Mettur dam level touched 25 feet | நீர்மட்டம் 25 அடியாக சரிவு: மேட்டூர் அணை தூர்வாரப்படுமா?| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நீர்மட்டம் 25 அடியாக சரிவு: மேட்டூர் அணை தூர்வாரப்படுமா?

Added : ஏப் 18, 2013 | கருத்துகள் (21)
Advertisement
Mettur dam level touched 25 feet

மேட்டூர் அணை நீர்பிடிப்பு பகுதியில், வண்டல் மண் தேங்கியுள்ளதால், நீர் சேமிப்பு அளவு குறைந்து வருகிறது. நீர்மட்டம், 25 அடியாக சரிந்துள்ளதால், அணையை தூர்வார வேண்டும் என, விவசாயிகள் கோரியுள்ளனர்.
மேட்டூர் அணை, 152 சதுர கீ.மீ., பரப்பளவு கொண்டது. நீர் கொள்ளளவு, 93.470 டி.எம்.சி., அணை கட்டி, 78 ஆண்டு ஆகி விட்ட நிலையில், ஆண்டுதோறும் காவிரியில் ஏற்படும் வெள்ளப்பெருக்கு காரணமாக அணையின் நீர்வரத்து பகுதிகளில் வண்டல் மண் தேங்கி மேடாகி வருகிறது. குறிப்பாக ,1934ல் அணை கட்டும்போது, பண்ணவாடி என்ற ஊர் அருகே உள்ள நீர்பரப்பு பகுதியில் இருக்கும் ஜலகண்டேஸ்வரர் கோயில், பக்தர்கள் உள்ளே சென்று தரிசனம் செய்யும் வகையில் இருந்தது. ஆனால், 78 ஆண்டுகளில் வண்டல்மண், 20 அடி உயரம் படிந்து, கோயிலின் மேற்கூரை வரை மூடி விட்டது. தற்போது, கோயில் மேற்கூரை கோபுரம் மட்டுமே நிலமட்டத்தில் தெரிகிறது. கோயில் நிலத்தில் மூழ்கியுள்ளது. இதுபோல அருகிலுள்ள நாயம்பாடி ஆலயத்தையும் வண்டல் மண் மூடி விட்டது. இரட்டை கோபுரம் மட்டுமே, வெளியே தெரிகிறது. மேட்டூர் அணை நீர்வரத்து பகுதியில், 20 முதல், 30 அடி உயரம் வரை வண்டல் மண் படிந்துள்ளது; இதனால், அதற்கு ஈடான நீர் சேமிப்பு குறைந்து விட்டது. எனவே, அணை நீர்மட்டம், 120 அடியை எட்டும் சமயத்தில், மொத்த கொள்ளளவான, 93.470 டி.எம்.சி., நீர், அணையில் இருக்க வாய்ப்பு இல்லை.

ரூ.10 கோடியில் திட்டம்: ஆண்டுதோறும், காவிரியில் வெள்ளப்பெருக்கால், வண்டல் மண் படிகிறது. இதனால், அணையில் நீர் கொள்ளளவு குறைந்து வருகிறது. இதே நிலை நீடித்தால், அணை நிரம்பினாலும், தண்ணீர் அளவு, 80 டி.எம்.சி.,க்கு மேல் இருக்காது என்ற நிலை ஏற்படும். தற்போது, 10 ஆண்டுக்கு பின், மேட்டூர் அணை நீர்மட்டம், 25 அடியாக சரிந்துள்ளது. இதை பயன்படுத்தி, அணையை தூர்வார, 10 கோடி ரூபாய், திட்ட மதிப்பீடு தயார் செய்து, பொதுப்பணித்துறை அரசுக்கு அனுப்பியுள்ளது. அணையை தூர்வார இது சரியான நேரம் என்பதால், அரசு இதற்கு அனுமதிக்க வேண்டும் என, டெல்டா விவசாயிகள் விரும்புகின்றனர்.

காத்திருப்பு: மேட்டூர் அணையை கடந்த மாதம் 22ம் தேதி, ஆய்வு செய்த பொதுப்பணித்துறை திருச்சி மண்டல தலைமை பொறியாளர், பைந்தமிழ் செல்வன் கூறியதாவது: மேட்டூர் அணையில் வண்டல் மண்ணை, கலெக்டர் அனுமதி பெற்று எடுத்து, விவசாயிகள் பயன்படுத்தலாம்.மேட்டூர் அணை இருப்பு நீரில், 25 சதவீதம் அளவில் சேறு நிறைந்திருக்க வாய்ப்புள்ளது. அணையை தூர்வார திட்டம் தயார் செய்து, அரசின் ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளோம். அனுமதி கிடைக்கும் பட்சத்தில் தூர்வார வாய்ப்புள்ளது. இவ்வாறு, பைந்தமிழ்செல்வன் கூறினார்.

- நமது சிறப்பு நிருபர் -

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K.Baskar - Tiruvallur,இந்தியா
20-ஏப்-201302:36:08 IST Report Abuse
K.Baskar ஜூன் மாதம் தென்மேற்கு பருவமழை பொழிய ஆரம்பிக்கும் முன் போர்கால அடிப்படையில் துர்வாரும் பணிகளை செய்து முடிக்க வேண்டும். அப்போதுதான் காவிரியில் வரும் நீரை அதிக அளவில் சேமிக்க முடியும். மழைக்கு முன் இருப்பது இன்னும் ஒன்றரை மாதங்களே. இந்த காலத்தை நல்ல முறையில் பயன்படுத்தி தூர் வாரலாம்.
Rate this:
Share this comment
Cancel
Govindarajur Rajarethinam - Tiruchirappalli,இந்தியா
19-ஏப்-201321:17:21 IST Report Abuse
Govindarajur Rajarethinam தூர் வாரும் பணி செம்மையாக செய்ய பட்டால் பலன் உண்டு. ஆனால் தூர் வாரியதாக கணக்கு மட்டுமே எழுதி அரசு பணத்தை சாப்பிட்ட நிகழ்வுகள் தற்சமயம் நினைவுக்கு வந்து தொலைக்கிறது.
Rate this:
Share this comment
Cancel
kalaichelvan - Madurai,இந்தியா
19-ஏப்-201318:00:01 IST Report Abuse
kalaichelvan It is the right time to remove soil so as to enable people to utilize more water
Rate this:
Share this comment
Cancel
Ganesh Ramani - Port Said,எகிப்து
19-ஏப்-201316:06:53 IST Report Abuse
Ganesh Ramani நல்ல திட்டம் ....மழை வருவதுற்குள் அரசு துரிதமான முறையில் காலத்தை கடத்தாமல் போர் கால நடவடிக்கை எடுக்கும்மாறு கேட்டுக்கொள்கிறேன் ... தேவைபட்டால் ராணுவத்தின் உதவியயையும் ஜெயலலிதா அவர்கள் கோர வேண்டும் ....
Rate this:
Share this comment
Cancel
jeevadinamalar - Tirunelveli,இந்தியா
19-ஏப்-201314:52:17 IST Report Abuse
jeevadinamalar It is a wonderful idea. Nature always tries to educate us. We should utilize the opportunity and learn the lessons. Similarly there are dams, like Sathanur dam, whose water storage capacity has shrunken because of the muds. We pray such a draught to occur to Sathanur dam also.
Rate this:
Share this comment
Cancel
Venkatesh R Venkatesh - Dammam,சவுதி அரேபியா
19-ஏப்-201314:41:19 IST Report Abuse
Venkatesh R Venkatesh தண்ணியில்லாத நேரத்துல இத்திட்டத்தை நிறைவேற்றுவது மிகவும் பயனுள்ள திட்டம்
Rate this:
Share this comment
Cancel
kumaresan.m - hochimin ,வியட்னாம்
19-ஏப்-201314:16:37 IST Report Abuse
kumaresan.m " மிகவும் முக்கியமான தருணத்தில் இச்செய்தியை அரசு மற்றும் மக்களின் கவனத்திற்கு கொண்டு சென்ற தினமலருக்கு பாராட்ட வார்த்தைகள் இல்லை ....விவசாயிகளின் சார்பாக தினமலர் நாளிதழுக்கு மிக்க நன்றி " அரசு அதிகாரிகள் இதில் குறைபாடுகள் இல்லாமல் நிறைவுடன் செயல்பட வாழ்த்துக்கள் ....இன்றைய காலகட்டத்தில் தூர் வாரும் கனரக இயந்திரங்களை கொண்டு மிக சுலபமாக செய்து முடித்து விடலாம் ....கிராமங்கள் தோறும் உள்ள ஏரி , குளம் ,மற்றும் குட்டைகளை தூர் வாரினால் நிலத்தடி நீர் உயரும் மற்றும் மக்களின் குடி நீர் பிரச்சினைகள் தீரும் "
Rate this:
Share this comment
Cancel
S. Rajangam. pattukudi.Thanjavur. - Coimbatore.,இந்தியா
19-ஏப்-201313:52:15 IST Report Abuse
S. Rajangam. pattukudi.Thanjavur. தமிழக முதல்வர் உடனடியாக அனுமதி தருவார் என்று நம்புகிறோம் - கத்தாரில் வாழும் தமிழக விவசாயி மகன்
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
19-ஏப்-201313:00:46 IST Report Abuse
Srinivasan Kannaiya இம்மாதிரி சந்தர்ப்பங்கள் வருவது மிகவும் குறைவு. தயவு செய்து தூர் வாரி அணையின் கொள்ளளுவை ஒயர்த்தினால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைவார்கள்
Rate this:
Share this comment
Cancel
பி.டி.முருகன் - South Carolina USA,யூ.எஸ்.ஏ
19-ஏப்-201312:43:21 IST Report Abuse
பி.டி.முருகன்    இப்போதைக்கு தண்ணி வரப்போவதில்லை என்பது தெரிந்த விசயமாகி போச்சு. தூராவது வாரி வைப்போமே.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை