படிக்காதவன் வாழ்வதற்கு நிறைய போராட வேண்டும்
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

"கத்தியை தீட்டாதே... உந்தன் புத்தியை தீட்டு' பாடலை அறியாதோர் இருக்க முடியாது. தீட்டுதல் என்றவுடன், சாணை பிடிக்கும் கருவியும்,அதை சுமந்து திரியும் தொழிலாளியும் ஞாபகத்துக்கு வராமல் இருக்க முடியாது.நவீன தொழில்நுட்ப வாழ்க்கையில், எல்லாமே, "யூஸ் அண்டு த்ரோ' ஆகி விட்ட நிலையில், இன்றைக்கும் ஓரளவு, சாணை பிடிப்போருக்கு தொழில் வாய்ப்புகள் இருக்கத்தான் செய்கின்றன.
காய்கறி வெட்டும் சிறு கத்தி முதல் இளநீர் சீவும் அரிவாள் வரை சாணை பிடிக்க ஊர் ஊராக சுற்றி திரியும் ஏழை தொழிலாளி அப்துல் முனாப், ""என் புத்தியை தீட்ட இளம் வயதில் பாடப் புத்தகத்தை சுமக்காததால், இன்று சாணை பிடிக்கும் கருவியை சுமந்து திரிகிறேன்,'' என, என்று தம் வாழ்க்கையின் வலியை நம்முடன் பகிர்ந்து கொண்டார்.

உங்களை பற்றி சொல்லுங்கள்?
நான் அப்துல் முனாப், 42. திருவள்ளூர் மாவட்டம் வெங்கல் ஏரிக்குப்பம் தான் என் சொந்த ஊர். எனக்கு மனைவி, ஒரு மகள், மகன் இருக்கின்றனர்; குழந்தைகள் படிக்கின்றனர்.
படிக்காதவன் வாழ்வதற்கு நிறைய போராட வேண்டும். நான் அப்படித்தான் போராடி கொண்டிருக்கிறேன். என் மகனை நன்றாக படிக்க வைப்பேன். நாலு பேருக்கு படிப்பு சொல்லி தரும் வாத்தியார் வேலைக்கு அவன் போக வேண்டும் என்பது என் ஆசை. கடவுள் ஆசியிருந்தால் அது நடக்கும்.

இந்த தொழிலில் போதுமான வருமானம் கிடைக்கிறதா?
நான் படிக்கவில்லையே தவிர, உழைக்க தயங்குவதில்லை. கடந்த, 20 ஆண்டுகளாக இந்த தொழில் செய்து வருகிறேன். அதற்கு முன், அவ்வப்போது கிடைத்த வேலைகளை செய்து வந்தேன்.ஒவ்வொரு பகுதிக்கும் மூன்று அல்லது நான்கு நாட்கள் போவேன். 30 கிலோ உள்ள இந்த கருவியை தூக்கி கொண்டு, காலை முதல் பகல் வரை தினமும், 40, 50 கி.மீ., சுற்றுவேன். காய்கறி வெட்டும் ஒரு சிறிய கத்திக்கு, 10 ரூபாய், அரிவாள் மனைக்கு, 20 ரூபாய், துணி வெட்டும் கத்திரிக்கு, 30 ரூபாய், இளநீர் வெட்டும் கத்திக்கு, 40 ரூபாய் வீதம் சாணை பிடிக்க கூலி வாங்குகிறேன்.ஒரு நாளைக்கு, 300 முதல் 400 ரூபாய் வரை கிடைக்கிறது. ஒரு சில நேரம், 50 - 100 ரூபாய் மட்டுமே கிடைக்கும்.

இந்த தொழிலில் எத்தனை பேர் உள்ளனர்? இதற்கு வரவேற்பு இருக்கிறதா?
அதை சரியாக சொல்ல முடியாது. என்னை போல் இன்னும் சிலர் வேறு பகுதிகளில் இருக்கலாம். ஆனால், நிச்சயம் இந்த தொழிலுக்கு வரவேற்பு இருக்கிறது.காய்கறி வெட்டுவதற்கு என்னதான் மிஷின்கள் வந்தாலும் கத்திக்குத் தான் முதலிடம். நாகரிகம் வளர்ந்தாலும் நம்முடைய வாழ்க்கை முறை இறைவன் வகுத்தது. அதனால் பழமையான தொழில்கள் குறையுமே தவிர, மறையாது.

சுமை, அலைச்சலால் இந்த தொழிலை வெறுத்தது உண்டா?
வெறுக்கின்ற அளவுக்கு இது கஷ்டமான, கேவலமான தொழில் கிடையாது. கவுரவமான தொழில்தான்.

அப்படி என்றால் ஏதாவது ஒரு பகுதியில் கடை அமைத்து இந்த தொழிலை செய்யலாமே ?
ம்... அதற்கு கடைக்கான முன் பணம், மாத வாடகை, மிஷின்கள், அவற்றின் பராமரிப்பு, ஆட்கள் சம்பளம் என, கூடுதலாக பணம் தேவைப்படுமே!இந்த தொழிலை மற்றவர்களுக்கு கற்று தருவீர்களா?இப்போதுள்ள விலைவாசி உயர்வு, சொகுசு வாழ்க்கையில் இந்த தொழிலை யாராவது கற்று கொள்ள ஆசைப்படுவார்களா?

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (5)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Syed Kader - Ramanathapuram ,இந்தியா
21-ஏப்-201316:21:32 IST Report Abuse
Syed Kader இதுதான் வாழ்கை
Rate this:
Share this comment
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
21-ஏப்-201316:01:10 IST Report Abuse
g.s,rajan பழமையை ஊக்குவிக்க மக்கள் முன்வரவேண்டும் ஆதரிப்பீர்கள் இத்தகைய தொழிலை ,பாவம் அன்றாட ஜீவனத்திற்கே கஷ்டப்படும் இவரைப்போன்றவர்களுக்கு மக்களே ஆதரவு தாருங்கள் ஜி.எஸ்.ராஜன் சென்னை .
Rate this:
Share this comment
Cancel
kumaresan.m - hochimin ,வியட்னாம்
21-ஏப்-201310:21:44 IST Report Abuse
kumaresan.m " நம் நாட்டில் முற்போக்கு சிந்தனை இல்லாமல் செயல்படும் அரசு மற்றும் அரசியல் வாதிகளால் கூடிய விரைவில் படித்தவர்களின் வாழ்க்கையும் போராட்ட நிலைமைக்கு தள்ளப்படும் என்பதில் யாருக்கும் டௌட்டே இருக்க முடியாது "
Rate this:
Share this comment
Cancel
Vaduvooraan - Chennai ,இந்தியா
21-ஏப்-201306:13:32 IST Report Abuse
Vaduvooraan ஐந்து நிமிஷம் மின் தட்டுப்பாட்டினால் ஏசி ஓட வில்லை என்றால் ஆ ஊ என்று அங்கலாய்க்கிறோம் நமது நாட்டையும் அரசையும் அதிகாரிகளையும் திட்டி தீர்க்கிறோம் விதியை நொந்து கொள்கிறோம். முப்பது கிலோ கருவியை சுமந்துகொண்டு வீதி வீதியாக வயிற்றைக் கழுவ நடந்து தேயும் இவர்கள் வாழ்க்கை நமக்கு பெரிய படிப்பினை அல்லவா? இவர்கள் உடலும் மனதும் தேயாது உழைக்க வைப்பது நம்பிக்கை என்கிற சாணைக்கல் தானோ?
Rate this:
Share this comment
sumathi - coimbatore,இந்தியா
21-ஏப்-201318:58:55 IST Report Abuse
sumathi"தன்னம்பிக்கை" மனதில் இருந்தால் போதும்.. உழைப்பை ஏணியாக்கி "வெற்றி" எனும் சிகரத்தை எளிதில் எட்டி விடலாம்.. என்பதற்கு இவரே முன் உதாரணம்... சுமதி. சு , கோவை ...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்