இலங்கை அமைச்சர் போல பேசும் நாராயணசாமி ம.ம.க.,- எம்.எல்.ஏ., கண்டனம்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

இலங்கை அமைச்சர் போல பேசும் நாராயணசாமி ம.ம.க.,- எம்.எல்.ஏ., கண்டனம்

Added : ஏப் 21, 2013 | கருத்துகள் (23)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
இலங்கை அமைச்சர் போல பேசும் நாராயணசாமி  ம.ம.க.,- எம்.எல்.ஏ., கண்டனம்

ராஜபாளையம்:""இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கருத்தை, மத்திய அமைச்சர் நாராயணசாமி பிரதிபலிக்கிறார்,'' என, மனிதநேய மக்கள் கட்சி எம்.எல்.ஏ., ஜவாஹிருல்லா தெரிவித்தார்.
அவர் கூறியதாவது:
பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கு, தற்போது உள்ள 3.5 சதவீத இடஒதுக்கீடை உயர்த்த வேண்டும். திருமணப் பதிவு சட்டத்தில், முஸ்லிம்களுக்கு உள்ள ஆட்சேபணைகளை, சட்டத் திருத்தமாக கொண்டு வரவேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை கோட்டை நோக்கி ஊர்வலம் நடத்த உள்ளோம். கூடங்குளம் அணுஉலையில், தரமற்ற "வால்வு' கள் சப்ளை செய்ததாக, ரஷ்ய நிறுவனத்தினர் மீது, அந்நாட்டில் வழக்குப் பதிவு செய்யப்பட உள்ளது. கடல் எல்லையை தாண்டுபவர்கள் மீது தாக்குதல் நடத்த, உலகளாவிய கடற்சட்டத்தில் இடமில்லை. தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதற்கு, மத்திய அரசின், இலங்கை ஆதரவு நிலைப்பாடுதான் காரணம். புதுச்சேரி மீனவர்கள் தாக்கப்பட்டபோது, ""இலங்கை தமிழர்கள் குறித்து தமிழகத்தின் கோரிக்கையால், அந்நாட்டு படையினர் தாக்கினர்,'' என, மத்திய அமைச்சர் நாராயணசாமி கூறியது, கண்டிக்கத்தக்கது. இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கருத்தை, அவர் பிரதிபலிக்கிறார். தமிழகத்திற்கு, 19 ஆயிரம் கோடி ரூபாய், வறட்சி நிவாரணமாக, மத்திய அரசு வழங்கவேண்டும், என்றார். மாநில அமைப்பு செயலாளர்கள் முகமது மைதீன் உலவி, செல்லச்சாமி, மாவட்ட செயலாளர் அஜ்மீர் உடன் இருந்தனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
amukkusaamy - chennai,இந்தியா
22-ஏப்-201314:23:02 IST Report Abuse
amukkusaamy looks like the mouthpiece for JJ
Rate this:
Share this comment
Cancel
Rajasekaran Palaniswamy - georgia,யூ.எஸ்.ஏ
22-ஏப்-201313:10:59 IST Report Abuse
Rajasekaran Palaniswamy காங்கிரஸ்-ல் இருக்கும் பல கோமாளிகளில் தலைமையானவர் இவர். விட்டு தள்ளுங்கள். இவரைப்பற்றி பேசி நேரத்தை வீணடிக்கவேண்டாம். உருப்படியாக வேறு ஏதாவது செய்யுங்கள்.
Rate this:
Share this comment
Cancel
Rajkumar - Dammam,சவுதி அரேபியா
22-ஏப்-201312:32:38 IST Report Abuse
Rajkumar மொதல்ல பிற்படுத்தப்பட்டவர்ந்னு உங்களை நீங்களே ஒதுக்கி யாசகம் பெறுவதை நிறுத்துங்க. அப்படி என்ன பிற்பட்டவரா ஆயிட்டீங்க. உங்கள் சமூகத்தினர் எவ்வளவு வளமுடன் வாழ்கின்றனர் என்பது உங்களுக்கே தெரியும். இப்போதான் எல்லாவற்றிற்கும் தேர்வு முறை என்றாகி விட்டதே. பிற்படுத்தப்பவரை பள்ளியில் சேர்க்கமாட்டோம் என்று எவன் கூறினான்.
Rate this:
Share this comment
Cancel
Jawahar - Erode,இந்தியா
22-ஏப்-201312:09:45 IST Report Abuse
Jawahar நாராயணசாமி ஒரு காமடி பீஸ் ... அவர் சொல்றத எல்லாம் சீரியஸ் ஆக்காதீங்க
Rate this:
Share this comment
Cancel
Raajkumar - madurai,இந்தியா
22-ஏப்-201311:17:41 IST Report Abuse
Raajkumar வாயா வா ஏன் இப்போ அரசியல் செய்ய எந்த சினிமாகாரனும் இல்லையா திடீர்ண்டு என்னென்மோ பேசுற நீ ஒரு மத வெறியன் என்பது இப்போ எல்லோருக்கும் வெளிபடையா தெரிந்துவிட்டது இனி இருக்குடா உங்களுக்கு
Rate this:
Share this comment
Cancel
amukkusaamy - chennai,இந்தியா
22-ஏப்-201310:43:46 IST Report Abuse
amukkusaamy ஏன் 85% கூட வாங்குங்க. இந்தியாவில இந்துவாக பொறந்ததுக்கு நான் ரொம்ப feel பண்றேங்க. சத்தியமா.
Rate this:
Share this comment
Cancel
amukkusaamy - chennai,இந்தியா
22-ஏப்-201310:42:32 IST Report Abuse
amukkusaamy இந்த ஆளு கமலோட படத்தப்பத்தி பேசும் போது எவ்வளவு கீழ்த்தரமாக தந்தை மகள் உறவை கொச்சைப்படுத்த முடியுமோ அவ்வளவு அசிங்கமாக பேசியது இன்னும் யுட்யூப் ல் உள்ளது. மற்ற நல்ல முகம்மதியரின் மீதும் வெறுப்பை உண்டாக்குகிறான் இவன் முகத்தை பார்க்கும் போதே. இவனை கூட்டணியில் வைத்து கொண்டிருப்பது ஜெயாவுக்கு மக்களின் வெறுப்பைத்தான் சம்பாதித்து கொடுக்கும்.
Rate this:
Share this comment
Cancel
பொதுஜனம் - Delhi,இந்தியா
22-ஏப்-201309:41:43 IST Report Abuse
பொதுஜனம் உங்களுக்கு இவர் இலங்கை அமைச்சர் போல தெரிகிறது. எனக்கு கூடங்குளம் அமைச்சர் போல தெரிகிறார். தமிழக மக்களே பொறுத்திருங்கள். இன்னும் 15 நாட்களில் கரண்ட்டு வந்துடும்.
Rate this:
Share this comment
Cancel
நாஞ்சில் சுலைமான் - THUCKALAY,இந்தியா
22-ஏப்-201309:36:31 IST Report Abuse
நாஞ்சில் சுலைமான் இந்த ஜவாஹிருல்லா யாருய்யா..அதிமுக கட்சியினரே வெட்கி தலைகுனியும் வண்ணம் அம்மா ஜால்ரா போடும் சும்மா..இவரை முஸ்லிம்கள் யாரும் மதிப்பதே இல்லை..
Rate this:
Share this comment
Cancel
Nalam Virumbi - Chennai,இந்தியா
22-ஏப்-201308:26:08 IST Report Abuse
Nalam Virumbi நாராயண சாமி இந்திய அரசின் கோமாளி,
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை