INDAI GAT SEAL; protests at PM home | பிரதமர் வீடும் முற்றுகை ! இந்தியா கேட் பகுதிக்கு சீல்| Dinamalar

பிரதமர் வீடும் முற்றுகை ! இந்தியா கேட் பகுதிக்கு சீல்

Updated : ஏப் 21, 2013 | Added : ஏப் 21, 2013 | கருத்துகள் (11)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
பிரதமர் வீடும் முற்றுகை ! இந்தியா கேட் பகுதிக்கு சீல்

புதுடில்லி: டில்லியில் 5 வயது குழந்தை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் டில்லி நகர் முழுவதும் பெரும் கிளர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. காலையில் சோனியா வீட்டை முற்றுகையிட முயன்ற பா.ஜ., மகளிர் அமைப்பினர் கைது செய்யப்பட்டனர். மாலையில் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம்ஆத்மி கட்சியினர் பிரதமர் வீடு முன்பு குவிந்தனர்.
சம்பந்தப்பட்ட குற்றவாளிக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும் என்றும், மேலும் நடவடிக்கை எடுக்காத போலீசாரை பணியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் கோஷங்கள் எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


இதற்கிடையில் போராட்டக்காரர்கள் பிரதமர், ஜனாதிபதி ஆகியோர் இருக்கும் இடங்களில் வராமல் இருக்க இந்தியா கேட்டின் முக்கிய பகுதிகள் சீல் வைக்கப்பட்டுள்ளன.


பிரதமர் வீடு நோக்கி வந்தவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி சமாதானம் செய்து முன்னேற விடாமல் செய்தனர். சிலரை போலீசார் கைது செய்துள்ளனர். இது போல் எய்ம்ஸ் மருத்துவமனை முன்பும் போராட்டம் நடந்து வருகிறது. டில்லி போலீஸ் தலைமையகம் முன்பு மக்கள் தாமாக குவிந்துள்ளனர். அவர்களை கலைக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். ஆனால் மக்கள் மனித சங்கிலி அமைத்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.நாளை கோர்ட்டில் ஆஜர்:

இதற்கிடையில் பீகாரில் கைது செய்து அழைத்து வரப்பட்ட மனோஜ் நாளை டில்லி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுகிறார். இந்நேரத்தில் ஏதும் அசம்பாவிதம் நடவாமல் தடுக்க போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு ஆலோனை நடத்தினர்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
PRAKASH - AHMEDABAD, GUJARAT,இந்தியா
22-ஏப்-201312:22:14 IST Report Abuse
PRAKASH இதெல்லாம் எத்தன நாளைக்கு ?? பொண்ணு இறந்த கேஸ் ல இன்னும் ஒன்னும் ....... ங்க முடியல .. நம்ம சட்டத்த வச்சுக்கிட்டு நாக்கு கூட .... .. முடியாது
Rate this:
Share this comment
Cancel
Venkatesan Jayaraman - Dubai,இந்தியா
22-ஏப்-201312:14:57 IST Report Abuse
Venkatesan Jayaraman கண்டிக்கத்தக்க அருவருக்க தக்க செயல். விசாரணை இன்றி மக்கள் மத்தியில் அந்த கம கொடூரனை தூக்கில் போடவேண்டும்
Rate this:
Share this comment
Cancel
PS KUmar - India,இந்தியா
22-ஏப்-201309:57:41 IST Report Abuse
PS KUmar Anything that happens in Delhi gains importance, what about the child rape incidents that happened in Tamil Nadu and other states. Delhi is not the only place in India.
Rate this:
Share this comment
Cancel
Kumaresan P - Aranthangi,இந்தியா
22-ஏப்-201301:10:51 IST Report Abuse
Kumaresan P செவிடன் காதுல ஊதின சங்குதான் ... இதுகெல்லாம் கலங்கற ஆளு இல்லை இவர்.. 1000 யானையின் பலம் கொண்டவர் ...
Rate this:
Share this comment
Cancel
sairam - muscat,ஓமன்
22-ஏப்-201300:21:00 IST Report Abuse
sairam சுகந்திர இந்திய இதுவும் நடக்கும் இன்னுமும் நடக்கும்.. மக்களை மாக்கள் ஆக்கி வைத்திருக்கிறார்கள் நம்மை ஆள்பவர்கள்... வாழ்க பாரதம். வந்தை மாதரம்
Rate this:
Share this comment
Cancel
Murali Krishnan - Arni  ( Posted via: Dinamalar Android App )
22-ஏப்-201300:16:26 IST Report Abuse
Murali Krishnan இதற்கும் கவலைப்படுவாரோ
Rate this:
Share this comment
Cancel
Baskaran Kasimani - Singapore,சிங்கப்பூர்
21-ஏப்-201319:07:05 IST Report Abuse
Baskaran Kasimani நீதித்துறை மூலம் ஒருவருக்கு தண்டனை வாங்கி கொடுக்க வேக காலம் ஆகிறது (பெருமாபாலன சமயம் நீதி கிடைப்பதே இல்லை). இந்த நிலை மாற வேண்டும். வாய்தா மேல் வாய்த்த கொடுப்பதும் பெறுவதும் வழக்கம் (உதாரணத்துக்கு நம் முதல்வரையே எடுத்துக்கொள்ளலாம் - நீதிமன்றத்தின் நேரத்தை ஒரு முதல்வரே இப்படி வீணடிக்கும் பொழுது Mr பொதுஜனம் வீணடிப்பதில் ஒன்றும் ஆச்சரியம் இல்லை) இந்த நிலை மாற வேண்டும். நீதித்துறை பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
annamalai.g - riyadh  ( Posted via: Dinamalar Android App )
21-ஏப்-201318:56:04 IST Report Abuse
annamalai.g நீங்கள் சோனியா மற்றும் போலீசிடம் போராடுவதை கைவிட்டு பொதுமக்களே குற்றவாளியை பிடித்து நடு ரோட்டில் கட்டிவைத்து அவனை அடித்தே கொல்ல வேன்டும் அதை விட்டுவிட்டு நீதி்க்காக போராடி என்ன பலன் கிடைக்கப்போகிறது
Rate this:
Share this comment
Cancel
நாஞ்சில் சுலைமான் - THUCKALAY,இந்தியா
21-ஏப்-201317:59:07 IST Report Abuse
நாஞ்சில் சுலைமான் நம் சட்டம் தூங்குவதால் தானே இத்தனை பெரிய நிகழ்வுகள் தொடர்கதையாய் நிகழ்ந்து கொண்டே உள்ளது..இது போன்ற குற்றங்களுக்கென விரைவு நீதிமன்றங்கள் அமைத்து ஒரு வார காலத்தில் தீர்ப்பு வழங்கி நடைமுறை படுத்த வேண்டும்...அப்போதுதான் குற்றங்கள் குறையும்..மேலும் தண்டனையை சூடோடு சூடாக பொதுமக்கள் முன்னிலையில் நிகழ்த்தவேண்டும்...தண்டனையை நீட்டிப்போடுவதால் குற்றவாளிகளும் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிக்கவும் அந்த கயமைக் கூட்டத்துக்காக ஒரு கூட்டத்தார் போராடவும் வாய்ப்பு கொடுத்ததாக அமையும்..
Rate this:
Share this comment
Cancel
JAY JAY - CHENNAI,இந்தியா
21-ஏப்-201317:37:08 IST Report Abuse
JAY JAY குழந்தை கற்பழிப்பு என்பது மகா பெரிய மன்னிக்க முடியாத குற்றம் ... அதற்காக பிரதமர் வீட்டை ஏன் முற்றுகையிட வேண்டும்..? டெல்லியின் சட்டம் ஒழுங்குக்கு ஷிண்டே தான் காரணம் என்பதால் முற்றுகையிடுகிறோம், என்று போராட்ட காரர்கள் சொல்வார்களேயானால், மத்திய பிரதேசத்தில் 4 வயது குழந்தை கற்பழிக்கப்பட்டு, ICU வில் உயிருக்கு போராடி கொண்டு உள்ளதே, அதற்க்கு அந்த மாநில முதல்வர் வீட்டை ஏன் முற்றுகையிட வில்லை... ? ...சரி அத விடுங்க....மக்கள் , குறிப்பாக பெண்கள் - இதே வேகத்துடன் ஊழலையும் எதிர்த்து போராடினால், ஊழல் குறைந்து, சாராய போதை குறைந்து, ஆபாச படங்கள் குறைந்து, சமுதாயம் திருந்தி, இது போன்ற சமூக சீர்கேடுகள் நடவாது அல்லவா? ..மக்கள் ஊழலுக்கு எதிராக போராடுவதற்கு தான் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்... மத்திய / மாநில காங்கிரஸ் அரசானாலும் சரி, மாநில BJP அரசானாலும் சரி, ஊழல் அரசு என்று மக்கள், [ குறிப்பாக பெண்கள் ] நினைத்தால் , இதே உத்வேகத்துடன் போராடினால் வெற்றி நிச்சயம்... பெரும்பாலான ஆண்களுக்கு குடித்து சீரழியவே நேரம் பத்தவில்லை... பெண்கள் தான் போராடி மறுபடி ஒரு ஊழல் இல்லா நாடு என்ற சுதந்திரத்தை வாங்கி தர வேண்டும்.... இதற்க்கு பெண்களும் ஒரு பெரிய தியாகம் செய்ய வேண்டும்...அந்த பாழாப்போன TV சீரியல் மோகத்தில் இருந்து முதலில் வெளியே வரவேண்டும்....
Rate this:
Share this comment
Puli Kuttie - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
21-ஏப்-201318:09:24 IST Report Abuse
Puli Kuttieதயவு செய்து இந்த கொடூர சம்பவத்தை அரசியல் ஆக்காதீர்கள். ...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை