மாஜி காங்கிரஸ் எம்.எல்.ஏ., "ஆஜர்'| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

மாஜி காங்கிரஸ் எம்.எல்.ஏ., "ஆஜர்'

Added : ஏப் 21, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திருச்சி: இலங்கை தமிழர் பிரச்னை தொடர்பாக, தமிழகம் முழுவதும் மாணவர்கள் போ ராட்டம் வலுத்திருந்தபோது, கடந்த மாதம், 27ம் தேதி, திருச்சி, கரூர், பெரம்பலூர் லோக்சபா தொகுதி காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டம், மாநிலத்தலைவர் ஞானதேசிகன் தலைமையில் திருச்சியில் நடந்தது.அப்போது, ஞானதேசிகனை வரவேற்று காங்கிரஸார் வைத்திருந்த ஃப்ளக்ஸ் பேனர்களை கிழித்து, மாணவர் கூட்டமைப்பினர் திடீர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆத்திரமடைந்த காங்கிரஸார், அவர்களை சரமாரியாக அடித்து, உதைத்தனர்.மாணவர்கள் கொடுத்த புகாரின்படி, முன்னாள் எம்.எல்.ஏ., ராஜசேகரன் உள்ளிட்ட, 51 பேர் மீது கண்டோண்மெண்ட் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் ராஜசேகரன் முன்ஜாமீன் பெற்றார்.மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், திருச்சி ஜே. எம்.2 நீதிமன்றத்தில் ஆஜராகி, ஜாமீன் பெற உத்தரவிட்டது. நேற்று காலை, ஜே.எம்.2 மாஜிஸ்திரேட் வேல்மயில் முன்னிலையில் ஆஜரானார். 2 பேர் பிணைத்தொகையுடன், ராஜசேகரன் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை