karunanidhi upset over stalin | ஸ்டாலின் முடிவுகள் தி.மு.க.,வுக்கு பாதகமா? கருணாநிதி அதிருப்தி| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஸ்டாலின் முடிவுகள் தி.மு.க.,வுக்கு பாதகமா? கருணாநிதி அதிருப்தி

Added : ஏப் 20, 2013 | கருத்துகள் (69)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
ஸ்டாலின் முடிவுகள் தி.மு.க.,வுக்கு பாதகமா? கருணாநிதி அதிருப்தி

தன்னிச்சையாக, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் எடுக்கும் முடிவுகளும், அவரது பேச்சும், கட்சிக்கு சாதகமாக அமையாமல், பாதகத்தை உருவாக்குவதால், அவர் மீது, தி.மு.க., தலைவர் கருணாநிதிக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளது என, அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சமீபத்தில் மதுரைக்கு சென்ற ஸ்டாலின், முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி வீட்டிற்கு சென்று, அவரை சந்தித்து பேச வேண்டும் என, கருணாநிதி விடுத்த கோரிக்கையை ஏற்காமல், அழகிரியை சந்திக்காமல், மதுரை சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு, சென்னை திரும்பினார்.தன் பேச்சை ஸ்டாலின் கேட்கவில்லை என்ற ஆதங்கம் கருணாநிதிக்கு ஏற்பட்டது. இந்த நிலையில் காங்கிரசுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை என, ஸ்டாலின் பேசியதும், கருணாநிதிக்கு கூடுதல் அதிருப்தியை அளித்துள்ளது.

காங்கிரசுடன் கூட்டணி வைக்கவில்லை என்றால், பா.ஜ.,வுடன் - தி.மு.க., கூட்டணி வைக்க முடியுமா? எதற்காக ஸ்டாலின் இப்படி பேச வேண்டும். லோக்சபா தேர்தலில், இலங்கை தமிழர் பிரச்னை விஸ்வரூபம் எடுக்காமல் இருந்தால், மதவாத சக்தியை முறியடிப்பதற்கு, காங்கிரஸ் கூட்டணியில் தி.மு.க., சேருவதற்கு வாய்ப்பு ஏற்படும். எனவே, காங்கிரசை ஏன் வீணாக பகைத்துக் கொள்ள வேண்டும். கூட்டணிக் கதவை மூடி வைக்க வேண்டிய அவசியமில்லை என, தி.மு.க., இரண்டாம் கட்டத் தலைவர்கள் சிலர் கருதுகின்றனர்.

சென்னை உள்நாட்டு விமான நிலையத்தின் இரண்டாவது முனையத்துக்கு, எம்.ஜி.ஆர்., பெயரைச் சூட்ட வேண்டும் என, சட்டசபையில் தீர்மானம் கொண்டு வந்து, ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றிய போது, தி.மு.க., தரப்பில் யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஸ்டாலின் அத்தீர்மானத்தை வரவேற்றதும், கருணாநிதிக்கு பிடிக்கவில்லை. உடனடியாக, "மறைந்த தலைவர்களுக்கு மாசு கற்பித்தல் கூடாது' என்ற தலைப்பில், எம்.ஜி.ஆர்., பெயர் சூட்டுவதால் குழப்பம் ஏற்படும் என்ற அறிக்கையை கருணாநிதி வெளியிட்டார்.

தே.மு.தி.க., உடன் கூட்டணியும் எதிர்காலத்தில் உருவாகவில்லை என்றால், காங்கிரஸ் கூட்டணியும் கைவிட்டு விட்டால், தி.மு.க.,வுக்கு பின்னடைவு ஏற்படும் என, கருணாநிதி தரப்பு கருதுகிறது.சட்டசபையில், சென்னை விமான நிலையத்திற்கு எம்.ஜி.ஆர்., பெயர் சூட்டுவதற்கு, ஸ்டாலின் வரவேற்றதும், கருணாநிதிக்கு பிடிக்கவில்லை. காமராஜரை ஆதரிப்பதால், தென் மாவட்டங்களில் காமராஜர் மீது அன்பு கொண்டவர்களின் ஓட்டுகள் தி.மு.க.,வுக்கு கிடைக்கும். ஆனால், எம்.ஜி.ஆரை ஆதரிப்பதால், தி.மு.க.,வுக்கு எந்த லாபமும் இல்லை என, கருணாநிதி தரப்பு கருதுகிறது. அதனால் தான், தன்னிச்சையாக ஸ்டாலின் எடுக்கிற சில முடிவுகள், கட்சிக்கு பாதகமாக அமைகின்றன. எனவே, அவர் கட்சியின் மூத்த தலைவர்களிடம் ஆலோசனை நடத்தி, முடிவு எடுக்க வேண்டும். அனைவரையும் ஸ்டாலின் அரவணைத்து செல்லும் மனப்பக்குவத்தை அடைய வேண்டும் என, தனக்கு நெருக்கமானவர்களிடம் கருணாநிதி ஆதங்கப்பட்டுள்ளார்.இவ்வாறு, கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

-நமது நிருபர்-

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (69)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raju Rangaraj - Erode,இந்தியா
26-ஏப்-201310:25:11 IST Report Abuse
Raju Rangaraj உமக்கு டப்பிங் எழுதித்தர சண்முகசுந்தரம் இருப்பது போல் ஸ்டாலினுக்கும் ஒருவரை ஏற்பாடு செய்து விட்டால் இந்த பிரச்னை வராது. தலைவர் பதவியை ஸ்டாலினுக்கு கொடுத்து விட்டு நீங்கள் கவுரவமாக ஒதுங்கலாம்.. பத்திரிக்கைகாரர்கள் ஸ்டாலினை நெறி படுத்தி விடுவார்கள்....காங்கிரசோடு கூட்டணி இல்லை என்றால் ஒன்றும் ஆகாது. விஜயகாந்த்துக்கு விழுந்த ஓட்டுக்கள் உமக்கு எதிராக விழுந்தவையே. அவரோடு கூட்டணி என்றால் அந்த ஓட்டுக்கள் ஜெயா அம்மையார்க்கு போய்விடும். ஆனால் விஜயகாந்தை ஒழிக்க இதைவிட சுலபமான வழி வேறில்லை''''நீர் ராஜதந்திரி அய்யா
Rate this:
Share this comment
Cancel
DAVID MC - CHENNAI,இந்தியா
22-ஏப்-201311:51:27 IST Report Abuse
DAVID MC மற்ற உறுப்பினர்களை சஸ்பென்ட் செய்ததால் தான் சட்டசபைக்குள் போகவில்லை என்று கூறுகிறார் ஸ்டாலின். கடந்த காலங்களில் ஒன்றிரண்டு சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்டிருந்தபோதும், பரிதி இளம்வழுதி போன்றவர்கள், தனி ஆளாக நின்று சட்டசபையில் தி.மு.கவின் குரலை ஓங்கி ஒலித்திருக்கிறார்கள். மு.க.ஸ்டாலின் சிறந்த பேச்சாளர், வாத திறமையாளர் என்றால் சட்டசபைக்குச் சென்று பேசி அல்லவா இருக்க வேண்டும். அது இவருக்கு சுத்தமா வராது. துரைமுருகன் பேசுகின்ற பேச்சில் இவருக்கு பாதிகூட கிடையாது. அதனால் தான் அவரை துணைக்கு வைத்து இருக்கின்றார். ஸ்டாலின் தன்னுடைய திறமையை வளர்த்துக்கொண்டு சட்டசபையிலும் செயல்படவேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
Donald Raj - Tuticorin,இந்தியா
21-ஏப்-201316:13:43 IST Report Abuse
Donald Raj இதுவறை இலங்கை தமிழர்களை, ஆதரித்தவர்கள், கட்சி தமிழ்நாட்டில் வெற்றி பெட்டதிலை. - இது சரித்திரம் மற்றும் நடந்தது. என்னவே எம்மந்து போகாதீர்கள்.
Rate this:
Share this comment
Cancel
Venkat - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
21-ஏப்-201315:16:47 IST Report Abuse
Venkat அழக்ரீகு தான் உங்கள் ராஜதந்திரம் இருகு ஸ்டாலின்கு பேப்பர்ல எழுதி குடுதா படிக்கச் தெரியும் புருஞ்சிகொங்க தலைவர
Rate this:
Share this comment
Cancel
தமிழ் குடிமகன் - போயஸ்கார்டன் ,இத்தாலி
21-ஏப்-201315:02:36 IST Report Abuse
தமிழ் குடிமகன் நல்லவனெல்லாம் நரகத்துக்கு போறான் ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,????????????????????????
Rate this:
Share this comment
Pannadai Pandian - wuxi,சீனா
21-ஏப்-201319:23:16 IST Report Abuse
Pannadai Pandianரொம்ப எக்சைட்மெண்ட்டா இருக்கு.....முழுசா சொல்லி முடிச்சுடுங்க....
Rate this:
Share this comment
Cancel
MUTHUKUMAR S - CHENNAI,இந்தியா
21-ஏப்-201314:23:05 IST Report Abuse
MUTHUKUMAR S அரசியலில் 60 ஆண்டுகால அனுபவம் கொண்டு கட்சியை நடத்திச் செல்லும் கருணாநிதியை அருகிலிருந்து கவனிக்கும் ஸ்டாலின், கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கும் மேல் அரசியலில் பல்வேறு பொறுப்புகளை வகித்து அனுபவம் பெற்றபின்னரும் கூட, அரசியலில் பக்குவப்படவில்லை என்றுதான் கூறவேண்டும். கட்சிக்குள் எல்லோரையும் அனுசரித்துச் செல்லாமல் ஒரு கோஷ்டி மனப்பான்மையுடன் நடப்பத் அவருக்கும், தி.மு.க வின் எதிர்காலத்திற்கும் நல்லதல்ல. அதுபோல சட்டசபையிலும் அவருடைய ஆற்றல் வெளிப்படவில்லை. எதிரிக்கட்சியாக இருக்கும் தே.மு.தி.மு க வில் அதன் தலைவர் விஜயகாந்த் சட்டசபைக்கு வராத நிலையில், ஸ்டாலினுக்கு சட்டசபையில் தனது ஆற்றலை வெளிப்படுத்த நல்ல சந்தர்ப்பம் உள்ளது. ஆனால் அதனையும் ஸ்டாலின் வீனடித்துக்கொண்டிருப்பதுதான் வேதனை.
Rate this:
Share this comment
Cancel
amukkusaamy - chennai,இந்தியா
21-ஏப்-201313:33:47 IST Report Abuse
amukkusaamy பெற்ற தந்தை என்ற மரியாதையை விட திமுகாவின் தலைவர், அதன் பல்லாயிரம் கோடிக்கு நீர் அதிபதியாய் இருப்பதால்தான் இந்த அளவுக்காவது மரியாதை...புரியுதா பெருசு? அதாலதான அத விட்டுக்கொடுக்காம நீரும் இருக்கீரு...என்ன நான் சொல்லறது சரிதானே?
Rate this:
Share this comment
Cancel
KMP - SIVAKASI ,இந்தியா
21-ஏப்-201312:36:00 IST Report Abuse
KMP எம் ஜி ஆர் பெயர் வைத்தால் அது காமராஜரை புறக்கணிப்பது போல ஆகிவிடும் .... அரசியல் வாதிகள் பெரிய தலைவர்களை வைத்து அரசியல் தான் செய்கிறார்கள் அவர்களையும் அரசியல் பொருள் ஆக்கிவிட்டார்கள் ...மிகவும் வருத்தமாக உள்ளது ... தி மு க இதற்க்கு குரல் கொடுக்காமல் உள்ளது புரியவில்லை
Rate this:
Share this comment
Cancel
vandu murugan - chennai,இந்தியா
21-ஏப்-201312:34:42 IST Report Abuse
vandu murugan தினமலர் ஆசிரியர் அவர்களே முதற்கண் வணக்கம் இரண்டவது கண் என்னன்னா மக்களுக்கு பயன் படுகிற மாதிரி நியூஸ் போடுங்க இந்த ஆட்சில் எந்த குறையும் இல்லையா இந்த ஆட்சில் இருக்கும் குறைகள் அவலங்களை எடுத்து நியூஸ் போடுங்கள் அரசுக்கு அறிவுரை கூறுங்கள் அதான் போன ஆட்சிய் வீட்டுல உட்கார வச்சிட்டோம் இப்படி நியூஸ் போட்டு போட்டு இந்த ஆட்சியையும் உட்கார வசிடடிங்க நண்பனே நண்பனே நண்பனே ............. என்ன புரியுதா ஆசிரியரே இப்படிக்கு உங்கள் மாணாக்கன்
Rate this:
Share this comment
Cancel
Anniyan Bala - Chennai,இந்தியா
21-ஏப்-201311:03:56 IST Report Abuse
Anniyan Bala பேசாம தங்களின் பெயரை விமான நிலையத்திற்கு வழி மொழியலாமா? நீங்கள் தான் தியாக சுடர் ஆயிற்றே.
Rate this:
Share this comment
Pannadai Pandian - wuxi,சீனா
21-ஏப்-201312:51:00 IST Report Abuse
Pannadai Pandianமுள்ளி வாய்க்காலுக்கு பதில் கருணா வாய்க்கால் என்று பெயர் வைக்கலாம். மக்கள் மனதில் நிறைஞ்சு இருக்கும்....
Rate this:
Share this comment
villupuram jeevithan - villupuram,இந்தியா
21-ஏப்-201319:27:53 IST Report Abuse
villupuram jeevithanVery good Mr Pandian....
Rate this:
Share this comment
Raju Nellai - coimbatore,இந்தியா
22-ஏப்-201309:25:01 IST Report Abuse
Raju Nellaiபாண்டியன் சார், நல்ல பொருத்தம்.இரு கருனாக்களின் நினைவாக அந்த பெயரையே வைக்கலாம்.....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை