ரேஷன் ஏ.டி.எம்., பிரிபெய்டு மின் மீட்டர், தானியங்கி டோல்கேட், சூரிய சக்தி பயன் : திண்டுக்கல்லை கலக்கும் 5 சயின்ஸ்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ரேஷன் ஏ.டி.எம்., பிரிபெய்டு மின் மீட்டர், தானியங்கி டோல்கேட், சூரிய சக்தி பயன் : திண்டுக்கல்லை கலக்கும் 5 சயின்ஸ்

Added : ஏப் 21, 2013 | கருத்துகள் (13)
Advertisement
ரேஷன் ஏ.டி.எம்., பிரிபெய்டு மின் மீட்டர்,  தானியங்கி டோல்கேட், சூரிய சக்தி பயன் : திண்டுக்கல்லை கலக்கும் 5 சயின்ஸ்

ரேஷன் அரிசி வாங்க ஏ.டி.எம்., பிரிபெய்டு மின் மீட்டர்கள், தான் இயங்கி சொட்டு நீர் பாசனம், ஆட்டோமேட்டிக் டோல்கேட், நூறு சதவீதம் சூரிய உற்பத்தி என திண்டுக்கல் 5 சயின்ஸ் "கார்ப்' மாணவர்கள் கலக்குகின்றனர்.

திண்டுக்கல் வாழ்க வளமுடன் தெருவில் 5 சயின்ஸ் "கார்ப்' அலுவலகம் செயல்படுகிறது. இதன் நிர்வாக இயக்குனராக ஜெயகிருஷ்ணன் மற்றும் பி.இ., படித்த மாணவர்கள் சண்முகநாதன், கதிரவன், தயாஜோதி, பாலாஜி உட்பட 5பேர் சேர்ந்து இந்த மையத்தை நடத்தி வருகின்றனர்.

35 கண்டுபிடிப்புகள்: இந்த மையத்தின் மூலம் 35 கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்துள்ளனர்.
ஏ.டி.எம் மையம்: ரேஷன்கடைக்கு சென்று பொருட்களை வாங்குபவர்கள் கியூவில் நின்று நெடுநேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. இதற்காக தங்கள் வேலையை ஒருநாள் ஒதுக்கி வைக்க வேண்டியுள்ளது. பொதுமக்கள் தங்கள் கைரேகையை பதிவு செய்து, ரேஷன் ஏ.டி.எம்., மையங்கள் திறக்கப்படுகிறது. இங்கு சென்று பொதுமக்கள் தங்கள் கைரேகையை பதிவு செய்து அரிசி, சர்க்கரை, பருப்பு என வேண்டிய பொருளை இரவு எந்த நேரத்திலும் வாங்கி கொள்ளலாம். இதற்கான மாதிரியை வடிவமைத்துள்ளனர்.
இ.பி.,பிரிபெய்டு மீட்டர்: மின் சிக்கனத்தை அரசு எவ்வளவோ எடுத்துக்கூறியும், மக்கள் கேட்பதாக இல்லை. மொபைல் போன் ரீசார்ஜ் மாதிரி, இ.பி., மீட்டர்களின் 500 யூனிட்டு, 300 யூனிட், 100 யூனிட் என தேவைக்கு தகுந்த மாதிரி ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். மின்சாரம் தீரப்போகிறது என்றால், உடனடியாக எச்சரிக்கை அறிவிப்பும் மின் மீட்டரில் இருந்து வெளியேறும்.

தானியங்கி டோல்கேட்: தனியார், அரசு வாகனங்கள் டோல்கேட்டை கடந்து சென்றாலே போதுமானது. சம்பந்தப்பட்ட பஸ் உரிமையாளரின் வங்கி கணக்கில் இருந்து பணம் டோல்கேட் நிர்வாகத்திற்கு சென்று விடும்.

சொட்டு நீர்பாசனம்: தானியங்கி சொட்டு நீர் பாசன முறையில், மொபைல் போன், கம்ப்யூட்டரில் இருந்து தோட்டத்திற்கு ஒரு மணிநேரம் தண்ணீர் பாய்ந்தால் போதும் என தகவல் அனுப்பினால் போதும், தண்ணீர் பாய்ந்து விடும். மழை பெய்தால், சொட்டுநீர் பாசனத்தில் பாயும் தண்ணீர் நின்று விடும்.
மேலும் வீட்டை விட்டு கிளம்பும்போது ஆல் லைட், பேன் சுட்ச் ஆப் என்று சொன்னால் போதும், அனைத்தும் அணைந்து விடும். வீட்டிற்கு வந்தவுடன் ஆல் லைட், பேன் சுட்ச் ஆன் என்ற சொன்னால் அனைத்தும் எரிய துவங்கும். சூரியசக்சதி முழுவதும் சேகரித்து வீடுகளில் மின்தடையை போக்குவதற்கும், அரசுக்கு விற்பனை செய்வதற்குமான கருவிகளையும் கண்டுபிடித்துள்ளனர். இதுமாதிரி பல கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்து இளம் விஞ்ஞானிகளான மாணவர்கள் அசத்தி வருகின்றனர்.
இவர்களுடன் பேச 92454-59428ல் தொடர்பு கொள்ளலாம்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Muthu Ramaswamy - Jeddah,சவுதி அரேபியா
21-ஏப்-201319:50:15 IST Report Abuse
Muthu Ramaswamy வாழ்த்துக்கள். பல குவியட்டும்..வாழ்க உங்க புகழ்..வளர்க உங்கள் சேவை(கண்டுபிடிப்பு).
Rate this:
Share this comment
Cancel
Siva - Chennai,இந்தியா
21-ஏப்-201316:31:10 IST Report Abuse
Siva மனமார்ந்த வாழ்த்துக்கள் மேலும் மேலும் நிறைய சாதித்து காட்டுங்கள்
Rate this:
Share this comment
Cancel
M.Durairaj - tamilnadu,இந்தியா
21-ஏப்-201315:37:26 IST Report Abuse
M.Durairaj உங்களுக்கு என் வாழ்த்துகள்
Rate this:
Share this comment
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
21-ஏப்-201314:25:09 IST Report Abuse
g.s,rajan அப்படியே தேர்தல்ல தில்லு முல்லு செய்யமுடியாத வகையில்,யாரும் கள்ள ஓட்டுக்கள் போடாத வகையில் மக்கள் சந்தேகமே இல்லாமல் நியாயமான வகையில் தேர்தல்ல ஒட்டுப்போடற மாதிரி ஒரு இயந்திரத்தை கண்டுபிடியுங்களேன் உங்களுக்கு ரொம்ப ரொம்ப புண்ணியமாகப்போகும் . ஜி.எஸ்.ராஜன் சென்னை ,
Rate this:
Share this comment
Cancel
govind - Muscat,இந்தியா
21-ஏப்-201314:02:10 IST Report Abuse
govind பெட்ரோல் ராமனை என்ன செய்தது இந்தியா...? நீங்கள் ஊழலுக்கு வழி சொல்லுங்கள்.... உங்களை கௌரவிப்பார்கள்.... அதற்காக உங்கள் முயற்சிகளை விடாதீர்கள்.... வாழ்த்துக்கள்....
Rate this:
Share this comment
Cancel
rajasekar - abbasiya,குவைத்
21-ஏப்-201311:49:55 IST Report Abuse
rajasekar உங்கள் ஆயுகளை வெளிநாடுகளுக்கு அனுப்புங்கள் தக்க மதிப்பும் மரியாதையும் கிடைக்கும்...
Rate this:
Share this comment
Cancel
chinnamanibalan - Thoothukudi,இந்தியா
21-ஏப்-201311:30:44 IST Report Abuse
chinnamanibalan அரசியல்வாதிகள் தமிழகத்தை முன்னேற்ற பாதைக்கு அழைத்து செல்லா விட்டாலும், நமது இளைஞர்களாவது அறிய கண்டு பிடிப்புகள் மூலம் தமிழகத்தை முன்னேற்ற பாதைக்கு அழைத்து சென்றால் மகிழ்ச்சிக்கு உரியதே...
Rate this:
Share this comment
Cancel
sundararaman - chennai,இந்தியா
21-ஏப்-201309:31:36 IST Report Abuse
sundararaman வாழ்க வளர்க
Rate this:
Share this comment
Cancel
K.Suresh Kumar - Chennai,இந்தியா
21-ஏப்-201309:08:22 IST Report Abuse
K.Suresh Kumar மனமார்ந்த பாராட்டுக்கள்
Rate this:
Share this comment
Cancel
Chenduraan - kayalpattanam,இந்தியா
21-ஏப்-201308:31:38 IST Report Abuse
Chenduraan வாழ்த்துக்கள் நபர்களே தானியங்கி டோல்கேட் சிங்கப்பூரில் வந்து வருடங்கள் ஆகிவிட்டன. நம்ம நாட்டில் அதை கொண்டுவந்தால் நல்ல இருக்கும். பயணிகள் கட்டணம் செலுத்த காத்தி இருக்க வேண்டியதில்லை. நம்ம பாட்டுக்கு போய்கிட்டே இருக்க வந்டியதுதான், காரில் வைத்துள்ள கார்டில் தானாகவே கட்டணம் சார்ஜ் ஆகி விடும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை