அரசு மருத்துவமனை பெண் புரோக்கர்கள் குழந்தையை கடத்தியதாக கைது தாய் மீதும் சந்தேகம்
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

மதுரை:மதுரை அரசு மருத்துவமனையில், பிறந்த ஆண் குழந்தையை விற்க மறுத்ததால், கடத்தியதாக, பெண் புரோக்கர்கள் மூவரை போலீசார் கைது செய்து, குழந்தையை மீட்டனர்.
மதுரை மதிச்சியத்தைச் சேர்ந்தவர் முருகன். கூலித்தொழிலாளி. இவரது மனைவி காளீஸ்வரி,27. மகன், மகள் உள்ள நிலையில், மூன்றாவது முறையாக காளீஸ்வரி கர்ப்பமானார். அரசு மருத்துவமனையில், மார்ச் 25ல் அனுமதிக்கப்பட்டு, ஏப்.,2ல் ஆண் குழந்தையை பெற்றார். பின், ஏப்.,13ல் வீட்டிற்கு திரும்பிய நிலையில், "எனது குழந்தையை, விற்க மறுத்ததால், மருத்துவமனை புரோக்கர்கள் செல்லூர் முருகன் மனைவி சாரதா, 65, கணேசன் மனைவி ஆறுமுகம்,55, ஒபுளாபடித்துறை நாகராஜன் மனைவி பாண்டியம்மாள்,43, ஆகியோர், கடத்திச் சென்றதாக' போலீசில் காளீஸ்வரி புகார் செய்தார்.
விசாரணையில், குழந்தையை ரூ.2.50 லட்சத்திற்கு மதுரை காமராஜர் ரோட்டில் வசிக்கும் தம்பதிக்கு விற்றது தெரிந்தது. புரோக்கர்களை கைது செய்து, குழந்தையை போலீசார் மீட்டனர்.
தாய் மீது சந்தேகம்:
போலீசார் கூறியதாவது: புரோக்கர்கள் கூறிய தகவல்படி, வறுமை காரணமாக குழந்தையை ரூ.50 ஆயிரத்திற்கு காளீஸ்வரி விற்றது தெரியவந்தது. பின், மனம் மாற்றம் அடைந்த அவர், குழந்தையை தருமாறு கேட்டபோது, தரமறுத்தனர். ஆத்திரமடைந்த காளீஸ்வரி, மேலும் ஒரு குழந்தையை விற்க தயாராக இருப்பதாக கூறி, புரோக்கர்களை வரவழைத்து, எங்களிடம் பிடித்துக் கொடுத்தார். காளீஸ்வரி உண்மையிலேயே விற்றாரா என்பது குறித்து விசாரணை நடத்துகிறோம். கைதான மூவருக்கும், கடந்தாண்டு மருத்துவமனையில் நடந்த குழந்தை திருட்டில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. அதுகுறித்தும் விசாரிக்கிறோம், என்றனர்.
அதிகரிக்கும் புரோக்கர்கள்
மதுரை அரசு மருத்துவமனையில், நோயாளிகளை தனியார் மருத்துவமனைக்கு "கடத்தவும்', பிறக்கும் குழந்தையை திருடியோ அல்லது குறைந்த விலைக்கு பேசியோ வாங்கி, விற்கவும் ஆண், பெண் புரோக்கர்கள் உள்ளனர். போலீசார் அவ்வப்போது "ரெய்டு' செய்து, நோயாளிகளை "கடத்தும்' ஆண் புரோக்கர்களை மட்டும் கைது செய்கின்றனர்.
மகப்பேறு பிரிவில் உலா வரும் பெண் புரோக்கர்களை கண்டுகொள்வதில்லை; மருத்துவமனை நிர்வாகமும் கவலைப்படுவதில்லை. இதனால்தான், குழந்தை திருட்டு அதிகரிக்கிறது. அதிகபட்சம் ரூ.3 லட்சம் வரை கிடைக்கும் என்பதால், பெண் புரோக்கர்களின் எண்ணிக்கையும் சமீபகாலமாக அதிகரித்துள்ளதாக, மருத்துவமனை ஊழியர்கள் கூறுகின்றனர்.

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (3)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
BLACK CAT - Marthandam.,இந்தியா
22-ஏப்-201310:01:57 IST Report Abuse
BLACK CAT பேசாம பிச்சை எடுத்து பிழைக்கலாம் .... கேவலம் ...
Rate this:
Share this comment
Cancel
v.sundaravadivelu - Tiruppur,இந்தியா
22-ஏப்-201309:28:22 IST Report Abuse
v.sundaravadivelu வர்த்தக ரீதியாக குழந்தைகளை - பெற்ற தாயே விற்பதும், பெற்ற தாய்க்குத் தெரியாமல் செவிலியர்கள் கடத்துவதும் - பெற்ற தாய்மார்களைக் கதற விடுவதும் - ஏன் இப்படி எல்லாம் கொடுமைகள் நிகழ்ந்த வண்ணமே உள்ளனவோ புரியவில்லை.. ஒழுக்கக் கேடோடு குழந்தை பெறுகிற பெண்கள்.. திருமணம் ஆகாமலே குழந்தை பெறுகிற பெண்கள்.... இவர்களுக்கு மத்தியில் "குழந்தயின்மைக்காக" தீவிர மருத்துவ சிகிச்சை எடுக்கிற பெண்கள்.. அதற்காக அவர்கள் படுகிற மன உளைச்சல்கள்.. இதனைப் பயன் படுத்தி ,இந்த மாதிரி தம்பதியருக்கு திருடி விற்கிற பெண் புரோக்கர்கள்.. - குழந்தை இல்லாத தம்பதிகள் அதற்காகப் படுகிற சந்தோஷங்களும், குழந்தையைப் பறிகொடுத்த பெற்ற தாய் படுகிற வேதனைகளும், இதிலே சுளையாகப் பணம் பறிக்கிற ராக்ஷசப் பெண்டிர்களும்.. ஐயோ.. ஐயோ.. நெஞ்சு பொறுக்குதில்லையே.. இந்தக் கோரங்களை எல்லாம் பார்க்கையில்
Rate this:
Share this comment
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
22-ஏப்-201314:23:15 IST Report Abuse
தமிழ்வேல் இவைகளுக்கு முக்கிய காரணம் குழந்தை வேண்டும் என்று பெற்றுக்கொண்ட பிள்ளைகளாக இருக்க வாய்ப்பில்லை.. சந்தர்ப்பம், கணவனின் கட்டாயம், பாதுகாப்பற்ற உடலுறவு போன்றவை காரணமாக இருக்கலாம்... எதெதையோ இலவசமாக தருவதர்க்குபதில், மிகக் குறைந்த விலையில் பாதுகாப்பு ஆண் உறைகள் விநியோகிக்கலாம்.. இதனால், தொற்று வியாதிகளும் குறையும்..திருமணம் ஆன குடும்பக்கட்டுப்பாடு சிகிச்சி செய்துகொள்ளாத பெண்கள் தங்கள் வசம் எப்போதும் சில ஆணுறைகளை வைத்துகொல்வதே நல்லது. வேலையின் நிமித்தம் பிரிந்து இணையும் தம்பதிகளுக்கும் காதலர்களுக்கும் இது மிகவும் அவசியம்.....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்