Karnataka Election campaign begins | கர்நாடக சட்டசபை தேர்தல் பிரசாரம் துவங்கியது: பா.ஜ., காங்கிரஸ் இடையே கடும் போட்டி | Dinamalar
Advertisement
பதிவு செய்த நாள் :
கருத்துகள் (26)  கருத்தை பதிவு செய்ய
எழுத்தின் அளவு:

கர்நாடக சட்டசபை தேர்தல் பிரசாரம், அம்மாநிலத்தில் விறுவிறுப்பாக துவங்கியுள்ளது. ஆளும் கட்சியான பாரதிய ஜனதாவுக்கும், காங்கிரசுக்கும் இடையே, பல தொகுதிகளில் நேரடி போட்டி நிலவுகிறது. இதனால், அந்த தொகுதிகளில் பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது.

அடுத்த மாதம், 5ம் தேதி நடக்கவுள்ள கர்நாடக சட்டசபை தேர்தலில், காங்கிரஸ் கட்சி மட்டுமே, மொத்தமுள்ள, 224 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது; பாரதிய ஜனதா, 223 தொகுதிகளில் தான் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. கோலார் மாவட்டம், மாலூர் தொகுதியில், பா.ஜ., அறிவித்த வேட்பாளர், மனு தாக்கல் செய்யாததால், அத்தொகுதியில் பா.ஜ., போட்டியிடவில்லை.மத சார்பற்ற ஜனதா தளம், 222 தொகுதிகளிலும், எடியூரப்பாவின், கே.ஜே.பி., 211 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. சில தொகுதிகளில், ம.ஜ.த., வேட்பாளர்களையும், சில தொகுதிகளில், பா.ஜ.,வுக்கு ஆதரவாகவும், எடியூரப்பாவின், கே.ஜே.பி., கட்சியினர் செயல்பட்டு வருகின்றனர்.

காங்கிரஸ் : காங்கிரசில், இதுவரை தேசிய தலைவர்கள் யாரும் பிரசாரத்துக்கு வரவில்லை. ராகுலின் சுற்றுப்பயணம் திடீரென தள்ளி வைக்கப்பட்டுள்ளது. பல தொகுதிகளில், காங்கிரஸ் அதிருப்தி வேட்பாளர்கள் தலை தூக்கியுள்ளனர். அவர்கள், எதிர்க்கட்சியினருக்கு பிரசாரம் செய்து வருகின்றனர்.காங்கிரஸ் முன்னாள் மத்திய அமைச்சர், எஸ்.எம்.கிருஷ்ணா, தேர்தல் பிரசாரத்தில் ஆர்வம் இல்லாமல் இருந்தார். அவரை கட்சி மேலிடம், பிரசாரத்தில் ஈடுபட வைத்துள்ளது. இதனால், அவர் பிரசாரம் செய்து வருகிறார். இது, தொண்டர்களிடையே சற்று ஆறுதல் தருகிறது. "தேர்தலில் வென்றால், நாங்கள் தான் முதல்வர்' என, சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையாவும், மாநில காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வரும் கூறியதால் சலசலப்பு நிலவியது.

பாரதிய ஜனதா : பா.ஜ.,விலிருந்து, எடியூரப்பாவின், கே.ஜே.பி., பிரிந்து சென்றதால் , சிறிது இழப்பை, பா.ஜ., சந்தித்துள்ளது. எனினும், "ஊழல்வாதிகள் வெளியேறி விட்டனர்' என, எடியூரப்பாவை மறைமுகமாக தாக்கி, மூத்த தலைவர்கள் அத்வானி, சுஷ்மா சுவராஜ், பிரசாரம் செய்தனர்.குஜராத் முதல்வர், நரேந்திர மோடி விரைவில் பிரசாரம் செய்யவுள்ளார் என,

கூறப்பட்டுள்ளது.ஊழல் முறைகேட்டில் சிக்கியதாக, முன்னாள் அமைச்சர், கட்டா சுப்பிரமணிய நாயுடு, கிருஷ்ணய்ய ஷெட்டி, எம்.எல்.ஏ., சம்பங்கி ஆகியோருக்கு, "சீட்' வழங்காததால், அக்கட்சியிலும் அதிருப்தியாளர்கள் அதிகரித்துள்ளனர்.

கவுடா கட்சி: ம.ஜ.த., அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடுவதாக காட்டிக் கொள்வதற்காக, சில தொகுதிகளில் பெயரளவில் மட்டுமே வேட்பாளர்களை களம் இறக்கியுள்ளது. பல மாவட்டங்களில் இக்கட்சியிலும் அதிருப்தியாளர்களுக்கு பஞ்சமில்லை. பல முக்கிய தலைவர்கள் ராஜினாமா செய்து, காங்கிரசில் ஐக்கியமாகியுள்ளனர். ம.ஜ.த., முன்னாள் சபாநாயகர், கிருஷ்ணாவுக்கு கூட, போட்டியிட அக்கட்சி, டிக்கெட் கொடுக்கவில்லை. இத்தொகுதியில், கிருஷ்ணாவை ஆதரிக்க, எடியூரப்பாவின், கே.ஜே.பி., முடிவு செய்துள்ளது.

கெடுபிடி: தேர்தல் பிரசாரத்தின் போது, தேர்தல் கமிஷன் கடும் கெடுபிடிகளை விதித்துள்ளதால், கர்நாடக மாநிலத்தில் எந்த தொகுதியிலும் தேர்தல் நடப்பதாகவே தெரியவில்லை. கட் - அவுட், பேனர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. திருமண விருந்து அளிப்பதற்கு கூட, தேர்தல் கமிஷன் தடை விதித்துள்ளது. ஆனால், சில நிபந்தனைகளுடன் கர்நாடகா உயர்நீதிமன்றம் தளர்த்தியுள்ளது.தேர்தல் கமிஷன் கெடுபிடி, இதுவரை இல்லாத வகையில், கடுமையாக உள்ளது. வாகனச் சோதனையில், பணம், மது பாட்டில்கள், நகைகள் உட்பட, பல கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

எடியூரப்பா உறுதி:தற்போதைய நிலவரப்படி, காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்கும் என, அக்கட்சி கருதுகிறது. ஆனால், "எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்காது. அடுத்த முறையும் கூட்டணி ஆட்சி தான் அமையும். கே.ஜே.பி.,யின் உதவியின்றி, யாரும் ஆட்சி அமைக்க முடியாது' என, எடியூரப்பா கூறி வருகிறார்.காங்கிரஸ், பா.ஜ., - ம.ஜ.த., - கே.ஜே.பி., ஆகிய கட்சிகள் இருந்தாலும், பல தொகுதிகளில் காங்கிரசுக்கும், பா.ஜ.,வுக்கும் இடையே தான் போட்டி நிலவுகிறது. கட்சிகள் பலவும் ஆட்சியைக் கைப்பற்ற, தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளதால், மாநிலத்தில் பரபரப்பான பிரசார சூழ்நிலை நிலவுகிறது.பெங்களூரில், தமிழர்கள் அதிகம் வசிப்பதால், காங்கிரசை தோற்கடிக்க

Advertisement

வேண்டும் என்ற ரீதியில், சில தமிழ் அமைப்புகள் களத்தில் இறங்கியுள்ளன. இந்த அமைப்புகள், இலங்கை பிரச்னையை கையில் எடுத்துக் கொண்டுள்ளன.

எடியூரப்பா விலகியதால் பாதிப்பில்லை: சுஷ்மா : ""பாரதியஜனதாவிலிருந்து, எடியூரப்பா விலகியதால், கட்சிக்கு எந்த பாதிப்பும் இல்லை,'' என, லோக்சபா எதிர்க்கட்சி தலைவர், சுஷ்மா சுவராஜ் கூறினார்.பாரதிய ஜனதா தேர்தல் பிரசார கூட்டம், மல்லேஸ்வரத்தில் நேற்று நடந்தது. அதில், சுஷ்மா சுவராஜ் பேசியதாவது: கர்நாடகாவில், கடந்த ஐந்தாண்டுகளாக, பா.ஜ., ஆட்சியில் நடந்த வளர்ச்சி பணிகள் இன்னும் மீதமுள்ளது. அந்த பணிகளை தொடர்வதற்காக, மீண்டும், பா.ஜ.,வுக்கு ஓட்டளிக்க வேண்டும். பயங்கரவாதத்தை, மத்திய, காங்கிரஸ் கூட்டணி அரசால் கட்டுப்படுத்த இயலவில்லை. நாடு முழுவதும் பயங்கர வாதம் தலை தூக்கியுள்ளது; இதற்கு காங்கிரஸின் மெத்தன போக்கே காரணம்.கர்நாடகத்தில், கே.ஜே.பி.,க்கு எதிர்காலம் இல்லை. அக்கட்சி, ஆட்சி அமைக்க முடியாது. எடியூரப்பா, பா.ஜ.,விலிருந்து விலகியதால், கட்சிக்கு எந்த நஷ்டமும் இல்லை. தனி மனிதர்களை நம்பி, எந்த கட்சியும் இருப்பதில்லை. கட்சியால் தான் புகழ் பெறுகிறார்களே தவிர, தனி மனிதர்களால் கட்சி புகழடைந்ததில்லை.இவ்வாறு, அவர் பேசினார்.பா.ஜ., மூத்த தலைவர், அத்வானி, ஹாவேரி என்ற இடத்தில் நடந்த, பா.ஜ., பிரசாரத்தில் கலந்து கொண்டார்.

- நமது நிருபர் -

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (26)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
KKsamy - Jurong,சிங்கப்பூர்
22-ஏப்-201315:45:33 IST Report Abuse
KKsamy இந்த பிஜேபி யும் தென்மாநிலத்தை கைபற்றும் என்று நான் கனவிலும் நினைத்ததில்லை அதற்க்கு கரணம் எடியுரப்ப என்றால் மிகையாகது. அவரின் பிரிவை பலம் என்று சொன்னாலும் வாய் பேசும்போது தொடை நடுங்குவது நன்றாக தெரிகிறது. தமிழ் நாட்டில் தற்போது நடக்கும் கற்கால ஆட்சிக்கு கர்நாடக பிஜேபி ஆட்சி 1000 மடங்கு சிறந்தது. ஆனால் உண்மையில் தென் மாநிலங்களில் இருந்து பிஜேபி துடைதொழிக்கபடும் என்பதே என் கணிப்பு.
Rate this:
5 members
3 members
40 members
Share this comment
Cancel
Karthik - covai,இந்தியா
22-ஏப்-201313:17:16 IST Report Abuse
Karthik எவன் வந்தாலும் சொரண்டி திங்க போறான் ..... தமிழ்நாட்டுக்கு தண்ணி குடுக்க மாட்டான்... இப்டியே மக்களுக்குள சண்டைய கிளப்பி விட்டு நீங்க வாழுங்கடா ... ஒரு தேர்தல்கு மேல போட்டி இட கூடாதுன்னு ஒரு சட்டம் வரணும் ... த்து .... மானக்கெட்ட அரசியல் வாதிகள்
Rate this:
3 members
2 members
18 members
Share this comment
Cancel
Ambaiyaar@raja - Nellai to chennai ,இந்தியா
22-ஏப்-201312:11:59 IST Report Abuse
Ambaiyaar@raja வந்துட்டார்யா வந்துட்டார்யா சுபிரமணி சாமி வந்துட்டார்யா காங் கட்சி அல்ல கை அண்ணன் வந்துட்டார்யா. எம்புட்டு பாசம் உங்களுக்கு காங் கட்சி மீது. நீங்கள் பேசாம கட்சில சேர்ந்து விடுங்கள் நண்பரே.
Rate this:
9 members
0 members
4 members
Share this comment
Cancel
Sundeli Siththar - Hyderabad,இந்தியா
22-ஏப்-201310:45:02 IST Report Abuse
Sundeli Siththar ம.ஜ.தா, எடியூரப்பா போன்றவர்கள் தனியே நிற்பதால், காங்கிரஸ், பா.ஜ.க ஒட்டு பிரியும். குழப்பமான நிலைமை தேர்தலுக்கு பின்பு இருக்கும். காங்கிரஸ் பேரம் பேசி ஆட்சி அமைக்கலாம்.
Rate this:
35 members
0 members
5 members
Share this comment
Cancel
JAY JAY - CHENNAI,இந்தியா
22-ஏப்-201309:53:11 IST Report Abuse
JAY JAY ANTI INCUMBENCY வோட்டுக்கள் தவிர்க்க இயலாதது.... கர்நாடகத்தில் காங்கிரஸ் தான் வெற்றி பெரும்....கர்நாடகத்தில் காங்கிரஸ் வெற்றி பெற்றாலும் மத்தியில் காங்கிரஸ் படுதோல்வி அடையும் .....காங்கிரசின் தோல்வியை , மத்தியில் ஓட்டுக்களாக அறுவடை செய்ய பாஜக வுக்கு எந்த முகாந்திரமும் இல்லை... காங்கிரசுக்கு எதிரான ஓட்டுக்களை தனது பக்கம் திருப்புவதற்கு , பாஜக பல மாநிலங்களில் வலுவாக இல்லை... ஆந்திரா / தமிழகம்/ வங்கம் / UP / பிகார் / ஒரிசா / போன்ற மாநிலங்கள் 3 வது அணிக்கே சாதகமாக உள்ளது... BJP மத்தியில் ஆட்சி அமைக்க வேண்டுமென்றால், ஆந்திராவில் ஜெகன் அல்லது நாயுடு, பீகாரில் நிதிஷ், தமிழத்தில் ஜெயலலிதா, வங்கத்தில் மமதா, UP யில் மாயாவதி, ஆகியோருடன் கூட்டணி அமைக்க முயற்சி செய்ய வேண்டும்... ஆனால் 3 வது அணி தலைவர்கள் நிச்சயம் அதற்க்கு முன்வர மாட்டார்கள்... காங்கிரசில் இருந்து GREEN சிக்னல் 3 வது அல்லது 4 வது அணி தலிவர்களுக்கு கிடைத்துள்ளது... பிரதமர் பதவியை ருசி பார்த்து விட வேண்டும் என காத்து இருக்கும் 3 வது அல்லது 4 வது அணி தலைவருக்கே அடுத்த பிரதமாரும் வாய்ப்பு... பிரதமர் ஆக அதிக வாய்ப்பு உள்ளவர்கள் முறையே நிதிஷ், ஜெயலலிதா, மாயாவதி, மற்றும் மமதா - இவர்களில் ஒருவர் காங்கிரஸ் ஆதரவுடன் பிரதமராக வாய்ப்பு உள்ளது...... மேற்கூறிய 4 பேருடன் முலாயமையும் சேர்த்து , இவர்கள் 5 பேரில் யாரவது ஒருவரை பிரதமராக்க வேறு வழி இல்லைஎன்றால் BJP கூட முயலும்... முலாயமை பிரதமராக தப்பி தவறி கூட காங்கிரஸ் ஆதரிக்காது..... அடுத்து 5 வருடத்தில் குறைந்தது 2 அல்லது 3 பிரதமர்களை காணபோகுது நம்ம நாடு....
Rate this:
17 members
0 members
33 members
Share this comment
Pannadai Pandian - wuxi,சீனா
22-ஏப்-201313:15:38 IST Report Abuse
Pannadai Pandianகண்டிப்பாக அடுத்த முறை காங்கிரஸ் கிடையாது. அதே போல 3 வது, 4வது அணி எல்லாம் கிடையாது. ஒரே நம்பிக்கை மோடி. மோடி பெயரை அறிவித்தால் பிஜேபி கணிசமான தொகுதிகளில் வெற்றி பெரும். வெற்றி பெற்ற பின் அதிமுக, நிதின், ஜெகன் அல்லது நாயுடு ஆகியோர் ஆதரவு தருவர். இதில் எனக்கு நம்பிக்கை உள்ளது. ஒரு முறை மோடி பிரதமரானால் அப்புறம் ஹேட்ரிக் அடிப்பார்....
Rate this:
7 members
1 members
48 members
Share this comment
Cancel
Swaminathan Nath - Abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
22-ஏப்-201309:14:39 IST Report Abuse
Swaminathan Nath அந்த மாநில மக்கள் ஒரு கட்சிக்கு பெரும்பான்மை கொடுக்க வேண்டும், அது தான் மாநிலத்திற்கு நல்லது, பல கட்சி கூட்டணி நல்லது இல்லை.
Rate this:
36 members
0 members
9 members
Share this comment
Pannadai Pandian - wuxi,சீனா
22-ஏப்-201313:16:57 IST Report Abuse
Pannadai Pandianஏன், சுதந்திரமா ஒருத்தனே கொள்ளை அடிக்கவா ???...
Rate this:
4 members
1 members
6 members
Share this comment
Cancel
Raju Rangaraj - Erode,இந்தியா
22-ஏப்-201309:01:46 IST Report Abuse
Raju Rangaraj கர்நாடகத்தில் சாதிவெறி கட்சிகளும் சாதி அமைப்புக்களுமே வெற்றி தோல்வி யை தீர்மானிக்கும். லின்காயத்களும் கவுடாக்களுமே முடிவு செய்ய இயலும். காங்கிரசோ பாஜகவோ வெறும் முகமூடிக்காக மட்டும் பயன் படுத்தப்படும். இதல் கன்னட சாலுவாலியர் வேறு பொதுவாக கர்நாடகா சாதி அரசியலின் அடிப்படையில் மாறி விட்டது வேதனை
Rate this:
1 members
0 members
10 members
Share this comment
Pannadai Pandian - wuxi,சீனா
22-ஏப்-201313:22:30 IST Report Abuse
Pannadai Pandianஆமாம். லிங்காயத்துகள் பிஜேபி ஆதரவு. இவர்கள் தான் கர்நாடகத்தில் மெஜாரிடி. மேலும் படித்த, இளைய சமுதாயம், முற்போக்கு சிந்தனையாளர்கள் பிஜேபி ஆதரவு தான். கவுடாக்கள் காங்கிரஸ், ஜனதா தல் ஆதரவு. மேற்கு கர்நாடகத்தில் மங்களூர் கிருஸ்துவர்கள் காங்கிரஸ் சார்பாகவும் ஷெட்டிக்கள் பிஜேபிக்கும் வாக்களிப்பார்கள். தலித்துகள், முஸ்லிம்கள் எப்போதும் காங்கிரஸ் தான். மொத்தத்தில் இந்த முறை காங்கிரஸ் தான் வெற்றி பெரும். ஏன் என்றால் எடியூரப்பா அடித்த கூத்து அப்படி. எல்லாம் அண்ணன் சொல்படி கேட்டால் குட்டிச்சுவறு ஆக வேண்டியது தான். அண்டி கெடுத்தான் ஆண்டி நம்ம கருணா....
Rate this:
6 members
1 members
43 members
Share this comment
Cancel
kumaresan.m - hochimin ,வியட்னாம்
22-ஏப்-201307:33:40 IST Report Abuse
kumaresan.m " காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மத்தியில் மீண்டும் ஆட்சி அமைக்கும் எண்ணம் துளிர் விட ஆரம் பித்துவிடும் ....கர்நாடக மக்கள் காங்கிரஸ் வெற்றியை புறகணிக்க வேண்டும் "
Rate this:
31 members
0 members
21 members
Share this comment
Pannadai Pandian - wuxi,சீனா
22-ஏப்-201313:24:34 IST Report Abuse
Pannadai Pandianஆனால் புறக்கணிப்பார்களா ??? 5 வருஷம் பிஜேபி அடித்த கூத்து.....அடடா.....ஒரு பக்கம் ஊழலோ ஊழல், இன்னொரு பக்கம் செக்ஸ் படம், இன்னொரு பக்கம் கட்சியில் அடிதடி, காலை பிடித்து இழுப்பு......மக்களுக்கு பொறுமை இல்லை. நல்ல பெயரை கெடுத்து கொண்டார்கள்....
Rate this:
5 members
1 members
44 members
Share this comment
Cancel
தி.இரா.இராதாகிருஷ்ணன் - நாக்பூர்....,இந்தியா
22-ஏப்-201307:13:17 IST Report Abuse
தி.இரா.இராதாகிருஷ்ணன் பா.ஜ.க.வுக்கு சாதகமான சூழ்நிலை இல்லை என்பது பலரின் கணிப்பு......ஆனால், அங்கு பா.ஜ.க. காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுவதே உண்மை......எட்டியின் வெளியேற்றம் பா.ஜ.க.வுக்கு சாதகமே.....நூலிழையில் பா.ஜ.க. வெற்றி பெறும்........
Rate this:
105 members
0 members
51 members
Share this comment
நாஞ்சில் சுலைமான் - THUCKALAY,இந்தியா
22-ஏப்-201308:57:00 IST Report Abuse
நாஞ்சில் சுலைமான் ஆசை தோசை அப்பளம் வடை......
Rate this:
19 members
0 members
35 members
Share this comment
Sathyamoorthy - Bangalore,இந்தியா
22-ஏப்-201311:47:24 IST Report Abuse
Sathyamoorthyஅப்படி வெற்றி பெற்றால் அது கர்நாடகத்திற்கும், தேசத்திற்கும், தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லதே. ஏனெனில், காவிரி பிரச்சினையில் ஏதோ கொஞ்சமாவது நடுநிலையுடன் நடந்து கொண்டது, பிஜேபி மட்டுமே....
Rate this:
70 members
0 members
18 members
Share this comment
Kuwait Tamilan - Salmiya,குவைத்
22-ஏப்-201312:17:22 IST Report Abuse
Kuwait Tamilanகனவு காணுங்கள் என்று நமது முன்னால் அணு விஞ்ஞானி திரு அப்துல் கலாம் அவர்கள் சொல்லிவுள்ளார்....
Rate this:
52 members
0 members
78 members
Share this comment
Pannadai Pandian - wuxi,சீனா
22-ஏப்-201313:11:04 IST Report Abuse
Pannadai Pandianஇவர்கள் 5 வருடங்களாக செய்த கூத்துக்கு தண்டனை தோல்விதான். பிஜேபியின் அகில இந்திய தோற்றத்தை கெடுத்தது கர்நாடக பிஜேபி. ஒரு முறை தொர்க்கட்டும், அப்பத்தான் புத்தி வரும்....
Rate this:
3 members
1 members
26 members
Share this comment
Cancel
யதார்தவாதி வெகுஜன விரோதி - சிராப்பள்ளி,இந்தியா
22-ஏப்-201307:07:03 IST Report Abuse
யதார்தவாதி வெகுஜன விரோதி காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தாளம் கூட்டணி அரசு அமையும்.
Rate this:
36 members
1 members
44 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.