E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
தங்க மினியேச்சர் சிற்பி வெங்கடேஷ்...
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

மாற்றம் செய்த நாள்

08 மே
2013
15:34
பதிவு செய்த நாள்
ஏப் 20,2013 20:00

ஒவ்வொருவரிடமும் ஏதோ ஒரு திறமை இருக்கத்தான் செய்யும்,அதை வெளிக்கொண்டு வந்து பாராட்டினால் போதும்,அவர் திறமையின் மிச்சத்தை காட்டுவார்,விரைவில் உச்சத்தை தொடுவார்.

அந்த வேலையைத்தான் நமது இணையதளத்தின் பொக்கிஷம் செய்து வருகிறது.அந்த வரிசையில் வருகிறார் வெங்கடேஷ்.கோவை சிங்கநல்லூரைச்சேர்ந்தவர்,வயது 27,ஏழாவது வரை படித்துள்ளார்.அங்குள்ள தங்க நகை கடையில் நகை செய்யும் தொழிலாளியாக உள்ளார்,காலையில் ஒன்பது மணிக்கு வேலைக்குள் நுழைந்தால் இரவு பத்து மணி வரை வேலை,வேலைதான்.
வெங்கடேஷ்க்கு ஏதோ ஒரு வகையில் சாதனை செய்யவேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது,அது பற்றிய சிந்தனையில் இருந்தபோது உடன் வேலை செய்பவர் பத்திரிகையில் வந்த ஒரு செய்தியை ஆச்சர்யத்துடன் படித்துள்ளார்.





செய்தியில் இருந்த ஆச்சர்யம் என்னவென்றால் ஒருவர் இரண்டு கிராம் எடையில் தங்கத்தில் சைக்கிள் செய்து சாதனை படைத்துள்ளார் என்பதுதான்.இதைப்படித்ததும் இதைவிட குறைவான எடையில் நாம் ஏன் சைக்கிள் செய்யக்கூடாது என்று முடிவு செசய்து 180 மில்லி கிராமில் ஒரு தங்க சைக்கிளை செய்துவிட்டார்.,இந்த சைக்கிளின் ஹேண்டில் பாரை திருப்பமுடியும்,பெடலை சுழற்ற முடியும்,சக்கரமும் சுற்றும்.
இவ்வளவு நுணுக்கமாக வெங்கடேஷ் உருவாக்கிய சைக்கிளை பார்த்து முதலில் பாராட்டியவர் இவரது முதலாளி அம்பிகாபதிதான்.இவர் தந்த ஊக்கத்தால் 150 மில்லியில் கிரிக்கெட் உலககோப்பை,கோணியம்மன் கோவில் தேர்,கிட்டார்,தாமரை பூ மற்றும் துப்பாக்கி.



ஊதினால் பறந்துவிடும் 170 மில்லிகிராம் எடையில் இவர் செய்துள்ள துப்பாக்கியை, நிஜ துப்பாக்கி போல மடக்கி திறக்கலாம்,குண்டு போடும் இடத்தை சுழற்றலாம்.
18 காரட் தங்கத்தை உபயோகித்து, இப்படி இவர் செய்யும் தங்க மினியேச்சசரின் மதிப்பு ஐநூறு ரூபாய்க்குள்தான்,ஆனால் இதன் பின்னணியில் உள்ள இவரது உழைப்பு மிகவும் பெரியது.ஒரு மினியேச்சர் செய்ய சமயத்தில் ஒரு நாள் கூட ஆகிவிடுமாம்.வேலை இல்லாத நாளில்,நேரத்தில் இது மாதிரி பொருட்களை இவர் உருவாக்குகிறார்.இவரது தங்க மினியேச்சர் அனைத்துமே நிச்சயம் கின்னஸ் ,மற்றும் சாதனை புத்தகங்களில் இடம் பெறக்கூடியதுதான்.,ஆனால் அதற்கு முதலில் பத்திரிகையில் இது பற்றிய செய்தி வரவேண்டும் என்பது முதல் விதி,நீங்கள் என் சாதனை கனவு,நனவாக வழிகாட்டுவீர்களா என்ற வெங்கடேஷ்க்கு தந்த பதில்தான் இந்த கட்டுரை.வெங்கடேஷின் தொடர்பு எண்:9943971200.


- எல்.முருகராஜ்




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Hariganesan Sm - uthamapalayam,இந்தியா
22-ஏப்-201313:59:56 IST Report Abuse
Hariganesan Sm வெங்கடேஷ்க்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.. எத்தனையோ வெங்கடேஷ்கள் வெளிச்சத்துக்கு வாராமல் உள்ளனர்.. சரியான தூண்டுகோல் மற்றும் உதவும் எண்ணங்களும் இருந்தால், இளம் வெங்கடேஷ்களை இன்னும் உச்சத்துக்கு கொண்டு செல்ல முடியும்..ஹரி உ. பாளையம்
Rate this:
0 members
0 members
8 members
Share this comment
Cancel
21-ஏப்-201307:14:56 IST Report Abuse
பெருவை பார்த்தசாரதி இந்தக்கட்டுரையின் முதல் பாராவோடு, ஒவ்வொரு பெற்றோருக்கும், ஆசிரியருக்கும் தொடர்பு உள்ளது. ஒவ்வொருவருக்குள்ளும் மறைந்து கிடக்கும் திறமையை வெளிக்கொணரும் பங்குதான் அது. ஒரு குழந்தையிடம் மறைந்து கிடக்கும் அதீத ஆற்றலை ஆசிரியர் அறியாவிட்டாலும், பெற்றோர் அறிய வாய்ப்புண்டு. இதற்கு தாமஸ் ஆல்வா எடிசனை உதாரணமாகச் சொல்லலாம். இவ்வகையில் இன்று வெங்கடேசுக்கு மேன்மேலும் சாதனை புரிய தினமலர் செய்தி ஒன்றே போதும்.
Rate this:
0 members
0 members
14 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.