிங்கபூர் என்று செல்ல வேண்டும். இங்கு அரசியல்வாதிகள், வியாபாரிகள் , இன்னும் வெளிநாட்டு பணம் வந்தால் வயிறு கழுவுவோர் மட்டும் தான் இருக்க முடியும் . விவசாயிகள் கூட இப்போது வெளி ஏறும் காலம் . அதான் குளம் குட்டை ,ஆறு எல்லாம் அபகரித்து நீர் இல்லாமல் ஆக்கிவிட்டால் , 16 மணி நேரம் மின்சாரம் வெட்டு , வரி , லஞ்சம் எல்லாம் சேர்ந்து தமிழகத்தை ஒரு பாலை நிலம் ஆக்கிவிடுவார்கள். அப்புறம் சட்டசபயில் வெளியேறி , நீக்கம் , வெளி நடப்பு என்று ஓடி பிடிச்சு விளயாடுவார்கள். இங்கு கிணத்தை காணோம் .அதான் ஆப்ரிக்க போய் தேடுகிறார்கள்
Rate this:
Share this comment
Cancel
பி.டி.முருகன் - South Carolina USA,யூ.எஸ்.ஏ
19-ஏப்-201312:41:50 IST Report Abuse
பி.டி.முருகன்    நம்ம தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் எல்லோரும் இதையே சாக்காக வைத்து ஆப்பிரிக்காவுக்கு போனால், நாங்களாவது சந்தோசமாக இருப்போம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை