Long run Tuticorin thermal power station | ஓடி ஓடி களைத்தது அனல்மின் நிலையம்: ஆயுட் காலம் கடந்தும் ஓயாத உழைப்பு| Dinamalar
பதிவு செய்த நாள் :
கருத்துகள் (5)  கருத்தை பதிவு செய்ய
எழுத்தின் அளவு:

தூத்துக்குடி அனல்மின் நிலையம், 33 ஆண்டுகளையும் கடந்து, மின் உற்பத்தி செய்து வருகிறது. அங்கு, அடிக்கடி, இயந்திரப்பழுது ஏற்படுவதால், ஒட்டு மொத்தமாக புதுப்பிக்க வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது.
தமிழக அரசுக்கு சொந்தமான, இந்த அனல்மின் நிலையத்தில், தலா, 210 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யக் கூடிய, ஐந்து யூனிட்கள் உள்ளன. முதல் யூனிட், 1979ல் துவக்கப்பட்டது; 2வது யூனிட் 1980; 3வது யூனிட் 1982; 4வது மற்றும் 5வது யூனிட், 1991ம் ஆண்டுகளில், உற்பத்தியை துவக்கின. இதற்காக, இந்தோனேஷியா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து, நிலக்கரி இறக்குமதி செய்யப்படுகிறது. தமிழகத்தின், 17 சதவீத மின் தேவையை, இந்த அனல்மின் நிலையம் பூர்த்தி செய்கிறது.

அடிக்கடி பழுது:
கடந்த ஒரு ஆண்டாக, அனல்மின் நிலையத்தில், மின் உற்பத்தி, "பாய்லர்'கள் பழுதாகி

வருகின்றன. அதை சரி செய்து இயக்கும் போது, மற்றொரு யூனிட் பழுதாகி விடுகிறது. சில நேரங்களில், இரண்டு யூனிட்களில் பழுது ஏற்பட்டு, 420 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கிறது; இதனால், மின்வெட்டு நேரம் அதிகரிக்கிறது. சில நாட்களுக்கு முன், இதே போன்ற நிலை ஏற்பட்டு, பின், பழுது சரி செய்யப்பட்டது. இது தவிர, மின் உற்பத்திக்கான நிலக்கரியை, வ.உ.சி., துறைமுகத்தில் இருந்து, 4.5 கி.மீ., தூர, "கன்வேயர் பெல்ட்' ல் கொண்டுவரும் போது, நிலக்கரி உராய்வில், "பெல்ட்' தீப்பிடித்து, நாசமான சம்பவங்களும் நடந்தன.

காரணம் என்ன: இதுகுறித்து தொழிற்சங்கத்தினர் கூறியதாவது: இங்கு, ஒரு யூனிட்டில், 25 ஆண்டுகள் வரையே, மின் உற்பத்தி செய்ய வேண்டும். தற்போது, முதல் மூன்று யூனிட்கள், ஆயுட்காலத்தை தாண்டி, உற்பத்தி செய்கின்றன. அதேபோல, 4, 5வது யூனிட்களும், ஆயுட்காலத்தை

Advertisement

நெருங்கி வருகின்றன. இதனால், அடிக்கடி பழுது ஏற்பட்டு, மின் உற்பத்தி பாதிக்கப்படுகிறது. "கன்வேயர் பெல்ட்'டில் நிலக்கரி கொண்டு வரப்படும் போது, அதில் தெளிக்க போதிய தண்ணீர் இல்லை; பராமரிக்க தேவையான பணியாளர்களும் இல்லை. எனவே, அடிக்கடி தீப்பிடிக்கிறது. இயந்திரங்களை ஒட்டுமொத்தமாக புதுப்பிப்பது அவசியம். இல்லை எனில், பழுதும், மின் உற்பத்தி பாதிப்பும் தொடர்கதையாகவே இருக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர். அனல்மின் நிலைய தலைமைப் பொறியாளர் அர்த்தநாரி கூறியதாவது: இந்நிலையம், 33 ஆண்டுகளை கடந்து, 100 சதவீத மின் உற்பத்தியை செய்து வருகிறது. மின் உற்பத்தியின் போது, பாய்லரில், "பஞ்சர்' ஏற்படுவது வழக்கமானது தான். அவை, உடனுக்குடன் சரி செய்யப்பட்டு, மின் உற்பத்தி துவங்கப்படுகிறது. ஒரு யூனிட்டின், இயந்திரங்களை முழுமையாக மாற்றி, புதுப்பிக்க வேண்டுமானால், ஒன்றரை ஆண்டுகள் ஆகும். அவ்வாறு செய்யும் போது, அந்த யூனிட்டில் மின் உற்பத்தி நிறுத்தப்பட வேண்டும். தமிழக அரசு அறிவுரைப்படி, ஆண்டுதோறும், இயந்திரங்களில் பராமரிப்பு பணி மேற்கொண்டு வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
- நமது சிறப்பு நிருபர் -
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (5)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
21-ஏப்-201318:35:19 IST Report Abuse
Srinivasan Kannaiya புதியதாக மின் நிலையங்கள் அமைக்க மாட்டோம் இருப்பதையும் பராமரிக்க மாட்டோம் . என்ன செய்துவிடுவீர்கள்.
Rate this:
Share this comment
Cancel
R.BALAMURUGESAN - Muscat,ஓமன்
19-ஏப்-201309:43:09 IST Report Abuse
R.BALAMURUGESAN ...ஆம், மிகப்பெரிய உண்மைதான்.... இங்கு அயராது பணி புரிந்த பல பொறியியல் வல்லுனர்களைப் போல, பல உண்மையான தொழிலாளர்களைப் போல, தூத்துக்குடியின் அனல் மின் நிலையமும், அதன் இயந்திரங்களும் அயராத கடும் உழைப்பால் ஓடி ஓடி களைத்துதான் போய்விட்டது...
Rate this:
Share this comment
Cancel
irfan - tuticorin  ( Posted via: Dinamalar Windows App )
19-ஏப்-201308:44:26 IST Report Abuse
irfan s.... tamil nadu government must achive this statement......!!!!!
Rate this:
Share this comment
Cancel
Alagu Muthu - Tutico,இந்தியா
19-ஏப்-201306:06:58 IST Report Abuse
Alagu Muthu ஒப்பந்த தொழிலாளர் களுக்கு கொடுக்கப்படும் உதியத்தை முறையாக கிடக்க செய்து அவர்களுக்கு E .S .I , P .F பிடித்தம் செவதை கண்காணித்து , அவர்களிடம் வேலை வாங்கினால் பழுதே வராது. (குறிப்பு : தற்போது அவர்களுக்கு மாதம் வெறும் 1500 முதல் 3000 வரை மட்டுமே அளிக்கபடுகிறது ). இவ்வாறு இருந்தால் அவர்களால் எவ்வாறு மனதார வேலை செய்யமுடியும் . அதீத சுரண்டலை தமிழகம் தடுக்க வேண்டும்
Rate this:
Share this comment
K.Sugavanam - Sengkang,சிங்கப்பூர்
19-ஏப்-201306:55:47 IST Report Abuse
K.Sugavanamஅப்போ இதெல்லாம் அவங்க வேலை இங்குரீன்களா?...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.