E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
பண்ணை வீட்டில் இரண்டு அறைகளில் மட்டுமே நடமாட பாக்., "மாஜி' அதிபர் முஷாரப்புக்கு அனுமதி
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

மாற்றம் செய்த நாள்

21 ஏப்
2013
21:24
பதிவு செய்த நாள்
ஏப் 21,2013 21:23

இஸ்லாமாபாத்:பண்ணை வீட்டில் சிறை வைக்கப்பட்டுள்ள பாக்., முன்னாள் அதிபர் முஷாரப், இரண்டு அறைகளில் மட்டுமே நடமாட அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

பாகிஸ்தான் ராணுவ தளபதியாக இருந்த முஷாரப், 1999ம் ஆண்டு, பிரதமர் நவாஸ் ஷரீப் அரசை கவிழ்த்து விட்டு, ஆட்சியை கைப்பற்றினார். 2008ல் நடந்த தேர்தலில் இவர் தோல்வியடைந்ததால், பதவியிலிருந்து விலகினார்.போதிய பாதுகாப்பு கொடுக்காத காரணத்தால், பெனசிர் புட்டோ படுகொலை செய்யப்பட்டதாக, இவர் மீது குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.அதுமட்டுமல்லாது, 2007ல் தலைமை நீதிபதி உட்பட, 60 நீதிபதிகளை பதவி நீக்கம் செய்து சிறையில் அடைத்து, அவசர நிலையை பிறப்பித்தார். இவரது இந்த செயல், தேச துரோக செயலாக குற்றம் சாட்டப்பட்டு, இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு நடக்கிறது.

பல்வேறு நகரங்களில், இவர் மீது வழக்குகள் இருந்ததால், துபாய் மற்றும் லண்டனில், சில ஆண்டுகளாக தங்கியிருந்தார்.அடுத்த மாதம், 11ம் தேதி, பார்லிமென்ட் தேர்தல் நடைபெற உள்ளதால், "அனைத்து பாக்., முஸ்லிம் லீக்' கட்சியின் சார்பில் போட்டியிடுவதற்காக, கடந்த மாதம் நாடு திரும்பினார்.நான்கு தொகுதிகளில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார்."அரசியலமைப்பை மீறி நடந்த முஷாரப்பை, தேர்தலில் போட்டியிட அனுமதிக்கக் கூடாது' என, வழக்கறிஞர்கள் பலர், தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்திருந்தனர். இதையடுத்து, தேர்தல் தீர்பாயம், முஷாரப்பின், நான்கு வேட்பு மனுக்களையும் நிராகரித்துவிட்டது.இதனால், இவர் பாக்., தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை இழந்தார். இந்த நிலையில், கடந்த வாரம், ஜாமினை நீட்டிக்க கோருவதற்காக, இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்துக்கு வந்திருந்தார். ஜாமினை நீட்டிக்க மறுத்த நீதிமன்றம், முஷாரப்பை உடனடியாக கைது செய்ய உத்தரவிட்டது.இந்த உத்தரவை கேட்டதும், முஷாரப், தன் பாதுகாவலர்களுடன், அங்கிருந்த கூட்டத்தை தள்ளிக்கொண்டு, அவசரமாக காரில் ஏறி புறப்பட்டார்.

இஸ்லாமாபாத்தில் உள்ள அவரது பண்ணை வீட்டில், இரண்டு நாட்களுக்கு முன், அவர் கைது செய்யப்பட்டார்.
பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத அமைப்புகள், முஷாரப்பை கொல்ல திட்டமிட்டு உள்ளன. எனவே, அவருக்கு சிறையில் போதிய பாதுகாப்பு இருக்காது என்பதால், இஸ்லாமாபாத் பண்ணை வீட்டிலேயே, பாதுகாப்பு கருதி அவரை சிறை வைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்காக பண்ணை வீடு, கிளை சிறையாக அறிவிக்கப்பட்டு உள்ளது.தற்போது முஷாரப், 14 நாட்களுக்கு நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டு உள்ளார். நீதிமன்ற காவலில் இருந்தாலும், அவர் தற்போது, பண்ணை வீட்டில் தான் சிறை வைக்கப்பட்டு உள்ளார்.

முஷாரப் தலைமையிலான அனைத்து பாக்., முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர்களில் ஒருவரான, முகமது அம்ஜத் குறிப்பிடுகையில், ""ஐந்து ஏக்கர் பரப்பளவு கொண்ட பண்ணை வீட்டில், அவர் சிறை வைக்கப்பட்டிருந்தாலும், இரண்டு அறைகளில் மட்டுமே, அவர் நடமாட அனுமதிக்கப்பட்டு உள்ளார். உறவினர்களோ, வழக்கறிஞர்களோ அவரை பார்க்க அனுமதிக்கப்படவில்லை,'' என்றார்.




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (16)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
maravan - dublin,அயர்லாந்து
22-ஏப்-201315:20:53 IST Report Abuse
maravan இவருதான் அமெரிக்க ஏஜென்ட் ஆச்சே...அப்புறம் எப்படி..?.. அமெரிக்க எப்படியும் காப்பாத்திடும்...மறவன்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
Mohamed Nawaz - Sakaka,சவுதி அரேபியா
22-ஏப்-201314:17:20 IST Report Abuse
Mohamed Nawaz அனைத்து பாகிஸ்தான் அதிபர்களும் இப்படி ஒருவர் பின் ஒருவராக தண்டனைகள் இவ்வுலகிலும் மறுமையிலும் அனுபவிக்க வேண்டி வரும். அண்டை நாட்டுடன் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்றுகூட தெரியாதவர்கள்.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
S Madhavan - chennai,இந்தியா
22-ஏப்-201312:30:07 IST Report Abuse
S Madhavan // இரண்டு அறைகளில் மட்டுமே நடமாட // 1) குளியல் அறை. 2) கழிப்பறை
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
Mohamed Nawaz - Sakaka,சவுதி அரேபியா
22-ஏப்-201312:17:53 IST Report Abuse
Mohamed Nawaz நல்ல விதை விதையுங்கள் நல்ல மரம் முளைக்கும் நல்ல பலன் கிடைக்கும், இஸ்லாம் என்ற பெயரால் எல்லா பாகிஸ்தான் ஆட்சியாளர்களும் செய்யும் அட்டூழியம் கொஞ்சமா? அண்டை வீட்டுகாரனுடன் எப்படி நடக்க வேண்டும் என்று கூட தெரியாத மூடர்கள் பெயரளவில் மட்டுமே இஸ்லாமியர்கள் இவர்களுக்கு ஒவ்வொரு ஆட்சியாளருக்கும் இது போன்ற முடிவோ அல்லது இதைவிட மோசமான முடிவோ மட்டுமே வரும் இது இறைவனின் தீர்ப்பு.
Rate this:
0 members
0 members
4 members
Share this comment
Cancel
BLACK CAT - Marthandam.,இந்தியா
22-ஏப்-201312:00:25 IST Report Abuse
BLACK CAT யாராச்சு fan போடுங்கப்பா வேசற்குது >>>> ...
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
Anbazhagan M - Kurumbalur, Perambalur,இந்தியா
22-ஏப்-201310:48:19 IST Report Abuse
Anbazhagan M இவன நாடு கடத்த கூடாது காடு கடத்தனும் அதுவும் அமேசான் காடுதான்.......
Rate this:
0 members
0 members
4 members
Share this comment
Cancel
Baskaran Kasimani - Singapore,சிங்கப்பூர்
22-ஏப்-201309:44:11 IST Report Abuse
Baskaran Kasimani ஒசாமை தூக்கிச்சென்றது போல இவரையும் ஏதாவது கருப்பு ஹெலிக்காப்ட்டர் கொண்டு வந்து அமெரிக்காவுக்கு பிடித்து சென்றால்த்தான் இந்த அமெரிக்க ஆதரவாளர் பிழைப்பார்...இல்லை என்றால் தீவிரவாதிகள் இவரை பிடித்துச்சென்று விடுவார்கள்.
Rate this:
0 members
0 members
3 members
Share this comment
Cancel
Mr y - thamizhnadu,இந்தியா
22-ஏப்-201309:29:23 IST Report Abuse
Mr y அப்பாவி பாகிஸ்தான் மக்களை தூண்டிவிட்டு கார்கில் கலவர போர் உண்டாக்கி இருநாட்டு மக்களுக்கும் துன்பம் உண்டாக்கிய துர்மதியஆனே... உனக்கு தேவையான தூக்கு கயிறு சீக்கிரமே உண்டாகி உன் துன்பம் தொலைய கடவது...
Rate this:
0 members
0 members
9 members
Share this comment
Cancel
நாஞ்சில் சுலைமான் - தோஹா,கத்தார்
22-ஏப்-201309:02:45 IST Report Abuse
நாஞ்சில் சுலைமான் பிறர்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா பிற்பகல் தாமே வரும்..
Rate this:
0 members
0 members
4 members
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
22-ஏப்-201308:31:34 IST Report Abuse
Srinivasan Kannaiya முஷாரப்பின் வெற்றிக்கு இப்பொழுதே அவரது எதிரிகள் அஸ்த்திவாரம் இடுகின்றார்கள்.
Rate this:
2 members
0 members
1 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.