கருணாநிதி - விஜயகாந்த் திடீர் சந்திப்பு : புகைப்படம் வெளியிட்டது தி.மு.க.,| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

கருணாநிதி - விஜயகாந்த் திடீர் சந்திப்பு : புகைப்படம் வெளியிட்டது தி.மு.க.,

Added : ஏப் 20, 2013 | கருத்துகள் (58)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
கருணாநிதி - விஜயகாந்த் திடீர்  சந்திப்பு : புகைப்படம் வெளியிட்டது  தி.மு.க.,

சென்னை: தி.மு.க., தலைவர் கருணாநிதியும், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்தும், நேற்று சந்தித்துக் கொண்டனர். இந்த சந்திப்பின் போது, பரஸ்பரம் நலம் விசாரித்தும் கொண்டனர்.
"தினத்தந்தி' நாளிதழ் அதிபர், சிவந்தி ஆதித்தனின் மறைவுக்கு, அஞ்சலி செலுத்த சென்றபோது, சென்னை போயஸ் தோட்டத்தில் இந்த சந்திப்பு, நேற்று காலை நடந்தது. அஞ்சலி செலுத்திவிட்டு, விஜயகாந்த் வெளியில் கொண்டிருந்தபோது, எதிரே, காரில் கருணாநிதி வந்தார். இருவரும், நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டனர். காரிலிருந்த, கருணாநிதிக்கு, விஜயகாந்த் வணக்கம் செலுத்த, கருணாநிதியும் பதில் வணக்கம் செலுத்தினார். அப்போது, தி.மு.க., துணை பொதுச் செயலர் துரைமுருகன் உடனிருந்தார். அண்மை காலத்தில், இரு தலைவர்களும் நேருக்கு, நேர் சந்திப்பது இதுவே முதல்முறை.
அ.தி.மு.க.,வுடன் பிளவு ஏற்பட்ட பின், தி.மு.க.,வும், தே.மு.தி.க.,வும் நெருங்கி வருகின்றன. லோக்சபா தேர்தலில், இரு கட்சிகளும் கூட்டணி அமைக்கும் என்ற பேச்சு அதிகரித்து வரும் நிலையில், இந்த சந்திப்பை, தி.மு.க., மிக முக்கியமானதாகக் கருதுகிறது.

இதனால், இச்சந்திப்பு தொடர்பான, புகைப்படத்தை, தி.மு.க.,வே வெளியிட்டும் உள்ளது. "விஜயகாந்த், எங்கள் பக்கம் இருக்கிறார்' என்ற தோற்றத்தை, தி.மு.க.,வே ஏற்படுத்தியுள்ளது. இச்சந்திப்பு பற்றி, தே.மு.தி.க., தரப்பிலிருந்து தகவல்கள் இல்லை என்பது குறிப்பிடத் தக்கது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (58)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sulo Sundar - Mysore,இந்தியா
26-ஏப்-201313:48:59 IST Report Abuse
Sulo Sundar இவர்கள் இழவு வீட்டுக்கு வந்தார்களா அல்லது அரசியல் பண்ண வந்தார்களா?
Rate this:
Share this comment
Cancel
Sankara Narayanan - Chennai,இந்தியா
25-ஏப்-201314:17:49 IST Report Abuse
Sankara Narayanan மக்களே உங்கள் அனைவருக்கும் ஒரு வேண்டுகோள் அவரவர் வேலையை அவரவர் பார்த்தல் போதும். அரசியல் அரசியல்தான் உழைத்தால் தான் முன்னேற முடியும்
Rate this:
Share this comment
Cancel
bala chandar - clementi,சிங்கப்பூர்
23-ஏப்-201308:22:05 IST Report Abuse
bala chandar போதுமடா சாமி .....கொஞ்சநாளுக்கு தமிழ் நட்ட விட்டு வைங்க இப்பதான் கொஞ்சம் சட்டம் ஒழுங்கு சரியய்கிட்டுருக்கு துல மண்ணள்ளி போடதீங்க
Rate this:
Share this comment
Cancel
maravan - dublin,அயர்லாந்து
22-ஏப்-201314:49:13 IST Report Abuse
maravan இந்த போட்டோவை பார்த்து எதுவும் எனக்கு சொல்ல தோணவில்லை....மறவன்
Rate this:
Share this comment
Cancel
LOTUS - CHENNAI,இந்தியா
22-ஏப்-201313:10:24 IST Report Abuse
LOTUS பண்பாடு தெரிந்தவர்கள், பண்பாடு மிக்கவர்கள்.... பாடுபட்டவர்கள், மெத்த படித்த medhavigal ,,,,,, மீட் பண்றது பாவமா அப்பா ? ..............
Rate this:
Share this comment
Cancel
G.Elangovan - NewDelhi,இந்தியா
22-ஏப்-201311:18:02 IST Report Abuse
G.Elangovan எதேச்சையாக நடந்த ஒரு சம்பவத்துக்கு இத்தனை அர்த்தங்களா. கலைங்கருக்கு உளவு அமைப்பா உள்ளது . யார் வழியில் உள்ளார்கள் எந்த போராட்டத்திற்கு எந்த தலைவர் எந்த வழியில் செல்கிறார் எனக்கூற. இளங்கோவன் புது தில்லி
Rate this:
Share this comment
Cancel
Raju - Auckland,நியூ சிலாந்து
22-ஏப்-201304:53:10 IST Report Abuse
Raju விஜய காந்த் முகத்தில் சிரிப்பில்லை. கரு இளிப்பதை பாருங்கள் வந்திருப்பது இழவு வீடு என்பதையும் மறந்து
Rate this:
Share this comment
Cancel
Kumaresan P - Aranthangi,இந்தியா
22-ஏப்-201301:01:22 IST Report Abuse
Kumaresan P நம்ம பெரிய அப்பாச்சி புதிய கூட்டணி அமைக்க பிளான்... பொவுண்டஷன் ரொம்ப ஸ்ட்ராங்கா போடறார் போலிருக்கு... குண்டு சட்டில குதிரை ஓட்ட எவனாவுது ஒருத்தன் கேடைசுடுறான் .. நாட்டை குட்டிசெவேரா ஆக்காம இருந்தா ரைட்..
Rate this:
Share this comment
Cancel
Neil Amstrong - delhi,அங்கோலா
21-ஏப்-201319:02:23 IST Report Abuse
Neil Amstrong பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன் ஐயனே என் ஐயனே என்று விஜய காந்திடம் கெஞ்சும் அளவுக்கு கருணாவின் நிலை வந்து விட்டது.
Rate this:
Share this comment
Cancel
Mohandhas - singapore,சிங்கப்பூர்
21-ஏப்-201314:49:41 IST Report Abuse
Mohandhas கொஞ்சம் பெரிசோட இருந்து ட்ரைனிங் எடுங்க கேப்டன்... அப்பத்தான் அரசியல் சூட்சமம் பற்றி உங்களுக்கு புரியும்.... அரசியல் நாகரிகம் ,,மேடை நாகரிகம் ,, அரசியல் உள்குத்து வேலை இதெல்லாம் தெரியலைன்னா புழக்க முடியாது
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை