போலீசாரால் கண்காணிக்கப்படும் வட மாநிலத்தவர்கள்
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

மேற்கு வங்கத்தைச் சேர்ந்த மாவோயிஸ்ட் ஒருவர், கோவையில் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, தமிழகம் முழுவதும், வட மாநிலத்தவர்கள் தங்கியுள்ள பகுதிகளை, தமிழக போலீசார் ரகசியமாக கண்காணித்து வருகின்றனர்.

தமிழகத்தில், கட்டட பணி, ஓட்டல், ஷாப்பிங் மால்களில், அதிக அளவில், வட மாநிலத்தவர்கள், கடந்த ஐந்தாண்டுகளாக பணியாற்றி வருகின்றனர். குறிப்பாக, மேற்கு வங்கம், ஜார்க்கண்ட், பீகார் மாநிலங்களில் இருந்து, புரோக்கர்கள் மூலம், தமிழகத்திற்கு வருகின்றனர்.சென்னை உள்ளிட்ட, சில பகுதிகளில் நடந்த கொள்ளை சம்பவங்களில், வட மாநிலத்தவர் தொடர்பு இருப்பது உறுதி செய்யப்படுவதால், வட மாநிலத்தவர் குறித்த விவரங்களை போலீசார் சேகரித்து, கண்காணிக்க துவங்கிஉள்ளனர்.இந்த நிலையில், மேற்கு வங்கத்தில், 2010ல், 24 சி.ஆர்.பி.எப்., வீரர்கள் கொல்லப்பட்டதில் தொடர்புடைய, ஷியாம் சரண், 26 என்ற மாவோயிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்தவன், கோவையில் தங்கியிருப்பதாக, மேற்கு வங்க போலீசார், தமிழக போலீசுக்கு தகவல் அளித்தனர்.தொடர்ந்து, அவர்கள் அளித்த தகவல்கள் மூலம், கியூ பிரிவு போலீசார் விசாரணை நடத்தி, கோவை பீளமேடு பகுதியில் தங்கியிருந்து, தொழிற்சாலையில் பணியாற்றி வந்த ஷியாம் சரணை கைது செய்து, மேற்கு வங்க போலீசாரிடம் ஒப்படைத்தனர்.ஷியாம் சரணிடம் நடத்தப்பட்ட முதல்கட்ட விசாரணையில், அவன், மலைவாழ் மக்களுடன் வந்ததாகவும், தன்னுடன், இயக்கத்தைச் சேர்ந்த யாரும் வரவில்லை என்றும் தெரிவித்தான்.

இதை நம்பாத போலீசார், ஷியாம் தங்கியிருந்த பகுதியில் இருந்த, அவனுடன் வந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் கிடைத்த தகவல்கள் அடிப்படையில், தமிழகம் முழுவதும், உளவுப்பிரிவினர், கியூ பிரிவினர் மற்றும் உள்ளூர் போலீசார், வட மாநிலத்தவர் தங்கியுள்ள பகுதிகளில், ரகசியமாக கண்காணித்து வருகின்றனர்.மேலும், வட மாநிலத்தவரை பணிக்காக அழைத்து வரும் புரோக்கர்களிடம், சில மாதங்களாக, தமிழகத்திற்கு வந்தவர்கள் குறித்த பட்டியல் கேட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது தவிர, தமிழக எல்லையோர மாவட்டங்களில், நக்சல்கள் நடவடிக்கைகள் குறித்த கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

- நமது நிருபர்-

Advertisement

தொடர்புடைய செய்திகள்:


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (9)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kumaresan.m - hochimin ,வியட்னாம்
21-ஏப்-201310:09:42 IST Report Abuse
kumaresan.m " ஐயா கலாம் அவர்கள் சொன்னது போல் மற்றும் பல வெளிநாடுகளில் பின் பற்றுவது போல் இந்தியாவில் மிக விரைவில் ஒவ்வொரு தனி நபருக்கும் கைரேகை மற்றும் முழு விலாசத்துடன் குடியுரிமை அடையாள அட்டைகள் வழங்க படவேண்டும் " ....குற்றவாளிகளை எளிதில் அடையாளம் கண்டு கொள்ளலாம் "
Rate this:
Share this comment
Cancel
நாஞ்சில் சுலைமான் - THUCKALAY,இந்தியா
21-ஏப்-201309:35:57 IST Report Abuse
நாஞ்சில் சுலைமான் வட மாநிலத்தவர் இல்லைஎன்றால் தமிழ் நாட்டில் கட்டட வேலைக்கு ஆளே கிடைக்காது..
Rate this:
Share this comment
Global Citizen - சென்னை,இந்தியா
21-ஏப்-201319:15:25 IST Report Abuse
Global Citizenஎன்ன சார் சொல்ல வர்றீங்க? அதனால அவர்கள் குற்றச் செயல்களில் ஈடுபட்டால் பரவாயில்லை என்கிறீர்களா? ...
Rate this:
Share this comment
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
21-ஏப்-201308:31:12 IST Report Abuse
g.s,rajan வட மாநிலங்களில் போதிய வேலை வாய்ப்பு இல்லாமல் இருப்பதால் பல வடமாநிலத்தவர்கள் ,நேபாளிகள் இந்தியாவின் மற்ற பகுதிகளில் தமிழகத்தில் குறைந்த ஊதியத்திற்கு பணி புரிகின்றனர் .இங்கு உள்ளவர்கள் விலை வாசி உயர்வைக்காரணம் காட்டி அதிக ஊதியத்தை கேட்டு அடம் பிடிக்கின்றனர் சம்பளம் கட்டுப்படியாகாது என்றும் கூறி கிடைக்கும் வேலையை விட்டு விட்டு வேலை இல்லாமல் சும்மா இருக்கின்றனர் ,ஆனால் அவர்களோ பாஷை புரியவில்லை என்றாலும் இங்கு உள்ள முதலாளிகள் குறைந்த சம்பளத்தை கொடுத்தாலும் பேசாமல் வாங்கிக்கொண்டு கால நேரம் பார்க்காமல் பணி புரிவதை பல இடங்களில் பார்க்க முடிகிறது .நம் மாநிலத்தவர்கள் தங்கள் சொந்த மாநிலத்திலேயே அகதிகளாக மாறி வருவது கண்கூடு .இதில் ஒரு சில வடமாநிலத்தவர்கள் திருட்டு மற்றும் சமூக விரோத செயல்களை செய்கின்றனர் என்பதும் ,பலர் நியாயமாக இருக்கின்றனர் என்பதும் மறுக்க முடியாத உண்மை . ஜி.எஸ்.ராஜன் சென்னை .
Rate this:
Share this comment
Cancel
Pannadai Pandian - wuxi,சீனா
21-ஏப்-201308:23:32 IST Report Abuse
Pannadai Pandian இதில் வங்காளிகள் ரொம்ப டேஞ்சரானவர்கள். பல வங்காளிகள் ஏழைகள், அவர்களுக்கு தென்னகம் சம்பாத்தியத்துக்கு ஒரு வரப்ரசாதம். ஆனால் இந்த வங்காளிகளுடன் வங்கதேசிகள் ஊடுருவிடுகிரார்கள். முதலில் இவர்கள் வெளிநாட்டவர்கள் இரண்டாவது இவர்களுக்கு ISI, தீவிரவாத இயக்கங்களின் தொடர்பு இருக்கலாம். குற்றங்களை செய்து விட்டு மிக எளிதாக எல்லையை கடந்து சென்று விடலாம். பாஸ்போர்ட், விசா எதுவும் தேவை இல்லை. இந்திய பாகிஸ்தான் எல்லையை போல் முள் கம்பி வெளி அமைக்க வேண்டும். பொதுவாக பீகார், உத்திர பிரதேசம், சத்தீஸ்கர், அஸ்ஸாம், வட கிழக்கு பிரதேசங்களில் இருந்து வருபவர்கள் வேலை தேடித்தான் வருகிறார்கள். அவர்களை பதிவு செய்து ஒரு வரை முறைக்குள் கொண்டு வரவேண்டும். மேலும் அவர்களின் உழைப்பை சுரண்டுவதை அரசு தடுக்க வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
பி.டி.முருகன் - South Carolina USA,யூ.எஸ்.ஏ
21-ஏப்-201307:47:09 IST Report Abuse
பி.டி.முருகன்    ஐயோ சார். இங்கே வேலை செய்யும் வட மாநில அதிகாரிகள் எல்லாம் நல்லவர்கள். அவர்களை விட்டு விடுங்கள்.
Rate this:
Share this comment
Cancel
K.Sugavanam - Sengkang,சிங்கப்பூர்
21-ஏப்-201305:51:21 IST Report Abuse
K.Sugavanam வட மாநிலமா அல்லது கிழக்கு,வடகிழக்கு மாநிலங்களா?
Rate this:
Share this comment
Cancel
என்னுயிர்தமிழகமே - hyderabad,இந்தியா
21-ஏப்-201305:44:11 IST Report Abuse
என்னுயிர்தமிழகமே காவல் துறையினர் கண்காணிக்க போகிறார்களா? ஹ ஹ ஹ, ஜாபர் செட்டு ரேஞ்சுல தானே
Rate this:
Share this comment
Cancel
Loganathan - Madurai,இந்தியா
21-ஏப்-201304:41:17 IST Report Abuse
Loganathan மொழி பிறர்ச்சணையால் விசாரணை பணியில் சற்று தொய்வு ஏற்படும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்