சென்னையில் பூமிக்கு அடியில் அர்மீனிய கட்டடம் : கண்டு கொள்ளுமா தொல்லியல் துறை?| Dinamalar
பதிவு செய்த நாள் :
கருத்துகள் (5)  கருத்தை பதிவு செய்ய
எழுத்தின் அளவு:

சென்னை அகில இந்திய வானொலி நிலையத்திற்கு எதிரே, பாதாள சாக்கடை தோண்டும் போது, பழங்கால கட்டடம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது, 200 ஆண்டுகள், பழமை மிகுந்த அர்மீனியர் காலத்து கட்டடமாக இருக்கலாம் என தெரிகிறது.

சென்னை கடற்கரை சாலையில், அகில இந்திய வானொலி நிலையத்திற்கு எதிரே, பாதாள சாக்கடை அமைக்கும் பணிகளுக்காக, இரண்டு வாரங்களாக, பள்ளம் தோண்டி வருகின்றனர். அங்குள்ள பஸ் நிறுத்தத்திற்கு அருகே, பள்ளம் தோண்டிய போது,

பழங்கால கட்டடம் இருப்பது, தெரிய வந்துள்ளது. ஒரு அடியில் அமைக்கப்பட்ட தார்ச் சாலைக்கு கீழே, மூன்று கருங்கல் தூண்கள் உள்ளன. அதற்கு கீழே, சிறிய செங்கற்களால் அமைக்கப்பட்ட, 100 அடி, நீளமான சுவர் உள்ளது. பஸ் நிலையத்திலிருந்து, 10 அடிக்கு அப்பால், அறை வட்ட வடிவில், சுவர் எழுப்பப்பட்டுள்ளது. அதற்கு கீழே, பாதாள சுவர் உள்ளது.

இது அர்மீனிய கட்டட கலை கொண்டதாக தெரிகிறது. குறிப்பாக, 5 அங்குல செங்கற்களை அர்மீனியர்களே, பயன்படுத்தி வந்தனர். அதே போல், நெருக்கமான கட்டுமானத்தையும், அவர்கள் கடைபிடித்து வந்தனர். சென்னை சேப்பாக்கத்தில் கூவத்தை கடக்கும், பாலம் அக்காலத்தில், "ஆர்ச் பிரிட்ஜ்' என வழங்கப்பட்டது. அரை வட்ட வடிவில், அமைந்துள்ள கட்டடத்தில்,10க்கும் மேற்பட்ட நேர் கோடுகள் உள்ளன. இக்கட்டமும், அது போன்ற வடிவமைப்பைக் கொண்டுள்ளது.எனவே, இக்கட்டடம், ஆங்கிலேயரின் ஆட்சிக் காலத்திற்கு முன், கட்டப்பட்ட கட்டடமாக இருக்கலாம். மேலும், சுவர்களுக்கு மேலே காணப்படும், கற்தூண்கள் பாலத்தின் பிடிமானத்திற்காக அமைக்கப்பட்டதாக தெரிகிறது.மேலும், பாதாள சாக்கடை அமைக்கும் பணிகள், குறிப்பிட்ட இடத்தோடு நின்று விட்டது. அப்பகுதியில் அகழாய்வு செய்தால், அங்கு என்ன

Advertisement

இருந்தது என்பதை அறிய முடியும்.சென்னை பற்றி தொடர் ஆய்வுகள் செய்து வரும் நரசய்யா கூறியதாவது: சாந்தோம் பகுதியில், வரலாற்றுச் சிறப்பு மிக்க கட்டடங்கள் நிறைய இருந்துள்ளது. கடற்கரை சாலையிலே, கபாலீஸ்வரர் கோவில் இருந்ததற்கான தடயங்கள் உள்ளது.இருப்பினும், அகில இந்திய வானொலி நிலையத்திற்கு எதிரே உள்ள, கட்டடம் குறித்து, தெளிவான முடிவுக்கு வர முடியவில்லை. இவ்வாறு நரசய்யா கூறினார்.

அகில இந்திய வானொலி நிலையத்திற்கு எதிரே உள்ள நொச்சிக்குப்பதைச் சேர்ந்த, ஏழுமலை, 80, கூறுகையில், ""எங்கள் காலத்தில், இப்பகுதியில் பழைய கட்டடங்கள் இருந்ததாக கூட, தெரியவில்லை. எனது பெற்றோரும் அது பற்றி கூறியதில்லை. எனவே, இது, 200 ஆண்டுகளுக்கு முன்பு இருந்திருக்கலாம்,'' என்றார்.

- நமது நிருபர் -
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (5)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மும்பை தமிழன் - mumbai,இந்தியா
21-ஏப்-201313:15:16 IST Report Abuse
மும்பை தமிழன் அரசுகளுக்கு ஊழல் செய்யவே நேரம் போதவில்லை.
Rate this:
Share this comment
Cancel
kumaresan.m - hochimin ,வியட்னாம்
21-ஏப்-201310:15:16 IST Report Abuse
kumaresan.m " கிணறு தோண்ட போய் பூதம் கிளம்பிய கதையாவாக இருக்கிறது ".....எது எப்படியோ ...தோண்டிய பள்ளத்தை மூடாமல் விட்டு விட போகிறார்கள் "
Rate this:
Share this comment
Cancel
நீலகண்டன் - Chennai,இந்தியா
21-ஏப்-201309:57:17 IST Report Abuse
நீலகண்டன் தொல்பொருள் அராயிச்சி செய்து கட்டிடத்தில் உள்ளே இருப்பவையை பாதுகாக்க வேண்டும் இல்லை என்றால் அவை வெளி நாட்டிற்கு விலை பொருள் போல் கடத்தி செல்ல படும்.
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
21-ஏப்-201309:01:38 IST Report Abuse
Srinivasan Kannaiya தயவு செய்து என்னதான் இருக்கிறது என்று பாருங்களேன். நமது மூததையரை பற்றி தேரிந்துகொள்வோமே.
Rate this:
Share this comment
Cancel
mohan - chennai,இந்தியா
21-ஏப்-201307:12:26 IST Report Abuse
mohan திருவனந்த புறம் கோவில் மாதிரி ஏதாவது கிடைக்குமோ....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.