இன்று போய் நாளை வா! : ஜாதிச்சான்று கேட்டால் பதில்... : பணம் பறிக்கும் "வியூகம்' அம்பலம்
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

கோவை : பள்ளி சேர்க்கை சீசன் துவங்கியுள்ள நிலையில், ஜாதிச்சான்றுக்காக மக்கள் அலைமோதுகின்றனர். தாசில் தார் அலுவலகத்திற்கு ஜாதிச் சான்றுக்காக சென்றால், "இன்று போய் நாளை வா...' என அலைக்கழிக்கின்றனர். பணத்துக்கு ஆசைப்பட்டு, ஜாதிச்சான்று அட்டைகளை ஊழியர்களே பதுக்கிக்கொள்வதே அலைக்கழிப்புக்கு காரணம்.

குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதற்கும், அரசின் நலத்திட்ட உதவிகளை பெறுவதற்கும், வேலைவாய்ப்புக்கும் ஜாதிச் சான்றிதழ் கட்டாயம். தாலுகா அலுவலகங்களில் ஜாதிச்சான்று கேட்டு, தினமும் மனுக் கொடுக்கின்றனர். கோவை தாலுகா அலுவலக வளாகத்தில் முகாமிட்டிருக்கும் எழுத்தர்கள் மற்றும் முக்கிய ஜெராக்ஸ் கடைகளில் மட்டுமே இதற்கான விண்ணப்பம் கிடைக்கிறது.எழுத்தர்கள் மூலம் விண்ணப்பம் பூர்த்தி செய்து, ஆவணங்களுடன் தாலுகா அலுவலக, தகவல் மையத்தில் ஒப்படைத்தால், அத்தாட்சி சான்று கொடுக்கின்றனர். இந்த அலைச்சலை விரும்பாத சிலர், இடைத்தரகர்கள் உதவியை நாடுகின்றனர்.இவர்களிடம் 500 ரூபாய் கொடுத்தால் சான்றிதழை பெற்றுக் கொள்ளலாம். அத்தாட்சி சான்றில் எழுதியிருக்கும் தேதியன்று, தகவல் மையத்திற்கு சென்றால், "தவறாக நிரப்பப்பட்டுள்ளது, சரி செய்து விண்ணப்பம் கொடுங்கள்' என்கிறார்கள். அல்லது, "இன்னும் சான்றிதழ் தயாராகவில்லை. சான்றிதழ் அட்டை பற்றாக்குறையாக உள்ளது.

ரெண்டு வாரம் கழித்து வந்து பாருங்கள்' என்கின்றனர். இப்படி ஒவ்வொரு வாரமும் "இன்று போய், நாளை வா' என திருப்பி அனுப்புகின்றனர். கோவை தெற்கு தாலுகா அலுவலகத்தில் நேற்று ஜாதிச்சான்று பெற்ற ஒருவரிடம் விசாரித்தபோது, "மூன்று மாதமாக ஜாதிச்சான்றுக்காக அலைந்தேன். "உள்ளே இருக்கும் ஊழியர் ஒருவருக்கு 300 ரூபாய் பணம் கொடுத்ததால், அடுத்த நாளே வாங்கி கொடுத்து விட்டார்' என்றார்.பணம் கொடுப்பவர்களுக்கும், அரசியல் செல்வாக்கு உள்ளவர்களுக்கும் ஜாதிச்சான்று உடனடியாக வழங்கப்படுகிறது. மக்களிடம் பணம் பறிக்க, தாலுகா அலுவலக ஊழியர்கள், ஜாதிச்சான்று அட்டைகளை பதுக்கி செயற்கைத் தட்டுப்பாடு ஏற்படுத்துகின்றனர். மாவட்ட நிர்வாகம் இந்த பிரச்னையில் கவனம் செலுத்தி, பள்ளி சீசன் காலத்தில் ஏற்படும் பாதிப்பை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


இவர்கள் சொல்வது என்ன?

கோவை தெற்கு தாசில்தார் முரளியிடம் கேட்டபோது, ""ஜாதிச்சான்று அட்டை தட்டுப்பாடு கிடையாது. ""கடந்த 8ம் தேதி வரை விண்ணப்பம் செய்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. சில சந்தேகத்திற்காக சான்றிதழ் வழங்காமல் நிறுத்தி வைத்திருக்கலாம். ""தாலுகா அலுவலக ஊழியர்கள் "வேறு மாதிரி' பேசினால், விண்ணப்பதாரர் என்னை சந்தித்து புகார் சொல்லலாம். இதுபற்றி விசாரணை நடத்தப்படும்,'' என்றார்.

கோவை வடக்கு தாசில்தார் முகமதுரபி கூறுகையில், """அம்மா' திட்டத்தில் கிராமங்களில் அதிகளவு ஜாதிச்சான்று வழங்கியதால், அட்டை அதிகளவில் தேவைப்படுகிறது. சான்றிதழ் வழங்க முடியாத அளவுக்கு பற்றாக்குறை ஏற்படவில்லை. ""மாவட்டம் முழுவதுக்கும் ஜாதிச்சான்று அட்டை பெற, சென்னையிலுள்ள அரசு அச்சகத்திற்கு ஊழியர்கள் சென்றுள்ளனர்,'' என்றார்.

கலெக்டர் கருணாகரனிடம் கேட்டபோது, ""அட்டை தட்டுப்பாடு ஏற்பட்டிருந்தால், என்னுடைய கவனத்திற்கு வந்திருக்கும். இதுபற்றி விசாரித்து விட்டு சொல்கிறேன்,'' என்றார்.

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (24)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sridaran - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
23-ஏப்-201317:30:02 IST Report Abuse
Sridaran பாஸ்போர்ட் ஆபீசில் ஓரளவு தற்போது லஞ்சம் குறைந்துள்ளது, காரணம் தனியார் மயம். பெரும்பாலான அரசு அலுவகங்களை கம்ப்யூட்டர் மயமாக்கி, அரசே குறிப்பிட்ட கட்டணத்தை நிர்ணயித்து on லைன் ரசீது முறையை கொண்டு வரலாம். இதை தனியார் மற்றும் லஞ்ச ஒழிப்பு துறை மூலம் செய்யலாம்.
Rate this:
Share this comment
Cancel
R Bala Sundaram - nagapattinam,இந்தியா
20-ஏப்-201320:57:50 IST Report Abuse
R Bala Sundaram வருவாய் துறை அலுவலகங்கள் உள்ள அணைத்து இடங்களிலும் லஞ்ச ஒழிப்பு அலுவலகம் ஒன்றை திறக்கவேண்டும் .எல்லாம் தானாகவும் ,ஒழுங்காகவும் நடக்கும் .
Rate this:
Share this comment
Cancel
Pasupathi Subbian - trichi,இந்தியா
20-ஏப்-201319:21:28 IST Report Abuse
Pasupathi Subbian எத்துனை சட்டங்கள் இருந்தாலும் இந்த ரெவென்யு அதிகாரிகள், அலுவலகர்கள் செய்யும் அட்டூழியம் மட்டும் தீரவே தீராது. எல்லா அதிகாரமும் இருக்கும் இவர்களிடம் சாமான்ய மக்கள் படும் பாடு தூணும் காசு கேட்க்கும் அநியாயம் , மக்களுக்கு வெறுப்பாய் இருக்கிறது . இந்த முறையை மாற்றி அமைத்தால்தான் , அரசாங்க சக்கரம் நீடித்து ஓடும் .
Rate this:
Share this comment
Cancel
Ganapathysubramanian Gopinathan - Bangalore,இந்தியா
20-ஏப்-201318:47:28 IST Report Abuse
Ganapathysubramanian Gopinathan ஜாதிகள் இல்லையடி பாப்பா. குல தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம் ..... யாருமே ஜாதியை ஒழிக்க தயாராஇல்லை
Rate this:
Share this comment
Chandra Sekaran - manama,பஹ்ரைன்
20-ஏப்-201320:18:10 IST Report Abuse
Chandra Sekaranஏதாவது தலித்வீட்டில் சம்பந்தம் பண்ணப்பாருங்கள் இப்படி வசனம்பேசியே காலத்தை ஓட்டுங்க. ...
Rate this:
Share this comment
Cancel
நாஞ்சில் சுலைமான் - THUCKALAY,இந்தியா
20-ஏப்-201314:38:17 IST Report Abuse
நாஞ்சில் சுலைமான் 10- ஆம் வகுப்பு வரை ஜாதி சான்றிதல் கேட்பதில்லை...11 ஆம் வகுப்பில் சேர்வதற்கு எதற்கு ஜாதி சான்றிதழ்? மதம் மாறினாலும் ஜாதி மட்டும் மாறாதல்லவா?
Rate this:
Share this comment
Cancel
DuraiRaj - Chennai,இந்தியா
20-ஏப்-201314:23:41 IST Report Abuse
DuraiRaj தினமலரின் இந்த செய்தி மிகவும் முக்கியமானது. நம் நாடு வளர்ச்சி அடைந்த நாடு மாதிரி ஒரு போலி தோற்றத்தை ஏற்படுத்திக்கொண்டு நாம் வாழ பழகி விட்டோம்? இவ்வளவு காலம் ஆகியும் லஞ்ச, லாவண்யங்களை ஒழிக்க முடியவில்லை. எல்லா துறைகளிலும் லஞ்சம் என்பது வெளிப்படையாகவே எல்லோருக்கும் தெரிந்தே நடைபெறுகிறது. அதிலும் ஏழை, மற்றும் நடுத்தர மக்கள் வாழ்க்கையோடு சம்பந்தப்பட்ட தாலுகா ஆபீசில் எதற்கெடுத்தாலும் லஞ்சம் என்பது சாதாரண மக்கள் எல்லோருக்கும் தெரியும். ஆனால் மாவட்ட ஆட்சியருக்கு மட்டும் இது தெரியாது. இன்னும் சில நேர்மையான அதிகாரி என்று சொல்லப்படும் அதிகாரிகளும் இருக்கிறார்கள் எப்படி தெரியுமா? உங்களிடம் பணம் கேட்டால் எங்களிடம் முறையிடுங்கள் நாங்கள் நடவடிக்கை எடுக்கிறோம் என்று சொல்வார்கள்? ஆனால் உண்மையில் அவர்கள் நினைத்தால் லஞ்சம் கேட்பதற்கு வழியே இல்லாமல் அரசு துறை பணிகளை வரைமுறை படுத்தலாம்? சென்னைபெரம்பூர் தாலுகா அலுவலகத்தில் ஜாதி ஜான்றிதழ் கேட்டு விண்ணப்பித்தேன். விண்ணப்பத்திற்கான ரசீதை ஒரு சாதாரண கிழிந்த காகிதத்தில் கொடுத்தார்கள். ஒரு குறிப்பிட தேதி அன்று குறிப்பிட இடத்தில் (ஒரு அறையின் ஜன்னல்) பெற்றுக்கொள்ளலாம் என்று சொன்னார்கள்? அதன் பிறகு நடந்தவற்றை நினைக்கும்போது இன்னும் எனக்கு ஆத்திரம் அடங்கவில்லை. ஒவ்வொரு நாளும் மாலை நான்கு மணிக்குத்தான் தயார் செய்யப்பட்ட சான்றிதழை கொடுப்போம் என்று சொல்லிவிட்டு அந்த நேரத்திற்கு முன்னரே ஏலம் விடுகிறமாதிரி சில சான்றிதழ்களின் பெயரை வாசிப்பார்கள். சம்பந்தப்பட்ட நாம் வருவதற்குள் கடமைக்காக இரண்டு மூன்று பெயரை வாசித்துவிட்டு அவ்வளவுதான் என்று சொல்லிவிடுகிறார்கள். அதன் பின் மீண்டும் அந்த இடத்திற்கு சம்பந்தப்பட்ட ஊழியர் எப்போ வருகிறார் என்று நாய் மாதிரி காத்து கிடந்தது கேட்டால் உங்கள் சான்றிதழ் எங்களிடம் வரவில்லை வந்தால் மட்டும்தான் கொடுப்போம் நீங்கள் யாரிடம் மனு கொடுத்தீர்களோ அவரிடமே கேளுங்கள் என்று சொல்கிறார். மீண்டும் பழைய இடத்திற்கு சென்றால் அவர் நான் அனுப்பி விட்டேன் என்று சொல்வதும் இவர் வரவில்லை என்று சொல்வதும் ஒரே கண்ணா மூச்சி ஆட்டம் ஆடுகிறார்கள். நாளை வந்து பாருங்கள் என்ற வார்த்தையை தினமும் சர்வ சாதரணமாக பயன்படுத்துகிறார்கள். பத்து நாட்கள் ஆகியும் ஏன் என்னுடைய சான்றிதழ் வரவில்லை என்று சண்டயிட்ட பிறகு நாங்கள் பொய்யா சொல்கிறோம் வேண்டுமானால் இங்கிருக்கும் சான்றிதழில் உங்களது இருந்தால் எடுத்துக்கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டு சில சான்றிதழ்களை கொடுத்தார். அதில் என்னுடைய சான்றிதழ் இல்லை. ஒரு வழியாக நான் களைத்து போய் அடுத்து என்ன செய்யலாம் என்று யோசிக்கிறேன்? அதன் பிறகு புரோக்கர், பணம் என்று எல்லாம் முறைப்படி நடந்தவுடன் யார் இல்லை என்று சொன்னாரோ அவரே அடுத்த இருபது நிமிடத்தில் மேசையின் அடியில் கட்டி வைக்கபட்டிருந்த ஒரு கட்டில் இருந்து என்னுடைய சான்றிதழை நான் அனுப்பிய புரோக்கரிடம் கொடுத்து அனுப்பினார். கேவலம் ஒரு நூறு ரூபாய்க்கு எவ்வளவு கிரிமினலாக யோசிக்கிறார்கள்? யாரிடம் முறையிடுவது? எந்த அதிகாரியும் கிடையாது. அப்படியே தேடி பிடித்து நாம் புகார் கொடுத்தாலும் நம்மையோ, நாம் சொல்லும் புகாரையோ சீரியஸாக எடுப்பதில்லை. எப்படி எடுப்பார்? லஞ்ச பணத்தில் அவருக்கு பங்கு இல்லாமலா ஊழியர்கள் இந்த ஆட்டம் போடுவார்கள்? யாரை குறை சொல்ல அரசையா, மக்களுடைய பிரச்னையை தீர்க்காத அமைச்சரையா, களப் பணி செய்யாத மாவட்ட ஆட்சி தலைவரையா? எந்த அதிகாரியாக இருந்தாலும் சரி மறைமுகமாக பொது மக்களோடு வரிசையில் நின்று கண்காணித்தாலே போதுமே என்ன நடக்கிறது என்று தங்கள் கண்ணாலேயே பார்க்கலாமே? என்னால் உறுதியாக சொல்ல முடியும் உமா சங்கர் போன்ற அதிகாரிகளை இந்த துறைகளுக்கெல்லாம் நியமியுங்கள் அப்புறம் எங்கே லஞ்சம் இருக்கிறது என்று பார்க்கலாம்? இந்த அதிகாரிகள் எல்லாம் லஞ்ச ஊழியர்களை கண்டு பிடிப்பதை விட லஞ்சம் பெறுவதற்கு உள்ள வழிகளை முதலில் அடைத்து விடுவார்கள். முறைப்படியான ஒப்புகை சீட்டு , சான்றிதழ்களை கொடுக்க வேண்டிய கால அளவு, புகாரின் மீது கடும் நடவடிக்கை என்று பணிகளை வரை முறைப்படுத்தி விடுவார்கள் . இதெல்லாம் அரசுக்கும், அதிகாரிகளுக்கும் தெரியாமலா இருக்கிறது. எல்லாம் தெரியும் . ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கமாட்டார்கள்? தூங்குகிறவனை எழுப்பிவிடலாம், தூங்குகிற மாதிரி நடிப்பவனை எழுப்ப முடியுமா?
Rate this:
Share this comment
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
20-ஏப்-201313:44:47 IST Report Abuse
Pugazh V இப்போதும் , தேநீர் விடுதிகளில் தனித் தம்ளர்களும், வெயிலுக்குக் கூட துண்டைத் தலையில் கட்ட அனுமதிக்காமலும், உங்களுக்கு எதுக்குடா படிப்பு என்று ஏசும் கூட்டமும் இருக்கும் வரை, சாதிச் சான்றிதழ்களும், அரசு சலுகைகளும் மிக மிக அவசியம். ஆனால் அதிலும் காசு கேட்டு துன்புறுத்துவது கொடுமை. தாசில்தாரிடமோ, கலக்டரிடமோ முறையிட்டால் அவ்வளவு தான், கையில் இருக்கும் ரேஷன் கார்டு. எலக்ஷன் கார்டு கூட செல்லாதஹ்டாக்கி நம்மை இந்தியக் குடிமகன் லிஸ்டிளிருந்தே நீக்கி விடுவார்கள். புகாரெல்லாம் சொல்ல முடியாத நிலை. தயவு செய்து சாதிச் சான்றிதழ்களை உரியவருக்கு சீக்கிரம் வழங்குங்கள்.
Rate this:
Share this comment
Cancel
murugesan s - KL,மலேஷியா
20-ஏப்-201313:20:14 IST Report Abuse
murugesan s தயவு செய்து செங்கோட்டை தாலுகா ஆபீஸ்ல ரைடு பண்ணனும்.... அங்க வேல பாக்குறவரு வீட்ட போயி பாத்திங்கனா உங்களுக்கே தெரியும் அவரு வாங்குற சம்பளத்துல அந்த வீட்ட கட்ட முடியுமானு...... ஒரு அம்மா அவங்க கணவன் இறந்ததுக்கு செர்டிபிகட் வாங்க முடியாம 6 மதம் அலஞ்சு,,,,, ரெம்ப கஷ்ட பட்டாங்க.....
Rate this:
Share this comment
Cancel
villupuram jeevithan - villupuram,இந்தியா
20-ஏப்-201312:46:30 IST Report Abuse
villupuram jeevithan இவ்வாறு இழுத்தடிப்போருக்கு என்கவுண்டர் தான் சரி பட்டு வரும்?
Rate this:
Share this comment
Cancel
Baskaran Kasimani - Singapore,சிங்கப்பூர்
20-ஏப்-201312:36:44 IST Report Abuse
Baskaran Kasimani அட்டை இல்லை என்றால் சாதி சான்றிதல் கொடுக்க முடியாது என்பது அபத்தம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்