இந்திய எல்லைக்குள் 10 கி.மீ., தூரம் ஊடுருவியுள்ள சீன ராணுவத்தினர்
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

புதுடில்லி : இந்திய எல்லைக்குள், சீன ராணுவத்தினர், 10 கி.மீ., தூரம் ஊடுருவி, சோதனைச் சாவடியை அமைத்துள்ள தகவல் வெளியாகியுள்ளது.

ஜம்மு - காஷ்மீரில், இந்திய - சீன எல்லையில், லடாக்கை ஒட்டியுள்ள, தவுலத் பெக் ஒல்டி என்ற பகுதிக்குள், சீன ராணுவத்தை சேர்ந்த, 50 வீரர்கள் ஊடுருவியுள்ளனர். இந்திய எல்லைக்குள், 10 கி.மீ., தூரம் வரை, ஊடுருவியுள்ள அவர்கள், சோதனைச் சாவடியையும் அமைத்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதனால், எல்லை பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து, இந்திய ராணுவ வட்டாரங்கள் கூறுகையில்," சீன ராணுவத்தின் ஊடுருவல் குறித்த தகவலால், பீதியடைய தேவையில்லை. இதுபோன்ற சம்பவங்கள், எல்லை பகுதிகளில், வழக்கமாக நடக்க கூடியது தான். எல்லை கட்டுப்பாட்டு கோட்டை, தவறாக கணிப்பதால், இது போன்ற சம்பவங்கள் நிகழ்கின்றன. தற்போதை பிரச்னைக்கு, பேச்சுவார்த்தை மூலம், சுமுக தீர்வு காணப்படும்' என்றன.

Advertisement

தொடர்புடைய செய்திகள்:


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (44)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mujib Rahman - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
22-ஏப்-201301:05:37 IST Report Abuse
Mujib Rahman நிலைமை கட்டுக்குள் இருக்கிறது ,,, ஒன்றும் கவலைப்படதேவை இல்லை
Rate this:
Share this comment
Cancel
TSRSethu - Coimbatore,இந்தியா
21-ஏப்-201318:01:38 IST Report Abuse
TSRSethu அதனால எந்த பாதிப்பும் வராதுன்னு எதாவது ஒரு மந்திரி சொல்லுவரே
Rate this:
Share this comment
Cancel
H I R A N Y A N - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
21-ஏப்-201317:40:28 IST Report Abuse
H I R A N Y A N எல்லை கோட்டை தவறாக கணிப்பதால் இந்த மாதிரி பிரச்சினைகள் வருகிறதா? ஏன் ஒரு தடவை நம் ராணுவத்தை அவர்களின் எல்லைக்கு அப்பால் அனுப்பி பாருங்களேன்? எல்லைதாண்டி போய் அடிக்க வேண்டாம் எல்லைதாண்டி வந்தவனையாவது அடிக்காவிட்டால் சீனாக்காரன் தூத்துக்குடிக்கு உப்பு சப்ளை பண்ணவான்னு கேப்பான். அடிபடாமல் ஒளிந்துகொள்வது வீரம் இல்லை. அதை நாம் முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
suppandi - chennai,இந்தியா
21-ஏப்-201315:55:58 IST Report Abuse
suppandi பிஜேபி தான் பெஸ்ட். நெக்ஸ்ட் டைம் மோடி வந்தாதான் சீனா அடிபணியும்.
Rate this:
Share this comment
Cancel
KAISAR - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்
21-ஏப்-201315:24:05 IST Report Abuse
KAISAR நிலைமையை மத்திய அரசு உன்னிப்பாக கவனித்து கொண்டு வருவதால் யாரும் பதற்றமடைய வேண்டாம்..
Rate this:
Share this comment
Cancel
K.vijayaragavan - chennai,இந்தியா
21-ஏப்-201314:32:16 IST Report Abuse
K.vijayaragavan வெறும் பனிப்ரதேசம் தானே போனால் போகட்டும். அதற்காக சீனாவோடு சண்டை போட வேண்டாம் என்று தடுத்த புண்ணியவான் நேருவின் வாரிசுகளுக்கு சீனா பாரதத்தையே பிடித்தாலும் கவலை இல்லை. சுண்டைக்காய் நாடுகள் எல்லாம் தங்களை விட பெரியநாடுகளோடு மல்லுக்குநின்று தேவைப்பட்டால் பார்டர் தாண்டி போய் அடித்து விட்டு வருகின்றன. காலடியில் கரப்பான் பூச்சி போல் கிடக்கும் இலங்கையை பார்த்து நடுங்கிக்கொண்டிருக்கும் கேவலமான காங்கிரஸ் ஆட்சியில் சீனாவை கண்டிப்பதே நடக்காது என்னும்போது சீனாவின் உள்ளே புகுந்து அதை புரட்டி அடிப்பதை கற்பனை கூட செய்ய முடியாது. ஒரு சாமானிய இந்தியனுக்கு இருக்கும் ரோஷமும்,மானமும், தேசபக்தியும் காங்கிரசுக்கோ அதன் தலைமைக்கோ கிடையாது. உண்மையிலேயே தாங்களும், தங்கள் சந்ததியும் நன்றாக இருக்கவேண்டும் என்று நினைத்தால், வர இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் இத்தாலி காங்கிரஸ் ஓட ஓட விரட்டி, உண்மையான தேச பக்தர்கள் கையில் நாட்டை ஒப்படைக்க ஒவ்வொருவரும் உறுதி ஏற்கவேண்டும். இல்லாவிட்டால், அருணாச்சல பிரதேசம், காஷ்மீர் என்று ஒவ்வொன்றாக போய், கடைசியில் ஒட்டுமொத்த பாரதமும் சீனாவுக்கு அடிமையாகும் அவலம் நேர்ந்து விடும். காங்கிரசை விரட்டுவோம் பாரத அன்னையை காப்போம் போலோ பாரத் மாதா கீ ஜெய்.
Rate this:
Share this comment
Cancel
Ambaiyaar@raja - Nellai to chennai ,இந்தியா
21-ஏப்-201312:21:49 IST Report Abuse
Ambaiyaar@raja 10 கிலோ மீட்டர் எல்லாம் ஜுஜுபி நீ இன்னும் பல கிலோமீட்டர் வந்து டெல்லியை பிடித்தால் கூட இந்த காங் அரசு நம் நாட்டின் தலை நகரை வேறு எங்காவது மாற்றுமே தவிர சண்டைக்கு போவாது. சுண்டைக்காய் நாடு இலங்கைக்கு கூட பயப்படும் நாடு நம் நாடு.
Rate this:
Share this comment
Jebamani Mohanraj - Chennai,இந்தியா
21-ஏப்-201315:49:25 IST Report Abuse
Jebamani Mohanraj10 கிலோ மீட்டர் எல்லாம் ஜுஜுபி நீ இன்னும் பல கிலோமீட்டர் வந்து டெல்லியை பிடித்தால் கூட இந்த காங் அரசு நம் நாட்டின் தலை நகரை வேறு எங்காவது மாற்றுமே தவிர சண்டைக்கு போவாது. சுண்டைக்காய் நாடு இலங்கைக்கு கூட பயப்படும் நாடு நம் நாடு.ஆம்.இலங்கைக்கு ஏன் இந்தியா பயப்படுகிறது.விடுதலைபுலி குமரன் பத்மநாதான் சொன்ன ராஜீவ் கொலை ரகசியங்கள் கைவசம் இருப்பதால் இந்தியா இலங்கையிடம் மண்டியிடுகிறது....
Rate this:
Share this comment
Cancel
Neethi Raj - Delhi,இந்தியா
21-ஏப்-201312:10:35 IST Report Abuse
Neethi Raj என்னவோ நாம் இப்படி பேசி பேசி அடுத்த வேலையை பார்க்க சென்றுவிடுவோம் ,என்பது நம் நாட்டை ஆளும் தலைவர்களுக்கு நன்றாகவே தெரியும் நமது மெமரி பவர் அடுத்த தலைப்பு செய்தி வரை மட்டுமே .
Rate this:
Share this comment
Cancel
S Rama(samy)murthy - karaikudi,இந்தியா
21-ஏப்-201311:26:02 IST Report Abuse
S Rama(samy)murthy காங்கிரஸ் அடுத்த முறை பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றால் , இன்னும் ஐந்து ஆண்டுகளில் அருனச்சல்பிரதேசம் நம் கையை விட்டு நழுவபோகிறது . சுப ராம காரைக்குடி .
Rate this:
Share this comment
Cancel
நீலகண்டன் - Chennai,இந்தியா
21-ஏப்-201311:21:35 IST Report Abuse
நீலகண்டன் சீனா தன் வர்த்தக விற்பனை பெரிதுபடுத்த இந்த வேலைகளை செய்கிறது. இதற்கு பெரும் பொறுப்பு நேரு அவர்களை சேரும் அன்றே நாம் பாகிஸ்தானிடம் சண்டை போட்டு காஷ்மீர் பகுதியை கைப்பற்றினால் இந்த ஊடுருவல் தடுத்திருக்கலாம். நாம் தாரை வர்த்த பின்பு அவன் வேலைகாட்டுக்கிறான். உண்மையில் இன்றைய நிலைமையில் சண்டை செய்வதற்கு சீனாவால் முடியாது பெரும் பாதிர்பிற்கு உள்ளாகும். சீனாவில் உள்ள கம்முனிசம் அடிவாங்கி கொண்டு உள்ளது நாட்டு மக்கள் ஜனநாயகம் வேண்டும் ஒட்டு போடும் உரிமை தேவை என்று கேட்கிறார்கள் அதனால் தான் உடைத்த புத்த கோவில்களை மீண்டும் நிறுவி கொண்டுயிருக்கிறது சீன அரசு, மக்களின் திசை திருப்ப தங்களின் மனசுமைகளுக்கு ஆறுதலுக்காக மற்றும் தங்கள் மேல் பாதிப்பு விழாமல் இருக்க இந்த ஏற்பாடு. பாகிஸ்தான் தீவிரவாதிகள் அங்கேயும் தங்கள் கைவரிசையை காண்பித்தால் இவர்கள் சும்மா விடமாட்டார்கள். அங்கே ஆரம்பிக்கும் இவர்களின் தலைவலி.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்