அதட்டினால் வரமாட்டேன்: ஆசிரியரை மிரட்டும் மாணவி
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

காரைக்குடி : காரைக்குடி அருகே நென்மேனி, ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், இரண்டு மாணவர்கள் மட்டுமே படிக்கும் நிலையில், ஆசிரியர் அதட்டினால் பள்ளிக்கு வரமாட்டேன், என மாணவி கோரிக்கைக்கு கட்டுப்படும் நிலையில் ஆசிரியர்கள் உள்ளனர்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகேயுள்ள பெரிய கொட்டக்குடி ஊராட்சிக்குட்பட்ட நென்மேனியில், ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. கடந்த 1964ம் ஆண்டு துவக்கப்பட்டது. பொன் விழா கண்ட இந்த பள்ளியில் தான், இப்பகுதியை சேர்ந்த பெரும்பாலோனோர், பாலர் படிப்பை படித்தனர். விவசாயம் மட்டுமே பிரதான தொழில். காலத்தின் மாற்றம், இங்குள்ள பலரை, காரைக்குடிக்கு இடம் பெயர வைத்தது. இங்கு அ,ஆ., கற்றவர்கள், தங்கள் பிள்ளைகளை,ஆங்கில வழி பள்ளியில், சேர்த்து வருகின்றனர்.ஆரம்பத்தில் 85 மாணவர்களுடன் இயங்கிய, நென்மேனி ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி, தற்போது இரண்டு மாணவர்களுடன் நான்கு ஆண்டுகளாக, இயங்கி வருகிறது.கடந்த ஆண்டு வரை, நதியா, 8, அவரது அண்ணன் மணிகண்டன்,10 பயின்று வந்தனர். தற்போது மணிகண்டன் ஆறாம் வகுப்புக்காக வேறு பள்ளிக்கு சென்றுவிட்டார். ஒரே மாணவருடன் இயங்க முடியாத நிலையில், இங்கு வேலை பார்க்கும், சமையல் உதவியாளர் அவரது உறவினர் பையனை, பள்ளியில் படிக்க வைப்பதற்காக வளர்த்து வருகிறார். ஒன்றாவது படிக்கும், அவனது பெயரும் மணிகண்டன். புனிதாராணி, விஜயலெட்சுமி என இரு ஆசிரியர்கள், ஒரு சமையல் உதவியாளர் உள்ளனர். இவர்களில் விஜயலெட்சுமி என்ற ஆசிரியர், சாக்கோட்டை ஒன்றியத்துக்குட்பட்ட பள்ளியில் உள்ள ஆசிரியர்கள் விடுப்பு எடுத்தால், மாற்றுப்பணிக்காக அவ்வப்போது சென்று விடுவார். நிரந்தரமாக இருப்பது, தலைமை ஆசிரியரான புனிதாராணி மட்டுமே.

இந்த பள்ளியில், 3 "டிவி', ஒரு "டிவிடி' பிளேயர், மற்றும் செயல்வழி கற்றலுக்கான அனைத்து வசதியும் உண்டு. படிக்க மாணவர்கள் தான் இல்லை. வெளியூருக்கு இடம் பெயர்ந்தவர்கள் மட்டுமன்றி, இவ்வூரில் உள்ளவர்களும் தங்கள் குழந்தைகளை, இப்பள்ளியில் சேர்க்க முன்வருவதில்லை.தற்போது படிக்கும்,நதியா என்ற மாணவியும், ஏம்பலை சேர்ந்தவர். தந்தை இல்லாத நிலையில், இப்பள்ளியில் பயின்று வருகிறார். அவரை ஆசிரியர் அதட்டினால், பள்ளிக்கு வருவதில்லை. வீட்டுக்கு தேடி செல்லும் போது, எனக்கு இந்த ஆசிரியரை பிடிக்கவில்லை.வேறு ஆசிரியர் வந்தால் தான் பள்ளிக்கு செல்வேன் என அடம்பிடிப்பாராம். இதனால், இருவரையும் அதட்ட கூட இந்த ஆசிரியர்களால் இயலவில்லை. நான்காம் வகுப்பு படித்து வரும் நதியா, ஆறாம் வகுப்புக்கு, வேறு பள்ளிக்கு சென்றால், ஒரே ஒரு மாணவர் மட்டுமே படிக்க வருவார்.நென்மேனிக்கு அருகில் உள்ள பெரிய கொட்டக்குடியில் உள்ள தொடக்கப்பள்ளியில், எட்டு மாணவர்கள் மட்டுமே படிக்கின்றனர். காலத்திற்கு ஏற்ப தொடக்கப்பள்ளி கல்வி தரத்தை மேம்படுத்தினால் மட்டுமே, மாணவர்கள் சேர்க்கையை வலுப்படுத்த முடியும்.

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (9)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Chenduraan - kayalpattanam,இந்தியா
20-ஏப்-201322:25:28 IST Report Abuse
Chenduraan பக்கத்து ஊர் பள்ளிக்கு இந்த குழந்தைகளை மாற்றிவிட்டு இந்த இரண்டு டீசெர்களையும் வேறு பல்லுக்கு அனுப்புங்கள். சராசரியாக ஒரு டீச்சர் சம்பளம் 18000 முதல் 20000 வரை இரண்டு பிள்ளைகளுக்கு அரசு மாதம் செலவு செய்யும் தொகை 50000 இக்கு மேல். நம்ம கல்வித்துறை மினிஸ்ட்ரி ஏன்னா சின்செயர் பாருங்க
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
20-ஏப்-201315:19:46 IST Report Abuse
Nallavan Nallavan ஆசிரியர் அலட்டிக்கக் கூடாது ..... அப்பா அம்மாவுக்கு இல்லாத கவலை உங்களுக்கு எதுக்கு? தண்ணி தெளிச்சு விட்டுடணும் .....
Rate this:
Share this comment
Cancel
M.KUMAR - chennai,இந்தியா
20-ஏப்-201311:14:10 IST Report Abuse
M.KUMAR கல்வியின் அவசியம் புரியாத பெற்றோர் ,பிள்ளைகள் பின்னாளில் மிகவும் கஷ்ட படும்போது அது கிடைக்காது என்பதை உணர வேண்டும்( காலத்தே பயிர் செய்) மனம் தளராத ஆசிரியருக்கு சிரம் தாழ்ந்த நன்றிகள்
Rate this:
Share this comment
Cancel
chinnamanibalan - Thoothukudi,இந்தியா
20-ஏப்-201310:52:34 IST Report Abuse
chinnamanibalan அரசு பள்ளிகளின் கற்பித்தல் தரம் மேம்படாத வரை இது போன்ற அவலம் ஏற்படவே செய்யும் .மேலும் அரசு பள்ளிகளில் தற்போதைய நிலை நீடித்தால் இன்னும் 5 ஆண்டுகளில் அரசு பள்ளிகளில் பெரும்பாலானவை காணாமல் போய்விடும்....
Rate this:
Share this comment
Prince Jeba - Chennai,இந்தியா
20-ஏப்-201315:17:40 IST Report Abuse
Prince Jebaஅரசு பள்ளிகளில் கற்ப்பித்தல் தரம் குறைவு என்று சொல்லாதீர்கள் காலத்தின் மாறுதலுக்கு ஏற்ப மக்கள் தங்கள் பிள்ளைகளை ஆங்கில கல்வி வழியில் பயில வைப்பதால் வந்த வினை தான் இது...
Rate this:
Share this comment
Cancel
BLACK CAT - Marthandam.,இந்தியா
20-ஏப்-201309:48:42 IST Report Abuse
BLACK CAT பள்ளியை மூடி விட்டு, பள்ளியில் உள்ள 2 ஆசிரியர்கள் வேறு பள்ளிக்கி செல்லவும் ...
Rate this:
Share this comment
Cancel
நாஞ்சில் சுலைமான் - THUCKALAY,இந்தியா
20-ஏப்-201309:20:05 IST Report Abuse
நாஞ்சில் சுலைமான் ஒரு வீடு இரு வாசல் போல் -ஒரு பள்ளி இரு மாணாக்கர்..
Rate this:
Share this comment
Cancel
kumaresan.m - hochimin ,வியட்னாம்
20-ஏப்-201308:49:34 IST Report Abuse
kumaresan.m " கல்வியை பற்றி மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது என்பதற்கு இச்செய்தியே சான்று மற்றும் கல்வியை பற்றி கல்வி துறை மற்றும் அரசு எந்த நிலையில் உள்ளது என்பதற்கும் இச்செய்தியே சான்று "
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
20-ஏப்-201308:47:49 IST Report Abuse
Srinivasan Kannaiya யாருக்கும் பொறுப்பு கிடையாது. சந்திதி இடைவெளி வேறு. சமுதாய கட்டுப்பாடு அறவே இல்லை என்பதற்கு இதுவே அடையாளம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்