E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
"வழக்கு விசாரணை நீடித்ததற்காகதண்டனையை குறைக்க முடியாது'
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

21 ஏப்
2013
21:14

புதுடில்லி:"ஒரு வழக்கின் விசாரணை, நீண்ட நாட்கள் நடந்தது என்பதற்காக, குற்றவாளிக்கு விதிக்கப்பட்ட தண்டனையை குறைக்க முடியாது' என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு உள்ளது.


அரியானா மாநிலத்தைச் சேர்ந்தவருக்கு, ஒரு வழக்கில், கீழ்கோர்ட், சிறைத் தண்டனை விதித்தது. இந்த வழக்கு முடிவதற்கு, 14 ஆண்டுகள் ஆனதாலும், விசாரணை கைதியாக, 14 மாதங்கள் சிறையில் இருந்ததாலும், தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை குறைக்கக் கோரி, அவர், அரியானா ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.


இதை விசாரித்த ஐகோர்ட், வழக்கு விசாரணை முடிவதற்கு, கால தாமதம் ஏற்பட்ட காரணத்தை அடிப்படையாக வைத்து, அவருக்கான தண்டனையை, குறைத்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து, அரசு தரப்பில், சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.இந்த மனு, நீதிபதி சதாசிவம் தலைமையிலான, "பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:


வழக்கின் விசாரணை, நீண்ட நாட்கள் நடந்தது என்ற காரணத்தை அடிப்படையாக வைத்து, ஒருவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை குறைக்க முடியாது. அப்படி குறைத்தால், கோர்ட்டின் மீது, மக்கள் வைத்துள்ள நம்பிக்கை குறைந்து விடும்.குற்றத்தின் தன்மையை பொறுத்தே, தண்டனையை குறைப்பதா; இல்லையா என்பதை முடிவு செய்ய வேண்டுமே தவிர, வழக்கின் விசாரணை காலத்தை அடிப்படையாக வைத்து, முடிவு செய்ய முடியாது.
இந்த வழக்கில், ஐகோர்ட் விதித்த தீர்ப்பு, துரதிருஷ்டவசமானது. எனவே, ஐகோர்ட் உத்தரவை தள்ளுபடி செய்யப்படுகிறது.இவ்வாறு, நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.





Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (6)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
mirudan - kailaayam,இந்தியா
22-ஏப்-201310:51:30 IST Report Abuse
mirudan நீதித்துறையில் கண்காணிப்புக்கு உட்படுத்த பட வேண்டும், என்னுடைய ஒரு வழக்கின் மேல்முறையீடு சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூலை 2012 இல் இருந்து கிடப்பில் இருக்கு இது குறித்து வக்கீலுடன் கேட்டால் அவருக்கு ஒன்றும் தெரிய வில்லை, பதிவாளரிடம் கேட்டால் நீதிபதியிடம் இருக்கும் வழக்கு குறித்து நான் ஒன்றும் சொல்ல முடியாது என்கிறார். சரியென்று சம்மந்த பட்ட நீதிபதிக்கே ஒரு கடிதம் எழுதி 45 நாட்கள் ஆகியும் ஒன்றும் தெரிய வில்லை. ஏன் அனுபவத்தில் நீதிமன்ற பணிகள் போன்று பொறுப்பு இல்லதா ஒரு துறை உலகில் ஒன்றுமே இல்லை.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
Karam chand Gandhi - Auroville,இந்தியா
22-ஏப்-201309:18:27 IST Report Abuse
Karam chand Gandhi இப்படி வழக்கு நடத்துவது தவறுதானே நீதிபதி அய்யா? நீங்கள் செய்தால் சட்ட வரம்புக்குள் வராதா? இதனால் தான் இன்று நீதியின் நிலை மகா பாதாளத்தில் உள்ளது.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
யதார்தவாதி வெகுஜன விரோதி - சிராப்பள்ளி,இந்தியா
22-ஏப்-201307:39:10 IST Report Abuse
யதார்தவாதி வெகுஜன விரோதி கருணை மனு, அல்லது தண்டனையை ரத்து செய்ய கோரி பிரமுகர்களின் கடிதங்கள் இருக்கு, நாங்கள் அதை வச்சு சமாளிசிடுவோம்லே.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
22-ஏப்-201314:09:26 IST Report Abuse
தமிழவேல் இப்போலாம் தீர்ப்புக்கு 2 நிமிஷத்துக்கு முன்னால நீதிபதிக்கே தந்தி வருது.......
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
Cancel
ஆரூர் ரங - chennai,இந்தியா
22-ஏப்-201306:49:11 IST Report Abuse
ஆரூர் ரங நீண்ட நாள் கழித்துக் கிடைக்கும் நீதிக்கு மதிப்பு உண்டா??
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
Cancel
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
22-ஏப்-201301:33:07 IST Report Abuse
தமிழவேல் நல்ல தீர்ப்பு.. நம்ம ஊருல ஒரு கேசு 16 வருஷமா நடக்குதுல்ல ...
Rate this:
0 members
0 members
2 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.