தே.மு.தி.க., - எம்.எல்.ஏ.,வுக்கு காவல் நீடிப்பு| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

தே.மு.தி.க., - எம்.எல்.ஏ.,வுக்கு காவல் நீடிப்பு

Added : ஏப் 21, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

திருவள்ளூர்: நில அபகரிப்பு வழக்கில் கைதான, திருத்தணி தே.மு.தி.க., - எம்.எல்.ஏ., அருண் சுப்பிரமணியத்திற்கு,மேலும், 15 நாள் காவல் நீட்டித்து, திருவள்ளூர் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டது.
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி தொகுதி, எம்.எல்.ஏ.,வாக இருப்பவர், அருண் சுப்பிரமணியன், 58. இவருக்கு சொந்தமான, 10 ஏக்கர் நிலம், வரதராஜபுரம் கூவம் ஆற்றை ஒட்டி உள்ளது. இந்த நிலத்தை ஒட்டி, இருளர்கள் குடியிருப்புகளுக்குச் செல்ல, நகராட்சி சாலை உள்ளது.
இச்சாலையை தடுத்து, சுவர் எழுப்பியதாக, திருவள்ளூர் நகராட்சி நிர்வாகம் அளித்த புகாரையடுத்து, வழக்கு பதிந்த திருவள்ளூர் போலீசார், கடந்த ஆண்டு, ஜூலை 18ம் தேதி, அருண் சுப்பிரமணியனை கைது செய்து, புழல் சிறையில் அடைத்தனர். மறுநாள், எம்.எல்.ஏ., அருண் சுப்பிரமணியனுக்கு, திருவள்ளூர் மாவட்ட அமர்வு நீதிமன்றம், ஜாமின் வழங்கியது. அருண் சுப்பிரமணியன், பொய்யான தகவல் கொடுத்து, ஜாமின் வாங்கியுள்ளார். அதை ரத்து செய்ய வேண்டும் என, திருவள்ளூர் நில அபகரிப்பு பிரிவு, சிறப்பு டி.எஸ்.பி., வைத்தியலிங்கம், சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு கடந்த, 8ம் தேதி விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், எம்.எல்.ஏ.,வுக்கு வழங்கப்பட்ட ஜாமீன் செல்லாது என, தீர்ப்பு வழங்கினர். இதைத் தொடர்ந்து, தலைமறைவாக இருந்த, எம்.எல்.ஏ., அருண் சுப்பிரமணியத்தை, கடந்த, 14ம் தேதி காலை, 8:00 மணிக்கு, ஆந்திர மாநிலத்தில் பதுங்கி இருந்த, அவரை, தனிப்படை போலீசார் கைது செய்தனர். பின், அன்று இரவு, 11:30 மணிக்கு, திருவள்ளூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், அவரிடம் விசாரித்தனர். நள்ளிரவு, 12:30 மணிக்கு, முதலாவது குற்றவியல் நீதிமன்ற நீதிபதி (பொறுப்பு) அகிலா முன், ஆஜர்படுத்தினர். ஐந்து நாட்கள் சிறையில் அடைக்க, நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து அவரை, புழல் சிறையில் அடைத்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் புழல் சிறையில் இருந்து, வீடியோ கான்பிரன்ஸ் மூலம், வழக்கை விசாரித்த, திருவள்ளூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி, யஷ்வந்த்ராவ், அருண் சுப்பிரமணியத்திற்கு, மேலும், 15 நாள் காவல் நீட்டித்து உத்தரவிட்டார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை