மின்சாரம் தாக்கியதில் மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர் சாவு: உடலுடன் போராட்டம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மின்சாரம் தாக்கியதில் மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர் சாவு: உடலுடன் போராட்டம்

Added : ஏப் 20, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

மண்ணச்சநல்லூர்: திருச்சி அருகே மின்சாரம் தாக்கி இறந்த மின்வாரியம் ஒப்பந்த தொழிலாளர் பிணத்துடன் கொள்ளிடம் டோல்கேட்டில் போராட்டம் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.கொள்ளிடம் டோல்கேட் அருகே பிக்சாண்டர்கோவில் பூக்கொல்லையைச் சேர்ந்தவர் எலியாஸ், 26. இவர் கொள்ளிடம் டோல்கேட்டிலுள்ள மின்வாரிய அலுவலகத்தில் தற்காலிக ஒப்பந்த பணியாளராக பணியாற்றி வந்தார். பிக்சாண்டார் கோவில் பராசக்தி நகரிலிருந்து மின் இணைப்பு கிடைக்கவில்லை என புகார் வந்ததையடுத்து, பராமரிப்பு பணிக்காக அங்கு அனுப்பப்பட்டுள்ளார்.மின் கம்பத்தில் ஏறி எலியாஸ் வேலை செய்து கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்து துடிதுடித்து மின்கம்பத்திலேயே உயிரிழந்தார்.கொள்ளிடம் டோல்கேட் போலீஸார், எலியாஸின் சடலத்தை கைப்பற்றி ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இதுகுறித்து கொள்ளிடம் டோல்கேட் மின்வாரிய அலுவலக இளநிலை மின் பொறியாளர் ரெங்கசாமி, இறந்தவர் தங்களது ஊழியர் அல்ல. அவர் அடையாளம் தெரியாத நபர் என போலீஸில் புகார் கொடுத்ததாக தெரிகிறது.பிரேத பரிசோதனை முடிந்து ஆம்புலன்ஸில் எலியாஸின் ஏற்றி வந்த உறவினர்கள் மற்றும் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள், எலியாஸின் சடலத்துடன் கொள்ளிடம் டோல்கேட் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட சென்றனர்.ஆனால், மின்வாரிய அலுவலகம் பூட்டப்பட்டிருந்ததால், எலியாஸின் சடலத்துடன் கொள்ளிடம் டோல்கேட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர். ஒரு மணி நேரம் சாலை மறியல் நடந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.மண்ணச்சநல்லூர் தாசில்தார் பவானி, நில அபகரிப்பு பிரிவு டி.எஸ்.பி., இன்பகனி மற்றும் போலீஸார், மறியலை கைவிட்டு பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைத்தனர். அதன் பின், நடந்த பேச்சுவார்த்தையில் எலியாஸின் குடுபத்திற்கு ஐந்து லட்ச ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும். அவரது மனைவிக்கு வேலை வழங்க வேண்டும் என போராட்டக்காரர்கள் கோரிக்கை வைத்தனர். இவர்களது கோரிக்கைகளை அரசுக்கு பரிந்துரை செய்வதாக அதிகாரிகள் உறுதியளித்ததைத் தொடர்ந்து போராட்டம் முடிவுக்கு வந்தது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை