"தினத்தந்தி' நாளிதழ் அதிபர் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தன் உடல் தகனம் : கட்சித் தலைவர்கள், திரையுலகினர் நேரில் அஞ்சலி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

"தினத்தந்தி' நாளிதழ் அதிபர் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தன் உடல் தகனம் : கட்சித் தலைவர்கள், திரையுலகினர் நேரில் அஞ்சலி

Added : ஏப் 21, 2013 | கருத்துகள் (3)
Advertisement

சென்னை: "தினத்தந்தி' நாளிதழ் அதிபர், டாக்டர் பா.சிவந்தி ஆதித்தன், உடல் நலக்குறைவு காரணமாக, நேற்று முன்தினம் இரவு, 9:55 மணிக்கு சென்னையில் காலமானார். சென்னை, போயஸ் கார்டன் வீட்டில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு, நேற்று, அரசியல் தலைவர்கள், திரையுலகப் பிரபலங்கள், ஆயிரக்கணக்கான பொதுமக்கள், அஞ்சலி செலுத்தினர். நேற்று மாலை, பெசன்ட் நகர் மின் மயானத்தில், அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. "தினத்தந்தி' நாளிதழ் அதிபர் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தன், அகில இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் உள்ளிட்ட, பல பதவிகளை வகித்தவர். தமிழகத்தில், கல்வி, ஆன்மிகம், விளையாட்டு உள்ளிட்ட துறைகளின் முன்னேற்றத்திற்கு பெரிதும் பாடுபட்டவர். அவரின் இலக்கிய, கல்விச் சேவையைப் பாராட்டி, 2008ல், மத்திய அரசு, "பத்மஸ்ரீ' விருது வழங்கி கவுரவித்தது.
பல்வேறு பல்கலைக்கழகங்கள் சார்பில், டாக்டர் பட்டங்களும் வழங்கி கவுரவிக்கப்பட்டன. கடந்த சில நாட்களாக, அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில், சிகிச்சை பெற்று வந்தார். நேற்று முன்தினம் மாலை, அவரின் உடல் நிலை மோசமானது; உறுப்புகளின் இயக்கம், மெல்ல மெல்ல குறைந்து போனது. மருத்துவர்களின் தீவிர சிகிச்சைக்கு பலனளிக்காமல் நேற்று முன்தினம் இரவு, 9:55 மணிக்கு காலமானார். இதையடுத்து, அவரின் உடல், போயஸ் கார்டனில் உள்ள வீட்டிற்குக் கொண்டு செல்லப்பட்டு, பொதுமக்களின் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது. நேற்று அதிகாலை முதல், பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள், பிரமுகர்கள், திரையுலகினர் அஞ்சலி செலுத்தினர். சிவந்தி ஆதித்தனின் மூத்த சகோதரரும், "மாலை முரசு' நிர்வாக ஆசிரியருமான, பா.ராமச்சந்திர ஆதித்தன், தன் குடும்பத்துடன், கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்.

சிவந்தி ஆதித்தனின் உடல், நேற்று மாலை, 3:00 மணி அளவில், போயஸ் கார்டன் வீட்டில் இருந்து, பூக்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.
பெசன்ட் நகர் மின் மயானத்தில் இறுதி சடங்குகள் நடந்தன. சிவந்தி ஆதித்தனின் உடலுக்கு, மகன் பாலசுப்பிரமணிய ஆதித்தன், இறுதி சடங்குகளை செய்தார். பின், சிவந்தி ஆதித்தன் உடல் தகனம் செய்யப்பட்டது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
amukkusaamy - chennai,இந்தியா
21-ஏப்-201314:16:23 IST Report Abuse
amukkusaamy முதல்வர் என்ன செய்தார்?
Rate this:
Share this comment
Cancel
Erode kingcobra - erode,இந்தியா
21-ஏப்-201310:06:01 IST Report Abuse
Erode kingcobra பட்டி தொட்டி எங்கும் , டீ கடை முதல் பெரிய வீடுகள் வரை தந்தி பேப்பர் நுழையாதா இடம் இல்லை.அன்னாருக்கு குடும்பத்திற்கு எங்களின் அனுதாபம் .
Rate this:
Share this comment
Cancel
நாஞ்சில் சுலைமான் - THUCKALAY,இந்தியா
21-ஏப்-201309:29:33 IST Report Abuse
நாஞ்சில் சுலைமான் இவரது மறைவு பத்திரிக்கை துறைக்கு பேரிழப்பு..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை