வீட்டில் உருவாக்கலாம் குப்பை மாற்று தொழிற்சாலை| Dinamalar

வீட்டில் உருவாக்கலாம் குப்பை மாற்று தொழிற்சாலை

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement
வீட்டில் உருவாக்கலாம் குப்பை மாற்று தொழிற்சாலை

சென்னையில், குப்பை பிரச்னை நாளுக்கு நாள் அதிரிகத்து வருகிறது. குப்பையில் இருந்து மின்சாரம் மற்றும் உரம் தயாரிக்கும் குப்பை மாற்று திட்டத்தை செயல்படுத்த, மாநகராட்சி முயன்று வருகிறது.மேலும், மக்கும் குப்பை, மக்கா குப்பை தொட்டிகள் வைத்து, குப்பை சேகரிக்கும் முயற்சியும் ஒரு பக்கம் நடந்து வருகிறது. குப்பை பிரச்னைக்கு, மாநகராட்சி போன்ற பெரிய நிர்வாகம் மட்டுமேயல்லாமல், ஒவ்வொரு தனி மனிதனாலும் தீர்வு அளிக்க முடியும்.தனி நபர் நினைத்தால், குப்பையால் உருவாகும் சமூக கெடுதலை குறைக்க முடியும் என்பதை நிரூபிக்கும் வகையில், ஆதம்பாக்கத்தை சேர்ந்த, சிவசுப்ரமணியன் என்பவர், 2003ம் ஆண்டு முதல், வீட்டு குப்பையை, தெரு தொட்டியில் போடாமல், "வெர்மிக் கம்போசிங்' முறையை கையாண்டு, குப்பையை

மறுசுழற்சி செய்து வருகிறார். என்ன செய்ய வேண்டும்?
*மொத்தம், 200 லி., கொள்ளளவு கொண்ட, ஒரு டிரம் தயார் செய்ய வேண்டும்.
*அதன் அடிப்பகுதியின் நடுவில், வட்டமாக ஒரு திறப்பையும், அதற்கானமூடியையும் உருவாக்க வேண்டும்.
*அதன் வாய் பகுதி அருகில், பக்கவாட்டில், ஒரு திறப்பை தயார் செய்ய வேண்டும்.
*வீட்டின் வசதியான மண் தரையில், டிரம்மின் விட்டம் அளவுக்கு, அரை அடி மண் சமப்படுத்தி, அதன் மீது, வைக்கோலும் மாட்டு சாணமும் கலந்த கலவையை இட வேண்டும்.
*அதற்கு மேல், அரை அடி மண் போட வேண்டும்.
*இப்படி தயார் செய்யப்பட்ட மண் தரையின் மீது, டிரம்மை தலைகீழாக கவிழ்த்து வைக்க வேண்டும்.
*டிரம்மின் மேல் பகுதியில் உள்ள திறப்பின் வழியாக, உணவு கழிவு, காய்கறி கழிவு போன்ற மக்கும் குப்பையை உள்ளே போட்டு, அதன் மீது ஒரு கைப்பிடி மண்ணையும் தூவ வேண்டும்.
*வைக்கோல், மாட்டு சாண கலவையில், ஐந்து நாட்களில் புழு உற்பத்தியாகி, மக்கும் குப்பையை உண்டு, அவற்றை உரமாக்கி விடும்.
*மூன்று மாதங்களுக்கு ஒரு முறை, டிரம்மின் கீழ் திறப்பின் வழியாக, மண் உரத்தை எடுத்து
தாவரங்களுக்கு பயன்படுத்தலாம்.


குப்பை உரமாகும்:

இதுகுறித்து, சிவசுப்ரமணியன் கூறியதாவது:என் வீட்டில், மூன்று சின்ன குப்பை தொட்டிகள் வைத்துள்ளேன். ஒன்றில், காய்கறி மற்றும் உணவு கழிவு, இரண்டாவதில், பால் கவர், சாக்லெட் கவர் மற்றும் இதர பிளாஸ்டிக் பொருட்கள், மூன்றாவது தொட்டியில், பொட்டல காகிதம், பேக்கரி அட்டை போன்ற காகித கழிவுகளை சேகரித்து வைப்பேன். மக்கும் குப்பையை, தினமும் மாலையில் டிரம்மில் போட்டு, மேலே ஒரு கைபிடி மண் தூவுவேன். சில நாட்களில் அது உரமாக மாறிவிடும். மூன்று மாதத்திற்கு ஒரு முறை, அந்த உரத்தை எடுத்து, செடிகள், தென்னை மரத்திற்கு உரமாக பயன்படுத்துவேன். இந்த மறு சுழற்சியில், டிரம்மில் பாதிக்கு மேல் குப்பை தேங்காது என்பது குறிப்பிடத்தக்கது.


சமூகத்திற்கு கெடுதல் இல்லை:

மீதமுள்ள இரண்டு தொட்டியில், சேகரிக்கப்படும் பிளாஸ்டிக் மற்றும் பழைய தாள்களை மாதம் ஒரு முறை, பழைய பேப்பர் கடையில் இலவசமாக கொடுப்பேன்.இதை கடந்த, 10 ஆண்டுகளாக செய்து வருகிறேன். துவக்கத்தில் என் வீட்டில் கூட எதிர்ப்பு இருந்தது. நாளடைவில் அவர்களும் சேர்ந்து இந்த பணியை ஆர்வமுடன் செய்கின்றனர்.
என்னால், என் வீட்டினரால் இந்த சமூகத்திற்கு எந்த கெடுதலும் வரக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன். இது, பெரிய வேலை ஒன்றும் கிடையாது. தினமும் நாம் செய்யும் வீட்டு வேலையில், இதுவும் ஒரு வேலை, அவ்வளவு தான். தினமும் இரண்டு நிமிடம் தான் செலவாகும்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

இவருக்கு உறுதுணையாக இருக்கும் இவரது மனைவி உமாதேவி கூறியதாவது:துவக்கத்தில், கணவரின் வற்புறுத்தலால் வேண்டா வெறுப்பாக செய்து வந்தேன். பள்ளிக்கரணை மற்றும் பெருங்குடி குப்பை கிடங்கில், திடீரென எரியும் குப்பை பற்றி பத்திரிகை மற்றும் தொலைக்காட்சியில் பார்த்து, நம்மால் தானே சுற்றுச்சூழல் கெடுகிறது என, கலங்கினேன்.பின் நானே முழு மனதுடன், "வெர்மிக் கம்போசிங்' முறையை கையாண்டு வருகிறேன். இந்த நடைமுறை இப்போது, எனக்கு முழு சந்தோஷத்தை கொடுக்கிறது.இவ்வாறு, உமாதேவி கூறினார்.

நம்மால் தான், சுற்றுச்சூழல் மாசுபடுகிறது என்ற விழிப்புணர்வு பொதுமக்களிடம் இல்லை. தொடர் விழிப்புணர்ச்சியை மாநகராட்சி ஏற்படுத்த வேண்டும். இலவசங்கள் வழங்குவதை குறைத்துவிட்டு, இதுபோல், வீட்டில் குப்பையை மறுசுழற்சி செய்கிறவர்களுக்கு அரசு வரிச்சலுகை வழங்கலாம். இதன் மூலம், சுற்றுச்சூழல் சீர்கேட்டில் இருந்து சமூகம் பாதுகாக்கப்படும்சிவசுப்ரமணியன்

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (18)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ambaiyaar@raja - Nellai to chennai ,இந்தியா
21-ஏப்-201318:32:50 IST Report Abuse
Ambaiyaar@raja நல்ல விஷயம் உங்களுக்கு வாழ்த்துக்கள் இதை அருமையா வெளி இட்ட மலருக்கு நன்றிகள். இதை எல்லோரும் செய்தால் நன்றா இருக்கும் ஆனால் சென்னை நகரில் செடி கோடி வைத்திருப்பவர்கள் மிக குறைவு மற்ற இடங்களில் செய்யலாம்.
Rate this:
Share this comment
Cancel
velmuruganathan - pollachi,இந்தியா
21-ஏப்-201315:31:22 IST Report Abuse
velmuruganathan வீட்டு குப்பை வெளியே போகவில்லை . என் வீதி சுத்தம் ஆச்சு .. வீதிகள் சுத்தம் ஆனதால் எங்கள் வார்டு தூய்மை ஆச்சு ..... ஆகா எங்க ஊரும் சுகாதாரம் எல்லோரும் சிவசுப்ரமணியம் போல முயற்சி செய்யலாமுங்க
Rate this:
Share this comment
Cancel
sankar narayanan - chennai,இந்தியா
21-ஏப்-201314:53:37 IST Report Abuse
sankar narayanan good
Rate this:
Share this comment
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
21-ஏப்-201313:55:01 IST Report Abuse
g.s,rajan குப்பைகளில் மாணிக்கம் என்று கூறுவதைப்போல குப்பையையும் நல்ல முறையில் பயன்படுத்தலாம் என்று கூறி வழி காட்டியதற்கு நன்றி ,வாழ்த்துக்கள் ஜி.எஸ்.ராஜன் சென்னை .
Rate this:
Share this comment
Cancel
chit ra - Andaman,இந்தியா
21-ஏப்-201312:59:58 IST Report Abuse
chit ra வாழ்த்துக்கள்.. இந்த மாதிரி செய்வதற்கு மனிதர்களுக்கு முதலில் சகிப்புத்தன்மை வேண்டும். எதற்கு சொல்கிறேன் என்றால். (உதாரணம் : அசைவம் சாப்பிடும்போது நம்மால் சாப்பிடப்பட்டு தட்டின் ஓரத்தில் குப்பைகளாக கருதி வைக்கப்படும் எலும்புகளை திரும்ப கடிக்க மனம் வருகிறதா - கழிவறை குளியல் அரை அருகருகே இருந்தும் என்றைக்காவது இரண்டு அறைகளில் வரும் பைப்பு நீரை ஒன்றாக கருதுகிறோமா..) இதுவே இப்படி இருந்தால் உரம் என்று கருதப்படும் மண்ணை எப்படி வார எண்ணம் வரும். தன்னால் குப்பை உருவாகிறது என்ற என்னத்தை விட அதை திரும்ப தொடுவது அசிங்கம் என்ற எண்ணம் மாறுபட்டால் தான் பூமி குப்பை இல்லாத நகரமாக மாறும்.
Rate this:
Share this comment
Cancel
chinnamanibalan - Thoothukudi,இந்தியா
21-ஏப்-201311:54:59 IST Report Abuse
chinnamanibalan குப்பைகளை வீதிகளில் வீசி எறிவதை பற்றிய விழிப்புணர்வு பொதுமக்களிடமும் இல்லை.வீதிகளை முறையாக தூய்மைபடுத்துவது குறித்த விழிப்புணர்வு உள்ளாட்சி நிர்வாகங்களிடமும் இல்லை.இதன் காரணமாகவே டெங்கு ,சிக்கன் குனியா ,மலேரியா போன்ற நோய்கள் நிரந்தரமாக நம்மிடம் குடியேறி விட்டன.இந்நிலையில் சமூக பொறுப்புணர்வுடன் வீட்டு குப்பைகளை மறு சுழற்சி செய்து ,உர பயன்பாட்டிற்கு பயன்படுத்தும் சிவசுப்பிர மணியன் உமாதேவி தம்பதியின் செயல் பாராட்டிற்குரியது...
Rate this:
Share this comment
Rave Reva - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
21-ஏப்-201314:21:21 IST Report Abuse
Rave Revagood...
Rate this:
Share this comment
Cancel
rajaram raghupathi - YANBU,சவுதி அரேபியா
21-ஏப்-201310:49:12 IST Report Abuse
rajaram raghupathi மிக மிக அருமையான முயற்சி தயவு செய்து இவரது தொடர்பு முகவரி அல்லது தொலைபேசி எண் தந்தால் மிகவும் பயனாக இருக்கும்
Rate this:
Share this comment
Cancel
M.Srinivasan - SADHURVEDHAMANGALAM,இந்தியா
21-ஏப்-201309:54:51 IST Report Abuse
M.Srinivasan மிக மிக அருமையான முயற்சி தயவு செய்து இவரது தொடர்பு முகவரி அல்லது தொலைபேசி எண் தந்தால் மிகவும் பயனாக இருக்கும்
Rate this:
Share this comment
Cancel
sundararaman - chennai,இந்தியா
21-ஏப்-201309:50:42 IST Report Abuse
sundararaman அய்யா இப்படியே டெவலப் பண்ணி போய்கிட்டே இருங்க சீக்கிரம் நம்ம நாடு வல்லரசா ஆயிடும்
Rate this:
Share this comment
Cancel
R.BALAMURUGESAN - Muscat,ஓமன்
21-ஏப்-201309:19:12 IST Report Abuse
R.BALAMURUGESAN ...மகத்தான பணி... திரு.சிவசுப்ரமணியன் அவர்களே... இந்த பணியை சென்னையில் இருந்து கொண்டு செய்வது மிக சிறப்பு... வாழ்க உங்களின் தொண்டு... வளர்க உங்கள் பணி... இந்த மகத்தான வேலையை எப்படி செய்வது என்று விளக்கமாக சொன்ன (கலைஞரின் வீட்டுக்குள் எட்டிப்பார்த்து எழுதுவதற்கு மத்தியில்...) உண்மையின் உரைகல்லுக்கு மிக்க நன்றி... யாவரும் பின்பற்றலாம்... நான் கண்டிப்பாக எனது ஊரில் ஆரம்பித்துவிட்டு உங்களுக்கு தெரிவிக்கிறேன்... நிச்சயமாக...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.