Desperate search for China quake survivors | சீனாவில் இயற்கையின் கொடூர தாக்குதல் ; குழந்தைகள் இழந்தனர்., பலர் பெற்றோரை இழந்தனர் !| Dinamalar

சீனாவில் இயற்கையின் கொடூர தாக்குதல் ; குழந்தைகள் இழந்தனர்., பலர் பெற்றோரை இழந்தனர் !

Updated : ஏப் 21, 2013 | Added : ஏப் 21, 2013 | கருத்துகள் (12)
Advertisement

பெய்ஜீங்: சீனாவில் நேற்று நடந்த நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 200 தொட்டது. பலர் குழந்தைகளை இழந்தனர் , பலர் தங்களின் பெற்றோரை இழந்து தவிக்கின்றனர். இவர்களுக்கு யார் உதவி செய்யப்போகிறார்கள், இவர்களின் எதிர்காலம் என்னவாகும் என நினைக்கும்போது உண்மையிலேயே நெஞ்சம் பதைக்கிறது.
மனிதன் அறிவியில் துறையில் எவ்வித முன்னேற்றம் கண்டாலும், இயற்கையின் சீற்றத்தை யாராலும் கட்டுப்படுத்த முடியாது என்பதற்கு கடந்தகால சுனாமியே சான்று , பேயாக வந்து லட்சகணக்கான உயிர்களை காவு வாங்கி சென்றது இந்த சுனாமி . இது போன்று அவ்வப்போது இயற்கை நம்மை சபித்து வருகிறது.


நேற்று சீனாவின் சியாக்சுவான் நகரில் நடந்த நிலநடுக்கத்தில் முதலில் உயிர்ப்பலி குறைவாகத்தான் இருக்கும் என நம்பப்பட்டது. ஆனால் சீன அரசின் அறிக்கையின்படி இந்த பலி எண்ணிக்கை 200 தாண்டியிருக்கிறது. 6 ஆயிரத்திற்கும் மேல் படுகாயமுற்றுள்ளனர். பலர் உயிருக்கு போராடிய நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் பலர் தங்களின் சொந்த பந்தங்களை இழந்து நிற்கதியாக நிற்கின்றனர் .

குறிப்பாக ஒரு மாத குழந்தை ஒன்று தனது தாயை இழந்தது அறியாத நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறது. இது போன்ற குழந்தைகள் மிக உன்னிப்பாக கவனிக்கப்பட்டு அன்பு உள்ளத்தோடு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பலர் குழந்தைகளையும், பலர் பெற்றோர்களையும் இழந்துள்ளனர்.

இவர்களின் எதிர்காலம் எப்படி என்பதை சீன அரசு தான் முடிவு செய்ய வேண்டும். இன்னும் பலரை மீட்கும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது. 17 ஆயிரம் ராணுவ வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சீனாவில் நடந்த விபத்து என்பது வேறு ஆனால்உயிர்ப்பலி எங்கு நடந்தாலும் வேதனை உணர்வு ஒன்றே இதில் இனம் , மொழி, நாடு என்பதில் வேறுபாடு இருக்க முடியாது தானே !

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
saraathi - singapore,சிங்கப்பூர்
22-ஏப்-201305:48:35 IST Report Abuse
saraathi தனது நாட்டு ராணுவத்தினர் மூலம் அயல் நாட்டு எல்லைகளுக்குள் அத்துமீறி நுழைந்து ஆக்கிரமிப்பு செய்யும் சீன நாட்டு அரசியல்வாதிகளுக்குதங்களது சொந்த நாட்டினுள் சொந்த மக்களை காக்கும் பணியை மட்டும்பாருங்கள் என இயற்க்கை அன்னை தன் செயலால் நினைவுட்டுகிறாள்.இது சீனனுக்கு புரிந்தால் சரி.உயிரிழந்த மற்றும் பாதிக்கப்பட்ட அப்பாவிமக்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். நமது நாட்டு அரசியல்வாதிகளுக்கும் என்று எப்படி ஆண்டவன் எச்சரிக்கை மணி அடிப்பானோ ?
Rate this:
Share this comment
Cancel
Kumaresan P - Aranthangi,இந்தியா
22-ஏப்-201301:17:58 IST Report Abuse
Kumaresan P எவனோ சிலர் செய்யும் தவறுக்காக இயற்க்கை அனைவரையும் (அப்பாவி மக்களையும்) சேர்த்து தண்டிக்கிறது.. தவறுகளை திருதிகொள்வோம்..
Rate this:
Share this comment
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
21-ஏப்-201319:39:26 IST Report Abuse
g.s,rajan கடவுளே சீனா நமது எதிரியாக இருந்தாலும் சீனாவைக் காப்பாற்று ,பாவம், இந்த குழந்தைகள் என்ன பாவம் செய்தனர்?அவர்களை மன்னித்து விடு ஜி.எஸ்.ராஜன் சென்னை .
Rate this:
Share this comment
Cancel
vamban - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
21-ஏப்-201319:30:54 IST Report Abuse
vamban பாவம் மக்கள்....
Rate this:
Share this comment
Cancel
தமிழ் குடிமகன் - போயஸ்கார்டன் ,இத்தாலி
21-ஏப்-201319:30:38 IST Report Abuse
தமிழ் குடிமகன் ஆனால் சீன அரசு செய்யும் குசும்பு தனத்தால் மக்கள் மேல் அன்பு வருவதில்லை .இருந்தாலும் அது நம் நடப்பு நாடு .
Rate this:
Share this comment
Cancel
bhardhapudhalvan - chidhambaram,இந்தியா
21-ஏப்-201319:27:32 IST Report Abuse
bhardhapudhalvan மனிதன் தனது தேவைகளுக்காக எவ்வளவு தான் இயற்கையை அழித்தாலும்...இறுதியில் வெல்வது இயற்க்கை மட்டுமே...ஒரு நாள் மண்ணோடு மண்ணாகத் தான் போகிறோம் என்ற எண்ணம் துளி கூட இல்லமால் மனிதன் ஆடிக்கொண்டே இருக்கிறான்...இவ்வுலகில் அதர்மம் தலை விரித்து ஆடுகிறது ... நாம் வாழும் வரைக்கும் இந்த மண்ணுக்கும்,மனிதர்களுக்கும் உதவி செய்யாமல் இருப்பது கூட பரவாயில்லை ... அவர்களுக்கு தீங்கு மட்டும் ஒருபோதும் நினைக்கவும் கூடாது.,செய்யவும் கூடாது...
Rate this:
Share this comment
Cancel
Murugesh - Dammam,சவுதி அரேபியா
21-ஏப்-201317:21:00 IST Report Abuse
Murugesh இது ஆரம்பம் தான் .. தொடர்ந்து பூமியை குடைந்தால் ..அது நம்மை குடையும்.... வினை விதைத்தவன் வினை அறுப்பான் .... இனிமேலாவது திருந்துவோம்....
Rate this:
Share this comment
Cancel
kumaresan.m - hochimin ,வியட்னாம்
21-ஏப்-201317:11:13 IST Report Abuse
kumaresan.m "ஆம் ... சீனர்கள் நமக்கு தீங்கு செய்ய நினைத்தாலும் ....அவர்களின் துயரத்தில் பங்கு கொள்வோம் " ....இறந்த உயிர்களின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுவோம் "
Rate this:
Share this comment
Cancel
Asokaraj - doha,கத்தார்
21-ஏப்-201316:54:31 IST Report Abuse
Asokaraj விபத்து என்பது வேறு ஆனால் உயிர்ப்பலி எங்கு நடந்தாலும் வேதனை உணர்வு ஒன்றே இதில் இனம் , மொழி, நாடு என்பதில் வேறுபாடு இருக்க முடியாது. உண்மை முற்றிலும் உண்மை. ஆனால் இதுவே இங்கே நேர்ந்திருந்தால்? அங்கே 200 என்றல் இங்கே 20000 பேர். இன்னேரம் அவர்கள் உடைமைகள் கொள்ளையடிக்கப் பட்டிருக்கும். நமது அரசியல்வியாதிகள் எப்போது நிவாரணம் வரும் பங்குபோடலாம் என பிணம் தின்னும் கழுகு போல காத்திருப்பார்கள். இங்கே நேர்ந்த புயல் சேதத்திலும் சுனாமியிலும் நாம் கண்டதுதானே? அதற்கு அவர்கள் எவ்வளவோ தேவலாம். நிச்சயமாக அந்த சீன மக்கள் நேர்ந்த அந்த துயர சம்பவத்திலிருந்து அரசாங்க உதவியுடன் விரைவில் மீண்டு வருவார்கள். நாமும் இப்படியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்போம்.
Rate this:
Share this comment
Cancel
JAY JAY - CHENNAI,இந்தியா
21-ஏப்-201315:30:34 IST Report Abuse
JAY JAY வீணா போன சீனா தான்.......ஆனா , பேனாவில் தேனா வச்சு எழுதினா கூட சீனான்னா கசக்குதே அண்ணா.....
Rate this:
Share this comment
நாஞ்சில் சுலைமான் - THUCKALAY,இந்தியா
21-ஏப்-201317:53:37 IST Report Abuse
நாஞ்சில் சுலைமான் வீணாப்போன சீனா தான்..ஆனாலும் இது போன்ற பேரிடர் சமயங்களில் நாம் அவ்வாறு எண்ணக்கூடாது..இன்று அவர்களுக்கென்றால் நாளை நமக்கும் வரலாம்..அவர்களுடைய துக்கத்திலாவது நாம் பங்கெடுக்க வேண்டும்.....
Rate this:
Share this comment
k.rajendran - LA,யூ.எஸ்.ஏ
22-ஏப்-201306:18:05 IST Report Abuse
k.rajendranஅப்போ நம் எல்லையில் ஊடுருவி உள்ள அவர்கள் ராணுவத்தை மீட்புப்பணிக்காக திரும்ப அழைக்கசொல்லுங்கள் . ...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை