Advertisement
மாற்று கர்ப்பப்பை பொருத்தப்பட்ட பெண் கர்ப்பம்
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

21 ஏப்
2013
21:55

இஸ்தான்புல்:மாற்று கர்ப்பப்பை பொருத்தப்பட்ட, உலகின் முதல் பெண், கர்ப்பம் அடைந்துள்ளார். துருக்கியைச் சேர்ந்தவர் தேர்யா சிர்த். பல லட்சம் பெண்களில் ஒருவர், கர்ப்பப்பை இல்லாமல் பிறக்கின்றனர். தேர்யாவும் அவர்களில் ஒருவர். சவுதி பெண்


கடந்த, 2000ம் ஆண்டு, சவுதி அரேபியாவில், ஒரு பெண்ணுக்கு, உயிருடன் உள்ள பெண்ணிடம் இருந்து கர்ப்பப்பையை தானமாகப் பெற்று பொருத்தப்பட்டது. ஆனால், உடலுடன் பொருந்தாததன் காரணமாக, 99 நாட்களுக்குப் பிறகு அகற்றப்பட்டது.மறுபடியும் இம்முயற்சி தோல்வி அடையாமல் இருக்க, மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்கு, 18 மாதங்களுக்கு முன்பிருந்து தக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொண்டு, தேர்யாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இவருக்கு, இறந்த பெண்ணின் கர்ப்பப்பை பொருத்தப்பட்டுள்ளது.


இவரின் கருப்பையில், செயற்கை முறையில் உருவாக்கப்பட்ட கரு செலுத்தப்பட்டு, தற்போது, இரண்டு வார கருவாக வளர்ந்துள்ளது.இவருக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர் முஸ்தபா உனால் கூறியதாவது:கர்ப்பப்பை மாற்று சிகிச்சை செய்த உலகின் முதல் பெண்ணான தேர்யா, தற்போது கர்ப்பமடைந்துள்ளது மருத்துவ சாதனையாகும். இவருக்கு உலகெங்கிலும் இருந்து ஆயிரக்கணக்கான பெண்கள் வாழ்த்து சொல்கின்றனர்.


அறுவை சிகிச்சை:இன்னும் சில மாதங்களுக்குப் பிறகு, கரு நன்கு வளர்ந்ததும் பின், அறுவை சிகிச்சை மூலம் வெளியில் எடுக்கப்பட்டு, "இன்குபேட்டர்' உதவியுடன், எந்தவித குறைபாடுகளும் ஏற்படாவண்ணம் வளர்க்கப்படும். குறை பிரசவ குழந்தையாக இருந்தாலும், முழு வளர்ச்சியடையும் விதத்தில் மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும்.இவ்வாறு மருத்துவர் முஸ்தபா கூறினார்.





Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.