TN govt plans Imports cost Rs. 30,000 crore in tamil nadu | தமிழகத்தில் ரூ.30,000 கோடிக்கு புதிய தொழில் முதலீடு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் ரூ.30,000 கோடிக்கு புதிய தொழில் முதலீடு

Added : ஏப் 19, 2013 | கருத்துகள் (20)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
தமிழகத்தில் ரூ.30,000 கோடிக்கு புதிய தொழில் முதலீடு

சென்னை: தமிழகத்திற்கு, 30 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு, புதிய தொழில் முதலீடுகளை கொண்டு வர, அரசு திட்டமிட்டு உள்ளது.

தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம், முதல் தலைமுறை மற்றும் சமூக ஆதரவு குறைந்த தொழில் முனைவோருக்கு, கடன் உதவி அளிக்கிறது. கடந்த, 2012-13ம் நிதியாண்டில், உத்தேசித்த, 969.53 கோடி ரூபாயில், 60 சதவீதம், பொறியியல், மோட்டார் வாகன பாகங்கள், உணவு பதனிடும் மற்றும் ஜவுளி துறைகளுக்கு, கடனாக வழங்கி உள்ளது. இந்த நிறுவனம், 2013-14ம் ஆண்டு, 1,125 கோடி ரூபாயும், 2014-15ம் ஆண்டு, 1,250 கோடி ரூபாயும், கடனாக வழங்க, உத்தேசித்து உள்ளது. தமிழக அரசு, 2013-14ம் ஆண்டில், 30 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு, புதிய தொழில் முதலீடுகளை கொண்டு வர, திட்டமிட்டு உள்ளது.

எரிபொருள் சிக்கனம்:சிமென்ட் ஆலையில், பழைய முறையில், மூலப்பொருட்களை கொண்டு செல்ல, அதிக மின்சாரம் செலவாகிறது. இதை தவிர்க்க, மூலப்பொருட்களை உயரே கொண்டு செல்ல (belt bucket elevator), 2 கோடி ரூபாய் செலவில், இரு இயந்திரங்கள் நிறுவப்படும்.

15 ஆயிரம் டன்:ஆந்திர மாநில, நுகர்பொருள் வழங்கல் நிறுவனத்திற்கு, 15 ஆயிரம் டன், அயோடின் கலந்த தூள் உப்பை, தமிழ்நாடு உப்பு நிறுவனம் வழங்குவதற்கு ஒப்புதல் கிடைத்துள்ளது. இந்த பணியை, தமிழ்நாடு உப்பு நிறுவனம், துவங்கி உள்ளது.இந்த தகவல், தொழில் துறை கொள்கை விளக்க குறிப்பில், தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
murugesh - sharjah,ஐக்கிய அரபு நாடுகள்
25-ஏப்-201301:01:54 IST Report Abuse
murugesh சென்னை: தமிழகத்திற்கு, 30 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு, புதிய தொழில் ஓகே தான் ஆனால் ஆதில் எவலுளவு லஞ்சம் நடக்கும் என்பது பொருத்து இருந்து பாப்போம்
Rate this:
Share this comment
Cancel
mirudan - kailaayam,இந்தியா
22-ஏப்-201310:35:00 IST Report Abuse
mirudan அதிமுக ஆட்சியில் எல்லாம் அறிவிப்போடு கோவிந்தா ? தொழில் தொடங்க முதலில் மின்சாரம் வேண்டும் அதை சரி செய்ய முடியாத அரசு தோழி முதலீடு பற்றி பேசுவது போகாத ஊருக்கு ரோடு போடுவது போல் இருக்கு
Rate this:
Share this comment
Cancel
Ganesh Ramani - Port Said,எகிப்து
21-ஏப்-201302:18:05 IST Report Abuse
Ganesh Ramani நிதி ஒதுக்கீடு என்கிறார்களே ..அப்படி என்றால் என்ன ?யாருக்கு ஒதுக்கி கொள்வது ????விவசாய நிலங்கள்,மற்றும் நீர் வழிகலை விட் டு விட்டு .....வறண்ட பின் தங்கிய இடங்களில் கவனுத்துடன் புதிய தொழில் துறையை மேம்படுத்துமாறு வேண்டி கொள்கிறேன்
Rate this:
Share this comment
Cancel
T.C.MAHENDRAN - LUSAKA,ஜாம்பியா
20-ஏப்-201314:30:19 IST Report Abuse
T.C.MAHENDRAN எத்தனை ""கோடிகள்"" முதலீடு செய்து என்ன பலன் ?. எல்லாவற்றையும் அனுபவிப்பது நம்ம அரசியல் ""கேடிகள்""தானே ?.
Rate this:
Share this comment
Cancel
umarfarook - dindigul,இந்தியா
20-ஏப்-201314:03:15 IST Report Abuse
umarfarook முதலில் கரண்டை கொடுங்க
Rate this:
Share this comment
Cancel
Baskaran Kasimani - Singapore,சிங்கப்பூர்
20-ஏப்-201312:32:47 IST Report Abuse
Baskaran Kasimani இருக்கும் தொழில்களுக்கே எல்ல நேரமும் மின்சாரம் கொடுக்க முடியவில்லை - பிறகு எப்படி புதிய தொழில்களுக்கு அனுமதி கொடுக்க முடிகிறது? முட்டாள்தனமான அணுகுமுறையாக தெரிகிறது..
Rate this:
Share this comment
Cancel
A.NAWAB JHAN, TRICHY. - SHARJAH,ஐக்கிய அரபு நாடுகள்
20-ஏப்-201312:01:21 IST Report Abuse
A.NAWAB JHAN, TRICHY. இன்று கோயமுத்தூர்.திருப்பூர் ஆகிய பகுதிகளில் மின்சாரம் இல்லாத காரணத்தால் சிறு,பெருந்த்தொழில்கள் நசிந்து நலிவடைந்து உள்ளன.இதற்க்கு இந்த ஆட்சியாளர்களால் மின்சாரம் கொண்டு வருவதற்க்கான எந்த முயற்ச்சியும் எடுக்க முடியவில்லை.தற்போது மக்களுக்கு கிடைக்கும் சிறிதளவு மின்சாரத்தையும்,இவர்களுக்கு வாரி வழங்கிவிட்டு,சென்னையை தவிர தமிழ்நாட்டை இருண்ட மாநிலமாக மாற்றிவிடுங்கள்.அந்த பெருமை உங்களையே சேரும்..........................சட்டசபையை தென் மாவட்டகளில் ஏதாவது ஒரு இடத்தில் நடத்தசொல்லவேண்டும்.அப்பொழுதுதான் இவர்களுக்கு மின்சார பிரச்சனையும்,மக்கள் படும் அவஸ்தைகள் என்னவென்று தெரியும்.சென்னையில் இருந்துக்கொண்டு அறிக்கைவிடும் அம்மாவிற்கும்,அவர்களின் அடிமைகளுக்கும் இதெல்லாம் எங்கே தெரியபோகிறது.
Rate this:
Share this comment
Cancel
Samy Chinnathambi - rayong,தாய்லாந்து
20-ஏப்-201309:04:11 IST Report Abuse
Samy Chinnathambi அப்போ இன்னும் நாலு மணி நேரம் மின்வெட்டை அதிகபடுத்தி இருபது மணி நேரம் மின்வெட்டை கிராம புறத்தில் அமல் படுத்த போறீங்க........................அப்போ நத்தம் சொன்ன மாதிரி மின்வெட்டு அடுத்த வருசமும் தீராது................
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
20-ஏப்-201308:42:16 IST Report Abuse
Srinivasan Kannaiya கண்ணை கட்டிக்கொண்டு கல்லையும் இடுப்பில் கட்டிக்கொண்டு கடலில் குதிக்கின்றர்களா? 30000 கோடியில் திட்டங்கள் பாராட்டப்படவேண்டிய விசயம்தான். ஆனால் முக்கியமான கரென்ட் எங்கே?. முதலில் மினசரத்துக்கு வழிசெய்யுங்கள், பிறகு திட்டங்கள் போடலாம்
Rate this:
Share this comment
Cancel
naagai jagathratchagan - mayiladuthurai ,இந்தியா
20-ஏப்-201306:15:46 IST Report Abuse
naagai jagathratchagan வரட்டும் பார்ப்போம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை