பெண்களுக்கு பாதுகாப்புமும்பை ஐகோர்ட் உறுதி| Dinamalar

பெண்களுக்கு பாதுகாப்புமும்பை ஐகோர்ட் உறுதி

Added : ஏப் 21, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

மும்பை:"பெண்களின் மேன்மை, வீட்டிலும், அலுவலகத்திலும் காப்பாற்றப்பட வேண்டும்' என, மும்பை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.


மும்பை அருகே உள்ள தானே நகரில், கடந்த ஆண்டு, அரசு போக்குவரத்துக் கழக டெப்போவில் பணியாற்றிய பெண் ஊழியரை, அங்கு பணியாற்றிய ஆண் ஊழியர், நந்தகுமார் என்பவர், மானபங்கம் செய்துள்ளார். இதை கண்டித்து, அந்தப் பெண் ஊழியர், செஷன்ஸ் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.அங்கு, நந்தகுமாருக்கு, ஆறு மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அதை எதிர்த்து, நந்தகுமார், மும்பை ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்தார். அந்த வழக்கு, நீதிபதி, எஸ்.சி.தர்மாதிகாரி முன், கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது.


நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியுள்ளதாவது:பெண்களின் நாணம், மேன்மை, மதிப்பு, புகழ் போன்றவை, அந்தப் பெண்ணின் வீட்டிலும், அந்தப் பெண் பணியாற்றும் அலுவலகத்திலும் காப்பாற்றப்பட வேண்டும். இது மட்டுமின்றி, அனைத்து இடங்களிலும், பெண்கள் பாதுகாக்கப்பட வேண்டும். இல்லையேல், பெண்களுக்கு எந்த இடமும் பாதுகாப்பு இல்லாத இடமாக மாறிவிடும்.


ஆங்காங்கே நடக்கும் இது போன்ற மானபங்க சம்பவங்களால், பணியிடங்களில், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை காணப்படுகிறது. இதைத் தவிர்க்க, அத்தகைய குற்றங்களுக்கு கடும் தண்டனை விதிக்கப்படுவது தான் சரியானதாக இருக்கும்.இவ்வாறு, நீதிபதி தன் உத்தரவில் கூறினார். கீழ்கோர்ட் விதித்த தண்டனையை, நீதிபதி தர்மாதிகாரியும் உறுதிபடுத்தினார்.


Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை