ஆஸி., அருங்காட்சியகத்தில் நடராஜர் சிலை மீட்கப்படுமா?| Dinamalar

ஆஸி., அருங்காட்சியகத்தில் நடராஜர் சிலை மீட்கப்படுமா?

Added : ஏப் 21, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

கான்பெர்ரா:தமிழக கோவிலிலிருந்து கடத்தப்பட்ட நடராஜர் சிலை, ஆஸ்திரேலிய அருங்காட்சியகத்திலிருந்து மீட்பதில் இழுபறி நிலவுகிறது.


அமெரிக்காவின், நியூயார்க் நகரில், கலை பொருட்கள் விற்பனை கூடம் நடத்தி வந்தவர் சுபாஷ் கபூர். பல்வேறு நாடுகளில் உள்ள அருங்காட்சியகங்கள் இவரிமிருந்து புராதன சிலைகளை வாங்கியுள்ளன. சிலைகளை கடத்தி விற்பனை செய்ததாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டதால், கடந்த ஆண்டு அக்டோபரில் இவர் ஜெர்மனியில் கைது செய்யப்பட்டு, இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார். தற்போது இவர் சென்னை சிறையில் அடைக்கப் பட்டுள்ளார்.


இதற்கிடையே, ஆஸ்திரேலியாவின், கான்பெர்ரா அருங்காட்சியகத்தில், தமிழகத்தைச் சேர்ந்த, 11ம் நூற்றாண்டில் வடிவமைக்கப்பட்ட நடராஜர் சிலை உள்ளது. இந்த சிலை திருடப்பட்டதா என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.இந்த சிலை குறித்த விவரங்களை, தமிழக போலீசார், ஆஸ்திரேலிய அரசிடம் வழங்கியுள்ளனர்.


இந்த சிலையை மீட்க நடவடிக்கை எடுக்கும் படி, கடிதம் அனுப்பி ஆறு மாதங்கள் ஆகியும் இதுவரை எந்த முயற்சியையும், ஆஸ்திரேலியா மேற்கொள்ளவில்லை.இது குறித்து கான்பெர்ரா மியூசிய நிர்வாகி குறிப்பிடுகையில், ""இந்த சிலை தொடர்பாக, ஆஸ்திரேலிய போலீசாரோ, அரசு அதிகாரிகளோ எங்களை தொடர்பு கொள்ளவில்லை,'' என்றார்.


இந்தியாவின் சார்பில் அரசியல் ரீதியாகவோ, தூதரக மட்டத்திலோ நெருக்கடி கொடுக்கும் பட்சத்தில் தான், இந்த விஷயத்தில் ஆஸ்திரேலியா நடவடிக்கை எடுக்கும் என கூறப் படுகிறது. எனவே, தற்போதைய நிலையில் இந்த சிலையை மீட்பதில் இழுபறி நிலவுகிறது.


Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை