ஏப்.,26க்கு ஒத்திவைப்பு கரூரில் மூன்று பெண்கள் கொலை வழக்கு விசாரணை| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

ஏப்.,26க்கு ஒத்திவைப்பு கரூரில் மூன்று பெண்கள் கொலை வழக்கு விசாரணை

Added : ஏப் 21, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கரூர்: கரூர் அருகே நடந்த மூன்று பெண்கள் கொலை வழக்கு தொடர்பான விசாரணை வரும், 26 ம் தேதிக்கு ஒத்தி வைக்கப் பட்டுள்ளது.கரூரை அடுத்த வெங்கமேடு வெண்ணைமலை பகுதியை சேர்ந்த நிதி நிறுவன அதிபர் பழனிசாமி என்பவரது மனைவி கல்யாணி, மகள் கலையரசி, பேத்தி காரணிகா ஆகியோர், கடந்த 2011 ம் ஆண்டு டிசம்பர் மாதம் 28 ம் தேதி மதியம் அவர் களது வீட்டில் கொடூரமான முறையில் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு, தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது.கொலை சம்பவம் தொடர்பாக, நாமக்கல் மாவட்டம் குப்புச்சி பாளையத்தை சேர்ந்த இளங்கோவன் (24) ராமநாதபுரம் மாவட்டம் பெருநாழியை சேர்ந்த சந்தானம் (23) வேலூர் மாவட்டம் பழைய வாணியம்பாடியை சேர்ந்த காமராஜ் (30) ஆகியோரை வெங்கமேடு போலீஸார் கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு விசாரணை கரூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடந்தது.அப்போது, நாமக்கல்லில் நடந்த வேறு மூன்று பெண் கள் கொலை வழக்கு தொடர்பாக, சேலம் மத்திய சிறையில் இருந்த இளங்கோவன், சந்தானம், காமராஜ் ஆகியோரை போலீஸார் அழைத்து வந்து கரூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் ஆஜர்ப் படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயசங்கரன், விசாரணை யை வரும் 27 ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தர விட்டார். இதை யடுத்து மூன்று பேரையும் போலீஸார் சேலம் மத்திய சிறைக்கு பாதுகாப்பாக அழைத்து சென்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை