பதிவு செய்த நாள் :
கருத்துகள்  கருத்தை பதிவு செய்ய
எழுத்தின் அளவு:

புதுடில்லி : பார்லிமென்டின் இரண்டாம் கட்ட பட்ஜெட் கூட்டத் தொடர், வரும், 22ம் தேதி துவங்குகிறது. இந்தக் கூட்டத் தொடராவது, கூச்சல் குழப்பம் இன்றி நடைöறுமா என, எதிர்பார்த்திருந்த வேளையில், மற்றொரு அரசியல் சூறாவளி, பார்லிமென்ட் கூட்டுக் குழுவான - ஜே.பி.சி., வரைவு அறிக்கை என்ற ரூபத்தில் கிளம்பியுள்ளது. இதனால், பார்லி., கூட்டத் தொடர் சுமுகமாக நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

சமீப காலமாக, ஒவ்வொரு பார்லிமென்ட் கூட்டத் தொடர் துவங்குவதற்கு முன், ஏதாவது ஒரு பிரச்னை திடீரென கிளம்பும். அதையே சாக்காக வைத்து, எதிர்க்கட்சிகள் வரிந்து கட்டி, பார்லிமென்டை நடத்த விடாமல் அமளியில் ஈடுபடுவது, வாடிக்கையாகி விட்டது. கொஞ்ச நாட்களாக, "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரம் அமுங்கியிருந்தது. இப்போது, ஜே.பி.சி., மூலம் மீண்டும் கிளம்பியுள்ளது. இந்த முறைகேடு குறித்து, விசாரணை நடத்திய, ஜே.பி.சி., தன் வரைவு அறிக்கையை வெளியிட்டுள்ளது. "இந்த முறைகேட்டில், பிரதமருக்கும், நிதி அமைச்சருக்கும் தொடர்பு இல்லை' என, நற்சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது. ஜே.பி.சி., வரும், 25ம் தேதி, மீண்டும் கூடவுள்ள நிலையில், அதற்கு முன்னதாக, உறுப்பினர்களுக்கு, வரைவு அறிக்கை அனுப்பபட்டுள்ளது. அந்த அறிக்கையே, மீடியாக்களுக்கு கசிந்துள்ளது.

இதைப் பார்த்ததும், மத்திய தொலை தொடர்புத் துறை முன்னாள் அமைச்சர் ராஜா, ""ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில், அனைத்து முடிவுகளும், பிரதமர் மன்மோகன் சிங்குடன் கலந்து ஆலோசித்த

பின்னரே எடுக்கப்பட்டன,'' என, தெரிவித்துள்ளார்.அதே நேரத்தில், இப்போது வரைவு அறிக்கையை வெளியிட வேண்டியதன் அவசியம் என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது. உறுப்பினர்களுக்கு அனுப்பிய குறிப்பில் ஜே.பி.சி., எப்போது கூடும் என்பது பற்றியே இருந்திருக்க வேண்டும். மாறாக, வரைவு அறிக்கையின் சாராம்சம் வெளியானது தான், இப்போது பெரும் பிரச்னையாகி உள்ளது. பாரதிய ஜனதாவோ, "இந்த அறிக்கை, பிரதமரை பாதுகாப்பதற்கான முயற்சி; இது காங்கிரஸ் அறிக்கையாக தெரிகிறதே தவிர, ஜே.பி.சி., அறிக்கையாக தெரியவில்லை' என, குறிப்பிட்டுள்ளது.

முன்னர், ஐ.மு.,கூட்டணியில் அங்கம் வகித்து, இப்போது வெளியே வந்துள்ள, தி.மு.க., தலைவர் கருணாநிதி சென்னையில் அளித்த பேட்டியில், ""ராஜா அமைச்சராகஇருந்தவர். அவர் பிரதமரை வழிநடத்த முடியுமா?'' என, கேள்வி எழுப்பியுள்ளார். வரைவு அறிக்கை, எப்படி மீடியாக்களுக்கு கசிந்தது என, பா.ஜ., உட்பட எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன. மற்றொரு பக்கம், மத்திய தொலை தொடர்பு அமைச்சர், கபில்சிபல் விடுத்த வேண்டுகோளில், "அறிக்கை இறுதியானது அல்ல; பார்லிமென்டில் தாக்கல் செய்த பிறகு விவாதித்து கொள்ளலாம்' என, தெரிவித்துள்ளார்.

எப்படியோ ஒரு விஷயத்தை பற்றவைத்து, புகையை கிளப்பி விட்டு விட்டு, அதன் பின் அடங்கியிருக்கும்படி சொல்லுவது காங்கிரசுக்கே கைவந்த கலை என, அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.வரும், திங்களன்று துவங்கும்,

Advertisement

பார்லிமென்ட் கூட்டத்தொடரில், எவ்வளவோ மசோதாக்கள் நிறைவேற்றப்பட காத்திருக்கின்றன. இந்நிலையில், எதிர்க்கட்சிகளை திசை திருப்பும் வண்ணம், ஜே.பி.சி., அறிக்கை வந்து இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த விவகாரம் தொடர்பாக, ராஜ்யசபா, பா.ஜ., எதிர்க்கட்சி தலைவர் அருண் ஜெட்லி நேற்று கூறியதாவது:உண்மையை மூடிமறைக்க, ஜே.பி.சி.,யை காங்கிரஸ் பயன்படுத்துகிறது என்பது மீண்டும் நிரூபணமாகியுள்ளது. முன்னர், போபர்ஸ் ஊழல் விவகாரம் வந்த போது, இதே, ஜே.பி.சி., தந்திரத்தை காங்கிரஸ் பயன்படுத்தியது. அப்போது, போபர்ஸ் ஊழல் குறித்து விசாரிக்க, சங்கரானந்த் தலைமையில் ஜே.பி.சி., அமைக்கப்பட்டது. அதுவும்கற்பனை அறிக்கையாக வந்தது.அதேபோல், "ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில், மத்திய அரசுக்கு இழப்பு, 1.76 லட்சம் கோடி ரூபாய்' என, மத்திய கணக்கு தணிக்கை அதிகாரி தெரிவித்துள்ளார். ஆனால், ஜே.பி.சி., இதை கற்பனையில் உருவானது என்கிறது. குழுவில் உள்ள பா.ஜ., உறுப்பினர்கள், அறிக்கையை பெற்றதும், தங்கள் எதிர்ப்பை தெரிவிக்க தயங்கமாட்டார்கள்.

வரைவு அறிக்கை பற்றி, பத்திரிகையே பார்த்தே தெரிந்து கொண்டேன். வரைவு அறிக்கை உறுப்பினர்களுக்கு போவதற்கு முன், எப்படி மீடியாக்களுக்கு போனது. இது, பார்லிமென்ட் உரிமையை மீறுவதாக உள்ளது.இவ்வாறு அருண் ஜெட்லி கூறினார்.வரைவு அறிக்கை உறுப்பினர்களுக்கு கிடைப்பதற்கு முன், பத்திரிகைகளுக்கு எப்படி போனது என்று அருண் ஜெட்லி கிளப்பியுள்ளதற்கும், ஊகங்களை கிளப்பி விடாதீர்கள் என்று கபில்சிபல் வேண்டுகோள் விடுத்துள்ளதற்கும், திங்கட்கிழமை துவங்கும் பார்லிமென்டில் விடை தெரியும்.
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.