E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
"அக்ஷய திருதியை' தங்கம் முன்பதிவில் மக்கள் உற்சாகம்
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

மாற்றம் செய்த நாள்

21 ஏப்
2013
09:54
பதிவு செய்த நாள்
ஏப் 20,2013 23:40

அடுத்த மாதம் 12ம் தேதி, "அக்ஷய திருதியை' அன்று, தங்கம் வாங்கினால் சுபிட்சம் வரும் என்பது நம்பிக்கை. ஆனால், தற்போது குறைந்துள்ள தங்கம் விலை அப்போது எப்படி இருக்குமோ என்ற அச்சம் நிலவுவதால், தங்கம் வாங்குவதற்கான முன்பதிவு, நகை கடைகளில் இப்போதே படு ஜோராக நடந்து வருகிறது.

சென்ற, 2011ம் ஆண்டு, டிசம்பர் துவக்கத்தில், 22 காரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை, 2,750 ரூபாய் என உயர்ந்து, ஒரு சவரன், 22 ஆயிரம் ரூபாயை தாண்டியது. கடந்த ஆண்டு செப்., 8ம் தேதி, ஒரு கிராம் தங்கத்தின் விலை, 3,022 ரூபாயையும், சவரன், 24 ஆயிரம் ரூபாயையும் தாண்டியது.இந்நிலையில், சில நாட்களாக, தங்கத்தின் விலை, கடும் வீழ்ச்சியடைந்து வருகிறது. கடந்த வாரத்துடன் ஒப்பிடும் போது, தங்கம் விலை கிராமுக்கு, 300 ரூபாய் வரையிலும், சவரனுக்கு, 2,400 ரூபாய் வரையிலும் சரிவடைந்துள்ளது.

மக்கள் கூட்டம் :



விலை குறைவை சாதகமாக பயன்படுத்தி, மக்கள் வரிந்து கட்டி, தங்கம் வாங்கி வருகின்றனர். இதனால், தமிழகம் முழுவதும் உள்ள நகை கடைகளில், மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது.சில மாதங்களுக்கு முன்பு வரை, தங்கத்தின் விலை உயர்ந்து காணப்பட்டதால், அதன் விற்பனை மதிப்பு தான், அதிகரித்ததே தவிர, விற்பனை அளவு குறைந்திருந்ததாகவும், தற்போது, விலை குறைவால், மக்கள் குறைந்தபட்சம், ஒரு சவரனாவது, தங்கம் வாங்கி வருவதாகவும், நகை கடை உரிமையாளர்கள் தெரிவித்தனர்.வெள்ளியன்று, ஒரு கிராம் தங்கத்தின் விலை, 2,466 ரூபாய்க்கும், ஒரு சவரன், 19,728 ரூபாய்க்கும் விற்பனையாகின. வரும் "அக்ஷய திருதியை' அன்று, ஒரு கிராம் தங்கம் விலை, 2,500 -2,550 ரூபாய் என்ற அளவில் இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

ஆண்டுதோறும், "அக்ஷய திருதியை' தினத்தன்று, நாடு தழுவிய அளவில், தங்கம் விற்பனை, சராசரி விற்பனையை விட, ஐந்து மடங்கு அதிகரிக்கும் என்ற மதிப்பீடு உள்ளது. சென்ற 2011ம் ஆண்டு, "அக்ஷய திருதியை' அன்று, சென்னையில், 700 கிலோ தங்கம் விற்பனையானது. அப்போது, இதன் மதிப்பு, 154 கோடி ரூபாய் (ஒரு கிலோ தங்கம் - 22 லட்சம் ரூபாய்). கடந்த ஆண்டும், விற்பனை இதே மதிப்பில் இருந்தது. இதன் மதிப்பில் மட்டும் மாற்றம் (ஒரு கிலோ தங்கம் - 28 லட்சம் ரூபாய்) காணப்பட்டது.

முன்பதிவு:



தற்போது, ஒரு கிலோ தங்கம் விலை, 24 - 25 லட்சம் ரூபாய் என்ற அளவில் உள்ளது. கடந்த ஆண்டை விட, இவ்வாண்டு விலை, அதிகளவு குறைந்துள்ளதால், மே 12ம் தேதி, "அக்ஷய திருதியை' அன்று, தங்கம் வாங்குவதற்காக தற்போதே, கடைகளில் முன்பதிவு நடந்து வருகிறது. அதாவது, முன்பதிவு செய்யும் நாள் அன்று, எந்த விலையில் தங்கம் விற்கப்படுகிறதோ, அதே விலையில் தேவையான அளவு தங்க நகைகளை முன் பதிவு செய்து கொள்ளலாம். அக்ஷய திருதியை நாள் அன்று, அந்த நகைகளை வாங்கிக் கொள்ளலாம். நேற்றைய நிலவரப்படி, "அக்ஷய திருதியை' அன்று விற்பனையாகும் என, எதிர்பார்க்கப்பட்ட மொத்த தங்கம் விற்பனையில், 50 சதவீதம் வரை முன்பதிவு நடந்துள்ளது.

இதுகுறித்து, சென்னை தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்கத்தின், தலைவர், ஜெயந்திலால் சலானி கூறியதாவது:
குறைந்த விலையில் தங்கம் விற்பனை செய்ய வேண்டும் என்பதே எங்களின் விருப்பம். அப்போது தான், நடுத்தர மக்கள் அதிகளவில் தங்கம் வாங்குவர். நாங்கள், விரும்பியபடி தற்போது தங்கம் விலை குறைந்து உள்ளது. இதை சாதகமாக பயன்படுத்தி, "அக்ஷய திருதியை' அன்று, தங்கம் வாங்க, தற்போதைய விலையிலேயே, வாடிக்கையாளர் பணம் கட்டி, முன்பதிவு செய்து வருகின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.

- நமது நிருபர் -


தொடர்புடைய செய்திகள்:


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (17)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
prathiba - kumbakonam,இந்தியா
24-ஏப்-201316:02:08 IST Report Abuse
prathiba ithu thamilar pandikai dhinam alla thanga viyabharegalin kollai dhinam. so be careful guys.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
chit ra - Andaman,இந்தியா
21-ஏப்-201313:16:51 IST Report Abuse
chit ra நகை வாங்க கிரடிட் கார்டியோ இல்லை செக்கையோ கொடுத்தால் (கிளியர் ஆனா பின்பு நகை வாங்க ஒப்புதல் அளித்தாலும்) ஏன் விற்க முன்வருவதில்லை. அதிலும் செக்கை தனிநபர் பெயரில் கொடுக்க வேண்டுமாம். அப்போ விற்பது என்ன திருட்டு தங்கமா. மேலும் 2009க்கு பிறகு அதிகரித்து வரும் ஸ்ரீலங்கா (ஈழதமிழர்களிடம் இருந்து திருடியது) திருட்டு தங்கம் அடிக்கடி ஆசன மற்று இன்னபிற வாய்களில் மூலம் கடத்தப்பட்டு வரும் தங்கம் எனப்படும் பாவங்களை முகத்திலும் மேனியிலும் அணிவது உருத்தாமலா இருக்கும். அடுத்தவர் பாராட்டவேண்டும் என்பதற்காக செய்யப்படும் செலவுகளில் மிகவும் கவனம் தேவை.
Rate this:
3 members
0 members
7 members
Share this comment
Cancel
chit ra - Andaman,இந்தியா
21-ஏப்-201313:11:52 IST Report Abuse
chit ra எனக்கு ஒரு டவுட்டு - கிரடிட் கார்டு அல்லது செக் கொடுத்து அது கிளியர் ஆனா பின்பு (பாங்குல பணம் இருக்குங்க) நகை வாங்கலாம் என்று சென்றால் ஒத்துகொள்ள மாட்டேன்கிறார்கள். செக்கை கடை பேரில் கொடுக்க கூடாதாம். அப்போ விக்குறது என்ன திருட்டு நகையா ? சரி அத விடு - ஸ்ரீலன்காவுலேர்ந்து (தமிழர்களிடம் கொள்ளை அடித்து ஆசன மற்று இன்ன பிற வாய்களில் வைத்து) கடத்தப்பட்டு வரும் நகைகளை (கன்றாவி) கழுத்திலும் முகத்திலும் அணிவது ஒன்றுதான் அழகோ - அடுத்தவர் பாராட்டவேண்டும் என்பதற்காக செலவிடுவதில் மிகவும் கவனம் வேண்டும்.
Rate this:
2 members
0 members
6 members
Share this comment
NO H8 சத்தி - Bangalore,இந்தியா
21-ஏப்-201314:14:57 IST Report Abuse
NO H8 சத்திசித்ரா, நீங்க சொல்றது எத்தன பேத்துக்கு ஓரச்சுசோ தெரியல, இப்பவெல்லாம் பெண்கள் ரொம்ப தெளிவா இருக்காங்க :D கீப் இட் அப்...
Rate this:
2 members
1 members
1 members
Share this comment
NO H8 சத்தி - Bangalore,இந்தியா
21-ஏப்-201314:21:06 IST Report Abuse
NO H8 சத்திஎடைக்கு எட தங்கம் வாங்கலாம்னு பிளான், அங்க எப்படி ஹிஹிஹி ? , வரதட்சணை ஒழிந்தால் தங்கம் பயன்பாடு குறையுமா ? அல்லது பெண்கள் மனசு வெச்ச தா கொறயுமா? என்னத்த சொல்ல சில ஆண்கள் ஒரு தமிழ் தொலை காட்சி நிகழ்ச்சியில் சைக்கில் செயின் ரேஞ்சுக்கு போட்ருந்தது நினச்சா இன்னமும் சிரிப்பு சிருப்பா வருது....
Rate this:
2 members
1 members
4 members
Share this comment
Cancel
Erode kingcobra - erode,இந்தியா
21-ஏப்-201311:45:10 IST Report Abuse
Erode kingcobra இந்த முறை வருமான வரித்துறை எல்லா நகை கடைகளில் சேல்ஸ் மானாக வருவதாக திட்டம் உள்ளது.மக்களே மிகவும் கவனமாக இருக்க வேண்டும் உஷார் உஷார் """""""""""
Rate this:
0 members
1 members
9 members
Share this comment
Cancel
News Commitor - chennai,இந்தியா
21-ஏப்-201311:01:13 IST Report Abuse
News Commitor இதுல இருந்து என்ன தெரியுது? நாய் வால நிமுத்த முடியாது.
Rate this:
0 members
0 members
12 members
Share this comment
Cancel
kumaresan.m - hochimin ,வியட்னாம்
21-ஏப்-201309:46:57 IST Report Abuse
kumaresan.m ஆஹா ..ஆஹா...அருமை என்ன ஒரு அற்புதம் தமிழ் நாட்டில், ஒருபுறம் மகளிர்கள் தங்க நகை கடைகளில் ...மற்றொரு புறம் ஆடவர்கள் அரசு டாஸ்மாக் கடைகளில் என்னே ஒரு பொருத்தம் "
Rate this:
0 members
0 members
12 members
Share this comment
Cancel
நாஞ்சில் சுலைமான் - தோஹா,கத்தார்
21-ஏப்-201309:32:22 IST Report Abuse
நாஞ்சில் சுலைமான் சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பு வரை அட்ஷய திரிதியை அன்று தங்கம் வாங்கும் பழக்கம் இருந்ததாக தெரிய வில்லை...இது நகை வியாபாரிகள் தங்கத்தை அதிகம் விற்பதற்கு தேர்ந்தெடுத்த ஒரு விளம்பர உத்தி என்றே எண்ணத்தோன்றுகிறது..
Rate this:
0 members
0 members
23 members
Share this comment
Cancel
செந்தமிழ் கார்த்திக் - NamakkaL to ChennaI,இந்தியா
21-ஏப்-201309:17:17 IST Report Abuse
செந்தமிழ் கார்த்திக் இன்னும் தங்க விலை குறையுமாம :) எங்க வீட்டுல ஒரே ஆர்பாட்டம் தான்... ஒன்னும் சொல்ல முடியல..
Rate this:
0 members
0 members
12 members
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
21-ஏப்-201308:48:14 IST Report Abuse
Srinivasan Kannaiya தங்கம் வாங்குங்கள் வேண்டாம் என்று சொல்லவில்லை. இந்த நாளில் எதாவது ஒரு அனாதைகள் இல்லம், முதியோர் இல்லம் அல்லது வாய் இல்லா ஜீவன்களை வைத்துள்ள இடங்களுக்கு சென்று ஒரு வேலை உணவு அளித்து வாருங்கள். அதில் கிடைக்கும் சந்தோழமே சந்தோழம்தான்
Rate this:
0 members
0 members
12 members
Share this comment
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
21-ஏப்-201308:18:24 IST Report Abuse
g.s,rajan இந்தியாவிலும் வெளிநாட்டிலும் உள்ள கறுப்புப்பணத்தைக் கைப்பற்றினால் தங்கம் விலை இந்தியாவில் நிச்சயம் வெகுவாகக்குறையும்.நேர்மையான முறையில் கஷ்டப்பட்டு சம்பாதித்து தங்கம் வாங்கும் நபர்கள் மிகவும் குறைவே .வரி ஏய்ப்பு மற்றும் வாராக்கடன்களும் தங்கத்தில் மறைமுகமாக பதுக்கப்பட்டு வருவதால் தான் தங்கத்தின் விலை எகிறிவருகிறது .தங்கம் வாங்குபவர்களிடம் அவர்கள் வருமானம் ஈட்டியதற்க்கான சான்று ,வழியைக்கேட்டு விசாரணை செய்தால் உண்மை வெளிப்படும் அப்படி செய்தால் மட்டுமே வருமான வரித்துறையின் மீது அனைவருக்கும் ஒரு பயம் வரும்.கணக்கில் காட்டப்படாத பணம் தங்கத்தில் முதலீடு செய்யப்படுகிறது .இதனை கண்காணித்து தடுத்தால்,கெடுபிடி செய்தால் தங்கம் விற்பனை கட்டாயம் குறையும் விலையும் வேறு வழியின்றி வியாபாரிகளால் குறைக்கப்படும் ,இல்லையேல் நடுத்தர மக்கள் வியாபாரிகளின் தந்திர வலையில் வழக்கம் போல விழுந்து விடுவர் . ஜி.எஸ்.ராஜன் சென்னை .
Rate this:
0 members
0 members
38 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.