E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
"தினத்தந்தி' அதிபர் சிவந்தி ஆதித்தனார் காலமானார்
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

மாற்றம் செய்த நாள்

20 ஏப்
2013
10:12
பதிவு செய்த நாள்
ஏப் 19,2013 23:48

சென்னை : "தினத்தந்தி' அதிபர் சிவந்தி ஆதித்தனார், சென்னையில், நேற்று இரவு, காலமானார். அவருக்கு வயது, 76.

தமிழகம் மற்றும் பிற மாநிலங்களின் பல நகரங்களில் இருந்து வெளியாகும், "தினத்தந்தி' நாளிதழின் நிறுவனர், சி.பாலசுப்பிரமணிய ஆதித்தனாரின் மகன், சிவந்தி ஆதித்தனார். கல்வியாளர், தொழிலதிபர், ஆன்மிகவாதி, விளையாட்டு ஆர்வலர் என, பன்முக அடையாளம் கொண்டவர். இவருக்கு, மத்திய அரசு, 2008ம் ஆண்டு, "பத்மஸ்ரீ' விருது அளித்து கவுரவித்தது.

சிவந்தி ஆதித்தனாரின் சொந்த ஊர், தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகில் உள்ள, காயாமொழி கிராமம்.தினத்தந்தி, மாலைமலர், ராணி, ராணி முத்து, கோகுலம் கதிர், தினத்தந்தி டிவி, எம்என் டிவி, ஹலோ எப்.எம்., ஆகிய ஊடகங்களை அவர் நிர்வகித்து வந்தார். கடந்த சில வாரங்களாக, உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்த சிவந்தி ஆதித்தனார், சென்னை, அப்பல்லோ மருத்துவமனையில், தீவிர சிகிச்சை பிரிவில், சிகிச்சை பெற்று வந்தார். அவரது உடல் நிலை குறித்து அறிந்த, முதல்வர் ஜெயலலிதா நேரில் சென்று விசாரித்தார். இந்த நிலையில், சிவந்தி ஆதித்தனார், நேற்று இரவு, 8:15 மணிக்கு காலமானார்.

சிவந்தி ஆதித்தனார் உடல், நேற்று இரவு, சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவர் வீட்டிற்கு, கொண்டு செல்லப்பட்டது. இன்று, பொது மக்கள் அஞ்சலிக்காக, அவரது உடல் வைக்கப்படும். இன்று மாலை, சென்னை, பெசன்ட் நகர் மயானத்தில், இறுதிச் சடங்குகள் நடக்கின்றன. நேற்று இரவு, சிவந்தி ஆதித்தனார் காலமான தகவல் வெளியானது முதல், அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள், முக்கிய பிரமுகர்கள், பொது மக்கள், அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

பன்முக திறமையில் பளிச்சிட்ட சிவந்தி ஆதித்தனார் : கல்வியாளர், தொழிலதிபர், பத்திரிகையாளர், விளையாட்டு நிர்வாகி என, பல திறமைகள் கொண்டவராக விளங்கியவர் சிவந்தி ஆதித்தனார்.


ஊடக துறையில்...:




பிரசிடென்சி கல்லூரியில் பட்டப் படிப்பை முடித்த ஆதித்தனார், அவரது தந்தை தொடங்கிய, "தினத்தந்தி' நாளிதழை, தன் சீர்மிகு தலைமையில், சிறப்பாக வளர்த்தார்.மதுரையில் தொடங்கப்பட்ட தினத்தந்தி நாளிதழ், தற்போது, 15 பதிப்புகளோடு இயங்குகிறது. தினத்தந்தி தவிர, மாலைமலர் நாளேடு, தந்தி டிவி, ஹலோ எப்.எம்., ஆகிய ஊடகங்களை நிர்வகித்து வந்தார்.


கல்வி துறையில்...:




ஆதித்தனார் கல்வி நிறுவன அறக்கட்டளை திருச்செந்தூரில் இயங்கி வருகிறது. கிராமப்புற, பின்தங்கிய மக்களுக்கு சேவை செய்யும் நோக்கோடு ஏற்படுத்தப்பட்ட இந்த அறக்கட்டளையில், தற்போது 7 கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.இந்த கல்வி நிறுவனங்களுக்கு சிவந்தி ஆதித்தனார் தலைவராக இருந்தார். இவரது பன்முகத்தன்மை மற்றும் ஆளுமை தன்மையால், கல்வித்துறையில் பல்வேறு சாதனைகளை படைத்தார்.தமிழகத்தில் சிவந்தி ஆதித்தனாரின் கல்வி பங்களிப்பு, போற்றத்தக்கது. இந்த கல்வி நிறுவனங்களில் தற்போது ஆயிரக்கணக்கான மாணவர்கள் படித்து வருகின்றனர். கல்வி துறையில் அவரது முன் உதாரணமான சேவையை பாராட்டி, 2008ல் இந்திய அரசு, அவருக்கு, பத்மஸ்ரீ விருதை வழங்கியது.மேலும், இவரது கல்வி சேவையை பாராட்டி, 1993ம் ஆண்டு மதுரை காமராசர் பல்கலை, 1994ல் அண்ணாமலை பல்கலை, 2004ல் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை, 2007ல் சென்னை பல்கலை, கவுரவ டாக்டர் பட்டம் வழங்கின.மதுரை காமராஜ் பல்கலை, அண்ணாமலை பல்கலை, பாரதிதாசன் பல்கலை மற்றும் சென்னை பல்கலையில், சிண்டிகேட் உறுப்பினராகவும் இவர் இருந்துள்ளார்.


விளையாட்டு துறையில்...:




சிவந்தி ஆதித்தனார் ஒரு சிறந்த விளையாட்டு வீரர். 10 ஆண்டுகள் இந்திய ஒலிம்பிக் சங்க தலைவராக இருந்துள்ளார். பல்வேறு சர்வதேச விளையாட்டு போட்டிகளில் பொறுப்பாளராக இருந்தார். கடந்த 1989ம் ஆண்டு, சர்வதேச வாலிபால் கூட்டமைப்பு, வாலிபாலுக்கு இவரது சேவையை பாராட்டி தங்க பதக்கம் வழங்கியது. மேலும், விளையாட்டு துறையில், இவரது சேவையை பாராட்டி, "ஒலிம்பிக் ஆர்டர் பார் மெரிட்' என்ற, விருதை சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி வழங்கியுள்ளது.


வகித்த பதவிகள் :




* தலைவர், இயக்குனர், தினத்தந்தி, மாலைமலர்
* இயக்குனர், துணை தலைவர், சர்வதேச வாலிபால் கூட்டமைப்பு
* வாழ்நாள் தலைவர், இந்திய ஒலிம்பிக் சங்கம்
* செயல் துணை தலைவர், ஆசிய வாலிபால் கூட்டமைப்பு
* தலைவர், இந்திய வாலிபால் கூட்டமைப்பு
* தலைவர், சென்னை பல்கலைக்கழக விளையாட்டு குழு
* உறுப்பினர், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், நெல்லை மற்றும் டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகம், சென்னை.



முதல்வர் ஜெயலலிதா இரங்கல் :




"தினத்தந்தி அதிபர், சிவந்தி ஆதித்தனார் மறைவு, பத்திரிகைத்துறை மற்றும் விளையாட்டுத்துறைக்கு பேரிழப்பு' என, முதல்வர், ஜெயலலிதா இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வர், ஜெயலலிதா வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: "தினத்தந்தி' நாளிதழின் அதிபர், டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடல்நலக் குறைவினால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இயற்கை எய்தினார் என்ற செய்தி அறிந்து மிகுந்த துயரமும், மன வேதனையும் அடைந்தேன்."தினத்தந்தி' நாளிதழ் மூலம் தமிழகத்தில் பாமரரும் பத்திரிகை படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தியவர் சிவந்தி ஆதித்தனார். இவர் ஒரு சிறந்த விளையாட்டு வீரரும் ஆவார். இவர் எனது முந்தைய ஆட்சிகாலத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் துணைத் தலைவராக திறம்பட பணியாற்றியது குறிப்பிடத்தக்கது. இவர், "பத்மஸ்ரீ' விருது உட்பட பல விருதுகளுக்கு சொந்தக்காரர்.எளிமையானவரும், பழகுவதற்கு இனிமையானவருமான சிவந்தி ஆதித்தனார் மறைவு, பத்திரிகைத்துறை மற்றும் விளையாட்டு துறைக்கு ஏற்பட்டுள்ள பேரிழப்பாகும். சிவந்தி ஆதித்தனாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

சென்னை பத்திரிகையாளர் மன்றமும், சிவந்தி ஆதித்தனார் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளது.


பத்திரிகை துறைக்கு பேரிழப்பு: "தினமலர்' ஆசிரியர், வெளியீட்டாளர் :




"தினத்தந்தி' அதிபர் பா.சிவந்தி ஆதித்தனார் மறைவு, தமிழ் பத்திரிகை துறைக்கு மிகப்பெரிய பேரிழப்பு என, "தினமலர்' ஆசிரியர் டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தி மற்றும் வெளியீட்டாளர் டாக்டர் இரா.லட்சுமிபதி இரங்கல் குறிப்பில் தெரிவித்துள்ளனர். "சிவந்தி ஆதித்தனாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், "தினத்தந்தி' ஊழியர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்' என, குறிப்பிட்டுள்ளனர்.




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (34)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Jegadees - Bangalore,இந்தியா
23-ஏப்-201311:05:40 IST Report Abuse
Jegadees சின்னையா சிவந்தி ஆதித்தனார் அவர்களின் பெயர் கொண்ட கல்லூரியில் படித்து பயணித்தவர்களில் நானும் ஒருவன். நூறு வயது வரை வாழ வேண்டியவர். அவர்களின் மறைவால் வாடும் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள் - ஜெகதீஸ், IBM , Bangalore
Rate this:
0 members
0 members
2 members
Share this comment
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
20-ஏப்-201321:42:03 IST Report Abuse
g.s,rajan இன்றைய செய்தி -நாளைய வரலாறு என்று கூறுவதைப்போல எளிய மக்களும் செய்திகளை அறிய வழி வகை செய்தவர் ,அவரது ஆத்மா சாந்தி அடையட்டும் .அவர் மறைந்தும் மக்கள் மனதில் வாழ்வார் ஜி.எஸ்.ராஜன் சென்னை
Rate this:
0 members
0 members
5 members
Share this comment
Cancel
R Bala Sundaram - nagapattinam,இந்தியா
20-ஏப்-201320:49:50 IST Report Abuse
R Bala Sundaram அன்னாரது குடும்பத்திற்கு எங்கள் குடும்பத்தின் சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம் .
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
Cancel
Pandi Kanagaraj - Madurai,இந்தியா
20-ஏப்-201315:40:18 IST Report Abuse
Pandi Kanagaraj avar anma shanthiyadaya vukirom
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
Cancel
Ramkumar CR - Coimbatore,இந்தியா
20-ஏப்-201314:31:26 IST Report Abuse
Ramkumar CR டாகடர் பத்மா ஸ்ரீ ஐயா அவர்களின் ஆத்மா எல்லோர்க்கும் பொதுவான கடவுளின் மலர் பாதத்தில் சரண்அடைய பிரார்திக்றோம்.
Rate this:
0 members
1 members
2 members
Share this comment
Cancel
Subramanian - Huizhou,சீனா
20-ஏப்-201314:15:38 IST Report Abuse
Subramanian சிவந்தி ஆதித்தனார் அவர்களின் ஆன்மா சாந்தி அடைய பிரார்திகின்றேன். பத்திரிகை மற்றும் விளையாட்டு துறைக்கு பேர் இழப்பு. கை பந்து விளையாட்டு ஜாம்பவான் - அதில் பல உயரிய பதவி வகுத்தவர். தென் தமிழத்தில் அவர் பெயரில் பல நற்பணி மன்றங்கள் செயல்படுவதை பார்க்கலாம். ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்பவர் இன்று இல்லை என்றாலும் அவர் பெயர் சொல்லும் அவரது செயல்கள் இருக்கும்
Rate this:
0 members
0 members
4 members
Share this comment
Cancel
prema - tirunelveli,இந்தியா
20-ஏப்-201314:02:35 IST Report Abuse
prema உயர்ந்த மனிதருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறோம்
Rate this:
0 members
0 members
2 members
Share this comment
Cancel
T.C.MAHENDRAN - LUSAKA,ஜாம்பியா
20-ஏப்-201313:15:55 IST Report Abuse
T.C.MAHENDRAN பட்டி, தொட்டியிலுள்ள பாமர மக்களும் செய்தித்தாள் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திய அமரர் ஆதித்தனார் வழியில் பத்திரிக்கை துறையில் அரும்பணியாற்றிய சிவந்தி ஆதித்தனாரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்
Rate this:
0 members
1 members
12 members
Share this comment
Cancel
Selva - CHENNAI,இந்தியா
20-ஏப்-201312:56:08 IST Report Abuse
Selva ஆழ்த்த அனுதாபங்கள். ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திப்போம். தமிழகத்தின் நியூஸ் படிக்கும் பழக்கத்துக்கு உன்று‌கோலாக இருந்தமைக்கு நன்றி........
Rate this:
0 members
0 members
4 members
Share this comment
Cancel
jawaharrazik - chenai,இந்தியா
20-ஏப்-201312:47:38 IST Report Abuse
jawaharrazik பத்திரிக்கையாளராக மட்டுமல்லாமல், சிறந்த கல்வியாளராகவும், விளையாட்களை ஊக்கப்படுத்துவராகவும், பிறர்க்கு உதவுவதில் பெரும் வள்ளலாகவும் திகழ்ந்தவர். வாலிபால் விளயாட்டை தமிழகம் எங்கும் பிரபல படுத்தியவர். இளைஞர்களை சரியான பாதையில் வழிநடத்திச் சென்றவர். பிறமொழியை சார்ந்தவர்களையும் எளிதாக தமிழ் படிக்கச் செய்தவர். எத்தனையோ நற்பணிமன்றங்கள் இவர் பெயரால். எத்தனையோ குடும்பங்கள் பிழைத்தன இவர் தயவால். தரிசு நிலத்தில் கல்விப் பயிர் வளர்த்தவர். இவரின் கல்விக் கூடங்களில் பயின்றவர்கள் வாழ்கின்றனர் வளமுடையவர்களாய். ஜாதி, மத, இனங்களை கடந்த எங்கள் சின்ன அய்யா. இவர் ஏற்றிவைத்த தீபம் என்றும் தரும் வெளிச்சமய்யா. இவரின் மாவட்டத்துகாரன் என்பது எங்களுக்கு பெருமையய்யா. ஈடு செய்யமுடியா இழப்பு என்பது வெறும் வார்த்தையய்யா. இறைவன் திருவடி நிழலில் இளைப்பாருமய்யா.
Rate this:
0 members
0 members
15 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.