100 சதவீதம் மதசார்பற்றவர் நரேந்திர மோடி:ராம் ஜெத்மலானி நற்சான்று
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

வதோதரா:""குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, மதசார்பற்றவர், நேர்மையானவர் மற்றும் பிரதமர் பதவிக்கு தகுதியானவர். 2014 லோக்சபா தேர்தலுக்கு முன், அவரை பிரதமர் வேட்பாளராக, பா.ஜ., அறிவிக்க வேண்டும்,'' என, அந்தக் கட்சியின் ராஜ்யசபா எம்.பி.,யும், மூத்த வழக்கறிஞருமான, ராம்ஜெத்மலானி கூறினார்.குஜராத் மாநிலம் வதோதராவில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:பிரதமர் வேட்பாளரை, பா.ஜ., முன்னதாகவே அறிவிக்க வேண்டும் என, மக்கள் எதிர்பார்க்கின்றனர். தேர்தலுக்குப் பின், பிரதமர் வேட்பாளர் யார் என, அறிவிப்பது பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும். ஊழல் நிறைந்தமோடி, பிரதமர் வேட்பாளராக எதிர்ப்புத் தெரிவிப்பவர்கள், ஊழல் நிறைந்த, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பதவியில் நீடிக்க வேண்டும் என, நினைப்பவர்களே.மோடியை விமர்சிப்பவர்கள், இந்திய அரசியல் சட்டத்தை கவனமாகப் படிக்க வேண்டும்.

அதில், மதசார்பின்மைக்கு விளக்கம் தரப்பட்டுள்ளது. அதைப் புரிந்து கொள்ளாதவர்களே, மதசார்பின்மை என்ற பிரச்னையை எழுப்புகின்றனர்.மதவாதம் மற்றும் மதசார்பின்மை என்ற வார்த்தைகள், இன்றைய நாளில், தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன. தவறான புரிதல்அதன் அர்த்தம் மற்றும் முக்கியத்துவம் தெரியாமலேயே, பலர் தவறாகப் பயன்படுத்துகின்றனர். மோடி, நம்நாட்டின் ஈடு இணையற்ற மதச் சார்பற்ற தலைவர். அவர், 100 சதவீதம் மதச் சார்பற்றவர்.கடந்த, 2004ல், பா.ஜ.,வால் முன் வைக்கப்பட்ட, "இந்தியா ஒளிர்கிறது' விளம்பரமும், 2009ல், அத்வானியை, பா.ஜ., வின் பிரதமர் வேட்பாளராக முன் நிறுத்தியதும், வெற்றி தரவில்லை எனக் கூறப்படுகிறது. கடந்த காலங்களில் நடந்தவற்றை திரும்பிப் பார்க்கக் கூடாது.
மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவித்தால், பா.ஜ.,வும், தேசிய ஜனநாயக கூட்டணியும், வரும் லோக்சபா தேர்தலில், நிச்சயம் பலன் அடையும்.இவ்வாறு ராம்ஜெத்மலானி கூறினார்.

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (56)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mujib Rahman - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
22-ஏப்-201300:45:01 IST Report Abuse
Mujib Rahman இவரை பிரதம வேட்பாளராக முன்னிருத்தினால் பி ஜே பி மண்ணைக் கவ்வுவது நிச்சயம் ,,,,,,,,,
Rate this:
Share this comment
Cancel
JALRA JAYRAMAN - chennai,இந்தியா
21-ஏப்-201317:57:43 IST Report Abuse
JALRA JAYRAMAN சட்டப்படி பார்த்தால் நாடாளுமன்ற தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்ற கட்சி/கூட்டணியின் உறுப்பினர்கள் தேர்வு செய்பவர் தான் பிரதமர். பிரதமரை மக்கள் தேர்வு செய்வதில்லை
Rate this:
Share this comment
Cancel
jayakumar - Paramakudi,இந்தியா
21-ஏப்-201317:26:31 IST Report Abuse
jayakumar தன் வாரிசு, தன் குடும்பம் என்று செயல்படும் அரசியல்வாதிகள் மத்தியில் எவ்வித பின்புலமும் இல்லாமல் தனது திறமையால் மட்டுமே முன்னேறி முதல்வராகினார். (இவர் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு மத்தியிலும்) ஒன்று இரண்டல்ல... நான்கு முறை முதல்வராகி அம்மாநிலத்தை முன்னோடி மாநிலமாக மாற்றிக்காட்டியவர். எனவே நாட்டின் பிரதமராவதற்குரிய தகுதி இவரை விட்டால் தற்போது யாருக்கு இருக்கிறது.
Rate this:
Share this comment
Cancel
deva - paris,பிரான்ஸ்
21-ஏப்-201316:57:05 IST Report Abuse
 deva இங்கே கருத்து தெரிவிப்பவர்களில் சிலர் மோடி ஆட்சிக்கு வந்தால் சிருபான்மைனருக்கு ஆபத்து என்கிறார்கள், ஆனால் காங்கிரெஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஒட்டுமொத்த இந்திய மக்களுக்கும் அல்லவா பெரும் ஆபத்து என்பதை உணர்ந்து சிறந்த நிர்வாக திறமை உள்ள மோடி அவர்களை பிரதமராக தேர்ந்தெடுக்க வேண்டும்.
Rate this:
Share this comment
mohan - chennai,இந்தியா
22-ஏப்-201308:22:47 IST Report Abuse
mohanஉண்மை. ஒட்டு மொத இந்தியர்களுக்கும் ஆபத்து. அதை பற்றி அவர்களுக்கு என்ன கவலை. எதாவது பிரச்சினை என்றால் வெளி நாடு பறந்து விடுவர்........
Rate this:
Share this comment
Cancel
Kumaresan P - Aranthangi,இந்தியா
21-ஏப்-201316:44:17 IST Report Abuse
Kumaresan P உண்மைதான் ..அவர் பதவிக்கு வந்தால் நல்ல திட்டங்கள் பல வரலாம்...
Rate this:
Share this comment
Cancel
Eswaran Eswaran - Palani,இந்தியா
21-ஏப்-201316:28:44 IST Report Abuse
Eswaran Eswaran மோடி மதச் சார்பற்றவர்தான்.அது இது வரை நிரூபிக்கப் பட்ட ஒன்று.ஓட்டுப், பொறுக்கி அரசியல் வாதிகள்தான் அவரை மதவதிப் பூச்சாண்டி காட்டி அரசியல் நடத்துகின்றனர்.மோடி பிரதமராக அமர்ந்து ஒரு 5 அல்லது 10 வருடங்கள் வழிநடத்திவிட்டால் மற்ற கட்சிகளுக்கும் கட்சித் தலைவர்களுக்கும் மக்களிடம் ஒட்டுக் கேட்க செல்ல அருகதையில்லாமல் போய்விடும்.இதன் காரணமாகவே இவரை கண்டு பயம் கொண்டு நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக புழுதி வாரித் தூற்றிக் கொண்டுள்ளனர்.புழுதி அடங்கிய பின்னர் பார்த்தால் தெரியும் அவர்கள் வாரி இறைத்த புழுதி அவர்களின் முகத்தில் அப்பியிருப்பது..குஜராத்திலுள்ள பெரும்பான்மையான முஸ்லிம்களைப் பாரதத்திலுள்ள இஸ்லாமியர்களும் புரிந்து கொள்ள ஆரம்பித்தால் இந்த மதச்சார்பின்மை பேசும் அரசியல் சகடுகலெல்லாம் காணாமல் போய்விடும். ஈஸ்வரன்,பழனி.
Rate this:
Share this comment
Pannadai Pandian - wuxi,சீனா
21-ஏப்-201318:44:10 IST Report Abuse
Pannadai Pandianரொம்ப சரியான கருத்து....
Rate this:
Share this comment
Cancel
Jebamani Mohanraj - Chennai,இந்தியா
21-ஏப்-201315:52:07 IST Report Abuse
Jebamani Mohanraj ரொம்ப ஓவரா தெரியுது.
Rate this:
Share this comment
Cancel
Kaja Sherif - Doha,இந்தியா
21-ஏப்-201315:30:16 IST Report Abuse
Kaja Sherif எந்த மதமும் தீவிர வாதத்தை போதிப்பது இல்லை. ஆனால் அரசியல்வாதிகள் தங்கள் லாபத்திற்காக மதங்களின் பெயரால் தீவிரவாதத்தை வளர்த்து மக்களை பலியாக்குகின்றனர், மோடி மற்றும் ஜவாஹிருல்லாஹ் உட்பட.
Rate this:
Share this comment
mohan - kumbakonam,இந்தியா
21-ஏப்-201318:02:42 IST Report Abuse
mohankaja நீங்கள் முள்ளில் பூத்த ரோஜா ...
Rate this:
Share this comment
Cancel
Baskaran Kasimani - Singapore,சிங்கப்பூர்
21-ஏப்-201315:24:14 IST Report Abuse
Baskaran Kasimani கடவுள் இல்லை என்று சொன்ன கன்றாவி கூட்டம் கூட கோவில் குளங்களுக்கு செல்வது இப்பொழுதெல்லாம் ஒரு பேஷன். அப்படி இருக்கும் பொழுது மோடி மட்டும் தனது மதத்தின் மீது ஈடுபாடு காட்ட மாட்டார் என்று சொல்வது சரியா? அதை சொல்ல பரம யோக்கியர் வேறு வரிந்து கட்டிக்கொண்டு வந்துவிட்டார் (இவர் மீது இருந்த மதிப்பு இவர் கனியை யோக்கியமான பெண் என்று வாதாடியதில் இருந்து அகன்று விட்டது) மோடி மற்ற மதத்தினரை கண்டிப்பாக மதித்து நடப்பார் என்று நம்பலாம். நேர்மையானவர் என்பதற்கு பல எடுத்துக்காட்டுக்களை சொல்லலாம்.
Rate this:
Share this comment
Cancel
நாஞ்சில் சுலைமான் - THUCKALAY,இந்தியா
21-ஏப்-201314:34:46 IST Report Abuse
நாஞ்சில் சுலைமான் வெவ்வேறு உறைகளில் ஒரே வாள்...ஜெத்மலானி & கபில் சிபல்..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்