சிவகங்கை பண்ணையில் காவலாளி அடித்து கொலை? எஸ்.பி., விசாரணை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சிவகங்கை பண்ணையில் காவலாளி அடித்து கொலை? எஸ்.பி., விசாரணை

Updated : ஏப் 21, 2013 | Added : ஏப் 21, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சிவகங்கை : சிவகங்கை அருகே பண்ணையில் காவலாளியின் உடல் அழுகிய நிலையில் கிடந்ததால், கொலை செய்யப்பட்டாரா என, போலீசார் விசாரிக்கின்றனர்.சிவகங்கை, மஜீத்ரோட்டை சேர்ந்த கிருஷ்ணன் மகன் மாதவன். இவருக்கு, சொந்தமான பண்ணைத் தோட்டம் அல்லூர் பனங்காடியில் உள்ளது. ஆறு மாதமாக, முத்துப்பட்டிணத்தை சேர்ந்த ராமன்,76, காவலாளியாக இருந்தார். இன்று காலை, உடல் அழுகிய நிலையில், பண்ணையிலேயே இறந்து கிடப்பதாக, போலீசாருக்கு தகவல் வந்தது. சிவகங்கை எஸ்.பி., சக்திவேல், தாலுகா இன்ஸ்பெக்டர் சங்கர் விசாரித்தனர்.இவரது சாவில் மர்மம் இருப்பதால், அடித்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என, போலீசார் சந்தேகிக்கின்றனர். தொடர் கொலை: 2 மாதத்திற்கு முன்பு, இதே பகுதியில் திருமாஞ்சோலை அரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரியர் பெத்தலீஸ் என்பவர் எரித்துக்கொல்லப்பட்டார். இது போன்று பனங்காடி காட்டிற்குள் தொடர் கொலை சம்பவங்கள் நடப்பதால், அப்பகுதி மக்கள் அச்சத்தில் தவிக்கின்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை