கொலை நடக்கும் போது சிறாராக இருந்ததால் ஆயுள் தண்டனை பெற்றவர் விடுதலை| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

கொலை நடக்கும் போது சிறாராக இருந்ததால் ஆயுள் தண்டனை பெற்றவர் விடுதலை

Added : ஏப் 21, 2013 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement

சென்னை: கொலை சம்பவத்தின் போது, சிறாராக இருந்ததால், 14 ஆண்டுகள் சிறையில் இருந்தவரை, விடுதலை செய்து, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. சென்னை, காசிமேட்டில், கள்ளச்சாராயம் விற்பனை தொடர்பாக, பிரபு, ரகு என்பவர்களுக்கு இடையே பகை இருந்தது. காசிகுப்பத்தில், ரகுவை, பிரபு மற்றும் அவரது கோஷ்டியினர், கத்தியால் குத்தி கொலை செய்தனர். 1992ம் ஆண்டு, ஜூன் மாதம், சம்பவம் நடந்தது. இவ்வழக்கில், குமார் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் உள்ளிட்ட, ஏழு பேருக்கு, சென்னை, செஷன்ஸ் கோர்ட், ஆயுள் தண்டனை விதித்தது. இதை எதிர்த்து, ஐகோர்ட்டில் தாக்கல் செய்த, அப்பீல் மனு, 2002ம் ஆண்டு, "டிஸ்மிஸ்' செய்யப்பட்டது. சுப்ரீம் கோர்ட்டும், 2003ம் ஆண்டு, தண்டனையை உறுதி செய்தது. இவ்வழக்கில், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட, குமார், வேலூர் சிறையில், 14 ஆண்டுகளாக உள்ளார்.

இவர், ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனு: நான், 1976ம் ஆண்டு, ஜனவரியில் பிறந்தேன். 1992ம் ஆண்டு, ஜூன் மாதம், கொலை சம்பவம் நடந்தது. சம்பவம் நடக்கும் போது, என் வயது, 16 ஆண்டுகள், 5 மாதங்கள். கடந்த, 2000ம் ஆண்டு, இயற்றப்பட்ட சிறார் பாதுகாப்பு சட்டத்தின்படி, 18 வயதுக்கு குறைவானவர்கள், சிறாராக கருதப்படுவர். சம்பவம் நடக்கும் போது, என் வயது, 16 ஆண்டுகள் என்பதால், ஆயுள் தண்டனை விதித்திருக்கக் கூடாது. தற்போது, என் வயது, 37. சிறையில், 14 ஆண்டுகளுக்கும் மேல், உள்ளேன். என்னை, விடுதலை செய்ய உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.

மனுவை, நீதிபதிகள் பாஷா, தேவதாஸ் அடங்கிய, "டிவிஷன் பெஞ்ச்' விசாரித்தது. மனுதாரர் சார்பில், வழக்கறிஞர்கள் பி.குமரேசன், இளையராஜா ஆஜராகினர். "டிவிஷன் பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவு:
புதிதாக, 2000ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட, சிறார் பாதுகாப்பு சட்டத்தின்படி, சிறார் என்றால், ஆண், பெண் இருவரும், 18 வயதுக்கு குறைவானவர்கள் என, வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டது. 1986ம் ஆண்டு, பழைய சட்டத்தில், ஆண்களுக்கு, 16 வயது என்றும், பெண்களுக்கு, 18 வயது என்றும் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இந்த வேறுபாடு, புதிய சட்டத்தில் நீக்கப்பட்டது.
சம்பவம் நடக்கும் போது, சிறாராக இருந்து, அவர்களுக்கு எந்த கோர்ட், தண்டனை விதித்திருந்தாலும், புதிய சட்டத்தின் கீழ், சிறாராருக்கு உறள்ள சலுகையை கோர முடியும் என, கூறப்பட்டுள்ளது. மனுதாரர், 1976ம் ஆண்டு பிறந்திருந்தால், சம்பவம் நடந்த போது, அவரது வயது, 16 ஆண்டுகள், ஐந்து மாதங்கள். இவர், 16 வயது நிரம்பியிருந்ததால், பழைய சட்டப்படி, சிறாராக கருத முடியாது என, கூறப்பட்டது.
பழைய சட்டம் ரத்தாகி, 2001ம் ஆண்டு, ஏப்ரல் முதல், புதிய சட்டம் அமலுக்கு வந்து விட்டது. இந்தச் சட்டப்படி, சிறாரை, அதிகபட்சம், மூன்று ஆண்டுகள் வரை, சிறப்பு இல்லத்தில் வைக்க முடியும். மனுதாரரைப் பொருத்தவரை, அது சாத்தியமில்லை. அவருக்கு, 37 வயது. 14 ஆண்டுகளுக்கும் மேல், சிறையில் இருந்து விட்டார். எனவே, அவரை சிறையில் இருந்து விடுதலை செய்ய வேண்டும். வேறு எந்த வழக்கிலும், தண்டனை விதிக்கப்படவில்லை என்றால், அவரை, உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். இவ்வாறு, "டிவிஷன் பெஞ்ச்' உத்தரவிட்டுள்ளது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
யதார்தவாதி வெகுஜன விரோதி - சிராப்பள்ளி,இந்தியா
21-ஏப்-201307:40:53 IST Report Abuse
யதார்தவாதி வெகுஜன விரோதி இனி அனைத்து குற்றவாளிகளும் சம்பவம் நடந்தபோது, தனக்கு 17 வயது 11 மாதம், 29 நாட்கள்தான் வயது என்று ஒரு சான்றிதழ் பெற்றுவிட்டால் போதும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை