பிராந்திய கட்சிகளை ஒன்று சேர்க்க முற்பட்டுள்ளோம்:மார்க்சிஸ்ட் பொது செயலர் தகவல்| Dinamalar

பிராந்திய கட்சிகளை ஒன்று சேர்க்க முற்பட்டுள்ளோம்:மார்க்சிஸ்ட் பொது செயலர் தகவல்

Updated : ஏப் 22, 2013 | Added : ஏப் 21, 2013 | கருத்துகள் (4)
Advertisement
பிராந்திய கட்சிகளை ஒன்று சேர்க்க முற்பட்டுள்ளோம்:மார்க்சிஸ்ட் பொது செயலர் தகவல்

புதுடில்லி:""மத்தியில், ஐ.மு., மற்றும் தே.ஜ., கூட்டணிகளுக்கு மாற்றாக, புதிதாக ஒரு கூட்டணியை உருவாக்குவதற்கான முயற்சியை மேற்கொண்டுள்ளோம். இந்த கூட்டணியில், ஒருமித்த கருத்துள்ள, பிராந்திய கட்சிகளை சேர்க்கவும், நடவடிக்கை எடுத்து வருகிறோம்,'' என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலர், பிரகாஷ் கராத் கூறினார்.

அடுத்த ஆண்டில் லோக்சபா தேர்தல் நடக்கவுள்ள நிலையில், அரசியல் கட்சிகள், தங்களின் தேர்தல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளன. புதிய கூட்டணிகளை உருவாக்குவது குறித்தும், தேர்தல் வியூகங்கள் குறித்தும், தீவிரமாக ஆலோசித்து வருகின்றன.வெற்றி வாய்ப்பு இல்லை:இதுகுறித்து, மார்க்சிஸ்ட் கம்யூ., பொதுச் செயலர், பிரகாஷ் கராத் கூறியதாவது:காங்., தலைமையிலான, ஐ.மு., கூட்டணி, பா.ஜ., தலைமையிலான, தே.ஜ., கூட்டணி, ஆகிய இரு கூட்டணிகளுமே, அடுத்த லோக்சபா தேர்தலில் வெற்றி பெற முடியாது. அதிலும், காங்., தலைமையிலான கூட்டணி வெற்றி பெறுவதற்கு, குறைந்த அளவு கூட, வாய்ப்பு இல்லை.ஐ.மு., கூட்டணி ஆட்சியில், அனைத்து துறைகளிலும், ஊழல் அதிகரித்து விட்டது. ஐ.மு., கூட்டணி அரசு உருவாக்கிய கொள்கைகள் அனைத்துமே தோல்வி அடைந்து விட்டன.அடுத்த தேர்தலில், காங்கிரஸ், பா.ஜ., அல்லாத, மதச் சார்பற்ற அரசு தான், வெற்றி பெறும். எனவே, ஐ.மு., மற்றும் தே.ஜ., கூட்டணிகளுக்கு மாற்றாக, மதச் சார்பற்ற, புதிய கூட்டணியை உருவாக்குவதற்கான, முயற்சியில் ஈடுபட்டுள்ளோம்.இதில், ஒருமித்த கருத்துக்களை உடைய, பிராந்திய கட்சிகளையும் சேர்ப்போம். அதற்கான நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம். இடதுசாரி கட்சிகள், ஒரே அணியில், இணைந்து தேர்தலை சந்திக்கும். குஜராத் முதல்வர், நரேந்திர மோடியை, அடுத்த லோக்சபா தேர்தலுக்கான, பிரதமர் வேட்பாளராக முன் நிறுத்துவதற்கு, பா.ஜ., முயற்சித்து வருகிறது. இதன்மூலம், மதவாத கொள்கையை திணிக்க முயற்சிக்கிறது. பா.ஜ.,வின் இந்த அணுகு முறையை, நாட்டு மக்கள், ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.முன் உதாரணம் :மதவாத அரசியலை தோற்கடிப்பதற்கான அனைத்து முயற்சிகளையும், இடதுசாரி கட்சிகள் மேற்கொள்ளும். மத்திய அரசு, சி.பி.ஐ.,யை, தனக்கு சாதகமாக பயன்படுத்துகிறது. அரசியல் எதிரிகளை ஒழிப்பதற்கு, சி.பி.ஐ.,யை, ஒரு கருவியாக பயன்படுத்துகிறது.நிலக்கரி சுரங்க முறைகேடு தொடர்பாக, சி.பி.ஐ., விசாரணை நடத்தி வரும் நிலையில், மத்திய சட்ட அமைச்சர், அஸ்வனி குமார், சி.பி.ஐ., இயக்குனரை சந்தித்து, அது தொடர்பாக பேசியது, தவறான முன் உதாரணமாகும்.இவ்வாறு, பிரகாஷ் கராத் கூறினார்.Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
யதார்தவாதி வெகுஜன விரோதி - சிராப்பள்ளி,இந்தியா
22-ஏப்-201308:07:41 IST Report Abuse
யதார்தவாதி வெகுஜன விரோதி நைனா, பிஜேபி ஐ பார்த்து மக்கள், அரசியல்வாதிகள், ஊடகங்கள் கேட்கும் அதே கேள்வியை நான் இங்கு கேட்கிறேன். உங்களின் பிரதமர் வேட்பாளர் யார்? (இதற்க்கு நீங்கள் பதில் சொன்னால், உங்கள் கூட்டணி அமைவதற்கு முன்பே இறந்துவிடும்.)
Rate this:
Share this comment
Cancel
யதார்தவாதி வெகுஜன விரோதி - சிராப்பள்ளி,இந்தியா
22-ஏப்-201307:01:03 IST Report Abuse
யதார்தவாதி வெகுஜன விரோதி 23 கட்சிகளை சேர்ந்த கூட்டணி அமையும். நாளை யார் பிரதமர் வேட்பாளர் என்பதில் குழப்பம் ஏற்படும். உறுப்பினர் எண்ணிக்கை அடிப்படையில் அனைவரும் ஒரு மாதம் 17 நாட்கள் 5 மணி நேரம் 22 நிமிடங்கள் பிரதமர் பதவி வகிக்கலாம் என்ற ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும். அதன் பின்பு பாராளு மன்ற கூட்ட தொடர் இல்லாத நேரத்தில் பிரதமர் பதவி வகிப்பவர் போர்க்கொடி தூக்குவார். புதிய நடைமுறை அமலுக்கு வரும், அதில் கூட்டத்தொடர் காலங்களில் தினமும் ஒருவர் பிரதமர் ஆவார். தோழர்களின் இந்த திட்டம் மிகவும் நல்ல திட்டம். சூப்பர். இதை தொடருங்கள்.
Rate this:
Share this comment
Cancel
22-ஏப்-201306:12:28 IST Report Abuse
அறிவாலயம் c / o போயஸ் அதுக்கெல்லாம் வாய்ப்பேயில்லை உங்களுக்கு வேணுமானா டாஸ்மாக் வாசலில் தேடுங்க அங்கதான் பிராந்திக் கட்சி குடிமகன்கள் கிடப்பாங்க. கூட்டணி நல்லா வரும்
Rate this:
Share this comment
Cancel
பொன்மலை ராஜா - திருச்சி, ,இந்தியா
22-ஏப்-201301:40:29 IST Report Abuse
பொன்மலை ராஜா பாஜக மதவாதக் கட்சி ... எனவே மதவாதம் பேசும் மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்கலாம் ... மார்க்சிஸ்ட் கட்சி ஒரு பொதுவுடமைக் கட்சி தானே ... ஒரு பொதுவுடைமை வாதியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்கலாமே ... அதனை விடுத்து மதவாதத்தால் பெரும்பான்மை மக்களான இந்துக்களுக்கு ஆதரவாக இருந்து சிறுபான்மையோரைப் பாதிக்கும் பாஜக வை எதிர்த்து ... தன்னுடைய தவறான பொருளாதாரக் கொள்கையால் நாட்டில் சிறுபான்மையாக உள்ள பெரும் பணக்காரர்களுக்கு ஆதரவாக இருந்து பெரும்பான்மையாக உள்ள உழைக்கும் மக்களை பாதிக்கும் காங்கிரசை அதற்கு இக்கட்டு நேரிடும் நேரங்களில் ஆதரிக்கும் பழக்கத்தை மார்க்சிஸ்ட்-களால் கைவிட முடியுமா ...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை