கல்லூரி மாணவியை கடத்திச் சென்று கற்பழித்தவர் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கல்லூரி மாணவியை கடத்திச் சென்று கற்பழித்தவர் கைது

Updated : ஏப் 21, 2013 | Added : ஏப் 21, 2013 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

வத்திராயிருப்பு : வத்திராயிருப்பில் கல்லூரி மாணவியை ஆசைவார்த்தைகூறி கடத்தி சென்று கற்பழித்தவரை போலீசார் கைது செய்தனர்.வத்திராயிருப்பு பலகுடி வடக்குத்தெருவை சேர்ந்த 50 வயது கூலி தொழிலாளியின் மகள் கிருஷ்ணன் கோவிலில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.ஏ., ஆங்கிலம், முதலாமாண்டு படித்து வந்தார். ஏப். 9 ல் கல்லூரிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. போலீசில் அத்தொழிலாளி புகார் செய்ததையடுத்து போலீசார் அம்மாணவியை கடந்த சில நாட்களாக தேடி வந்தனர். இந்நிலையில் அதே தெருவை சேர்ந்த கருப்பையா,31, என்ற கூலி தொழிலாளியும் அன்று முதல் காணவில்லை. போலீசார் விசாரணையில் கருப்பையா அந்த மாணவியை ஆசைவார்த்தை கூறி கடத்தி சென்றது தெரியவந்தது. போலீசாரின் தேடுதல் வேட்டையில் கருப்பையா மாணவியுடன் சிக்கினார். மாணவி தகாத முறையில் கற்பழிக்கப்பட்டதால் அவருக்கு உதிரப்போக்கு ஏற்பட்டது. மாணவியை போலீசார் மருத்துவ பரிசோதனைக்கு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றபோது, அவர் கற்பழிக்கப் பட்டது உறுதியானது. கருப்பையாவிற்கு திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளனர். வத்திராயிருப்பு எஸ்.ஐ., அய்யப்பன் அவரை கைது செய்து விசாரிக்கிறார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kumaresan.m - hochimin ,வியட்னாம்
22-ஏப்-201308:53:56 IST Report Abuse
kumaresan.m பிறகு எதற்கு இந்த கல்லூரி படிப்பு ?
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
22-ஏப்-201308:41:23 IST Report Abuse
Srinivasan Kannaiya இது மாதிரி செய்திகளை தயவு செய்து வெளியிடாதீர்கள். மன வேதனை குறையும். தொடர்கதை ஆகிவிட்ட இந்த மாதிரி நிகழ்வுகளை உடனடியாக தவிர்க்க முடியாத கையால் ஆகாத மத்திய, மாநில அரசுகளை என்ன செய்வது. வெட்க்க கேடு.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை