மாற்றுத்திறனாளிக்கான விளையாட்டு போட்டிகள்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மாற்றுத்திறனாளிக்கான விளையாட்டு போட்டிகள்

Added : ஏப் 20, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கரூர்: மாற்றுத்திறனாளி மாணவ,மாணவிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் கரூரில் நடந்தது.தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு விளையாட்டு போட்டிகள் கரூர் தாந்தோனிமலை அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.இதில், கலெக்டர் ஜெயந்தி தலைமைவகித்து துவங்கி வைத்தார். போட்டியில் கை, கால் பாதிக்கப்பட்டோர், மனவளர்ச்சி குன்றியவர்கள், கண்பார்வையற்றவர்கள், காது கேளாதோர் உட்பட பலர் பங்கேற்றனர்.இவர்களுக்கு ஓட்டம், சக்கரநாற்காலி ஓட்டம், குண்டு மற்றும் ஈட்டி எறிதல் ஆகிய பிரிவுகளில் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு அலுவலர் புன்னியமூர்த்தி, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் கனகராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை