Advertisement
பாகிஸ்தானுக்கு வேவு பார்த்தவருக்கு 7 ஆண்டு சிறை சரியானதே: சுப்ரீம் கோர்ட்
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

புதுடில்லி:ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில், 1990ல், சபி முகம்மது என்பவரை போலீசார் கைது செய்தனர். இந்திய ராணுவம் தொடர்பான தகவல்களை, பாக்., உளவு நிறுவனத்திற்கு உளவு பார்த்ததாக கைது செய்யப்பட்டார்.


இது தொடர்பாக, அவரிடமிருந்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. பாகிஸ்தானுக்கு உளவு பார்த்தது, இந்தியா தொடர்பான தகவல்களை பரிமாறியது என, பல்வேறு வழக்குகளின் கீழ், சபி முகம்மது மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.இதை விசாரித்த கீழ் கோர்ட், சபி முகம்மதுக்கு, ஏழு ஆண்டு கடுங்காவல் தண்டனை அளித்து தீர்ப்பு வழங்கியது. இதை எதிர்த்து, ராஜஸ்தான் ஐகோர்ட்டில் சபி முகம்மது தாக்கல் செய்த மனு, தள்ளுபடி செய்யப்பட்டது.


இதை எதிர்த்து சபி முகம்மது, சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தார். இம்மனு, நீதிபதிகள் சி.கே.பிரசாத், வி.கோபாலா ஆகியோர் அடங்கிய, "பெஞ்ச்' முன் விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறியதாவது:நாட்டின் பாதுகாப்பு தொடர்பான முக்கிய ஆவணங்கள், மனுதாரரிடம் இருந்து கைப்பற்றப்பட்டு உள்ளது தெளிவாகிறது. எதற்காக இந்த ஆவணங்களை அவர் வைத்து இருந்தார் என்பது தெளிவாகவில்லை.


போலீசார் அத்துமீறி, தன் வீட்டில் நுழைந்ததாக அவர் கூறுவதை ஏற்க முடியாது. போலீசார் அனுமதி பெறாவிட்டாலும் கூட, அவரது வீட்டில் இருந்து தான், முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு உள்ளன.கீழ் கோர்ட் வழங்கிய தண்டனை சரியானதே. எனவே, இம்மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.இவ்வாறு, நீதிபதிகள் கூறினர்.


Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.