E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
மலிவு விலை அரிசி விற்பனை: முறைப்படுத்த வழிமுறை வருமா?
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

மாற்றம் செய்த நாள்

22 ஏப்
2013
02:13
பதிவு செய்த நாள்
ஏப் 20,2013 23:35

திருச்சி : தமிழகத்தில் மலிவு விலை திட்டத்தில் கிடைக்கும் அரிசியை, இலவச அரிசி போல் மொத்தமாக வாங்கி, விற்க, தனியார் அரிசி வியாபாரிக்கு வாய்ப்பு கொடுக்காத வகையில், வழிகாட்டும் நெறிமுறைகளை, அரசு வகுக்கவேண்டும் என, கூட்டுறவுத்துறை அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர்.

விற்பனை மையம் :



தமிழகத்தில், அரிசி விலை, நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே போகிறது. ஒரு கிலோ, 20 ரூபாய்க்கு விற்ற அரிசி, தற்போது, 40 ரூபாய் முதல், 50 ரூபாய் வரை, விற்கப்படுகிறது. இதை கட்டுப்படுத்தும் வகையில், தமிழக அரசு, மலிவு விலை அரிசி திட்டத்தை, அமல் படுத்தியுள்ளது. அதன்படி, ஒரு கிலோ அரிசி, 20 ரூபாய்க்கு, கூட்டுறவு மையங்களில், விற்பனை செய்யப்படுகிறது. தற்போது, 100க்கும் மேற்பட்ட விற்பனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இது, 400 மையங்களாக, உயர்த்தப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

வெளிச் சந்தை :



கிலோ, 20 ரூபாய்க்கு அரசு விற்கும் அரிசி, வெளிச்சந்தையில், கிலோ, 40 ரூபாய் முதல், 50 ரூபாய் வரை, விற்கப்படுகிறது. இதனால், 20 ரூபாய் அரிசி திட்டத்துக்கு, மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பு உள்ளது. ஏற்கனவே தமிழகத்தில், கடந்த, தி.மு.க., ஆட்சியில், ஒரு ரூபாய்க்கு ரேஷன் அரிசி வழங்கப்பட்டது. அந்த அரிசி முறைகேடாக, வெளிமார்க்கெட்டுக்கு கடத்தப்பட்டு, பாலீஷ் செய்து அதிக விலைக்கு விற்கப்பட்டது. தற்போது, ரேஷன்கார்டு வைத்திருப்போருக்கு, மாதம், 20 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படுகிறது.இதை முறைகேடாக வாங்கி, அரிசி ஆலைகளில் பாலீஷ் செய்து, கிலோ, 15 முதல், 30 ரூபாய் வரை, வெளிமாநிலங்களில் மோசடியாக, விற்பனை செய்கின்றனர். இதை தடுக்க அரசு பல முயற்சிகளை எடுத்தும், அது தொடர்ந்து வருகிறது.

மோசடி:



இச்சூழலில், மலிவு விலை அரிசி திட்டம், அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்திலும் மோசடி நடக்க வாய்ப்புள்ளதாக, பொதுமக்கள் கூறுகின்றனர், மலிவு விலை அரிசியை, மொத்தமாக வாங்கி, அதிக விலைக்கு விற்க, வாய்ப்புள்ளது. எனவே, மலிவு விலை அரிசி திட்டத்தில், முறையான வழிகாட்டுதல்களை, அரசு அறிவிக்க வேண்டும் என்று கூட்டுறவு துறை அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர்.

கூட்டுறவுத்துறை அதிகாரி, ஒருவர் கூறியதாவது:

ஊழல்:



கிலோ, 20 ரூபாய்க்கு, தரமான அரிசியை வழங்குகிறோம். யார் வந்து கேட்டாலும், ஒரு கிலோ முதல், 25 கிலோ வரை, விற்க உத்தரவிடப்பட்டுள்ளது. வாங்குபவர்கள் பொதுமக்களா, வியாபாரிகளா என்பதை, கண்டுபிடிக்க முடியாது. விற்பனையில், ஊழல் நடைபெறாத வகையில், வழிகாட்டுதல்களை அரசு அறிவிக்க வேண்டும் என, எதிர்பார்க்கிறோம்.இவ்வாறு, அதிகாரி கூறினார்.


தொடர்புடைய செய்திகள்:


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (9)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
chinnamanibalan - Thoothukudi,இந்தியா
21-ஏப்-201311:18:52 IST Report Abuse
chinnamanibalan ரேசன் கடைகளில் இலவச அரிசி படும்பாட்டை அனைவரும் அறிவர். இந்நிலையில் கிலோ அரிசி ரூ.20/ க்கான திட்டம் வரவேற்கத்தக்க அருமையான திட்டம் என்றாலும் இதில் அரிசியை கடத்தி விற்பதற்கும் ,கடத்தாமல் இருந்த இடத்திலேயே விற்பதற்கும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளன .ஊழல் அதிகாரிகளை வைத்து கொண்டு அரசு இத்திட்டத்தை ஊழலின்றி செயல்படுத்துவது அவ்வளவு எளிதாக இருக்காது ...
Rate this:
0 members
0 members
3 members
Share this comment
Cancel
kumaresan.m - hochimin ,வியட்னாம்
21-ஏப்-201309:56:43 IST Report Abuse
kumaresan.m " அரசு என்னதான் சொன்னாலும் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் கேட்க போவதில்லை .......பிறகு அரசை எதிர்பார்த்தால் என்ன பயன் ?
Rate this:
0 members
0 members
5 members
Share this comment
Cancel
Nagarajan S - Chennai,இந்தியா
21-ஏப்-201309:17:54 IST Report Abuse
Nagarajan S தமிழக அரசின் மிக நல்ல திட்டம்.இந்த மலிவு விலை 20 ரூபாய் அரிசியை ஒரு குடும்பத்திற்கு 25 கிலோ வீதம் அவர்கள் ஏதாவது ஒரு அடையாள அட்டையை, ரேஷன் கார்டு, பான் கார்டு அல்லது ஆதார் அடையாள அட்டை காண்பித்தால் தான் தரமுடியும் என்று கட்டுப்பாடு விதித்து விற்பனை செய்தால், வியாபாரிகள், அரசியல் வாதிகள், கள்ளச்சந்தை பேர்வழிகள் ஆகியோர் மலிவு விலை அரிசியை வாங்கி அதிகவிலைக்கு வெளிச்சந்தையில் விற்பதை தடுக்கலாம். இதில் முக்கியமாக கூட்டுறவு துறை அதிகாரிகளும் அரசு அதிகாரிகளும், போலிசும் ஒன்றாக ஒத்துழைத்தால் மொத்தமாக வாங்கி, வெளிச்சந்தையில் அதிக விலைக்கு விற்பதை தடுக்கலாம்.
Rate this:
0 members
0 members
5 members
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
21-ஏப்-201308:58:57 IST Report Abuse
Srinivasan Kannaiya தமிழ்நாட்டில் கேட்ட விழயங்களுக்கு கிராக்கி அதிகம். திருடனாய் பார்த்து திருந்த விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது. அல்லது மக்களுக்கு விழிப்பு உணர்ச்சி வேண்டும்
Rate this:
0 members
0 members
3 members
Share this comment
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
21-ஏப்-201308:40:26 IST Report Abuse
g.s,rajan இதே போல ஒரு ரேஷன் கார்டுக்கு ஒரு கிலோ தேங்காய் எண்ணெய்,ஒரு கிலோ நல்லெண்ணெய் ,ஒரு கிலோ சுத்திகரிக்கப்பட்ட கடலை எண்ணெய் வழங்க வேண்டும் .வெளி மார்கெட்டில் மிகவும் அநியாய விலைக்கு விற்கப்படுவதால் இதை நியாமான விலையில் தரமாகவும் கொடுக்க அரசு முன்வரவேண்டும் ,பாமாயில் வேண்டும் நபர்கள் அதை வாங்கிக்கொள்ளட்டும் ,பாமாயில் வேண்டாதவர்கள் மற்ற எண்ணெய் வகைகளை வாங்கிக்கொள்ளலாம் இதை அரசு செய்யுமா ? ஜி.எஸ்.ராஜன் சென்னை .
Rate this:
0 members
0 members
18 members
Share this comment
Cancel
Swamimalai Siva - Thanjavur,இந்தியா
21-ஏப்-201307:35:44 IST Report Abuse
Swamimalai Siva இலவச அரிசி திட்ட பயனாளிகளைத் தவிர மற்ற குடும்ப அட்டை தாரர்களுக்கு மாதம் கிலோ இருபது ரூபாய்க்கு, அதிகபட்சமாக இருபது கிலோ அரிசி வழங்கினால் நல்லது
Rate this:
0 members
0 members
3 members
Share this comment
Chenduraan - kayalpattanam,இந்தியா
21-ஏப்-201308:21:56 IST Report Abuse
Chenduraanதிட்டத்தை முதலில் அறிமுகப்படுத்தும் போதே ஒரு அட்டை தாரருக்கு அதிக பட்சமாக 20 கிலோ என்று நிர்ணயித்து விட்டால் இந்த செர்கேட்டை ஓரளவு குறைக்கலாம். எல்லாவற்றிலும் குறுக்குவழியில் செல்லும் நம் மாக்களுக்கு இதுவும் ஒரு வழி. ருபாய் 20இக்கு வாங்கி 30 டு 40இக்கு விற்று லாபம் சம்பாதிப்பது கடைக்காரன் இதை ருபாய் 50இக்கு விற்று லாபம் சம்பாதிப்பது... திருந்தாத ஜன்மங்கள் ...
Rate this:
0 members
0 members
2 members
Share this comment
Cancel
naagai jagathratchagan - mayiladuthurai ,இந்தியா
21-ஏப்-201305:44:57 IST Report Abuse
naagai jagathratchagan மலிவு விலை அரிசி விற்பனை....இந்த திட்டத்திலும் மோசடி நடக்க வாய்ப்புள்ளது ...திட்டம் என்றாலே தொடர்ந்து மோசடியும் ஊழலூம் ...வரத் தான் செய்யும்.... நகமும் சதையும் போல தொடரத்தான் செய்யும் ...நிர்வாகம் சரியாக இருந்தால் போதுமா ..எல்லாவற்றிலும் அரசியல் நுழைந்தால் இப்படித்தான் கேலிக் கூத்தாக முடியும் ....
Rate this:
0 members
0 members
3 members
Share this comment
Cancel
Ab Cd - Dammam,சவுதி அரேபியா
21-ஏப்-201300:35:59 IST Report Abuse
Ab Cd இந்த பொருளாதார உலகில் எல்லோரும், ஞாய, தர்ம கணக்கு பார்க்காமல், லாப, நஷ்ட கணக்கு மட்டும் பார்க்கும் வரை எந்த ஊழலையும், முறை கேட்டையும் ஒழிக்க முடியாது.
Rate this:
0 members
0 members
24 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.