ஆண் குழந்தையை கடத்தியதாக பெண் புரோக்கர்கள் 3 பேர் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஆண் குழந்தையை கடத்தியதாக பெண் புரோக்கர்கள் 3 பேர் கைது

Updated : ஏப் 21, 2013 | Added : ஏப் 21, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

மதுரை : மதுரை அரசு மருத்துவமனையில், பிறந்த ஆண் குழந்தையை விற்க மறுத்ததால், குழந்தையை கடத்தி விற்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. இது தொடர்பாக, பெண் புரோக்கர்கள் மூவரை, போலீசார் கைது செய்தனர். கடத்தப்பட்ட ஆண் குழந்தை மீட்கப்பட்டது.மதுரை மதிச்சியத்தைச் சேர்ந்தவர் முருகன்; கூலித் தொழிலாளி. இவரது மனைவி காளீஸ்வரி, 27. இவர்களுக்கு மகன், மகள் உள்ள நிலையில், மூன்றாவது முறையாக காளீஸ்வரி கர்ப்பமானார். மதுரை அரசு மருத்துவமனையில், மார்ச், 25ல் அனுமதிக்கப்பட்டார், ஏப்., 2ல் ஆண் குழந்தை பிறந்தது. வறுமை காரணமாக இருந்த இவரிடம், குழந்தையை விலைக்கு வாங்க, சிலர் முயற்சி செய்தனர். அது பலிக்காததால், குழந்தையை கடத்தினர்.பின், ஏப்., 13ல் வீட்டிற்கு திரும்பிய நிலையில், காளீஸ்வரிக்கு குழந்தையை பிரிந்த ஏக்கம் வாட்டியது. போலீசில் காளீஸ்வரி புகார் செய்தார். தன் குழந்தையை விற்க மறுத்ததால், மருத்துவமனை புரோக்கர்கள் சாரதா, 65, கணேசன் மனைவி ஆறுமுகம், 55, பாண்டியம்மாள், 43, ஆகியோர், கடத்திச் சென்றதாக, அப்புகாரில் தெரிவித்தார்.போலீசார் நடத்திய விசாரணையில், குழந்தையை, 2.50 லட்சம் ரூபாய்க்கு, மதுரை காமராஜர் சாலையில் வசிக்கும் தம்பதிக்கு புரோக்கர்கள் விற்றது தெரிந்தது. புரோக்கர்கள் மூவரையும் கைது செய்து, குழந்தையை போலீசார் மீட்டனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை