5 years old girl reped in delhi | ஐந்து வயது சிறுமியை நான்கு நாட்களாக பலாத்காரம் செய்த கொடியவன் | Dinamalar
Advertisement
ஐந்து வயது சிறுமியை நான்கு நாட்களாக பலாத்காரம் செய்த கொடியவன்
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

புதுடில்லி : டில்லியில், ஐந்து வயது சிறுமியை, நான்கு நாட்களாக, வீட்டுக்குள் அடைத்து வைத்து, பாலியல் பலாத்காரம் செய்த கொடியவனை, போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால், அதிர்ச்சி அடைந்துள்ள டில்லி மக்கள், நேற்று போராட்டத்தில் இறங்கியதால், பரபரப்பு ஏற்பட்டது.

டில்லி, காந்தி நகர் பகுதியில் வசிக்கும், ஐந்து வயது சிறுமி, நான்கு நாட்களுக்கு முன், விளையாடச் சென்றார். பக்கத்து வீட்டில் வசிக்கும் ஒரு நபர், அந்த சிறுமியை கடத்திச் சென்று, தன் வீட்டில் அடைத்து வைத்தான்.அந்த சிறுமியை, நான்கு நாட்களாக, பாலியல் பலாத்காரம் செய்து, கொடுமைப் படுத்தினான். சிறுமியை காணாமல், அவளது பெற்றோர், போலீசாரிடம் புகார் செய்ததோடு, டில்லி முழுவதும், தேடியும் வந்தனர்.இந்நிலையில், பக்கத்து வீட்டில், சிறுமி அடைத்து வைக்கப்பட்டிருப்பதை, அருகில் உள்ளவர்கள், கண்டுபிடித்து, நேற்று மீட்டனர். சிறுமியை துன்புறுத்திய நபர், தப்பி ஓடி விட்டான். தொடர்ந்து, துன்புறுத்தலுக்கு ஆளானதால், அந்த சிறுமியின் உடல் நிலை, கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.ஆபத்தான நிலையில், சுவாமி தயானந்த் மருத்துவமனையில், நேற்று காலை சிறுமி அனுமதிக்கப்பட்டாள். இந்த கொடூர சம்பவத்தால், ஆத்திரமடைந்த, அந்த பகுதி மக்கள், சிறுமி அனுமதிக்கப்பட்ட, மருத்துவமனை முன் திரண்டு, போராட்டத்தில் ஈடுபட்டனர்; இந்த சம்பவத்தால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், "சிறுமியை பாலியல் பலாத்கரம் செய்த நபர், 22 வயது இளைஞர். அவரை தேடி வருகிறோம். விரைவில் கண்டு பிடித்து விடுவோம்' என்றனர்.

அரவிந்த் கெஜ்ரிவாலின், ஏழை மக்கள் கட்சியை சேர்ந்தவர்கள், "சிறுமி சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனையில், குறைந்த வசதிகளே உள்ளன. எனவே, சிறுமியை, எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்ற வேண்டும்' என, டில்லி முதல்வர், ஷீலா தீட்ஷித்துக்கு கடிதம் எழுதினர். இதையடுத்து, டில்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு, நேற்று மாலை சிறுமி மாற்றப்பட்டார்.

கதறல்:


சிறுமியின் தந்தை கூறியதாவது:என் மகள், காணாமல் போனதுமே, போலீசாரிடம் புகார் அளித்தோம். அவர்கள், அலட்சியப்படுத்தினர். எங்கள் வீட்டுக்கு அருகிலேயே, என் மகளை, அந்த கொடியவன் அடைத்து வைத்திருந்துள்ளான். போலீசார், அங்கு நன்றாக தேடியிருந்தால், என் மகளை, முன் கூட்டியே கண்டு பிடித்திருக்கலாம். என் மகள், மீட்கப்பட்டவுடன், தகவல் அறிந்து, வந்த போலீசார், 2, 000 ரூபாய் தருவதாகவும், இந்த விஷயம் பற்றி, யாரிடமும், மூச்சு விட வேண்டாம் என்றும், கூறினர்.இவ்வாறு, சிறுமியின் தந்தை கூறினார்.

சிறுமிக்கு முதலில் சிகிச்சைக்கு அளித்த, டாக்டர், ஆர்.கே.பன்சால் கூறியதாவது: இன்னும், 48 மணி நேரம் கடந்தால் தான், சிறுமியின் நிலை குறித்து, உறுதியாக கூற முடியும். உதடு, மார்பு, கன்னங்கள், கழுத்து உள்ளிட்ட, அனைத்து பகுதிகளிலும், கடுமையான காயங்கள் உள்ளன. ஓரளவு தான், சுய நினைவு உள்ளது.சிறுமியின் உடலில் இருந்து, மெழுகு வர்த்திகள், சிறிய பாட்டில் ஆகியவை எடுக்கப்பட்டன. நான்கு நாட்களாக, சிறுமிக்கு, உணவு, தண்ணீர் ஆகியவை வழங்கப்படவில்லை என்றும் தெரிய வந்துள்ளது.இவ்வாறு, டாக்டர், ஆர்.கே.பன்சால் கூறினார்.

இளம் பெண்ணுக்கு "பளார்': போலீஸ் அதிகாரி "சஸ்பெண்ட்':


சிறுமியை பார்ப்பதற்காக, அவர் முதலில் அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனைக்கு, டில்லி மாநில காங்., நிர்வாகிகள், சந்தீப் தீட்சித், வாலியா ஆகியோர், நேற்று சென்றனர். அங்கு திரண்டிருந்த, இளம் பெண்கள் சிலர், அவர்களை முற்றுகையிட்டு, கோஷம் எழுப்பினர். இதையடுத்து, போலீசாருக்கும், இளம் பெண்களுக்கும் இடையே, மோதல் ஏற்பட்டது.ஆத்திரமடைந்த, உதவி போலீஸ் கமிஷனர், பானிசிங் அகல்வா, ஒரு இளம் பெண்ணை, கன்னத்தில் சரமாரியாக அறைத்து, தள்ளி விட்டார். இந்த சம்பவம், அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது, இளம் பெண்ணை அறைந்த, உதவி கமிஷனர், சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

5 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை பிரதமர் வருத்தம் :


டில்லியில், ஐந்து வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, ஆபத்தான நிலையில், மருத்துவமனையில் சிசிச்சைப் பெற்று வருகிறார். இச் சம்பவம் கேள்விப்பட்டதும், ஆழ்ந்த கவலை அடைந்துள்ளதாக, பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, பிரதமர் அலுவலகம் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:டில்லியில், ஐந்து வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, துன்புறுத்தப்பட்டது குறித்து கேள்விப்பட்ட பிரதமர் மன்மோகன் சிங், ஆழ்ந்த வருத்தம் அடைந்துள்ளார்.இந்த அவமான செயலுக்கு காரணமானவர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கும் படியும், போராட்டம் நடத்திய பெண்கள் மீது, தாக்குதல் நடத்திய போலீசார் மீது, கடும் நடவடிக்கை எடுக்கும் படியும், டில்லி லெப்டினன்ட் கவர்னரை கேட்டுக்கொண்டுள்ளார்.மேலும், மருத்துவமனையில் சிகிச்சைப் பெறும் சிறுமிக்கு, தேவையான அனைத்து மருத்துவ உதவிகளை அளிக்கும்படியும் கேட்டுக்கொண்டுள்ளார். இவ்வாறு, அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

தொடர்புடைய செய்திகள்:


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (78)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
arul hi - madurai,இந்தியா
23-ஏப்-201308:21:08 IST Report Abuse
arul hi கேடு கெட்ட காங்கிரஸ். கெட்டு போன இந்திய அரசியல் அமைப்பு சட்டம் . இந்திய போலீஸ் மற்றும் நீதி துறை நாசமா போச்சு
Rate this:
0 members
0 members
3 members
Share this comment
Cancel
radhakrishnan - jeddah,சவுதி அரேபியா
20-ஏப்-201322:19:40 IST Report Abuse
radhakrishnan கேடுகட்ட காங்கிரஸ் அரசை உடனே மாற்றுங்கள் நல்ல நிர்வாகம் அமைய சவுதி இடம் ஒப்படையுங்கள்
Rate this:
1 members
1 members
7 members
Share this comment
Cancel
NV.MURALITHAREN - udumalaipettai,இந்தியா
20-ஏப்-201322:04:15 IST Report Abuse
NV.MURALITHAREN "அதை" கட் பண்ணி அப்புறம் இவனை நாடு வீதியில் தூக்கில் போடு
Rate this:
0 members
1 members
11 members
Share this comment
Cancel
நீலகண்டன் - Chennai,இந்தியா
20-ஏப்-201316:39:17 IST Report Abuse
நீலகண்டன் இந்த கொடூர கயவனை தூக்கில் இட வேண்டும், டெல்லி போலிசாரின் நடவடிக்கை போதாது. குற்றம் நடந்தபின் வேலை செய்வது அதற்கு பின் விட்டு விடுவது இது தான் வாடிக்கை. தொலைகாட்சியில் பெண்களை லத்தியால் தாக்கியதை பார்த்தால் இவர்களின் பணி சிறப்பாக உள்ளது. திரு பிரதமர் அவர்கள் வருத்தம் தெரிவிப்பதை விட்டு பெண்களை தாகிய காவலருக்கு மற்றும் புகார் பதிவு செய்ய மறுத்த அதிகாரிக்கு தகுந்த தண்டனை அளிக்க வேண்டும்.
Rate this:
1 members
0 members
16 members
Share this comment
NV.MURALITHAREN - udumalaipettai,இந்தியா
20-ஏப்-201322:01:39 IST Report Abuse
NV.MURALITHAREN"அதை" கட் பண்ணி அப்புறம் இவனை தூக்கில் போட வேண்டும் ...
Rate this:
0 members
0 members
4 members
Share this comment
Cancel
lakshmi - wellington,நியூ சிலாந்து
20-ஏப்-201315:59:14 IST Report Abuse
lakshmi இவங்களை திருத்தவே முடியாது.பெண்ணாக பிறப்பது பெரும் பாவம் .மனிதன் மனிதனாக மாறாவிடில் யாரும் எதுவும் பண்ணமுடியாது
Rate this:
1 members
0 members
10 members
Share this comment
Cancel
Shahul - Riyadh,சவுதி அரேபியா
20-ஏப்-201315:51:54 IST Report Abuse
Shahul துக்கு தண்டனை தர வேண்டும்
Rate this:
0 members
0 members
20 members
Share this comment
Cancel
ANAJLI - newdelhi,இந்தியா
20-ஏப்-201315:43:23 IST Report Abuse
ANAJLI இந்த காமகொடுரனின் ஆண்மை நீக்கபடவேண்டும்.., இவன் வாழ்நாள் முழுவதும் இருட்டறை சிறையில் அடைக்கபடவேண்டும்.. ஒரு நாளைக்கு 100 ml தண்ணீர் மட்டுமே தர வேண்டும், இவன் பசியில் கதறுவதை அனைவரும் கேட்க வேண்டும்.,, இவனை போன்ற காம மோகம் பிடித்த அனைவருக்கும் இவனுக்கு தரும் தண்டனை பாடமாக இருக்க வேண்டும்.. குறிப்பு:- பெண்களே நாகரிகம், மேற்கத்திய கலாச்சாரம் போன்ற பெயரால் நீங்கள் செய்யும் தவறுகளையும் நிறுத்துங்கள் இல்லையென்றால் உங்களுக்கோ அல்லது உங்கள் குழந்தைகளுக்கோ இது போன்ற நிலை ஏற்பட நிறைய வாய்ப்பு உள்ளது.
Rate this:
4 members
1 members
19 members
Share this comment
Cancel
KAISAR - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்
20-ஏப்-201315:23:25 IST Report Abuse
KAISAR இதுபோன்ற குற்றங்கள்( இந்தியாவில் இது சாதாரண நிகழ்வு) வரிசையை நிறைய நடக்கும் எதுவரை? பிடிபட்டு, குற்றம் நிரூபிக்கப்பட்ட குற்றவாளிகளுக்கு தண்டனையை நிறைவேற்ற தாங்கும்வரை... எவ்வளவோ போரட்டங்களை சந்தித்த Delhi bus rape மக்கள் மறந்து விட்டனர். தீர்ப்பும் 20 வருடம் கழித்துதான் வரும்
Rate this:
0 members
0 members
17 members
Share this comment
Cancel
tamilnambi - new delhi,இந்தியா
20-ஏப்-201315:07:44 IST Report Abuse
tamilnambi டெல்லியில் மட்டும்தான் பெண்கள் கற்புக்கு மரியாதையோ - பத்திரிக்கைகள் தொலைகாட்சிகள் அடடா என்ன உணர்வு - தமிழகத்தில் ஒரு நிலைப்பாடு டெல்லியில் ஒரு நிலைபாடோ வாழ்க மீடியாக்கள் மீடியாக்களின் குடும்பத்தினர் தமிழகத்திலும் உள்ளார்கள் - இப்படி ஒருதலை பட்சமாக ஆதரவு செய்திகள் எதிர்ப்பு செய்திகள் வெளியிட்டு தமிழகத்தில் மிக கேவலமான ஒரு நிர்வாகத்தை கொண்டுவந்து விட்டார்கள் இப்போது மத்தியில் பாரதிய ஜனதா ஆட்சிக்கு வரவேண்டும் வந்துவிட்டால் இது போன்று எந்த ஒரு சம்பவமும் இந்தியாவில் நடைபெறாது - அட மீடியாக்களே இந்த பாவத்தை சுமக்கவா மீடியா நடத்துகிறீர்கள்
Rate this:
5 members
0 members
16 members
Share this comment
manokaran - kanchipuram,இந்தியா
20-ஏப்-201320:05:16 IST Report Abuse
manokaranஆமாங்க தமிழக மீடியாக்கள் இதுபோன்ற செயலில் அக்கறை காட்டுவது இது புதிது அல்லவே இங்கு நடக்கும் அக்கரமம் வெளி இடப்படுவதில்லையே ஏன்? பாவம் அந்த சிறுமி அவருக்காக நாம் பிரார்த்திப்போம் தமிழனக்கு அடிவாங்கி அடிவாங்கி மரத்து போய்விட்டதுபோலும் ???? கந்தன்,சென்னை ...
Rate this:
0 members
0 members
5 members
Share this comment
Cancel
periyasamy .s - tirupur ,இந்தியா
20-ஏப்-201314:34:44 IST Report Abuse
periyasamy .s இந்த கேடுகெட்ட காங்கிரஸ் அரசு வெறும் வருத்தம் மட்டும் தான் ஒரு ஒரு முறையும் தெரிவிக்க முடியும் .
Rate this:
2 members
0 members
16 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்